TN 10th Standard Tamil Book Back Answers | Lesson 3.4 – கோபல்லபுரத்து மக்கள்

3.4 கோபல்லபுரத்து மக்கள்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 10th Standard Tamil Lesson 3.4 – கோபல்லபுரத்து மக்கள். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

10th Standard Tamil Guide - Kopalapurathu Makkal

10th Std Tamil Text Book – Download

நூல் வெளி

 • கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதை கோபல்லபுரத்து மக்கள்.
 • ஆசிரியர் தன் சொந்த ஊரான இடைசெவல் மக்களின் வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையும் புகுத்தி இந்நூலினைப் படைத்துள்ளார்.
 • இதன் ஒரு பகுதியே இங்கு பாடமாகத் உள்ளது.
 • இந்திய விடுதலைப் போராட்டத்தினைப் பின்னணியாகக் கொண்டது.
 • 1991-ம் ஆண்டிற்கான “சாகித்திய அகாதெமி” பரிசினைப் பெற்றது.
 • கோபல்லபுரத்து மக்கள் கதையின் ஆசிரியர் கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.
 • 20க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ள இவரின் கதைகள் ஒரு கதை சொல்லியின் கதைப்போக்கில் அமைந்திருக்கும்.
 • இவரின் கதைகள் அனைத்தும் கி.ராஜநாராயணன் கதைகள் என்னும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன;
 • இவர் கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
 • இவர் தொடங்கிய வட்டாரமரபு வாய்மொழிப் புனைகதைகள் ‘கரிசல் இலக்கியம்’ என்று அழைக்கப்டுகின்றன.
 • எழுத்துலகில் இவர் ‘கி.ரா.’ என்று குறிப்பிடுகிறார்.

பாடநூல் வினாக்கள்

நெடு வினா

அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.

குறிப்புச்சட்டம்
 • முன்னுரை
 • அன்னமய்யாவுடன் வந்த வாலிபன்
 • நீச்சுத்தண்ணீர்
 • ஜீவ ஊற்று
 • அன்னமய்யாவின் மனநிறைவு
 • பெயர் பொருத்தம்
 • பரமேஸ்வரன் (மணி)
 • முடிவுரை

முன்னுரை:-

கோபல்லபுரத்து மக்கள் என்ற கதை சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற கி.ராஜநாராயணன் அவர்கள் எழுதியது. அன்னமய்யா என்னும் பெயருக்கும், அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினை இக்கதையில் காண்போம்.

அன்னமய்யாவுடன் வந்த வாலிபன்:-

சுப்பையாபுவுடன் புஞ்சையில அன்று அருகு எடுக்கும் வேலை. அன்னமய்யா வேலைக்கு ஒரு ஆளை அழைத்து வந்தார். அன்னமய்யாவுடன் வந்து சன்யாசியோ, பரதேசியோ இல்லை. கிட்ட போய் பார்த்த பிறகுதான் தெரிந்தது அவன் ஒரு வாலிபன். வாலிபனது தாடியும், அழுக்கு ஆடையும் தள்ளாட்டம் அவனை வயோதிபனைப் போலவும் சாமியாரைப் போலவும் காட்டியது.

நீச்சுத்தண்ணீர்:-

அன்னமய்யாவைப் பாரத்த அவ்வாலிபன், குடிக்கத் தண்ணி கிடைக்குமா? எனக் கேட்டான். அதற்கு அன்னமய்யா நீச்சுத் தண்ணீ தரவா? எனக் கேட்டான். கரிசல் மண்ணில் பாதி புதைக்கப்பட்டு இருந்த கரிய மண் பாத்திரத்தின் வாய் கற்களால் மூடப்பட்டிருந்தது. அன்னமய்யா மண்பாத்திரத்தின் மேலிருந்த கல்லை அகற்றினான்.

ஜீவ ஊற்று:-

அன்னமய்யா கலசத்திலிருந்து கஞ்சின் நீத்துப்பாகத்தைச் சிரட்டையில் ஊற்றிக் கொடுத்தான். நீத்துப் பாகமாகிய மேல் கஞ்சை வாலிபன் குடித்தும் கலயத்தை அலசி தெளிவு மறைந்த சோற்றின் மகுளி கஞ்சையும் வாலிபனுக்கு ஊற்றிக் கொடுத்தான் அன்னமய்யா. வாலிபனுக்குள் ஜீவ ஊற்று பொங்கியது. அவன் உற்சாகம் அடைந்தான்.

அன்னமய்யாவின் மனநிறைவு:-

கஞ்சியைக் குடித்த வாலிபன் வேப்ப மர நிழலைச் சொர்க்கமாய் நினைத்துத் தூங்கினான். இதைக்கண்ட அன்னமய்யாவுக்கு மனநிறைவு ஏற்பட்டது. மார்பில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்து அப்படியே தூங்கிவிடும் குழந்தையைப் போலவே அவ்வாலிபனையும் பார்த்தான்.

பெயர் பொருத்தம்:-

தூக்கம் தெளிந்து எழுந்த வாலிபன் “உன் பெயர் என்ன?” என்று அன்னமய்யாவிடம் கேட்டான். அதற்கு அவன் அன்னமய்யா என்றார். எவ்வளவு பொருத்தம். “எனக்கு இன்று நீ இடும் அன்னம் தான்” என் வாழ்வுக்கு மீண்டும் உயிர் கொடுத்தது என்று மனதுக்குள் கூறினான் அவ்வாலிபன்.

பரமேஸ்வரன் (மணி):-

அன்னமய்யா அந்த வாலிபன் பெயரைக் கேட்டார். அவன் தன் பெயர் பரமேஸ்வரன் என்றும் தற்போதைய பெயர் மணி என்றும் சொன்னான். கம்மஞ்சோறும் துவையலும் கொடுத்தார்கள். பசியால் அதையும் உண்டு உறங்கினான்.

முடிவுரை:-

அன்னமய்யா என்ற பெயருக்கு ஏற்ப அன்னமிட்டு மனிதநேயம் காத்த அன்னமய்யாவின் பெயர் அவனுக்கே பொருத்தமுடையதாக அமைகிறது. கம்மஞ்சோறும், துவையலும் கரிசல் மண்ணுடன் மணக்கின்றது.

கற்பவை கற்றபின்

1. பசித்தவருக்கு உணவிடுதல் என்ற அறச் செயலையும் விருந்தினருக்க உணவிடுதல் என்ற பண்பாட்டுச் செயலையும் ஒப்பிட்டு பேசுக

பசித்தவருக்கு உணவிடுதல் என்பது ஒரு மனிநேயச் செயலாகும். “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்ற புகழ்மொழிக்கேற்ப பசியால் வருந்தும் ஒருவருக்கு அந்நேரத்தில உணவளிப்பது அவருக்குப் புத்துயிர் அளிப்பதாக இருக்கிறது.

விருந்தினருக்கு உணவிடுதல் என்பது நகைச்சுவைக்காகவும் விருந்தோம்பல் காரணமாகவும் உணவிடப்படுகிறது. தமிழ் பண்பாடுகளில் சிறந்த ஒன்று விருந்தோம்பல். ஆகவே விருந்தளிப்பதனைப் பெறும்பேறாகக் கருதி உணவளிப்பார்.

2. உங்கள் கற்பனையை இணைத்த நிகழ்வைக் கதையாக்கு

அப்பாவுக்கும், அம்மாவுக்கு இடையே சின்னஞ்சிறு சச்சரவுகள் ஏற்பட்டு இரண்டு பேருமே முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்திருக்கும்போது உறவினர் வருகை அவர்களை அன்பான கணவன் மனைவியாக மாற்றிவடும் அம்மாவின் கெடுபிடியும் அப்பாவின் கீழ்படிதலும் ஆச்சர்யமாக இருக்கும். விருந்தினர்கள் அடிக்கடி வரமாட்டார்களா என்று இருக்கும்.

விருந்தினர் தினம் என்பது எப்படி விடியும் தெரியுமா?

காலையிலிருந்தே வீட்டிற்குள்ளிருந்தும் வாசலுக்கு வந்து வந்து எட்டிப் பாரத்து செல்வாள் அம்மா. திண்ணையில் பேப்பர் பார்த்துக் கொண்டிருக்கும் அப்பா கேட்பார். “என்ன விஷயம், இன்னிக்கு யாராவது விருந்தாளி வரப்போராங்களா என்ன?”

“ஏங்க… காலையிலேரந்து வேப்ப மரத்துல காக்கா விடாம காத்திட்டே இருக்கு பார்க்கலியா? நிச்சயம் யாரோ விருந்தாளி வரப்போறாங்க பாருங்க.” அடடே, ஆம்மா காக்கா கத்துது யாரு வரப்போறா? இது பலாப்பழ சீசன் ஆச்சே… உன் தம்பி தான் வருவான். பலாப்பழத்தைத் தூக்கிட்டு – நாங்கள் ஓடிப்போய் தெருவில் பார்ப்போம். அப்பா சொன்னது சரி. காக்கா கத்தியதும் சரி. தூரத்தில் தெருமுனையில் அறந்தாங்கி மாமா தலையில் பலாப்பழத்துடன் வந்து கொண்டிருந்தார். அம்மாவுக்கு காக்கை மொழி தெரியும்.

விடை :

விருந்தினர் தினம்

அதிகாலையில் கதிரவன் பொன் நிறமான ஒளிக்கதிர்களை வீசிக் கொண்டிருந்தான். விடியலை உணர்ந்த பறவைகள் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன. குடும்பத் தலைவிகள் சாண நீர் கலைசலுள்ள வாளி, துடைப்பம், கோலப்பொடி கிண்ணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வெளியேறி வீட்டின் முன்றிலில் சாணநீர் தெளித்து துடைப்பத்தால் பெருக்கி கோலமிட்டனர். பின் வீட்டிற்குள் சென்று மற்ற வேலைகளில் ஈடுபட்டுபட்டனர்.

ஒருவரது இல்லத்தில் மட்டும் வேப்ப மரத்திலிருந்து காக்கை ஒன்று கரைந்து கொண்டிருந்தது. காக்கை அதிகாலையில் கரைந்தால் விருந்தினர் வருகை இருக்கும் என்பது ஐதீகம். ஆகவே அப்பெண்மணி விருந்துக்கான உணவினைத் தயார் செய்ய ஆரம்பித்தாள். இடையில் தன் கணவனுடன் மன வருத்தம் ஏற்பட்டு சண்டை வேறு குழந்தைகளின் மனதில் விருந்தினர் வந்தால் பெற்றோர் சண்டையை விட்டு விட்டு மகிழ்வர் எனக் கருதிக் கொண்டிருந்த போத பலாப்பழம் ஒன்றைத் தலையில் வைத்து சுமந்தபடி வந்தார். பெற்றோர் சண்டையை விட்டுவிட்டு வருந்தினரை வரவேற்பதிலம் உபசரிப்திலும் மூழ்கினார். குழந்தைகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. “கோபல்ல கிராமம்” என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதை ___________

 1. கோபல்லபுரத்து மக்கள்
 2. கோபல்லபுரத்து கோகிலா
 3. கோபல்ல சுப்பையா
 4. கோபல்லபுரம்

விடை : கோபல்லபுரத்து மக்கள்

2. கி. ராஜநாராயணன் எழுதிய கதை நூல் ___________

 1. ராம்நகரத்து மக்கள்
 2. பல்லவபுரத்து மக்கள்
 3. கோபல்லபுரத்து மக்கள்
 4. இந்திரதேசத்து மக்கள்

விடை : கோபல்லபுரத்து மக்கள்

3. ‘உறையூர்’ உள்ள மாவட்டம் ___________

 1. பெரம்பலூர்
 2. தஞ்சாவூர்
 3. திருச்சி
 4. கரூர்

விடை : திருச்சி

4. கறங்கு இசை விழாவின் உறந்தை குறிப்பிடும் நூல் ___________

 1. கலித்தெகை
 2. அகநானூறு
 3. புறநானூறு
 4. நளவெண்பா

விடை : அகநானூறு

5. கி.ராஜநாராயணின் சொந்த ஊர் ___________

 1. கோபல்லபுரம்
 2. இடைசெவல்
 3. தஞ்சாவூர்
 4. கரூர்

விடை : இடைசெவல்

6. _________ மக்களின் வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையும் புகுத்தி எழுதப்பட்டுள்ள நூல் கோபல்லபுரத்து மக்கள்

 1. இடைசெவல்
 2. மதுரை
 3. பூம்புகார்
 4. மாமல்லபுர

விடை : இடைசெவல்

7. 1991-ம் ஆண்டு ‘சாகித்திய அகாதெமி’ விருது நூல் _________

 1. ராம்நகரத்து மக்கள்
 2. பல்லவபுரத்து மக்கள்
 3. கோபல்லபுரத்து மக்கள்
 4. இந்திரதேசத்து மக்கள்

விடை : கோபல்லபுரத்து மக்கள்

8. “எழுத்துலகில் கி.ரா.” என்றழைக்கப்படுபவர் _________

 1. ஜெயமோகன்
 2. ஜெயகாந்தன்
 3. இந்திரா பார்த்தசாரதி
 4. கி. ராஜநாராயணன்

விடை : நெருப்பு

9. “கரிசல் வட்டாரச் சொல்லகராதி” ஒன்றை உருவாக்கியவர் _________

 1. ஜெயமோகன்
 2. கி. ராஜநாராயணன்
 3. தேவநேயப் பாவாணர்
 4. இந்திரா பார்த்தசாரதி

விடை : கி. ராஜநாராயணன்

10. “வட்டார மரபு வாய்மொழிப் புனைக் கதைகள்” _________ இலக்கியம் என்று அழைக்கப்படுகின்றன.

 1. நாஞ்சில்
 2. நெய்தல்
 3. கரிசல்
 4. கொங்கு

விடை : கரிசல்

11. கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் _________

 1. நாஞ்சில் இலக்கியம்
 2. கரிசல் இலக்கியம்
 3. புதுக்கவிதை
 4. புதினம்

விடை : கரிசல் இலக்கியம்

12. கி.ராஜநாராயணனுக்கு முன் எழுதத் தொடங்கிய கரிசல் மண்ணின் படைப்பாளி _________

 1. பா.செயப்பிரகாசம்
 2. சோ. தர்மன்
 3. கு.அழகிரிசாமி
 4. பூமணி

விடை : கு.அழகிரிசாமி

13. காய்ந்தும் கெடுக்கிற பெய்தும் கெடுக்கிற மழையச் சார்ந்து வாழ்கிற மானாவாரி மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இலக்கியங்கள் _________

 1. கரிசல் இலக்கியங்கள்
 2. நெய்தல் இலக்கியங்கள்
 3. கொங்கு இலக்கியங்கள்
 4. புதினங்கள்

விடை : கரிசல் இலக்கியங்கள்

பொருத்துக

1. பாச்சல் அ. சோற்றுக்கஞ்சி
2. பதனம் ஆ. மேல்கஞ்சி
3. நீத்திப்பாகம் இ. கவனமாக
4. மகுளி ஈ.பாத்தி
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

வட்டார வழக்குச் சொற்களைப் பொருத்திக் காட்டுக

1. வரத்துக்காரன் அ. புதியவன்
2. சடைத்து புளித்து ஆ. சலிப்பு
3. அலுக்கம் இ. அழுத்தம்
4. தொலவட்டையில் ஈ. தொலைவில்
விடை : 1 – அ, 2 – ஆ, 3 – இ, 4 – ஈ

குறுவினா

1. வட்டார வழக்குச் சொற்கள் சிலவற்றை தொகுத்து எழுதுக

 • பாச்சல் – பாத்தி
 • பதனம் – கவனமாக
 • நீத்துப்பாகம் – மேல்கஞ்சி
 • கடிச்சு குடித்தல் – வாய்வைத்துக் குடித்தல்
 • மகுளி – சோற்றுக் கஞ்சி
 • வரத்துக்காரன் – புதியவன்
 • சடைத்து புளித்து – சலிப்பு
 • அலுக்கம் – அழுத்தம் (அணுக்கம்)
 • தொலவட்டையில் – தொலைவில்

2. கோபல்லபுரத்து மக்கள் நூற்குறிப்பு தருக

 • கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதை கோபல்லபுரத்து மக்கள்.
 • ஆசிரியர் தன் சொந்த ஊரான இடைசெவல் மக்களின் வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையும் புகுத்தி இந்நூலினைப் படைத்துள்ளார்.
 • இந்திய விடுதலைப் போராட்டத்தினைப் பின்னணியாகக் கொண்டது.
 • 1991-ம் ஆண்டிற்கான “சாகித்திய அகாதெமி” பரிசினைப் பெற்றது.

3. திருச்சி மாவட்டம் உறையூர் பற்றி அகநானூறு வரிகள் பற்றி எழுதுக

“கறங்கு இசை விழவின் உறந்தை…..”

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment