TN 12th Standard Tamil Book Back Answers | Lesson 8.4 – சிறுபாணாற்றுப்படை

8.4 சிறுபாணாற்றுப்படை

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12th Standard Tamil Lesson 8.3 – சிறுபாணாற்றுப்படை. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

12th Standard Tamil Guide - Sirupanatrupadai

12th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார்.
  • இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று;
  • ஓய்மாநாட்டு மன்னனான நல்லியக்கோடனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு 269 அடிகளில் எழுதப்பட்ட நூல்.
  • பரிசுபெற்ற பாணன் ஒருவன் தான் வழியில் கண்ட மற்றொரு பாணனை அந்த அரசனிடம் ஆற்றுப்படுத்துவதாக இது அமைந்துள்ளது.
  • வள்ளல்களாகக் கருதப்பட்ட குறுநில மன்னர்கள் பற்றிய செய்திகள் இப்பாடப்பகுதியில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.

சொல்லும் பொருளும்

  • வளமலை – வளமான மலை (மலைநாடு) இன்று பழநி மலை என்று அழைக்கப்படுகிறது;
  • கவாஅன் – மலைப்பக்கம்
  • கலிங்கம் – ஆடை
  • சுரும்பு – வண்டு
  • நாகம் – சுரபுன்னை, நாகப்பாம்பு
  • பிறங்கு – விளங்கும்
  • பறம்பு – பறம்பு மலை
  • கறங்கு – ஒலிக்கும்
  • வாலுளை – வெண்மையான தலையாட்டம்
  • மருள – வியக்க
  • நிழல் – ஒளி வீசும்
  • நீலம் – நீலமணி
  • ஆலமர் செல்வன் – சிவபெருமான் (இறைவன்)
  • அமர்ந்தனன் – விரும்பினன்
  • சாவம் – வில்
  • மால்வரை – பெரியமலை (கரிய மலையுமாம்)
  • கரவாது – மறைக்காது
  • துஞ்சு – தங்கு
  • நளிசினை – செறிந்த கிளை (பெரிய கிளை)
  • போது – மலர்
  • கஞலிய – நெருங்கிய
  • நாகு – இளமை
  • குறும்பொறை – சிறு குன்று
  • கோடியர் – கூத்தர்
  • மலைதல் – போரிடல்
  • உறழ் – செறிவு
  • நுகம் – பாரம்.

இலக்கணக் குறிப்பு

  • வாய்த்த, உவப்ப, கொடுத்த, ஈந்த – பெயரெச்சங்கள்
  • கவாஅன் – செய்யுளிசையளபெடை
  • தடக்கை – உரிச்சொல் தொடர்
  • நீீலம் – ஆகுபெயர்
  • அருந்தமிறல், நெடுவழி, வெள்ளருவி, நெடுவேல், நன்மொழி, நன்னாடு – பண்புத்தொகைகள்
  • அரவக்கடல் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • மலைதல் – தொழிற்பெயர்
  • விரிகடல் – வினைத்தொகை
  • கடல்தானை – உவமைத்தொகை

உறுப்பிலக்கணம்

1. அமர்ந்தனன் = அமர்+ த் (ந்) + த் + அன் + அன்

  • அமர்- பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • அன் – சாரியை
  • அன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

2. ஈந்த = ஈ + த் (ந்) + த் + அ

  • ஈ – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் -இறந்தகால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி

3. தாங்கிய = தாங்கு + இ(ன்) + ய் + அ

  • பழி – பகுதி
  • இ(ன்) – இறந்தகால இடைநிலை
  • ய் – உடம்படுமெய் சந்தி
  • அ – பெயரெச்ச விகுதி

புணர்ச்சி விதி

1. நன்மொழி =  நன்மை + மொழி

  • “ஈறுபோதல்” என்ற விதிப்படி “நன்மொழி” என்றாயிற்று.

2. உரனுடை = உரன் + உடை

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “உரனுடை” என்றாயிற்று.

பாடநூல் வினாக்கள்

சிறு வினா

1.கடையெழு வள்ளல்களையும் அவர்கள் செய்த செயல்களையும் அட்டவணைப்படுத்துக

பேகன் (ஆவினன்குடி) மழைப்பொழியும் மலைச்சாரலில் செல்லும் கருங்மேகங்கண்டு ஆடிய மயில குளிரால் நடுங்குவதாக எண்ணி தன் போர்வையை தந்தவன்.
பாரி (பறம்பு) நாகமலை பகுதிக்கு செல்லும் போது படர்வதற்கு பற்று இல்லாமல் ஆடிய முல்லைக்கு தேர் தந்தவன்.
பார் (மலையமான்) இவன் வாள் செந்நிறம் கொண்டு ஒளிரும், ஆனால் தன்னைத் தேடி வந்தவருக்கு அன்பு மொழி விதைத்த ஈரநிலம் போன்றவன் நீண்ட கைகளை உடையன்.
ஆய் (பொதிய மலை) நீல நாகத்தின் உடைய ஆலின் கீழ் அமர்ந்த இறைவனுக்குக் கொடுத்ததவன்.
நள்ளி (நெடுங்கோடு மலைமுகடு) போர் முனையில் நீளும் கைகள் போ மக்கள் வாழ்க்கைக்கு அனைத்தும் வாரி வழங்கியவன்.
ஓரி (மலைநாடு – ஊட்டி) மணம் வீசும் மலர்கள் உடைய மலைநாட்டைக கூத்தருக்குத் தந்தவன்.

2. கொடை வழங்குதலில் நீங்கள் பின்பற்றி விரும்புவனவற்றை எழுதுக

  • கொடை என்பது மடைமை குணங்களில் ஒன்றாகும்.
  • மடம் என்பது அறியாமை என்ற பொருள்.
  • இன்னாருக்கு இன்னது கொடுக்க வேண்டும் என்பதை எண்ணாமல் கிடைத்ததை நினைத்த போது கொடுப்பதுதான கொடை.
  • இது சரியா, தவறா என்று ஆலோசிக்க அறிவுக்கு இடம் கொடுக்காமல் உள்ளத்துக்கு கொடுக்கும்போது தோன்றுவது கொடை மடம்.

இதைத்தான் வள்ளுவர்

வறியார்கொன்று ஈவதே ஈகை மற்றெல்லாம்
குறியெதிர்பை நீர் உடைத்து

– என்கிறார் இதன்படியே நாமும் கொடை வழங்குவதை பின்பற்றலாம்.

கற்பவை கற்றபின்…

1. எதையும் எதிர்பாராமல் நீங்கள் பிறருக்கு உதவி செய்த நிகழ்வை வகுப்பறையில் பகிர்ந்து கொள்க.

மாணவர் செல்வங்களே!

வணக்கம்

எதையும் எதிர்பார்க்காமல் செய்த உதவி மண்ணையும் விண்ணையும் விட உயர்வானது அது பற்றிய ஒரு நிகழ்வை கூறுகிறேன். பத்து ஆண்டுகளுக்கு முன் நமது பள்ளி வாயிலைக் கடக்கும் போது என்னை சார் என்ற குரல் அழைத்துத் திரும்பினேன். ஒரு ஐம்பது வயதுள்ள ஒர அம்மாவும், பத்து வயது இருக்கும் ஒரு பையனும் நின்றிருந்தார்கள். என்னம்மா வேண்டும் என்றேன். சார் இவன் என் மகளுடைய பேரன். இவனுடைய அப்பா, அம்மா சுனாமி ஏற்பட்ட போது கடல் அன்னையால் உளங்வாங்கப்பட்டார்கள். இவன் தமிழ்வழிப் படித்தவன் உங்கள் பள்ளி ஆங்கில வழியாம் இவனால் படிக்க முடியாதாம். கட்டணமும் வேறிடம் போகச் சொல்லி விட்டார்கள் என்றாள் அந்த அம்மா.

உடனே, முதல்வர் அமைக்கு சென்று என் செல்வாக்கை பயன்படுத்தி நான் இவன் மீது கவனம் செலுத்துகிறேன் என்று உத்தரவாதம் கூறிப் பள்ளியில் சேர்த்தேன். இவ்வசமாக படிக்க பள்ளியில் அனுமதி பெற்றேன். இன்று அவன் காவல்துறை அதிகாரி. சில நாட்களுக்கு முன் அவனுடைய பாட்டி என்னைப் பார்க்க தன் பேரனோடு வந்தார்கள். ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் பாட்டி. அவனும் என்னைப் பார்த்து நன்றி கூறினான். எதிர்பாராமல் செய்த உதவி என்னை மகிழ்ச்சியில் உறைய வைத்தது. ஆமாம், மாணவர்களே எதையும் எதிர்பாராமல் செய்யுங்கள்.

2. தமிழர்கள் கொடைத் தன்மையில் சிறந்து விளங்கினர் என்பதற்குச் சான்றுகள் திரட்டி ஒப்படைவு எழுதுக.

உலகம் உவப்பவலன் ஏர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு போன்று பண்டையத் தமிழரின் வரலாறு, வாழ்வியல், அறம், ஈதல் போன்றவற்றை அறிய புறநானூறு ஒன்றைச் சான்றாகக் காட்டலாம்.

பாடல் உனக்கு பரிசில் எனக்கு

தன்னை எதிர்த்துப் போரிட பகைவனின் காவல் மிக்க அரண்களை அழித்தப் போர் புரிந்த வீரத்தைப் புகழந்து பாடிய பாடினிக்கு பல கழஞ்சால் செய்யப்பட்ட பொன் அணிகலன்களையும் அவளோடு வந்து இணைந்து பாடிய பாணனுக்கு வெள்ளி நாறால் கோக்கப் பெற்ற தாமரைப்பூ மாலையும் பரிசாக வழங்கினான்.

மறம் பாடிய பாடினியும்மே
ஏருடைய விழக்கழஞ்சிற்
சீருடைய விழை பெற் சினே

பொற்றாமரையும் யானையும் வழங்குதல்

  • “பாணாட தாமரை மலையபும் புலவர்
  • பூநுதல் யானையோடு புனைதேர்….

பாணர்களுக்கு பொற்றாமரை ஈதலுமு், புலவர்களுக்கு யானையை வழங்குதலும் கொடையாகத் தமிழர்கள் கொண்டு வாழ்ந்தனர்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு

  • நல்கிய, மறைந்த – பெயரெச்சங்கள்
  • திகழ்நீலம், கமழ்பூ – வினைத்தொகைகள்

உறுப்பிலக்கணம்

1. முட்டாது = முட்டு + ல் + ஆ + த் + உ

  • முட்டு – பகுதி
  • ல் – சந்தி
  • ஆ – எதிர்மறை இடைநிலை
  • த் – எழுத்துப்பேறு
  • உ – வினையெச்ச விகுதி

2. திகந்து = திகழ் + த் (ந்) + த் + உ

  • திகழ் – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் -இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

புணர்ச்சி விதி

1. வெள்ளருவி =  வெண்மை + அருவி

  • “ஈறுபோதல்” என்ற விதிப்படி “வெண் + அருவி” என்றாயிற்று.
  • “முன்னின்ற மெய் திரிதல்” என்ற விதிப்படி “வெள் + அருவி” என்றாயிற்று.
  • “தனிக்குறில் முன்ஒற்றுவரின் இரட்டும்” என்ற விதிப்படி “வெள்ள் + அருவி” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “வெள்ளருவி” என்றாயிற்று

2. பூஞ்சாரல் = பூ + சாரல்

  • “பூப்பெயர் முன்இன மென்மையும் தோன்றும்” என்ற விதிப்படி “பூஞ்சாரல்” என்றாயிற்று.

3. அரவக்கடல் = அரவம் + கடல்

  • “மவ்வீறு ஒற்று அழிந்து உயிர்ஈறு ஒப்பவும் ஆகும்” என்ற விதிப்படி “அரவ + கடல்” என்றாயிற்று.
  • “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி “அரவக்கடல்” என்றாயிற்று.

பலவுள் தெரிக

1. ஆவியர் குலத்தில் தோன்றியவன்

  1. பாரி
  2. பேகன்
  3. ஓரி
  4. காரி

விடை : பேகன்

2. தற்போதைய அகத்தியர் மலை எனப்படுவது …………

  1. பொதிய மலை
  2. பிரான் மலை
  3. நளி மலை
  4. கொல்லி மலை

விடை : பொதிய மலை

3. வள்ளல் குமணனைப் பற்றிக் குறிப்பிடும் நூல்

  1. பதிற்றுப்த்து
  2. பரிபாடல்
  3. பட்டினப்பாலை
  4. புறநானூறு

விடை : புறநானூறு

4. குறுநில மன்னன் குமணால் ஆளப்பட்ட மலை

  1. பொதிய மலை
  2. பிரான் மலை
  3. நளி மலை
  4. முதிர மலை

விடை : முதிர மலை

5. தன் தலையை அரிந்து சென்று இளங்குமணனிடம் கொடுத்து பரிசில் பெற்றுச் செல்லுமாறு குமணனால் கேட்டுக் கொள்ப்பட்ட புலவர் ………..

  1. பெருந்தலைச் சாந்தனார்
  2. பிசிராந்தையார்
  3. பரணர்
  4. கபிலர்

விடை : பெருந்தலைச் சாந்தனார்

6. சிறுபாணாற்றுப்படை நூலின் ஆசிரியர் 

  1. மாங்குடி மருதனார்
  2. வெள்ளைக்குடி நாகனார்
  3. நல்லூர் நத்தத்தனார்
  4. பூதஞ்சேந்தனார்

விடை : நல்லூர் நத்தத்தனார்

குறு வினா

1. பேகனின் நாடு பற்றி எழுதுக

பழனி மலையும் அதைச் சுற்றிய மலைப்பகுதிகளும் பேகனது நாடாகும்.

2. நெடுங்கோடு மலை முகடு பகுதி தற்போது எவ்வாறு கூறப்படுகிறது-

நெடுங்கோடு மலை முகடு பகுதி தற்போது உதகமண்டலம் ‘ஊட்டி’ என்று கூறப்படுகிறது.

3. சிறுபாணாற்றுப்படை பாடலை பாடியவர் பாடப்பட்டோர் யார்?

  • பாடியவர் – இடைக்கழிநாட்டு நல்லூர்  நத்தத்தனார்
  • பாடப்பட்டோன் – ஓய்மாநாட்டு மன்னன் நல்லியக்கோடன்

4. ஆற்றுப்படை என்பது யாது?

  • ஆறு + படை = ஆற்றுப்படை வழிபடுத்தல் என்பதன் பொருளாகும்.
  • பரிசில் பெற்ற பாணன் பரிசில் பெற போகும் பாணனைக் கண்டு வழிபடுத்தல்.

5. கடையெழு வள்ளல்கள் ஆண்டப் பகுதியை தற்காலப் பெயர்களோடு பட்டியலிடுக

வள்ளல் ஆண்டபகுதி தற்காலபெயர்
பேகன் பொதினி மலை பழனி மலை
பாரி பறம்பு மலை பிரான் மலை
காரி மலையமான் மலாடு
ஆய் பொதிய மலை குற்றாலம்
அதிகன் தகடூர் தருமபுரி
நள்ளி நளிமலை ஊட்டி
ஓரி கொல்லி மலை கொல்லி மலை

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment