TN 11th Standard Tamil Book Back Answers | Lesson 2.5 – ஐங்குறுநூறு

2.5 ஐங்குறுநூறு

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 11th Standard Tamil Lesson 2.5 – ஐங்குறுநூறு. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

11th Standard Tamil Guide - Aingurunooru

11th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு
  • இது மூன்றடிச் சிற்றெல்லையும், ஆறடி பேரல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல்.
  • திணை ஒன்றிற்கு நூறு பாடல்களாக, ஐந்து திணைகளுக்கு ஐந்நூறு பாடல்கள் கொண்டது.
  • ஐந்திணை பாடிய புலவர்கள் : குறிஞ்சி – கபிலர், முல்லை – பேயனார், மருதம் – ஓரம்போகியார், நெய்தல் – அம்மூவனார், பாலை – ஓதலாந்தையார்
  • ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்து பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்
  • இதனை தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை
  • பேயனார் சங்ககாலப் புலர்களின் ஒருவர். இவர் இயற்றிய 105 பாடல்கள் கிடைத்துள்ளன.

சொல்லும் பொருளும்

  • காயா, கொன்றை, நெய்தல், முல்லை, தளவம், பிடவம் – மழைக்கால மலர்கள்
  • போது – மொட்டு
  • அலர்ந்து – மலர்ந்து
  • கவினி – அழகுற

இலக்கணக் குறிப்பு

  • ஆல் – அசைநிலை
  • கண்ணி – அண்மை விளிச்சொல்
  • ஆடுகம் – தன்மைப் பன்னமை வினைமுற்று

பகுபத உறுப்பிலக்கணம்

அலர்ந்து  பகுபத உறுப்பிலக்கணம் தருக

அலர்ந்து =  அலர் + த் (ந்) + த் + உ

  • அலர் – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ –  வினையெச்ச விகுதி

பாடநூல் வினாக்கள்

சிறு வினா

ஐங்குறுநூற்றுப் பாடல் சுட்டும் திணை, முதற்பொருள், கருப்பொருள் அட்டவணைப்படுத்துக

ஐங்குறுநூற்றுப் பாடல் சுட்டும் திணை

திணை முல்லை
முதற்பொருள் இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
நிலம் காடும் காடு சார்ந்த இடமும்
பெரும்பொழுது கார்காலம்
சிறுபொழுது மாலை

கருப்பொருள்

தெய்வம் திருமால் (மாயோன்)
மக்கள் குறும்பொறை, நாடான், தோன்றல், மனைவி, கிழத்தி, இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்
பறவை காட்டுக்கோழி
விலங்கு முயல், மான்
ஊர் பாடி
மரம் முல்லை, தோன்றி, கொன்றை, காயா, குருத்தம்
நீர் குறுஞ்சுனை, கானாறு
உணவு வரகு, சாமை, முதிரை
பறை ஏறுகோட்பறை
யாழ் முல்லையாழ்
பண் சாதரிப்பண்
தொழில் சாமை, வரகு விதைத்தல், களைகட்டல், நெல் அரிதல், ஏறுதழுவுதல், ஆநிரை மேய்த்தல்

கூடுதல் வினாக்கள்

இலக்கணக்குறிப்பு

  • கொண்டன்றால் (ஆல்) – அசைநிலை
  • பேரமார் கண்ணி – அண்மை விளி (அழைத்தல்)
  • ஆடுகளம் விரைந்தே – தன்மை பன்மை வினைமுற்று
  • காயா கொன்றை நெய்தல் முல்லை – உம்மைத்தொகை
  • போதவிழ் தளவொடு – வினைதொகை
  • அலர்ந்து கவினி, விரைந்து – வினையெச்சங்கள்

 பகுபத உறுப்பிலக்கணம்

1. ஆடுகம் = ஆடு + க் + அம்

  • ஆடு – பகுதி
  • க் – சந்தி
  • அம் –  தன்மை பன்னமை வினையெச்ச விகுதி

2. விரைந்து = விரை + த் (ந்) + த் + உ

  • விரை – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ –  வினையெச்ச விகுதி

புணர்ச்சி விதிகள்

1. போதவிழ் = போது + அவிழ்

  • “உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி போத் + அவிழ் என்றாயிற்று
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி போதவிழ் என்றாயிற்று.

2. பிடவலர்ந்து = பிடவு + அலர்ந்து

  • “முற்றும் அற்று ஒரேவழி” என்ற விதிப்படி பிடவ் + அலர்ந்து என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி பிடவலர்ந்து என்றாயிற்று.

3. பூவணி = பூ + அணி

  • “ஏனைய உயிர்வரின் வவ்வும்” என்ற விதிப்படி பூ + வ் + அணி என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி பூவணி என்றாயிற்று.

பலவுள் தெரிக

1. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்க

  1. காயா
  2. குறிஞ்சி
  3. பிடவம்
  4. கொன்றை

விடை : குறிஞ்சி

2. பேயனார் ___________ பாடுவதில் வல்லவர்

  1. முல்லைத்திணை
  2. மருத்த்திணை
  3. பாலைத்திணை
  4. நெய்தற்திணை

விடை : முல்லைத்திணை

3. ஐங்குறுநூறு – பிரித்தெழுத கிடைப்பது ___________

  1. ஐங் + குறுநூறு
  2. ஐந்து + குறுநூறு
  3. ஐங்குறுமை + நூறு
  4. ஐந்து + குறுமை + நூறு

விடை : ஐந்து + குறுமை + நூறு

4. ஐங்குறுநூற்றின் அடிவரையறை ___________

  1. 13 – 31
  2. 9 – 12
  3. 3 – 6
  4. 4 – 8

விடை : 3 – 6

5. ஐங்குறுநூறு சிற்றெல்லை ___________

  1. ஆறடி
  2. ஐந்தடி
  3. நான்கடி
  4. மூன்றடி

விடை : மூன்றடி

6. ஐங்குறுநூறு பேரெல்லை ___________

  1. ஆறடி
  2. ஐந்தடி
  3. நான்கடி
  4. மூன்றடி

விடை : ஆறடி

7. ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலை பெருந்தேவனார் பாடியவர் ___________

  1. பேயனார்
  2. கபிலர்
  3. பெருந்தேவனார்
  4. அம்மூவனார்

விடை : பெருந்தேவனார்

8. ஐங்குறுநூற்றினைத் தொகுத்தவர் …………………

  1. பேயனார்
  2. புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்
  3. கபிலர்
  4. அம்மூவனார்

விடை : புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்

9. மாந்தரஞ் சேரலிரும்பொறை தொகுப்பித்த நூல் ___________

  1. ஐங்குறுநூறு
  2. பதிற்றுப்பத்து
  3. பத்துப்பாட்டு
  4. புறநானூறு

விடை : ஐங்குறுநூறு

9. தவறான இணையக் கூறுக

  1. குறிஞ்சி  – கபிலர்
  2. முல்லை – பேயனார்
  3. மருதம் – ஓதலாந்தையார்
  4. நெய்தல் – அம்மூவனார்

விடை : மருதம் – ஓதலாந்தையார்

10. முல்லை நிலப் பூக்களில் பொருந்தாதவற்றை தெரிவு செய்க

  1. காயா, கொன்றை
  2. நெய்தல், முல்லை
  3. செம்முல்லை, பிடவம்
  4. குறிஞ்சி, வேங்கை

விடை : குறிஞ்சி, வேங்கை

11. “கிழவன் பருவம் பாராட்டும் பத்து” என்னும் தலைப்பின் ____________ முல்லைத்திணையில் உள்ளன.

  1. ஒன்பது பாடல்கள்
  2. பத்து பாடல்கள்
  3. எட்டு பாடல்கள்
  4. ஆறு பாடல்கள்

விடை : முல்லை

12. மொட்டு என பொருள் தரும் சொல் ___________

  1. வீ
  2. செம்மல்
  3. போது
  4. அரும்பு

விடை : போது

13. பேயனார் இயற்றிய __________ பாடல்கள் கிடைத்துள்ளன.

  1. 143
  2. 27
  3. 105
  4. 99

விடை : 105

பொருத்துக

1. குறிஞ்சி அ. ஓதாலந்தையார்
2. முல்லை ஆ. கபிலர்
3. மருதம் இ. பேயனார்
4. நெய்தல் ஈ. ஓரம்போகியார்
5. பாலை உ. அம்மூவனார்
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – உ, 5 – அ

குறு வினா

1. முல்லைத் திணைக்குரிய சிறுபொழுது, பெரும்பொழுதுகள் யாவை?

  • பெரும்பொழுது – கார்காலம்
  • சிறுபொழுது – மாலை

2. முல்லைநில மழைக்கால மலர்களாக ஐங்குறுநூறு கூறுவன யாவை?

காயா, கொன்றை, நெய்தல், முல்லை, தவளம், பிடவம் ஆகியன முல்லைநில மழைக்கால மலர்களாக ஐங்குறுநூறு குறிப்பிட்டுள்ளது.

சிறு வினா

ஐங்குறுநூறு – நூற்குறிப்பு வரைக

  • ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு
  • இது மூன்றடிச் சிற்றெல்லையும், ஆறடி பேரல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல்.
  • திணை ஒன்றிற்கு நூறு பாடல்களாக, ஐந்து திணைகளுக்கு ஐந்நூறு பாடல்கள் கொண்டது.
  • இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவரனார்
  • இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்
  • இதனை தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை
  • ஐந்திணைகளில் ஒன்றான முல்லைத் திணை நமக்கு பாடப்பகுதியாக கொடுக்கப்பட்பட்டுள்ளது.
  • இப்பாடலை பாடியவர் பேயனார், இவர் சங்ககாலப் புலர்களின் ஒருவர். இவர் இயற்றிய 105 பாடல்கள் கிடைத்துள்ளன.

ஐந்திணைகளை பாடிய புலவர்கள்

  • குறிஞ்சி  – கபிலர்
  • முல்லை – பேயனார்
  • மருதம் – ஓரம்போகியார்
  • நெய்தல் – அம்மூவனார்
  • பாலை – ஓதலாந்தையார்

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment