7.4 சிலப்பதிகாரம்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 10th Standard Tamil Lesson 7.4 – சிலப்பதிகாரம். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
நூல் வெளி
- சிலப்பதிகாரம், புகார் காண்டத்தின் இந்திரவிழா ஊரெடுத்த காதையிலிருந்து இப்பாடப்பகுதி எடுத்தாளப்பட்டுள்ளது.
- ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்.
- இது முத்தமிழ்காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது.
- மூவேந்தர் பற்றிய செய்திகளை கூறுகிறது.
- சிலப்பதிகாரத்தில் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என் மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது.
- கோவலன், கண்ணகி, மாதவி வாழ்க்கையைப் பாடுவது
- மணிமேகலை காப்பியத்துடன் கதைத்தொடர்பு கொண்டிருப்பதால் இவையிரண்டும் இரட்டைக் காப்பியங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
- சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள்.
- சேர மரபினைச் சேர்ந்தவர்.
- மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார்.
- கோவலன் கண்ணகி கதையைக் கூறி, “அடிகள் நீரே அருளுக” என்றதால் இளங்கோவடிகளும் “நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்” என இக்காப்பியம் படைத்தார் என்பர்.
சொல்லும் பொருளும்
- சுண்ணம் – நறுமணப்பொடி
- காருகர் – நெய்பவர் (சாலியர்)
- தூசு – பட்டு
- துகிர் – பவளம்
- வெறுக்கை – செல்வம்
- நொடை – விலை
- பாசவர் – வெற்றிலை விற்போர்
- ஓசுநர் – எண்ணெய் விற்போர்
- மண்ணுள் வினைஞர் – ஓவியர்
- மண்ணீட்டாளர் – சிற்பி
- கிழி – துணி
இலக்கணக் குறிப்பு
- வண்ணமும் சுண்ணமும் – எண்ணும்மை
- பயில்தொழில் – வினைத்தொகை
பகுபத உறுப்பிலக்கணம்
மயங்கிய – மயங்கு + இ(ன்) + ய் + அ
- மயங்கு – பகுதி
- இ(ன்) – இறந்த கால இடைநிலை
- ‘ன்’ – புணர்ந்து கெட்டது.
- ய் – உடம்படு மெய்
- அ – பெயரெச்ச விகுதி
பாடநூல் வினாக்கள்
சிறு வினா
பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
- பாசவர் – வெற்றிலை விற்பவர்கள்
- வாசவர் – நறுமணப் பொருட்களை விற்பவர்
- பல்நிண விலைஞர் – பல்வகை இறைச்சிகளை விலைகூறி விற்பவர்கள்
- உமணர் – உப்பு விற்பவர்
குறு வினா
“பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்”
அ) இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?
சிலப்பதிகாரம்
ஆ) பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
பகர்வனர் – பட்டினும்
இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.
பட்டினும் – சுட்டு
ஈ) காருகர் – பொருள் தருக.
நெய்பவர் (நெசவாளர்)
உ) இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?
சந்தனமும் அகிலும்
நெடு வினா
சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும், அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.
- மருவூர்ப்பாக்கத்து வணிகவீதிகளில் வண்ணக்குழும்பு, சுண்ணப்பொடி விற்பது போல இன்றைய அங்காடிகளிலும், வணிக வளாகங்களிலும் விற்கப்படுகின்றன.
- குளிர்ச்சி பொருந்திய சந்தனம், பூ வகைகள், ஊதுவத்தி, அகில் போன்ற நறுமணப் பொருள்களும் இன்றைய வணிக வளாகத்திலும், கிடைக்கின்றன, விற்கப்படுகின்றன.
- பொன், மணி, முத்து, பவளம், ஆகியவை மருவூர்ப்காக்க வீதிகளில் விற்பனை செய்யப்பட்டது. இன்று வணிக வளாகத்திலும் நகைக்கடைகளில் பொன், மணி, முத்து, பவளம் விற்கப்படுகிறது.
- வணிக வீதிகளில் குவியலாகக் கிடந்து தானிய வகைகள்.
- இன்று அங்காடிகளில் தானிய வகைகளை எடை போட்டு பொட்டலங்களில் கட்டி விற்பனை செய்கின்றனர்.
- மரூவூர்ப்பாக்கத் தெருக்களில் உப்பு, வெற்றிலை, நறுமணப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது போல், இன்றைய அங்காடிகளிலும் விற்கப்படுகின்றது.
- வெண்கலம், செம்புப் பாத்திரம், மரப்பொருட்கள், இரும்புப் பொருட்கள் கிடைத்ததைப் போல, இன்றைய அங்காடிளிலும் விற்கப்படுகின்றது.
- வெண்கலம், செம்புப் பாத்திரம், மரப்பொருட்கள், இரும்புப் பொருட்கள் கிடைத்ததைப் போல இன்றைய அங்காடி, வணிக வளாகங்களில் கிடைப்பதோடு, கூடுதலாக பல நவீனப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள (நெகிழி) பொருள்கள் நவீன அலங்காரங்களுடன் கிடைக்கின்றன.
- மருவூர்பாக்க வீதிகளில் பொற்கொல்லர், இரத்தின வேலை செய்பவர், தையற்காரர், தோல் பொருள் செய்பவர், துணியாலும், கட்டையாலும் பொம்மை செய்பவர்கள் எனப் பல திறப்பட்ட கைவினைஞர்கள் இருந்தனர்.
- அதைப்போலவே, இன்றைய அங்காடிகளிலும், வணிக வளாகங்களிலும் இத்தகு கைவினைக் கலைஞர்கள், நவீன தொழில் நுட்பத்துடன் தொழில் வல்லோராய் இருக்கின்றார்கள். அழகு மிளிரும் கைவினைப் பொருள்களைச் செய்து விற்பனையும் செய்கின்றனர்.
கற்பவை கற்றபின்
1. சிலப்பதிகாரக் கதைச் சுருக்கத்தை அறிந்த வந்து வகுப்பறையில் கூறுக
பதினாறு வயதுடைய கோவலனுக்கும், பன்னிரண்டு வயதுடைய கண்ணகிக்கும் திருமணம் நடைபெறுகிறது. இருவரும் இனிதே வாழகின்றனர்.
கோவலன் கலைகளின் காதலன். ஆடல் பாடல்களில் விருப்பம் கொண்டவன். யாழ் மீட்டுவதில் வல்லவன். ஒரு நாள் ஆடல் அரசி அழகுப்பாவை மாதவியின் ஆடலில் மயங்குகிறான்.
மாதவியின் பசிய மாலையை யார் வாங்குகிறார்களே அவர்களே மாதவியை அடையலாம் என்று அவள் இல்லத்தில் ஒருத்தி கடைத்தெருவுக்கு வந்து கூறுகிறார்.
கோவலன் மாலையை வாங்கி மாதவியை அடைகிறான். மாதவியோடு வாழ்கின்ற காலத்தில் அவன் செல்வம் எல்லாம் கரைகிறது.
மனம் வேறுபட்டு கண்ணகியை வந்தடைகிறான். இழந்த பொருளை மீட்ட மதுரைக் சென்று, ஆயர்குலப் பெண் மாதரியின் வீட்டில் தங்குகிறான்.
பொருள் ஈட்டுவதற்காக கண்ணகியின் காற்சிலம்பை எடுத்துக் கொண்டு மதுரை வீதிக்குச் செல்கிறான். பொற்கொல்லனிடம் காட்டுகிறான். அப்பொற்கொல்லன் அரசியின் சிலம்பைத் திருடியவன் அதை மறைக்க சமயம் கிடைத்ததை எண்ணி அரண்மனைச் சென்று மன்னனிடம் கோவலன் மீது பழி சுமத்துகிறான். மன்னனின் ஆணையால் கோவலன் கொலை செய்யப்படுகிறனா்.
இதைக் கேட்ட கண்ணகி அழுது புலம்பி அரசபைக்கு சென்று வழக்குரைக்கிறாள். உண்மை அறிந்த அரசனும் அரசியும் உயிர் துறக்கிறார்கள். மதுரையும் தீக்கிரையாகிறது.
பின் சேர நாட்டை அடைந்து வேங்கை மர நிழலில் தங்கிறாள். பிறகு வானுலகோர் சூழகோவலன் கண்ணகியை அழைத்த சென்றதைக் குன்றக் குறவர்கள் கூறுகிறார்கள்.
செங்குட்டுவன் இமயம் வென்று, கல்லெடுத்து கங்கையில் நீராட்டி வஞ்சியில் கண்ணிகிக்கு கோயில் கட்டுகிறான்.
இக்கதையில் மூலம் நாம் அறியும் மூன்று உண்மைகள்
- அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்.
- உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.
- ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.
2. சிலப்பதிகாரம் காட்டும் மருவூர்பாக்கம் பற்றிய விவரிப்பை இன்றைய கடைத் தெருவுடன் ஒப்பிட்டு உரையாடுக
உரையாடல்
மாணவர்களே! மருவூர்பாக்க வணிக வீதிகள் பற்றிக் கற்றோம் அல்லவா! அதை மனதில் கொண்டு இன்றைய கடை வீதிகளோட ஒப்பிட்ட உரையாடலாமா?
சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவற்றை ஒளிப்படங்களாகச் சேகரித்த வரலாற்றக் குறிப்பேடாக வைத்துக் கொள்ளுங்கள்.
உரையாடுபவர்கள் ; மதன், சுதன், உமா
மதன் | சுதன், உமா எப்படி இருக்கீறிர்? |
இருவரும் | நன்றாக இருக்கிறோம்! |
மதன் | இருவரும் விடுமுறைக்கு எங்காவது சென்றீர்களா? |
உமா | நான் சென்னை சென்றேன் மதன் |
சுதன் | நான் மதுரைக்கு போனேன். |
மதன் | நானும் திருச்சிக்கு சென்று இருந்தேன். |
சுதன் | நான் மதுரைக்குப் போனபோது அங்கு ‘மால்’ என்று சொல்லப்படும் வணிக வளாகத்துக்குச் சென்றேன். |
உமா | சென்னையிலும் பெரிய பெரிய வணிக வளாகங்கள் அதிகமாக உள்ளேன். |
மதன் | நானும் தான் சென்றேன். அவற்றையெல்லாம் பார்க்கும்போத ஏனோ! என் மனதில் நாம் பாடத்த்தில் பயின்று தெரிந்து கொண்ட மருவூர்பாக்கம் வணிகவீதிகளின் காட்சி என் மனதில் வந்து போனது. |
சுதன் | ஆமாடா!… வணிக வீதிகளில் எல்லாப் பொருட்களும் கிடைத்தது போல இங்கு கிடைக்கிறது. |
உமா | மருவூர்பாக்க வீதியை விட இங்க ஆரவாரமும், அலங்காரமும் அதிகமாக உள்ளது. |
மதன் | அங்கு உற்பத்தியாளரே பொருளைக் கொண்டு வந்து விற்பார். இங்கு முதலீட்டாளர்கள் இடைத்தரகர் மூலம் வாங்கி வந்த விற்பனையாளரை வைத்த விற்கின்றனர். |
சுதன் | அந்தக் காலத்தில் ஒவ்வொர பொருளுக்கும் நியாமான விலை, பண்டமாற்று முறை இருந்தது. |
உமா | தானியங்கள் குவித்து வைத்து அளந்து கொடுத்தனர். அனால் இந்த வளாகங்களிலும், அங்காடிகளிலம் வண்ணக் காகிதங்களில் எற்கனவே கட்டி வைத்து அடுக்கி வைத்துள்ளார்கள். நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் |
மதன் | மூன்று ஊர்களிலும் பொதுவான் முறையில் ஒரு விற்பனை முறை இருந்ததை யாரும் உணர்ந்தீர்களா… |
சுதன் | பொதுவான விற்பனை முறையா… என்னடா அது? |
உமா | எனக்குத் தெரிந்து விட்டது. நடைபாதை கடைகளைத்தான் சொல்கிறாய். |
மதன் | ஆமா உமா… ஒவ்வொரு கடைத்தெருவிலும் கண்ணைக் கவரும் பலமாடிக் கட்டிடங்கள், அலங்கார விளக்குள் அமைத்து பல பொரள் அங்காடிகள் இருப்பினும் அதே பொருள்களை நடைபாதைகளில் வைத்து சிறுகுறு வியாபாரிகள், விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருளை விற்றல் ஆகிய காட்சிகளையும் காண முடிந்தது தானே…. |
இருவரும் | ஆம் மதன்! நடைபாதைக் கடைகளிலும் தரமான பொருள் கிடைக்கும் என்று என் அம்மா அடிக்கடி சொல்வார்கள். |
மூவரும் | ஒருவருக்கொருவர்… நேரமாகிவிட்டது போய் வரலாமா… என்று விடை பெற்றனர். |
கூடுதல் வினாக்கள்
இலக்கணக் குறிப்பு
- நன்கலம், வெறுக்கை, நுண்வினை, அரும்பெளல் – பண்புத்தொகை
- பகருநர் – வினையாலணையும் பெயர்
- செறிந்த – பெயரெச்சம்
- குழலினும் யாழினும் – எண்ணும்மை
பகுபத உறுப்பிலக்கணம்
1. அளந்து = அள + த்(ந்) + த் + உ
- அள – பகுதி
- த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்த கால இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி
2. குவித்த = குவி + த் + த் + உ
- குவி – பகுதி
- த் – சந்தி
- த் – இறந்த கால இடைநிலை
- அ – பெயரெச்ச விகுதி
3. காட்டும் = காட்டு + உம்
- காட்டு– பகுதி
- உம் – செய்யும் என்னும் வாய்ப்பாட்டு பெயரெச்ச விகுதி
பலவுள் தெரிக
1. மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறும் நூல் ____________
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- குண்டலகேசி
- வளையாபதி
விடை : சிலப்பதிகாரம்
2. சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் ____________
- இரண்டு
- நான்கு
- ஐந்து
- மூன்று
விடை : மூன்று
3. சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகள் ____________
- 10
- 20
- 30
- 40
விடை : 30
4. “அடிகள் நீரே அருளக” என்று இளங்கோவடிகளிடம் வேண்டிக் கொண்டார் ____________
- கம்பர்
- கபிலர்
- திருத்தக்கத்தேவர்
- சீத்தலைச்சாத்தனார்
விடை : சீத்தலைச்சாத்தனார்
5. சிலப்பதிகாரத்தோடு தொடர்புடைய காப்பியம் ____________
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- குண்டலகேசி
- வளையாபதி
விடை : மணிமேகலை
6. மணிமேகலையின் ஆசிரியர் ____________
- சீத்தலைச்சாத்தனார்
- கம்பர்
- கபிலர்
- திருத்தக்கத்தேவர்
விடை : சீத்தலைச்சாத்தனார்
7. மண்ணீட்டாளர் எனக் குறிக்கப் பெற்றவர் ____________
- ஓவியர்
- வணிகர்
- சிற்பி
- சாலியர்
விடை : சிற்பி
8. இந்திரவிழா ஊரெடுத்த காதை அமைந்த காண்டம் ____________
- வஞ்சிக்காண்டம்
- புகார்க்காண்டம்
- மதுரைக்காண்டம்
- பால காண்டம்
விடை : புகார்க்காண்டம்
9. சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு ____________
- படலம்
- சருக்கம்
- காதை
- காட்சி
விடை :காதை
10. சிலப்பதிகாரத்தின் பெரும் பிரிவு ____________
- பாகம்
- அங்கம்
- காண்டம்
- காதை
விடை : காண்டம்
11. பேசும் மொாியின் ஓட்டம் என்பது ____________
- மொழி
- உரை
- காதை
- காட்சி
விடை : காட்சி
12. சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ் நடை ____________
- உரைநடை
- வசன நடை
- செய்யுள்நடை
- உரைப்பாட்டு மடை
விடை : உரைப்பாட்டு மடை
13. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ____________ ஆகும்
- இணைக்காப்பியம்
- முதற்காப்பியம்
- பிணைக்காப்பியம்
- இரட்டைக் காப்பியம்
விடை : இரட்டைக் காப்பியம்
14. கண்ணகியும், கோவலனும் சென்று அடைந்த ஊர் ____________
- காவிரிப்பூம்பட்டினம்
- கொடும்பாளூர்
- திருவரங்கம்
- உறையூர்
விடை : கொடும்பாளூர்
15. இளங்கோவடிகள் ____________ நாட்டைச் சேர்ந்தவர்
- சேர
- சோழ
- பல்லவ
- பாண்டிய
விடை : சேர
16. அழகர்மலை என்பது ____________
- மால்குன்றம்
- வேலவன்குன்றம்
- திருமால்குன்றம்
- திருவரங்கம்
விடை : திருமால்குன்றம்
17. கோவலனையும் கண்ணகியையும் அழைத்துச் சென்றவர் ____________
- கவுந்தியடிகள்
- ஆயர்குலப்பெண்
- மாதவி
- மாதிர
விடை : கவுந்தியடிகள்
18. பெருங்குணத்துக் காதலாள் ____________
- மணிமேகலை
- கண்ணகி
- மாதவி
- மாதிரி
விடை : கண்ணகி
19. மருவூர்பாக்கம் அமைந்த நகரம் ____________
- புகார்
- வஞ்சி
- மதுரை
- காஞ்சி
விடை : புகார்
20. பொருந்தா சொல்லை எழுதுக
- சுண்ணம் – நறுமணப்பொடி
- காருகர் – நெய்பவர்
- தூசு – பட்டு
- துகிர் – முத்து
விடை : துகிர் – முத்து
21. பொருந்திய சொல்லை கண்டுபிடி
- சுண்ணம் – நெய்பவர்
- காருகர் – பவளம்
- தூசு – பட்டு
- துகிர் – நறுமணப்பொடி
விடை : தூசு – பட்டு
22. பொருந்திய சொல்லை கண்டுபிடி
- வெறுக்கை – செல்வம்
- நொடை – எண்ணெய் விற்போர்
- ஓசநர் – வெற்றிலை விற்போர்
- பாசவர் – விலை
விடை : வெறுக்கை – செல்வம்
23. கூவம் என்பதன் பொருள் ____________
- குப்பை
- பழம்
- தோல்
- தானியம்
விடை : தானியம்
24. கள் விற்பவர் ____________
- வலைச்சியர்
- பரதவர்
- உமணர்
- பாசவர்
விடை : வலைச்சியர்
பொருத்துக
1. தூசு | அ. செல்வம் |
2. துகிர் | ஆ. பட்டு |
3. வெறுக்கை | இ. விலை |
4. நொடை | ஈ. பவளம் |
விடை ; 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ |
பொருத்துக
1. கண்ணுள் வினைஞர் | அ. சிற்பி |
2. மண்ணீட்டாளர் | ஆ. ஓவியர் |
3. கிழி | இ. தொழில் |
4. வினை | ஈ. துணி |
விடை ; 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ |
சிறு வினா
1. சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் யாவை?
சிலப்பதிகாரத்தில் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என் மூன்று காண்டங்கள் உள்ளன.
2. சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகள் யாவை?
சிலப்பதிகாரத்தில் முப்பது காதைகளை உடையது.
- புகார்க்காண்டம் – 10
- மதுரைக்காண்டம் – 13
- வஞ்சிக்காண்டம் – 7
3. இரட்டைக் காப்பியங்கள் எவை? அவ்வாறு அழைக்கப்படக் காரணம் யாது?
- இரட்டைக் காப்பியங்கள் என்பது சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகும்
- காலத்தாலும், கதைத்தொடர்பாலும் தொடர்புடையதாய் இருக்கும்
4. சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள் யாவை?
முதல்காப்பியம், முத்தமிழ்காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம் – உரையிட்ட பாட்டுடைச் செய்யுள்
5. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் விளக்குக
- உரையிடையிட்ட பாட்டுடை என்பது “உரைபாட்டு மடை” என்னும் தமிழ் நடை
- இது சிலப்பதிகாரத்தில் இடம் பெறுகிறது.
- உரைநடைப்பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு என்பது பொருளாகும்.
6. மருவூர்பாக்க வீதியில் இருந்த கைவினைத் தொழில் வல்லுநர்கள் யாவர்?
செப்புப் பாத்திரம் செய்வோர், மரத்தச்சர், இரும்புக்கொல்லர், ஓவியர், பொற்கொல்லர், தையற்காரர், தோல் பொருள் தைப்பவர்
7. சிலப்பதிகாரத்தில் மருவூர்பாக்க வீதியில் பற்றிய செய்தி இடம்பெறும் கண்டம் மற்றும் காதை யாவை?
மதுரைக்காண்டம், இந்திரவிழா ஊரெடுத்த காதை
8. “குழலினம் யாழினம் குரல்முதல் ஏழும்வழுவின்றி இசைத்து” இவ்வடிகளில் சுட்டும் குரல் முதலான ஏழிசைகள் யாவை?
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்
9. “நன்கலம் தருதர்” – என்று எவரைச் சிலப்பதிகாரம் சுட்டுகிறது?
இரத்தினம் முதலான அணிகலன்கள் வேலை செய்பவர்
10. ஏழு சுரங்களை சுட்டுக
ஸ, ரி, க, ம, ப, த, நி
11. பால்வகை தெரிந்த பகுதித் பாண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும் – இடம் சுட்டிப் பொருள் விளக்குக
இடம்
சிலப்பதிகாரம் புகார் காண்டத்தில் இந்திர விழா காதையில் இடம் பெற்றுள்ளது
பொருள்
மருவூர்பாக்க வணிக வீதியில் நடைபெற்ற வணிகம்
விளக்கம்
மருவூர்பாக்கத் தெருவில் பலப்பல பண்டங்களின் விற்பனை நடைபெறுகின்றது. எட்டு வகைத் தானியங்களும் குவிந்து கிடக்கும் கூலக்கடைத் தெருக்களும் உள்ளன.
12. மருவூர்பாக்கத் தெருக்களில் எவ்வெவ் மணப்பொருட்களை விற்பனை செய்து கொண்டு இருந்தனர்?
புகார் நகர மருவூர்ப்பாக்க வணிக வீதிகளில்
வண்ணக்குழம்பு, சுண்ணப்பொடி, குளிர்ந்த மணச்சாந்து, பூ, நறுமணப்பொரட்கள், அகில் முதலான மணப்பொருட்களை விற்பனை செய்து கொண்டு இருந்தனர்
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…