TN 11th Standard Tamil Book Back Answers | Lesson 6.2 – ஆத்மாநாம் கவிதைகள்

6.2 ஆத்மாநாம் கவிதைகள்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 11th Standard Tamil Lesson 6.2 – ஆத்மாநாம் கவிதைகள். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

11th Standard Tamil Guide - Atmanam kavithaigal

11th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • மதுசூதனன் என்ற இயற்பெயரைக் கொண்ட “ஆத்மாநாம்” தமிழ்க்கவிதை ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர்.
  • “காகிதத்தில் ஒரு கோடு” என்பது அவருடைய முக்கியமான கவிதைத் தொகுப்பு
  • “ழ” என்னும் சிற்றிதழைச் சில காலம் நடத்தினார்
  • கவிதை, கட்டுதை, மொழிபெயர்ப்பு என்னும் மூன்று தளங்களில் இயங்கினார்.
  • இவருடைய கவிதைகள் ஆத்மாநாம் கவிதைகள் என்னும் பெயரில் ஒரே தொகுப்பாக்கப் பெற்றுள்ளன.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. என்னும் பெயரில் கவிஞர் ஆத்மாநாமால் வெளியிடப்பட்டது கவிதைக் கீரிடம் என்ற போற்றப்படுவது ____________

  1. சிற்றிதழ்; குற்றாலக்குறவஞ்சி
  2. நாளிதழ், நன்னகர் வெண்பா
  3. கவிதைநூல், திருச்சாழல்
  4. கட்டுரைநூல், குற்றாலக்கோவை

விடை : சிற்றிதழ்; குற்றாலக்குறவஞ்சி

குறு வினா

உணவும் உறக்கமும் அணி கனவாம் –  உங்கள் கனவை உங்கள் சொற்களில் விளக்குக

  • காலையில் எழுந்ததும் பள்ளிக்குச் செல்ல ஆயத்தமாக வேண்டும்.
  • அதற்குமுன் ஆசிரியர் கொடுத்த வீட்ப்பாட வேலைகளை முடித்தோமா என்று பார்க்க வேண்டம்.
  • உணவூட்டக் காத்திருக்கும் அம்மாவுக்கும் பதில் சொல்ல வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும்

  • இரை – உணவு
  • படுகை – படுக்கை
  • சந்து, பொந்து – துளை
  • தமக்கை – உடன் பிறந்தவள்
  • அயர்ந்து – சோர்ந்த

இலக்கணக்குறிப்பு

  • உணவையும் உறக்கத்தையும் – எண்ணும்மை
  • சதுர வட்டக் கோணம் – உம்மைத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

1. சென்ற = செல் (ன்) + ற் + அ

  • செல் – பகுதி
  • ல் “ன்” எனத் திரிந்தது விகாரம்
  • ற் – இறந்தகால இடைநிலை
  • அ –  பெயரெச்ச விகுதி

2. குளிர்ந்த = குளிர்+ த்(ந்) + த் + அ

  • குளிர் – பகுதி
  • த் – சந்தி
  • ந்- ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • அ –  பெயரெச்ச விகுதி

புணர்ச்சி விதிகள்

1. நூற்றுக்கணக்கு= நூறு + கணக்கு

  • “நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள் டற ஒற்று இரட்டும்” என்ற விதிப்படி “நூற்று + கணக்கு” என்றாயிற்று.
  • “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி “நூற்றுக்கணக்கு” என்றாயிற்று.

2. நண்பனாயிற்று = நண்பன் + ஆயிற்று

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “நண்பனாயிற்று” என்றாயிற்று.

3. நிழலிலிருந்து = நிழலில் + இருந்து

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “நிழலிலிருந்து” என்றாயிற்று.

பலவுள் தெரிக

1. மதுசூதனனின் இயற்பெயர் _____________

  1. மீனாட்சி
  2. ரங்கராஜன்
  3. ராசேந்திரன்
  4. ஆத்மாநாம்

விடை : ஆத்மாநாம்

2. அணிலையும் புளிமரத்தையும் காட்சிப்படுத்திக் கவிதை படைத்தவர் _____________

  1. மீனாட்சி
  2. ரங்கராஜன்
  3. ராசேந்திரன்
  4. ஆத்மநாம்

விடை : ஆத்மநாம்

3. மதுசூதனனின் கவிதைத் தொகுப்பு _____________

  1. வானம் வசப்படும்
  2. காகிதத்தில் ஒரு கோடு
  3. புதிய உலகு
  4. விடிவானம்

விடை : காகிதத்தில் ஒரு கோடு

4. ஆத்மநாம் அவர்களின் முக்கியமான கவிதைத் தொகுப்பு _____________

  1. காகிதத்தில் ஒருகோடு
  2. கொடி விளக்கு
  3. இருண்ட விளக்கு
  4. பாண்டியன் பரிசு

விடை : காகிதத்தில் ஒருகோடு

5. “துள்ளும்” என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு _____________

  1. வினையெச்சம்
  2. தொழிற்பெயர்
  3. பெயரெச்சம்
  4. வினையாலணையும் பெயர்

விடை : பெயரெச்சம்

6. “சதுர வட்ட கோண” இத் தொடருக்கான இலக்கணக்குறிப்பு _____________

  1. அடுக்குத்தொடர்
  2. உம்மைத்தொகை
  3. எண்ணும்மை
  4. வினையாலணையும் பெயர்

விடை : உம்மைத்தொகை

7. அக்காள் என பொருள் தரும் சொல் _____________

  1. தமக்கை
  2. தங்கை
  3. அண்ணல்
  4. அம்மை

விடை : தமக்கை

குறு வினா

1. ஆத்மாநாம் தம் கவிதைவழி தூண்டுவது யாது?

விலங்குகளும் தாவர வகைகளும் இயற்கைவழி இன்ப வாழ்வு வாழ்வதை விளக்கித் தம் கவிதைவழி ஆத்மாநாம் சிந்தனையைத் தூண்டியுள்ளார்.

2. அணில் எங்கே உறங்கச் சென்றது? அதன் கனவு எதைக் குறித்தது.

மலர்க்கிளைப் படுக்கையிலோ, ஆற்று மணல் சரிவிலோ, சதுர வட்டக் கோண மயக்கச் சந்து பொந்துகளிலோ அணில் உறங்கச் சென்றது. உணவு, உறக்கம் குறித்தே அது கனவு கண்டது.

3. கேள்வி என்னும் தலைப்பில் ஆத்மாநம் உணர்த்தும் செய்திகளை எழுதுக

  • காலையில் எழுந்தும் இரை தேடத் துள்ளி ஓடும் அணி இரவு எங்கே உறங்குகிறது?
  • மலர்கிளையாகிய படுக்கையிலா? ஆற்று மணல் சரிவிலா? சந்து பொந்துகளிலா?
  • ஒன்றல்ல, நூற்றுக்கணக்கில் இருக்கும் இந்த அணில்கள், நிச்சயம் தம் குழந்தைத்தனமான முகங்களுடனும் சிறுபிள்ளைக் கைகளுடனும் அனுபவித்தே உண்ணும்!
  • இவை உணவையும் உறக்கத்தையும் தவிர, தங்களைப் பற்றி என்ன கனவு காணும்? என்பது ஆத்மாநாமின் “கேள்வி”க் கவிதைச் செய்தியாகும்.

4. ஆத்மநாம் – குறிப்பு வரைக?

  • மதுசூதனன் என்பது “ஆத்மாநாம்” என்பாரின் இயற்பெயர்
  • முப்பத்திரண்டு ஆண்டுகளே வாழ்ந்தவர்
  • 156 கவிதைகளை எழுதித் தமிழ்க்கவிதை உலகில் ஆளுமை மிக்கவராகத் திகழ்ந்தார்.
  • “காகிதத்தில் ஒரு கோடு” என்பது இவருடைய கவிதைத் தொகுப்பு
  • “ழ” என்னும் சிற்றிதழைச் சில காலம் நடத்தினார்
  • கவிதை, கட்டுதை, மொழிபெயர்ப்பு என்னும் மூன்று தளங்களில் இயங்கினார்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment