TN 8th Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 1.2 – விடுதலைத் திருநாள்

1.2 விடுதலைத் திருநாள்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 8th Standard Tamil Lesson 1.2 – விடுதலைத் திருநாள்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

8th Standard Tamil Guide - viduthalai thirunal

8th Std Tamil Text Book – Download

சொல்லும் பொருளும் 

  • சீவன் – உயிர்
  • வையம் – உலகம்
  • சத்தியம் – உண்மை
  • சபதம் – சூளுரை
  • ஆனந்த தரிசனம் – மகிழ்வான காட்சி
  • மோகித்து – விரும்பு

பாடலின் பொருள்

முந்நூறு ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அரக்கராகிய அந்நியரின் இருண்ட ஆட்சி முடிந்தது என்பதைக் கூறும் நாள் இன்று.  உயிரற்ற பிணங்களைப்போலக் கிடந்த நாட்டு மக்கள் அனைவரையும் பற்றியிருந்த அறியாமை என்றும் உறக்கத்தை ஓட ஓட விரட்டிய நாள் இன்று.

அடிமையாய்த் தவித்துக் கொண்டிருந்த இந்தியத்தாய் சினந்து எழுந்து தன் கைவிலங்கை உடைத்துப் பகைவரை அழித்து அவிந்த கூந்தலை முடித்து நெற்றியில் திலகமிட்டு, இந்தியருக்கு மகிழ்வான காட்சியை அளித்த நாள் இன்று.

சதி வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், தூக்கிலிடப்படும் கடைசி நேரத்திலும் தன் மனக்கணக்கில் கனவுகண்ட இந்தியாவி விடியல் தோன்றிய நாள் இன்று. பகைமை என்னும் முள் காட்டினை அழித்து, அங்கு விளைந்த புரட்சி என்னும் புல்லாங்குழல் ஆக்கி மூச்சுக்காற்றால் பூபாள இசை பாடும் இனிய நாள் இன்று.

இன்பம் தரும் இந்த விடுதலைத் திருநாளைக் கொண்டாட வாய்ப்பளித்த தம் தாய்நாட்டை தமிழால் வணங்குவாேம்.

நூல்வெளி

  • மீ.இராேசேந்திரன் என்னும் இயற்பெயர் மீரா கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றினார்
  • “அன்னம் விடு தூது” என்னும் இதழை நடத்தியவர்.
  • ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம், கோடையும் வசந்தமும் இவரது படைப்புகளாகும்
  • இவர் எழுதிய “கோடையும் வசந்தமும்” என்னும் நூலிலிருந்து ஒரு கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. வானில் முழுநிலவு அழகாகத் ________ அளித்தது.

  1. தயவு
  2. தரிசனம்
  3. துணிவு
  4. தயக்கம்

விடை : தரிசனம்

2. இந்த _______ முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு.

  1. வையம்
  2. வானம்
  3. ஆழி
  4. கானகம்

விடை : வையம்

3. ‘சீவனில்லாமல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

  1. சீவ + நில்லாமல்
  2. சீவன் + நில்லாமல்
  3. சீவன் + இல்லாமல்
  4. சீவ + இல்லாமல்

விடை : சீவன் + இல்லாமல்

4. ‘விலங்கொடித்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

  1. விலம் + கொடித்து
  2. விலம் + ஒடித்து
  3. விலன் + ஒடித்து
  4. விலங்கு + ஒடித்து

விடை : விலங்கு + ஒடித்து

5. ‘காட்டை + எரித்து’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________

  1. காட்டைஎரித்து
  2. காட்டையெரித்து
  3. காடுஎரித்து
  4. காடுயெரித்து

விடை : காட்டையெரித்து

6. ‘இதம் + தரும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _______

  1. இதந்தரும்
  2. இதம்தரும்
  3. இதத்தரும்
  4. இதைத்தரும்

விடை : இதந்தரும்

குறு வினா

1. பகத்சிங் கண்ட கனவு யாது?

இன்று இந்தியாவின் விடியல் தோன்றிய நாள் என்று பகத்சிங் கனவு கண்டார்.

2. இருண்ட ஆட்சி என எதனை மீரா குறிப்பிடுகிறார்?

300 ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்திய அந்நியரின் ஆட்சியை இருண்ட ஆட்சி என்று மீரா குறிப்பிடுகிறார்

சிறு வினா

இந்தியத்தாய் எவ்வாறு காட்சியளிக்கிறாள்?

  • அடிமையாகத் தவித்துக் கொண்டிருந்த இந்தியத் தாய் சினத்துடன் எழுந்து,
  • தன்னுடைய கை விலங்கை உடைத்து,
  • பகைவரை அழித்து,
  • தன்னுடைய அவிழ்ந்த கூந்தலை முடித்து,
  • தன் நெற்றியில் திலகமிட்டு காட்சியளிக்கிறாள்.

சிந்தனை வினா

நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில்  விடுதலை நாளை எவ்வாறு கொண்டாடலாம்?

  • விடுதலைப் போராட்ட நிகழ்வு காட்சிகளை நாடகமாக நடத்தலாம்.
  • விடுதலை வீரர்களைப் போல வேடமிட்டு அவர் தம் செயல்களை எடுத்துக் கூறலாம்.
  • விடுதலைப் போராட்டங்கள் குறித்த செய்திகளை உணர்த்தும் வகையில் பேச்சுப் போட்டு, கட்டுரைப் போட்டிகளை வைக்கலாம்.

கூடுதல் வினாக்கள்

நீங்கள் விரும்பும் விழா ஒன்றனைப் பற்றி ஒரு பததி அளவில் எழுதுக.

நான் விரும்பும் விழா ஆசிரியர் தின விழா ஆகும். இந்திய திருநாட்டின் மிகச் சிறந்த ஆசிரியர் டாக்டர். ராதாகிருஷ்ணன் அவர்களைப் போற்றும் வகையிலும் நமக்கு கற்றுக் கொடுக்கக்கூடிய ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர் தின விழா கொண்டாடப்படுகிறது. அறிவுக்கண் திறந்த மேதைகளையும், அறிவுக்கண் தந்து கொண்டிருக்கும் மேதைகளையும் போற்றுவதே இவ்விழாவின் நோக்கமாகும். கல்விக்கண் தந்தவர்களைக் கண்ணீரால் நான் போற்றும் விழா ஆசிரியர் தின விழா ஆகும். இவ்விழா வருடந்தோறும் செப்படம்பர் மாதம் 5-ம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. ‘அன்னம் விடு தூது’ என்னும் இதழை நடத்தியவர் _____________

  1. மீரா
  2. மேத்தா
  3. வைரமுத்து
  4. ஈரோடு தமிழன்பன்

விடை : மீரா

2. ‘விடுதலைத் திருநாள்’ என்னும் கவிதைப்பேழை பகுதி இடம் பெறும் நூல் _____________

  1. ஊசிகள்
  2. குக்கூ
  3. மூன்றும் ஆறும்
  4. கோடையும் வசந்தமும்

விடை : கோடையும் வசந்தமும்

3. மீரா ஒரு _____________

  1. பள்ளி ஆசிரியர்
  2. ஆராய்ச்சியாளர்
  3. கல்லூரி பேராசிரியர்
  4. தத்துவநெறியாளர்

விடை :  கல்லூரி பேராசிரியர்

4. மீராவின் இயற்பெயர் _____________

  1. மீ. இராேசேந்திரன்
  2. மீ. இராஜகுமார்
  3. மீ. இராஜன்
  4. மீ. குமார்

விடை : மீ. இராேசேந்திரன்

5. ‘விடுதலைத் திருநாள்’ கவிதையில் இடம் பெறும் விடுதலை வீரர்

  1. நேதாஜி
  2. பகத்சிங்
  3. தந்தை பெரியார்
  4. மகாத்மா காந்தி

விடை : பகத்சிங்

6. ‘முற்றுகையிட்ட’ என்பதனை பிரித்தெழுத கிடைப்பது _____________

  1. முற்றுகை + யிட்ட
  2. முற்று + இட்ட
  3. முற்றுகை + இட்ட
  4. முற்றுகை + அட்ட

விடை : முற்றுகை + இட்ட

7. ‘இதந்தரும்’ என்பதனை பிரித்தெழுத கிடைப்பது _____________

  1. இதந் + தரும்
  2. இதம் + தரும்
  3. இதம் + ந்தரும்
  4. இதம் + அரும்

விடை : இதம் + தரும்

8. பொருந்தாத இணையை தேர்ந்தெடு

  1. சபதம் – குறிக்கோள்
  2. சீவன் – உயிர்
  3. வையம் – உலகம்
  4. சத்தியம் – உண்மை

விடை : சபதம் – குறிக்கோள்

9. ‘தமிழ் + ஆல்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் __________

  1. தமிழால்
  2. தமிழ்ஆல்
  3. தமிழ்அல்
  4. தமிழ் ஆல்

விடை : இதந்தரும்

10. ‘வையம்’ என்பதன் பொருள் _____________

  1. உயிர்
  2. உண்மை
  3. உலகம்
  4. சூளுரை

விடை : உலகம்

சிறு வினா

1. விடுதலைத் திருநாள் பற்றி கவிஞர் மீராவின் கருத்தினை எழுது

உயிரற்ற பிணங்களைப்போலக் கிடந்த நாட்டு மக்கள் அனைவரையும் பற்றியிருந்த அறியாமை என்றும் உறக்கத்தை ஓட ஓட விரட்டிய நாள் இன்று என்று கவிஞர் மீரா கூறுகிறார்.

2. தாய்நாட்டை தமிழால் வணங்குவோம் என்று கவிஞர் மீரா கூறக்காரணம் யாது?

இன்பம் தரும் இந்த விடுதலைத் திருநாளைக் கொண்டாட வாய்ப்பளித்த தம் தாய்நாட்டை தமிழால் வணங்குவாேம் என்று கவிஞர் மீரா கூறுகிறார்.

3. கவிஞர் மீரா இயற்றிய நூல்கள் சிலவற்றின் பெயர்களை எழுதுக

  • ஊசிகள்
  • குக்கூ
  • மூன்றும் ஆறும்
  • வா இந்தப் பக்கம்
  • கோடையும் வசந்தமும்

4. மீரா நடத்திய இதழின் பெயரென்ன?

அன்னம் விடு தூது

5. சதி வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர் யார்?

பகத்சிங்

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment