TN 11th Standard Tamil Book Back Answers | Lesson 7.3 – பதிற்றுப்பத்து

7.3 பதிற்றுப்பத்து

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 11th Standard Tamil Lesson 7.3 – பதிற்றுப்பத்து. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

11th Standard Tamil Guide - Pathitrupathu

11th Std Tamil Text Book – Download

சொல்லும் பொருளும்

  • பதி – நாடு
  • பிழைப்பு – வாழ்தல்
  • நிரையம் – நரகம்
  • ஒரீஇய – நோய் நீங்கிய
  • புரையோர் – சான்றோர்
  • யாணர் – புது வருவாய்
  • மருண்டெனன் – வியப்படைந்தேன்
  • மன்னுயிர் – நிலைபெற்றுள்ள உயிர்த்தொகுதி
  • தண்டா – ஓயாத
  • கடுந்துப்பு – மிகுவலிமை
  • ஏமம் – பாதுகாப்பு
  • ஒடியா – குறையா
  • நயந்து – விரும்பிய

இலக்கணக்குறிப்பு

  • ஒரீஇய – சொல்லிசை அளபெடை
  • புகழ்பண்பு – வினைத்தொகை
  • நன்னாடு – பண்புத்தொகை
  • துய்த்தல் – தொழிற்பெயர்
  • மருண்டனென் – தன்மை ஒருமை வினைமுற்று
  • ஒடியா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்

1. மருண்டனென் =  மருள் (ண்) + ட் + அன் + என்

  • மருள் – பகுதி
  • “ள்” “ண்” ஆனது விகாரம்
  • அன் – சரியை
  • என் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

2. துய்த்தல் = துய் + த் + தல்

  • தய் – பகுதி
  • த் – சந்தி
  • தல் – தொழில்பெயர் விகுதி

புணர்ச்சி விதிகள்

1. மண்ணுடை = மண் + உடை

  • “தனிக்குறில்முன் ஒற்று உயரிவரின் இரட்டும்” என்ற விதிப்படி “மண்ண் + உடை” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “மண்ணுடை” என்றாயிற்று.

2. புறந்தருதல் = புறம் + தருதல்

  • “மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்” என்ற விதிப்படி “புறந்தருதல்” என்றாயிற்று.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

கூற்று :  எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பதத்து புறம் சார்ந்த நூல்

காரணம் :  சேர மன்னர் பதின்மரின் சிறப்புகளைக் கூறுகிறது இந்நூல்

  1. கூற்று சரி; காரணம் தவறு
  2. இரண்டும் சரி
  3. இரண்டிற்கும் தொடர்பு இல்லை
  4. கூற்று தவறு; காரணம் சரி

விடை : இரண்டும் சரி

குறு வினா

செந்துறைப் பாடாண் பாட்டு – துறை விளக்கம் எழுதுக?

  • பாடப்படும் ஆண்மகனின் ஒழுகலாறுகளைக் கூறவது “பாடாண்” எனப்படும்.
  • உலகினுள் இயற்கை வகையால் இயன்ற மக்களைப் பாடுதல் செந்துறையாகும்.
  • இவ்வகையில், அமைந்த பாடல் செந்துறைப் பாடாண்பாட்டுத் துறை ஆகும்.

சிறு வினா

சேரநாடு, செல்வவளம் மிக்கது என்ற கூற்றிற்குரிய காரணங்களை குறிப்பிடுக

  • நெடுஞ்சேரலாதன், தன் நாட்டையும், மக்களையும் கண்போல் பாதுகாத்தான்.
  • மக்கள். பசியும் பிணியும் அறியாது, வேற்று நாட்டுக்கும் செல்ல விரும்பாமல் சுற்றம் சூழ வாழ்ந்தனர்
  • புதுவருவாய்ப் பெருக்கமும், ஈந்து உவக்கும் இன்பமும் உடையவன் சேரலாதன்
  • இக்காரணங்களால், சேரநாடு செல்வவளம் மிக்கதாக விளங்கியது

கூடுதல் வினாக்கள்

இலக்கணக்குறிப்பு

  • கடுந்துப்பு, நல்லிசை – பண்புத்தொகை
  • பிழைப்பு – தொழிற்பெயர்
  • தண்டா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • இகழந்து, கண்டு, நல்கி – வினையெச்சங்கள்
  • புரைவயின் புரைவயின் – அடுக்குத்தொடர்

புணர்ச்சி விதிகள்

1. நன்னாடு =  நன்மை + நாடு

  • “ஈறுபோதல்” என்ற விதிப்படி “நன் + நாடு” என்றாயிற்று.
  • “னலமுன் றன ஆகும் தநக்கள்” என்ற விதிப்படி “நன்னாடு” என்றாயிற்று.

2. நல்லிசை = நன்மை + இசை

  • “ஈறுபோதல்” என்ற விதிப்படி “நன் + இசை” என்றாயிற்று.
  • “முன்நின்ற மெய்திரிதல்” என்ற விதிப்படி “நல் + இசை” என்றாயிற்று.
  • “தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்” என்ற விதிப்படி “நல்ல் + இசை” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “நல்லிசை” என்றாயிற்று.

3. மன்னுயிர் = மன் + உயிர்

  • “தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்” என்ற விதிப்படி “மன்ன் + உயிர்” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “மன்னுயிர்” என்றாயிற்று.

பலவுள் தெரிக

1. சேர மன்னர் பதின்மரின் சிறப்புகளை எடுத்தியம்புவது _____________

  1. புறநானூறு
  2. அகநானூறு
  3. பதிற்றுப்பத்து
  4. புறப்பொருள் வெண்பாமாலை

விடை : பதிற்றுப்பத்து

2. தமிழின் சிறப்பை உலகறியச் செய்தவன் _____________

  1. நெடுஞ்சேரலாதன்
  2. உதியன் சேரலாதன்
  3. கரிகாலன்
  4. செங்குட்டுவன்

விடை : நெடுஞ்சேரலாதன்

3. நெடுஞ்சேரலாதன் _____________ வென்றவன்

  1. காடர்களை
  2. பாண்டியர்களை
  3. பல்லவர்களை
  4. கடம்பர்களை

விடை : கடம்பர்களை

4. தூக்கு என்பது செய்யுள் _____________ வரையறை செய்வதாகும்.

  1. சீர்களை
  2. எழுத்துக்களை
  3. அடிகளை 
  4. அசைகளை

விடை : அடிகளை

5. “ஓயாத” என பொருள் தரும் சொல் _____________

  1. தண்டா
  2. ஒடியா
  3. நயந்த
  4. ஏமம்

விடை : தண்டா

6. “பதி” என்பதன் பொருள் _____________

  1. காடு
  2. வீடு
  3. நாடு
  4. பாடு

விடை : நாடு

7. பின்வருவனவற்றுள் தொழில்பெயரினை குறிப்பது

  1. துய்
  2. துய்து
  3. துய்த்தல்
  4. துகிரு

விடை : துய்த்தல்

8. பாடப்படும் ஆண்மகனின் உயர்பண்புகளை கூறுவது ____________ திணைகளின் நோக்கம்

  1. கரந்தை
  2. வஞ்சி
  3. பாடாண்
  4. பொதுவியில்

விடை : பாடாண்

குறு வினா

1. அரசன் மக்களின் நல்வாழ்வை எதற்காக உறுதிப்படுத்த வேண்டும்?

நாட்டில் வாழும் உயிர்கள் இன்புற்று வாழ வேண்டும். அவ்வாழ்வு சிறக்க நாட்டின் அரசன் மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும்.

2. பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் யார்?

பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.

3. குமட்டுக்கண்ணனார் பரிசாக பெற்றவை யாவை?

குமட்டுக்கண்ணனார் உம்பற்காட்டில் 500 ஊர்களையும் தென்னாட்டு வருவாயுள் பாதியையும் பரிசாகப் பெற்றார்.

4. பாடான் திணை என்றால் என்ன

பாடாண் திணையானது ஒரு மன்னனின் புகழ், வலிமை, வள்ளன்மை, அருள் முதலானவற்றை ஆய்ந்து கூறுவதாகும். பாடப்படும் ஆண்மகனின் உயர்பண்புகளைக்
கூறுவது இத்திணையின் நோக்கமாகும்.

5. பதிற்றுப்பத்துக் குறித்துக் குறிப்பெழுதுக

  • எட்டுத்தொகை நூல்களுள், புறபொருள் குறித்த நூல் பதிற்றுப்பத்து.
  • இது, சேர மன்னர்கள் பத்துபேரின் சிறப்புகளை எடுத்தியம்புகிறது.
  • புறப்பொருள்களுள், “பாடான் திணை” குறித்தமைந்த நூல்.
  • ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர் ஆகியன இடம் பெற்றிருக்கும்.
  • பாடலில் இடம்பெறும் சிறந்த சொற்றொடர், அப்பாடலுக்குத் தலைப்பாக இடப்பட்டிருக்கும்.
  • இத்தொகை நூலுள், முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment