TN 10th Standard Tamil Book Back Answers | Lesson 9.4 – ஒருவன் இருக்கிறான்

9.4 ஒருவன் இருக்கிறான்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 10th Standard Tamil Lesson 9.4 – ஒருவன் இருக்கிறான். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

10th Standard Tamil Guide - Oruvan irukindran

10th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • ஒருவன் இருக்கிறான் கதை “கு.அழகிரிசாமி சிறுகதைகள்” என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
  • கு.அழகிரிசாமி அரசுப்பணியை உதறிவிட்டு முழுதாக எழுத்துப்பணியை மேற்கொண்டவர். மென்மையான நகைச்சுவையும் சோக இழையும் ததும்பக் கதைகளைப் படைப்பதில் பெயர் பெற்றவர்.
  • கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர் எனலாம்.
  • கி.ரா.வுக்கு இவர் எழுதிய கடிதங்கள் இலக்கியத்தரம் வாய்ந்தவை.
  • படைப்பின் உயிரை முமுமையாக உணர்ந்திருந்த கு.அழகிரிசாமி பல இதழ்களில் பணியாற்றியுள்ளர்.
  • மலேசியாவில் இருந்தபோத அங்குள்ள படைப்பாளர்களுக்குப் படைப்பு தொடர்பான பயிற்சி அளித்தவர்.
  • இவர் பதிப்பு பணி, நாடகம் என பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர்.
  • தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு திறனாய்வு நூல்களையும் படைத்தவர்.

பாடநூல் வினாக்கள்

கு.அழகிரிசாமியன் “ஒருவன் இருக்கிறான்” சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுதம் கதைமாந்தர் குறித்து எழுதுக

முன்னுரை:-

கு.அழகிரிசாமியின் “ஒருவன் இருக்கிறான்” சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுதம் கதைமாந்தர் வீரப்பன். அவர் தான் வறுமைப்பட்ட போதும் தம் அன்பையும் அருளையும் கொண்டு நட்பைப் போற்றினார்.

அன்பாளர்:-

வீரப்பன் காஞ்சிபுரத்தில் விறகு கடையில் வேலை செய்து வந்தார். அவர் ஏழையாக இருந்தாலும் நண்பன் குப்புசாமி மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். அனாதையான குப்புசாமிக்கு அவன் உறவினர்களும் உதவ முன்வரவில்லை. ஆனால் தன்னுடைய வறுமையையும் பொருட்படுத்தாமல் வீரப்பன், குப்புசாமியுடன் மனித நேயத்துடன் இருக்கின்றார்.

கொடையாளர்:-

குப்புசாமி நோய்வாய்ப்பட்டு வேலை இழந்தபோது வீரப்பன் அவரை தன் வீட்டிற்கு அழைத்து வந்து உணவு கொடுப்பார். மேலும் தான் கடன் வாங்கி அதனைக் குப்புசாமிக்குக் கொடுப்பார். சென்னைக்கு செல்லும் ஆறுமுகத்திடம் கடிதம் ஒன்றையும் மூன்று ரூபாயையும் குப்புசாமியிடம் கொடுத்து அனுப்பினார் வீரப்பன்.

பண்பாளர்:-

வீரப்பன் குப்புசாமி குணமடைய நாள்தோறும் கோயிலுக்குச் சென்று வேண்டுகிறார். அவருக்கு வேலை இல்லாதபோதும் நண்பர் குப்புசாமிக்கு கொடுக்க ஒருவரிடம் மூன்று ரூபாய் கடன் வாங்கி சென்னைக்கு செல்லும் ஆறுமுகத்திடம் கொடுத்து அனுப்பினார். குப்புசாமியைப் பார்க்க வரலாம் என்றால், இந்த மூன்று ரூபாய் பேருந்துக்கு செலவாகிவிடம் என்பதால் கொடுத்தனுப்புகிறேன். இன்னோரு இடத்திலும் பணம் கேட்டிருப்பதாகவும் கிடைத்தவுடன் குப்புசாமியைப் பார்க்க விரைவாக வருவதாகவும் வீரப்பன் தெரிவித்தார்.

முடிவுரை:-

ஏழ்மையிலும் நட்பைப் பாராட்டி உதவும் வீரப்பன் மனித நேயத்தின் மாமாகுடமாகத் திகழ்கின்றார். அவரின் செயல்பாடுகள் கல் மனதையும் கரைத்து மனிநேயத்தை சுரக்க வைக்கின்றது. ஒருவன் இருக்கிறான், மனித நேயத்திற்குச் சான்றாக அவன் இருக்கின்றான்.

கற்பவை கற்றபின்

1. சமூகத் தொண்டு செய்து உயர்ந்த விருதுகளைப் பெற்ற ஆளுமைகளைப் பட்டியிலிட்டு அவர்கள் செய்த சமூகப்பணி குறித்துக் கலந்துரையாடுக

கலந்துரையாடுபவர்கள் : மதி, கலா

மதி கலா! தங்கம்மா என்ற சமூக சேவையாளர் எங்கு பிறந்தார் என்ற உனக்குத் தெரியுமா?
கலா தெரியாது மதி… நீ சொல் தெரிந்து கொள்கிறேன்.
மதி இவர் 07.01.1925-ல் யாழ்ப்பாணம் அருகில் உள்ள ஓர் ஊரில் பிறந்தவர். சைவ சித்தாந்த தத்துவங்களில் ஈபாடுடையவர்.
கலா அவரது சமூகப் பணிகள் பற்றி சொல்கிறாயா?
மதி ஓ!… சொல்கிறேன். 1977-ல் ஓர் ஆலய நிர்வாகப் பதவியை முழுமையாக எடுத்தக் கொண்டு ஆன்மீகத்தின் வாயிலாக அறச்சாலைகள், நந்தவனம், தீர்த்த தடாகம் உருவாக்கினார். ஆதரவ்ற்ற சிறுமிகளுக்குத் “துர்க்காபுர் மகளிர் இல்லம்” நிறுவினார். அன்னபூரணி அன்னதான மண்டபம் அமைத்தார். வயோதிகர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். அன்னையர் இல்லம், துர்க்காதேவி மணிமண்டபம் என்பனவற்றை ஆரம்பித்து சமூகத் தொண்டாற்றினார்.
கலா ஓ!… இவ்வளவு சேவைகள் செய்திருக்கிறார்களா… அதனால்தான் அத்தனை விருதுகளும், பட்டங்களும் பெற்றாரோ.
மதி ஆம் புனிதா, இன்னும் இதுபோன்ற ஆளுமைகளின் சிறப்புகளை மீண்டும் நாம் சந்திக்கும் போது பேசலாமே?
கலா ஓ!… பேசலாம். இப்போது புறப்படுகிறேன். நன்றி டா

2. “அகநக நட்பதே நட்பு” என்ற தலைப்பில் நண்பர்களுக்கு உதவிய சூழல்களைச் சுவைபட எழுதுக.

“அகநக நட்பதே நட்பு”

எனக்கு ஒரு நண்பன் இருந்தான். அவன் எனக்கு நண்பன் என்று புறத்தே பார்ப்பவர்களுக்குத் தெரியாது நண்பர்கள் என்று யாரும் கண்டுபிடித்ததும் இல்லை.

“முகநக நட்பதே நட்பன்று” என்பதை நாங்கள் இருவரும் உணர்ந்து இருந்தோம்.

ஒருநாள் வகுப்பறைக்கு அறவிப்பு ஒன்று வந்தது. ஒரு குறிப்பிட்ட புத்தகம் வாங்க பணம் கொடுப்பது தொடர்பான அறிவிப்பு அது. எங்கள் வகுப்பில் அனைவரும் கொடுத்து விட்டோம். என் நண்பனைத் தவிர…

அவன் என்னை பார்த்தான்… அன்று நான் மதியம் உணவு எடுத்துவரவில்லை. கடையில் சாப்பிடுவதற்காக வைத்திருந்த பணத்தை அவனுக்காக கொடுத்து விட்டேன். அவன் கொண்டு வந்திருந்த உணவைப் பகிர்ந்து உண்டோம். எல்லாரும் வியந்தனர்.

எப்படிடா நீங்க இரண்டுபேரும்… என்று கேட்டவர்களுக்கு இருவரும் ஒரே மாதிரி பதில் சொன்னோம்.

“முகநக நட்பதே நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பதே நட்பு”

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. அழகிரிசாமி எழுதிய நூல் ___________

  1. கடவுள் இருக்கிறான்
  2. திருவாதிரை உலா
  3. ஒருவன் இருக்கிறான்
  4. யானையோடு பேசுதல்

விடை : ஒருவன் இருக்கிறான்

2. அரசுப் பணியை உதறிவிட்டு முழுதாக எழுத்துப்பணியை மேற்கொண்டவர் ___________

  1. அண்ணாதுரை
  2. அழகர்சாமி
  3. சுஜாதா
  4. அழகிரிசாமி

விடை : அழகிரிசாமி

3. கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர் __________

  1. அண்ணாதுரை
  2. அழகர்சாமி
  3. சுஜாதா
  4. அழகிரிசாமி

விடை : அழகிரிசாமி

4. அழகிரிசாமி __________ நாட்டில் படைப்பாளர்களுக்கான படைப்புப் பயிற்சி அளித்தார்

  1. இந்தியா
  2. இலங்கை
  3. தாய்லாந்து
  4. மலேசியா

விடை : மலேசியா

5. “ஒருவன் இருக்கிறான் கதை” வெளியான இதழ் ___________

  1. கணையாழி
  2. கலைமகள்
  3. ஆனந்தவிகடன்
  4. குமுதம்

விடை : கலைமகள்

6. “ஒருவன் இருக்கிறான் கதை” வெளியான ஆண்டு ___________

  1. 1956
  2. 1976
  3. 1966
  4. 1986

விடை : 1966

7. வீரப்பன் குப்புசாமிக்கு கொடுத்துவிட்ட பணம் ___________

  1. ஆறு ரூபாய்
  2. ஐந்து ரூபாய்
  3. நான்கு ரூபாய்
  4. மூன்று ரூபாய்

விடை : மூன்று ரூபாய்

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment