TN 6th Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 2.3 – தமிழர் பெருவிழா

2.3 தமிழர் பெருவிழா

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 6th Standard Tamil Lesson 2.2 – கண்மணியே கண்ணுறங்கு. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

6th Standard Tamil Guide - tamilar peruvila

6th Std Tamil Text Book – Download

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. கதிர் முற்றியதும் ________ செய்வர்.

  1. அறுவடை
  2. உரமிடுதல்
  3. நடவு
  4. களையெடுத்தல்

விடை : அறுவடை

2. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் _________ கட்டுவர்.

  1. செடி
  2. கொடி
  3. தோரணம்
  4. அலங்கார வளைவு

விடை : தோரணம்

3. “பொங்கல்+ அன்று” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________

  1. பொங்கலன்று
  2. பொங்கல்அன்று
  3. பொங்கலென்று
  4. பொங்கஅன்று

விடை : பொங்கலன்று

4. “போகிப்பண்டிகை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______

  1. போகி + பண்டிகை
  2. போ+பண்டிகை
  3. போகு + பண்டிகை
  4. போகிப்+பண்டிகை

விடை : போகி + பண்டிகை

5. பழயன கழிதலும் ________ புகுதலும்.

  1. புதியன
  2. புதுமை
  3. புதிய
  4. புதுமையான

விடை : புதியன

6. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும் பட்டுப் போன மரத்தைக் காண்பது ________ தரும்.

  1. அயர்வு
  2. கனவு
  3. துன்பம்
  4. சோர்வு

விடை : துன்பம்

சொற்றொடரில் எழுதுக

அ. பொங்கல்

  • பொங்கல் விழாவில் விளைச்சலுக்கு காரணமான கதிரவனை வணங்கி மகிழ்வர்

ஆ. செல்வம்

  • உழவர்களின் செல்வமாக மாட்டினை கருதினர்,

இ. பண்பாடு 

  • தமிழர் பண்பாடு பாரம்பரியமிக்கது

குறு வினா

1. பாேகிப் பண்டிகை எதற்காகக் காெண்டாடப்படுகிறது?

“பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ஆன்றாேர் மாெழி. வீட்டில் உள்ள பயனற்ற பாெருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் பாேகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும். ஆகவே வீட்டைத் தூய்மை செய்வதற்காக கொண்டாடப்படுகிறது.

2. உழவர்கள் ஏன் மாடுகளுக்கு நன்று செலுத்துகின்றனர்?

மாடுகள் உழவர்களின் செல்வமாக விளங்குவதினாலும், உழவுக்கும் உழவருக்கும் உற்ற துணையாக மாடுகள் இருப்பதனாலும் உழவர்கள் மாடுகளுக்கு நன்று செலுத்துகின்றனர்.

சிறு வினா

1. காணும் பாெங்கலை மக்கள் எவ்வாறு காெண்டாடுகின்றனர்?

  • மாட்டுப் பாெங்கலுக்கு அடுத்த நாள் காணும் பாெங்கல் ஆகும்.
  • மக்கள் இந்நாளில் உற்றார், உறவினர் மற்றும் நண்பர் விடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர்;
  • குடும்பத்தினருடன் விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வுடன் பாெழுதைக் கழிப்பர்;
  • மேலும் பட்டிமன்றங்கள், கலை நிகழ்ச்சிகள் முதலியவற்றை நடத்துவர்;
  • விளையாட்டுப் பாேட்டிகள் நடத்தி வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டுவர்.

சிறு வினா

1. பொங்கல் விழாவின் போது உங்கள் ஊரில் என்னென்ன சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வீர்கள்?

பொங்கல் விழாவின்போது எங்கள் ஊரில் நகைச்சுவை பட்டிமன்றம், விவாத மேடை, உரியடி விழா, மஞ்சள் தண்ணீர் ஊற்றி விளையாடுதல், பாட்டுக்கச்சேரி, ஆடல் பாடல், சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டுப்போட்டி, இளையோர்க்கான விளையாட்டுப் போட்டி, மூத்தோர்களுக்கான விளையாட்டுப் போட்டி, வழுக்கு மரம் ஏறுதல், ஏறுதழுவுதல், வினாடி-வினா, மாட்டுவண்டி பந்தயம், மோட்டார் சைக்கிள் பந்தயம், கரகாட்டம், பறையாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம், கோலாட்டம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோம்.

2. காணும் பொங்கல் எவ்வாறு மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கிறது?

இன்றைய உலகம் அறிவியல் உலகம். தகவல் தொழில் நுட்பத்தில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் உலகம். சக மனிதர்களைக் கண்டு கொள்ளவோ, உரையாடவோ நேரம் இல்லா உலகம். அவற்றோடு சேர்ந்து மனிதனும் வேகமாக ஓடுகின்றான். தன் குடும்பத்தில் உள்ளவர்களுடன் கூட உரையாட நேரமில்லா மனிதன். ஓர் எந்திர வாழ்க்கை நடத்தும் மனிதர்களாவே மாறிவிட்டோம்.

அப்படி இருக்கும் போது, காணும் பொங்கல் நாளில் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்தித்து உரையாடும்போதும், வீடுகளுக்குச் சென்று உறவாடும் போதும் கட்டாயம் ஒற்றுமை வளரதானே செய்யும். உறவாடும் தங்களது பழைய நினைவுகளையும் மகிழ்சசியானத் தருணங்களையும் நினைக்கும்போது பகிரும்போதும் உறவு மேம்படுகிறது. ஒற்றுமை வளர்கிறது. பல உறவுகளும் அறிமுகமாகின்றது. கலை நிகழ்ச்சிகளிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்கும் பொழுது மகிழ்ச்சி ஏற்படுகிறது. போட்டி உணர்வு குறைந்து குழு உணர்வு ஏற்படுகிறது. விரும்பிய இடங்களுக்கு செல்லும்போது பல உறவுகள் அறிமுகமாகின்றன. நட்புறவும் ஏற்படுகிறது. பெரியோர்களின் மீது மதிப்பும் மரியாதையும் கூடுகிறது. ஆகவே காணும் பொங்கல் மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கிறது.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. “லோரி” என்று கொண்டாடப்படும் திருவிழா …………………

  1. தீபாவளி
  2. ஆயூத பூஜை
  3. கிருஷ்ண ஜெயந்தி
  4. பொங்கல்

விடை : பொங்கல்

2. “ஏறு தழுவுதல்” என்ற விளையாட்டின் மற்றொரு பெயர் …………………

  1. கபடி
  2. மாடு பிடித்தல்
  3. கிளித்தட்டு
  4. பம்பரம்

விடை : மாடு பிடித்தல்

3. திருவள்ளுவராண்டு தொடங்குவது …………….

  1. தை முதல் நாள்
  2. மாசி முதல் நாள்
  3. பங்குனி முதல் நாள்
  4. சித்திரை முதல் நாள்

விடை : தை முதல் நாள்

4. மார்கழி மாதத்தின் இறுதி நாள்

  1. உழவர் திருநாள்
  2. தமிழ்ப் புத்தாண்டு
  3. அவிட்டத் திருளாள்
  4. போகித் திருநாள்

விடை : போகித் திருநாள்

நிரப்புக

1. ______________ இணைந்து வாழ்வது தமிழரின் வாழ்க்கை முறை ஆகும்

விடை : இயற்கையோடு

2. பொங்கல் விழா _____________ என போற்றப்படுகிறது

விடை : தமிழர் திருநாள்

3. பொங்கல் என்பதற்கு ___________ வருவது என்று பொருள்

விடை : பொங்கிப் பெருகி

4.கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்புச் செய்யும் விழா ___________________ .

விடை : பாெங்கல் விழா

5. மாடுகள் உழவர்களின் __________  விளங்குகிறது.

விடை : செல்வமாக

குறு வினா

1. “விழா” என்பது யாது?

விரும்பி கொண்டாடுவது விழா எனப்படும்.

2. விழாக்கள் கொண்டாடுவதன் நன்மைகள் யாவை?

  • உறவுகள் ஒன்றுகூடிக் கொண்டாடும் விழாக்கள் மனத்திற்கு மகிழ்வைத் தரும்;
  • மனிதரிடையே ஒற்றுமையை வளர்க்கும்.
  • தமிழரின் நாகரிகம், வீரம் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில் பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
  • விழாக்கள் நமது பண்பாட்டை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கின்றன.

3. “மஞ்சுவிரட்டு” என்பது யாது?

மஞ்சுவிரட்டு என்பது மாடுகளை அடக்கித் தழுவும் வீர விளையாட்டு ஆகும்.

4. “மஞ்சுவிரட்டு” விளையாட்டின் வேறு பெயர்கள் எவை?

மாடு பிடித்தல், ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல்

5. இயற்கை, உழைப்பு, நன்றியுணர்வு, பண்பாடு போற்றும் விழாவாகப் கொண்டாடப்படும் விழா எது? 

பொங்கல் விழா

6. இந்திரவிழா கொண்டாடப்படுவதன் நோக்கம் யாது?

வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிபடும் நோக்கில் கொண்டாடப்படுகிறது.

7. அறுவடைத் திருநாள் மற்ற மாநிலங்களில்  எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

  • மகரசங்கராந்தி – ஆந்திரா, கர்நாடகா, மகாராட்டிரா, உத்திரப்பிரதேசம்
  • லோரி – பஞ்சாப்
  • உத்தராயன் – குஜராத், இராஜஸ்தான்

சிறு வினா

1. மாட்டுப்பொங்கல் குறித்து எழுதுக

பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல். மாடுகள் உழவர்களின் செல்வமாக மதிக்கப்படுகின்றன. மாடு என்ற சொல்லுக்குச் செல்வம் என்னும் பொருளும் உண்டு. உழவுக்கும் உழவருக்கும் உற்ற துணையாக மாடுகள் விளங்குகின்றன. அவற்றிற்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

மாட்டுப் பொங்கலன்று மாடுகளை நீராட்டுவர். கொம்புகளைச் சீவி வண்ணங்கள் தீட்டுவர். மாடுகளின் கழுத்திலே மணிகளைக் கட்டுவர் . பூவும் தழையும் சூட்டுவர். மாட்டுக்கு மஞ்சள், குங்குமம் இடுவர். பொங்கல், தேங்காய், பழங்கள், வெற்றிலை பாக்கு போன்றவற்றைப் படைத்து வழிபடுவர். மாட்டுப்பொங்கல் நாளிலோ அதற்கு அடுத்த நாளிலோ சில ஊர்களில் மஞ்சுவிரட்டு நடைபெறும். மஞ்சுவிரட்டு என்பது மாடுகளை அடக்கித் தழுவும் வீர விளையாட்டு ஆகும். இவ்விளையாட்டு மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல் என்றும் அழைக்கப்படுகிறது.

2. காணும் பொங்கல் குறித்து எழுதுக

மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் காணும் பொங்கல் ஆகும். இந்நாளில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர். குடும்பத்தினருடன் விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வுடன் பொழுதைக் கழிப்பர். மேலும் பட்டிமன்றங்கள், கலைநிகழ்ச்சிகள் முதலியவற்றை நடத்துவர். விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டுவர்.

இயற்கை, உழைப்பு, நன்றியுணர்வு, பண்பாடு ஆகியவற்றைப் போற்றும் விழாவே பொங்கல் விழா ஆகும். உலகு எங்கும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருவிழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment