1.1 அன்னை மொழியே
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 10th Standard Tamil Lesson 1.1 – அன்னை மொழியே. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
மனப்பாட பாடல் வரிகள்
அழகார்ந்த செந்தமிழே! அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே ! தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே! – கனிச்சாறு – பாவலரேறு பெருஞ்சித்திரனார் |
நூல் வெளி
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்பெயர் துரை. மாணிக்கம்.
- தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாக தமிழ் உணர்வை உலகம் முழுவதும் பரப்பியவர்.
- உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, கனிச்சாறு, பள்ளிப்பறைவைகள் என்பன பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் ஆகும்.
- இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை தமிழுக்கு கருவூலமாய் அமைந்தது.
- இவரது நூல்கள் நாட்டுமையாக்கப்பட்டுள்ளன.
பாட நூல் மதிப்பீட்டு வினா
பலவுள் தெரிக
எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
- எந் + தமிழ் + நா
- எந்த + தமிழ் + நா
- எம் + தமிழ் + நா
- எந்தம் + தமிழ் + நா
விடை : எம் + தமிழ் + நா
குறு வினா
“மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!” – இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங் காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
- சீவகசிந்தாமணி
- வளையாபதி
- குண்டலகேசி
இவையாவும் எஞ்சிய ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும்
சிறு வினா
தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
“அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!”
- அன்னை மொழியே! அழகான செந்தமிழே!
- பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே!
- குமரிக்கண்டத்தில் நிலைபெற்று அரசாட்சி செலுத்திய மண்ணுலகப் பேரரசே!
- பாண்டியனின் மகளே! திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே!
- பாட்டும், தொகையும் ஆனவளே! பதினெண்கீழ்க்கணக்கே! நிலைத்த சிலப்பதிகாரமே! அழகான மணிமேகலையே!
- கடல் கொண்ட குமரியில் நிலையாய் நின்று அரசாட்சி செய்த பெருந்தமிழ் அரசே!
- பொங்கியெழும் நினைவுகளால் தலை பணிந்து தமிழே உன்னை வாழ்த்துகின்றோம்
“முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!”
நெடு வினா
மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.
அறிமுக உரை:-
தாயே! தமிழே! வணக்கம்,
தாய் பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும்.
என்று தமிழ்த்தாயை வணங்கி, இங்கு மனோன்மணீயம் சுந்தரனாரின் பாடலையும், பெருஞ்சித்தரனாரின் பாடலையும் ஒப்பிட்டுக் காண்போம்.
சுந்தரனார் | பெருஞ்சித்திரனார் |
நீர் நிறைந்த கடலை ஆடையாக உடுத்திய பெண்ணாக பூமியையும்,
பாரதத்தை முகமாகவும், பிறை போன்ற நெற்றியாகவும், நெற்றியில் இட்ட பொட்டாக தமிழும், தமிழின் மணம் எத்திசையும் வீசுமாறு உருவகப்படுத்திப் பாடியுள்ளார் சுந்தரனார் |
குமரிக்கண்டத்தில் நின்று நிலைபெற்ற மண்ணுலகம் போற்ற வாழ்ந்த பேரரசியே!
பழமைக்கு பழமையானவளே! பாண்டியனின் மகளே! திருக்குறளின் புகழே! பாட்டுத்தொகையே! கீழ்கணக்கே! சிலம்பே! மேகலையே! என்று பெருங்சித்திரனார் தமிழை முடிதாழ வணங்கி வாழ்த்துகிறார். |
“நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்….” | “அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!” |
நிறைவுரை:-
இருவருமே தமிழின் பெருமையைத் தம் பாடல்களில் பூட்டி, காலந்தோறும் பேசும்படியாக அழகுற அமைத்துப் பாடியுள்ளார்.
கற்பவை கற்றபின்
“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறந்த எட்டுத்தொகை” – இச்செய்யுளில் இடம் பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்களைப் பெயர்க் காரணத்துடன் எடுத்துக்காட்டுக
1. நற்றிணை = நல் + திணை
தொகை நூல்களுள் முதல் நூல். நல் என்னும் அடைமொழி பெற்ற நூல்.
2. குறுந்தொகை
நல்ல குறுந்தொகை என அழைக்கப்படும். குறைந்த அடியளவால் (4 – 8) பாடப்பட்ட பாடல் தொகுப்பு
3. ஐங்குறுநூறு
ஐந்திணைகளை பாடும் நூல். மிக குறுகிய பாடலடிகள் (3 – 6) கொண்ட நூல்
4. பதிற்றுப்பத்து
சேர அரசர்கள் பத்துபேரை 10 புலர்கள் பத்து பத்தாகப் பாடியது பதிற்றுபத்து
5. பரிபாடல்
இது அகம், புறம் சார்ந்த நூல். தமிழின் முதல் இசைப்பாடல் நூல். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்ககளாலும், பலவகையான அடிகளாலும் பாடப்பட்டுள்ளது.
6. கலித்தொகை
ஐந்திணையும் ஐவரால் கலிப்பாவில் அமைந்த நூல். கலிப்பாவின் ஒசை துள்ளல் ஓசை. ‘கற்றறிந்தோர் ஏத்தும் கலி’ எனவும் கூறப்படுகிறது.
7. அகநானூறு
அகம் சார்ந்த நானூறு பாடல்களை கொண்டது. களிற்றியானை நிரை, மணிமிடைப் பவளம் நித்திலக்கோவை என மூன்று பிரிவுகளை கொண்டது.
8. புறநானூறு
புறம் சார்ந்த 400 பாடல்களை உடையது. தமிழரின் வரலாற்றுப் பெட்டகம். இது பழந்தமிழரின் வீரம், பண்பாடு, நாகரிகம், பழக்க வழக்கம், கொடை ஆகியறவற்றைப் பற்றிக் கூறுகிறது.
2. “எந்தமிழ்நா நின் பெருமை எடுத்தே உரைவிரிக்கும்” என்ற பாடலடியைக் கொண்டு வகுப்பறையில் ஐந்து நிமிட உரை நிகழ்த்துக
வணக்கம்!
தமிழ் இயல், இசை, நாடகம் என்னம் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது. தமிழர் அகம், புறம் என வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தனர். தமிழின் பழமையையோ அல்லது அதன் பெருமையையோ வேறு எம்மொழியும் நெருங்கவியலாது. தமிழ்மொழி இறவா இலக்கிய, இலக்கண வளங்கொண்டு தனக்கெனத் தனிநோக்கும் போக்கும் கொண்டள்ளது. “தமிழே மிகவும் பண்பட்ட மொழியென்றம், அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழியென்றும்” மாக்க முல்லர் என்னும் மொழி நூலறிஞர் தமிழ்மொழியைச் சிறப்பித்துள்ளார்.
நிறைவாக, தமிழின் சிறப்பை நிலைக்கச் செய்வதும் மேலும் வளரச் செய்வதும் தமிழர்களாகிய நமது கடமையாகும். இதனை உணரந்து தமிழின் சீரிளிமையைக் காக்க என்ற பாடுபடுவோம்.
நன்றி!
வணக்கம்!!
கூடுதல் வினாக்கள்
இலக்கணக் குறிப்பு
- செந்தமிழ், நறுங்கனி, பேரரசு, செந்தாமரை – பண்புத்தொகைகள்
- பாடி, குடித்து – வினையெச்சங்கள்
பகுபத இலக்கணம்
முகிழ்த்த = முகிழ் + த் + த் + அ
- முகிழ் = பகுதி
- த் – சந்தி
- த் – இறந்தகால இடைநிலை
- அ – பெயரெச்ச விகுதி
பலவுள் தெரிக
1. உள்ளத்தில் கனல் மூள செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்து பாடியது __________
- தேன்சிட்டு
- தேனீ
- வண்டு
- வண்ணத்துப்பூச்சி
விடை : வண்டு
2. “அன்னைமொழியே” என்ற கவிதையில் இடம்பெறும் மூவேந்தர்களில் ஒருவர் __________
- சேரன்
- சோழன்
- பாண்டியன்
- பல்லவன்
விடை : பாண்டியன்
3. பொருந்தாற்றைக் கண்டறிக
- பாவியக்கொத்து
- தென்தமிழ்
- நூறாசிரியம்
- பள்ளிப்பறவைகள்
விடை : தென்தமிழ்
4. பொருந்தாவற்றைக் கண்டறிக
- பள்ளிப்பறவைகள்
- எண்சுவை எண்பது
- உலகியல் நூறு
- தமிழ்ச்சிட்டு
விடை : தமிழ்ச்சிட்டு
5. கனிச்சாறு நூலில் இடம் பெறும் ________ கவிதை நூல்
- பாவியக்கொத்து
- அன்னை மொழியே
- நூறாசிரியம்
- பள்ளிப்பறவைகள்
விடை : அன்னை மொழியே
6. “முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே” என்ற பாடல் வரியினை பாடியவர்
- பெருஞ்சித்திரனார்
- க. சச்சிதானந்தன்
- வாணிதாசன்
- கண்ணதாசன்
விடை : பெருஞ்சித்திரனார்
7. “முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே” என்ற பாடல் வரியினை பாடியவர்
- க. சச்சிதானந்தன்
- வாணிதாசன்
- கண்ணதாசன்
- துரை. மாணிக்கம்
விடை : துரை. மாணிக்கம்
8. “நற்கணக்கே” என்பதில் சுட்படப்டும் நூல்கள் எத்தனை?
- 5
- 8
- 10
- 18
விடை : 18
9. “மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே!” எஞ்சியுள்ள பெருங்காப்பியங்கள் ________
- 5
- 4
- 3
- 2
விடை : 2
10. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் கொண்டவர் __________
- துரை மாணிக்கம்
- ராஜகோபாலன்
- சுப்புரத்தினம்
- வரதன்
விடை : துரை மாணிக்கம்
11. “பழமைக்குப் பழமை” என்னும் பொருள் தரும் சொல் __________
- முன்னைக்கும் முன்னை
- முன்னை முகிழ்ந்த
- முன்னும் நினைவால்
- முந்துற்றோம் யாண்டும்
விடை : முன்னைக்கும் முன்னை
12. “பாப்பத்தே எண் தொகையே” சரியான பொருள் __________
- பா பத்து, எண் தொகை
- பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
- பா பத்து, எட்டுத்தொகை
- பத்தும் எட்டும்
விடை : பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
13. “செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகார்ந்த அந்தும்பி பாடும் அதுபோல” பயின்று வரும் அணி
- உவமையணி
- உருவக அணி
- எடுத்துக்காட்டு உவமையணி
- பொருள் பின்வரு நிலையணி
விடை : உவமையணி
14. பெருஞ்சித்திரனார் ஆசிரியராக பணியாற்றி இதழ்கள் ___________
- தென்மொழி, தமிழ்ச்சிட்டு
- புன்னகை, காஞ்சி
- காஞ்சி, விகடன்
- புன்னகை, குமுதம்
விடை : தென்மொழி, தமிழ்ச்சிட்டு
15. செந்தமிழ் பிரித்து எழுதுக.
- செந் + தமிழ்
- செம் + தமிழ்
- செ + தமிழ்
- செம்மை + தமிழ்
விடை : செம்மை + தமிழ்
16. “சாகும் போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்று பாடியவர் _______
- பெருஞ்சித்திரனார்
- பாரதியார்
- சச்சிதானந்தன்
- சுரதா
விடை : சச்சிதானந்தன்
17. பெருஞ்சித்திரனாரின் பணிகளில் தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த நூல் _______
- எண்சுவை எண்பது
- உலகியல் நூறு
- நூறாசிரியம்
- திருக்குறள் மெய்ப்பொருளுரை
விடை : திருக்குறள் மெய்ப்பொருளுரை
குறு வினா
1. பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழுணர்வை உலகம் முழுவதும் பரப்ப காரணமாக இருந்த நூல்கள் யாவை?
தென்மொழி, தமிழ்ச்சிட்டு
2. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் எவை?
உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, கனிச்சாறு, பள்ளிப் பறைவைகள்
3. பதினெண் மேற்கணக்கு நூல்கள் யாவை?
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
4. தமிழ் எவற்றின் காரணமாகத் தமக்குள் பற்றுணர்வை ஏற்படுத்துவதாகப் பெருங்சித்திரனார் கூறுகிறார்?
- பழம்பெருமையும் தனக்கெனத் தனிச்சிறப்பும் இலக்கிய வளம் கொண்டது தமிழ்.
- நீண்ட நிலைத்த தன்மை உடையது.
- வேற்று மொழியார் தமிழைக் குறித்து உரைத்த புகழ் மொழிகள்.
ஆகிய இவையே தமக்குள் பற்றுணர்வை எற்படுத்துவதாகப் பெருஞ்சித்திரனார் கூறுகிறார்.
5. “இன்னறும் பாப்பத்தே! எண் தொகையே! நற்கணக்கே!” – இவ்டியில் சுட்டப்படும் மொத்த நூல்கள் எத்தனை?
பாப்பத்தே | பத்துப்பாட்டு | 10 |
எண் தொகை | எட்டுத்தொகை | 8 |
நற்கணக்கு | பதினெண்கீழ்கணக்கு | 18 |
மொத்த நூல்களின் எண்ணிக்கை | 36 |
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…