6.5 பாய்ச்சல்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 10th Standard Tamil Lesson 6.5 – பாய்ச்சல். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
நூல் வெளி
- ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ என்ற சிறுகதை தாெகுப்பில் பாய்ச்சல் என்னும் கதை இடம் பெற்றுள்ளது.
- இதன் ஆசிரியர் சா.கந்தசாமி.
- இவர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
- இவர் எழுதிய சாயாவனம் புதினத்தால் எழுத்துலகில்
புகழ்பெற்றார்.
- விசாரணைக் கமிஷன் என்னும் புதினத்திற்கு சாகித்திய அகாெதமி விருதைப் பெற்றுள்ளார்.
- சுடுமண் சிலைகள் என்ற குறும்படத்திற்கு அனைத்துலக விருதையும் பெற்றுள்ளார்.
- நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பதினாென்றுக்கும் மேற்பட்ட புதினங்களையும் எழுதியுள்ளார்.
- தொலைந்து பாேனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி முதலியவை
இவர் எழுதிய புதினங்களுள் சில.
கற்பவை கற்றபின்
மேடைக் கலைஞர்களும் பகல் வேடக் கலைஞர்களும் எதிர் கொள்ளும் இடர்பாடுகள் குறித்து வகுப்பறையில் விவாதிக்க
ஆசிரியர்:
மாணவர்களே! மேடைக் கலைஞர்களும் பகல் வேடக் கலைஞர்களும் எதிர் கொள்ளும் இடர்பாடுகள் குறித்து உங்களது கருத்த என்ன?
மாணவர் குழு – 1
ஒப்பனைக்கு பயன்படுத்திக் கொள்ளும் அலங்காரப் பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும் சலங்கைகள் காலில் குத்துவதற்கு வாய்ப்புள்ளத. வித்தைகளைக் காட்டும் போது சில விபத்துக்கள் நேர வாய்ப்புள்ளது.
மாணவர் குழு – 2
எத்தொழில் செய்யினும் வருமான நோக்குடன் செய்யப்படுகிறது. நிகழ்கலை கலைஞர்கள் வருமானம் ஈட்டுவதையே முதன்மையாகக் கொண்டவர்கள். உழைப்பதனால் வரும் வருமானம் மகிழ்ச்சியைக் கொடுக்கும்போது, ஏற்படும் பிரச்சனைகளைச் சமாளித்துக் கொள்ள வேண்டியதுதான்.
ஆசிரியர்
எத்தொழில் ஆயினும் வெவ்வேறு விதமான பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டும். இவ்வுலகில் நாம் வாழும் வாழ்க்கை நாடகத்தில் நடிகர்களாக இருக்கும் கலைஞர்கள் சந்திக்கு இடர்பாடுகள் வேறு மாதிரியானவை.
கோமாளிகளாக நடிக்கும் கலைஞர் பிறிரின் கேலிக் கூத்துக்கு ஆளாகின்றனர். தங்களுக்குரிய சோகங்கள் எதுவாக இருந்தாலும் அதனை வெளிப்படுத்தாது மக்களை மகிழ்விக்க நினைக்கும் கலைஞர்கள் உயர்ந்தவரே
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக.
1. பாய்ச்சல் என்னும் சிறுதை ______________ என்ற தொகுப்பில் இடம் பெற்றறுள்ளன
- தக்கையின் மீது நான்கு கண்கள்
- சா. கந்தசாமியின் கதைகள்
- தொலைந்து போனவர்கள்
- சுடுமண் சிலைகள்
விடை : தக்கையின் மீது நான்கு கண்கள்
2. சா. கந்தசாமி எழுதிய சிறுதை நூல் ______________
- சாயசண்டிகை
- பாய்ச்சல்
- பயம்
- கடந்து வந்த பாதை
விடை : பாய்ச்சல்
3. சா. கந்தசாமி பிறந்த மாவட்டம் ______________ ஊர் ______________
- தஞ்சாவூர், மயிலாடுதுறை
- திருவாரூர், வலங்கைமான்
- நாகப்பட்டினம், மயிலாடுதுறை
- திருச்சி, உறையூர்
விடை : நாகப்பட்டினம், மயிலாடுதுறை
4. சா. கந்தசாமி ______________ என்ற குறும்படத்திற்காக அனைத்துலக விருதைப் பெற்றுள்ளார்
- தொலைந்து போனவர்கள்
- சூர்யவம்சம்
- சாந்தகுமாரி
- சுடுமண் சிலைகள்
விடை : சுடுமண் சிலைகள்
5. சா. கந்தசாமி எழுத்துலகில் புகழைப் பெற்றுத் தந்த புதினம் ______________
- சாயாவனம்
- சூர்யவம்சம்
- சாந்தகுமாரி
- சுடுமண் சிலைகள்
விடை : சாயாவனம்
6. பாய்ச்சல் கதையில் இடம் பெறுபவர் ______________
- இராவணன்
- அனுமார்
- இராமன்
- வாலி
விடை : அனுமார்
7. சா. கந்தசாமியின் சாகித்ய விருது பெற்ற நூல் ______________
- சூர்யவம்சம்
- சாந்தகுமாரி
- சுடுமண் சிலைகள்
- விசாரணைக் கமிஷன்
விடை : விசாரணைக் கமிஷன்
பொருத்துக
1. தக்கையின் மீது நான்கு கண்கள் | அ. சாகித்திய அகாெதமி விருது |
2. விசாரணைக் கமிஷன் | ஆ. புதினம் |
3. சுடுமண் சிலைகள் | இ. அனைத்துலக விருது |
4. சூர்யவம்சம் | ஈ. சிறுகதைத் தொகுப்பு |
விடை : 1 – ஈ, 2- அ, 3 – இ, 4 – ஆ |
குறு வினா
1. சா. கந்தசாமி எந்த புதினத்தினால் புகழ்பெற்றார்?
சா. கந்தசாமி எழுதிய சாயாவனம் புதினத்தால் எழுத்துலகில் புகழ்பெற்றார்.
2. சா. கந்தசாமி எந்த புதினத்திற்காக சாகித்திய அகாெதமி விருதைப் பெற்றுள்ளார்?
விசாரணைக் கமிஷன் என்னும் புதினத்திற்கு சாகித்திய அகாெதமி விருதைப் பெற்றுள்ளார்.
3. சா. கந்தசாமியின் படைப்புகள் யாவை?
சாயாவனம், விசாரணைக் கமிஷன், தொலைந்து பாேனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி
சிறு வினா
சா. கந்தசாமி – குறிப்பு வரைக
- இவர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
- இவர் எழுதிய சாயாவனம் புதினத்தால் எழுத்துலகில் புகழ்பெற்றார்.
- விசாரணைக் கமிஷன் என்னும் புதினத்திற்கு சாகித்திய அகாெதமி விருதைப் பெற்றுள்ளார்.
- சுடுமண் சிலைகள் என்ற குறும்படத்திற்கு அனைத்துலக விருதையும் பெற்றுள்ளார்.
- நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பதினாென்றுக்கும் மேற்பட்ட புதினங்களையும் எழுதியுள்ளார்.
- தொலைந்து பாேனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி முதலியவை இவர் எழுதிய புதினங்களுள் சில.
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…