TN 12th Standard Tamil Book Back Answers | Lesson 5.3 – தேவாரம்

5.3 தேவாரம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12th Standard Tamil Lesson 5.3 – தேவாரம். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

12th Standard Tamil Guide - Devaram

12th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • பாடப்பகுதியாக உள்ள பாடல், இரண்டாம் திருமுறையில் உள்ள திருமயிலாப்பூர் பதிகத்தில் இடம் பெற்றுள்ளது.
  • பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களின் தொகுப்புகள்.
  • இவர் பாடல்கள் இசைப் பாடல்களாகவே திகழ்கின்றன.
  • இப்பாடல்கள் நம்பியாண்டார் நம்பி என்பவரால் தொகுக்கப்பட்டுள்ளன.
  • இப்பாடல்களுக்குத் தேவாரம் என்று பெயர்.
  • சமுதாயத்தின் பொருளாதார கலை பண்பாட்டு நிலைகள், தமிழுக்கு இருந்த உயர்நிலை, இசை தத்துவம் சமயக் கோட்பாடுகள் அனைத்தும் சம்பந்தர் பாடல்களில் விரவிக் கிடக்கின்றன.

சொல்லும் பொருளும்

  • மலிவிழா – விழாக்கள் நிறைந்த
  • மடநல்லார் – இளமை பாெருந்திய பெண்கள்
  • கலிவிழா – எழுச்சி தரும் விழா
  • பலிவிழா – திசைதோறும் பூசையிடும் உத்திரவிழா
  • ஒலிவிழா – ஆரவார விழா

இலக்கணக்குறிப்பு

  • மாமயிலை – உரிச்சாெற்றாெடர்

உறுப்பிலக்கணம்

1. கண்டான் = காண் (கண்) + ட் + ஆன்

  • காண் – பகுதி (கண் எனக் குறுகியது விகாரம்
  • ட் – இறந்தகால இடைநிலை
  • ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.

2. அமர்ந்தான் = அமர் + த் (ந்) + த் + ஆன்

  • அமர் – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்த கால இடைநிலை
  • ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.

புணர்ச்சி விதி

பூம்பாவாய் = பூ + பாவாய்

  • பூப்பெயர்முன் இனமென்மையும் தோன்றும்” என்ற விதிப்படி “பூம்பாவாய்” என்றாயிற்று

பாடநூல் வினாக்கள்

குறு வினா

கலிவிழா, ஒலிவிழா விளக்கம் தருக

கலிவிழா – திருமயிலையில் கொண்டாடும் எழுச்சிமிக்க விழா.

ஒலிவிழா – கபாலீச்சரம் இறைவனுக்குப் பூசையிடும் பங்குனி உத்திர ஆராவார விழா.

சிறு வினா

பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்ற முறையைத் திருஞான சம்பந்தர் எவ்வாறு பதிவு செய்கிறார்?

  • கோவில் திருவிழா மகிழ்ச்சியைப் பகிரந்து கொள்ளும் நாகரிகத்தின் வெளிப்பாடு.
  • ஊரின் பெருமைக்குரிய அடையாளங்களுள் ஒன்று.
  • விழாக்கள் நிறைந்த ஊர் திருமயிலை.
  • இங்கு இளம் பெண்கள் ஆராவாரத்தோடு கொண்டாடும் விழாக்கள் நிறைந்த வீதியுடைய ஊர்.
  • எழுச்சிமிக்க விழாக்கள் நிகழும்.
  • மயிலை கபாலீச்சரம் என்னும் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனுக்குப் மிசையிடும் பங்குனி உத்திர ஆரவாா விழாவினைக் கண்டு இறைவன் அருள்பெற திருஞானசம்பந்தர் பதிவு செய்கிறார்.

கற்பவை கற்றபின்…

உங்கள் பகுதியில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி நாளிதழ் ஒன்றின் செய்திப்பிரிவிற்கு அளிக்கும் வகையில் செய்தியாக எழுதுக.

மேலாளர்,
தினத்தந்தி நாளிதழ் (செய்திப்பிரிவு),
கடலூர் அலுவலகம்,
கடலூர்.

வணக்கம்

சிதம்பரம் நடராசர் கோயில் ஆருத்ரா தரிசனம் விழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. அவ்விழாவினைப் பற்றிய தகவல்கள் நாங்கள் தருகிறோம். அதை உங்கள் நாளிதழிலில் வெளியிட்டு மக்கள் வருகைத்தந்து இறையருளை வேண்டுகிறோம்.

செய்தி

ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி் நிரல்

பஞ்சசபை, பொற்சபை, ஆகாயநலம் எனப் போற்றப்படும் சிதம்பரம் நடராசருக்கு ஆருத்ரா தரிசன விழா

உலகப்புகழ் பெற்ற நடராசர் ஆலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு விழாக்கள் நடைபெறும் ஆனி மாதம் திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும் நடைபெறும். கொடியேற்றத்துடன் தொடங்கிய மறுநாள் காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிவகாமிசுந்தரி அம்பாள் சமேத நடராஜ மூர்த்திக்கு எழுச்சி, கோபூஜை, பஞ்சாங்கம் படித்தல்.

மார்கழி முதல் நாள் கொடியேற்றத்துடன் துவக்கம். தேரோட்டம் வரும் 25-ம் தேதியும், 26-ம் தேதி அதிகாலை 3மணி முதல் 6 மணி வரை சிவகாமி சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராச மூர்த்திக்கு மகா அபிஷேகம் மற்றும் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.

காலசந்தி பூஜை, ரகசிய பூஜை நடைபெறும். காலை 9.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் நடராசர் சன்னதியின் எதிரே உள்ள கொடிமரம் முன்பு காட்சி தருவார்.

தீட்சிதர்கள் சிறப்பு பூஜைகள் செய்வர். 9.30 மணியளவில் மகாதீபாரதனை காண்பிக்கப்படும். தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் உட்பிரகாரம், வெளிப்பிரகாரத்தில்  ஊர்வலமாகச் செல்வர்.

இரவு 8 மணிக்கு கொடிமர பூஜை பிறகு பஞ்சமூர்த்திகள் தங்கம் வெள்ளி வாகனத்தில் வீதிகள் உலா…

  • ஞாயிறன்று வெள்ளிபூத வாகனத்தில் வீதி உலா
  • 21-ம் நாள் கருட வாகனத்தில் வீதி உலா
  • 22-ம் நாள் யானை வாகனத்தில் வீதி உலா
  • 23-ம் நாள் தங்ககைலாச வாகனத்தில் வீதி உலா
  • 24-ம் நாள் தங்கரதத்தின் பிஷாடனர் வெட்டுக்குதிரையில் வீதி உலா
  • 25-ம் நாள் தேரோட்டம்
  • 26-ம் நாள் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமி சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராச மூர்த்திக்கு மகா அபிஷேகத்துடன் மதியம் 2 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.

இறையன்பர்கள் வருகை தந்து இறையருள் பெற வேண்டுகிறோம்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. மயிலாப்பூரில் இறைவனுக்குக் கொண்டாடப்படும் விழா

  1. திருக்கார்த்திகை விழா
  2. சித்திரா பெளர்ணமி  விழா
  3. பங்குனி உத்திர விழா
  4. தைப்பூச விழா

விடை : பங்குனி உத்திர விழா

2. பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளைப் பாடியவர்

  1. திருநாவுக்கரசர்
  2. சுந்தரர்
  3. திருஞானசம்பந்தர்
  4. மாணிக்கவாசகர்

விடை : திருஞானசம்பந்தர்

3. நம்பியாண்டார் நம்பி யாருடைய பாடல்களைத் தொகுத்தார் ……………..

  1. திருஞானசம்பந்தர்
  2. திருநாவுக்கரர்
  3. மாணிக்கவாசகர்
  4. பெரியாழ்வார்

விடை : திருஞானசம்பந்தர்

4. கபாலீச்சரம் எங்கு அமைந்துள்ளது

  1. திருவான்மியூர்
  2. திருநின்றவூர்
  3. திருமயிலை
  4. குன்றத்தூர்

விடை : திருமயிலை

5. பொருந்தாத இணையைத் தேர்க

  1. ஐப்பசி – ஓண விழா
  2. கார்த்திகை – விளக்குத் திருவிழா
  3. மார்கழி – கடலாட்டு விழா
  4. தை – தைப்பூச விழா

விடை : மார்கழி – கடலாட்டு விழா

குறு வினா

1. திருவிழாக்கள் என்பது யாது?

மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் நாகரிகத்தின் வெளிப்பாடு, கோவில் திருவிழா. கோவில் ஓர் ஊரின் பெருமைக்குரிய அடையாளங்களுள் ஒன்று. அதன் புகழைப் பறைசாற்றும் எழுச்சியே திருவிழாக்கள்.

2. திருமயிலை என்றால் என்ன?

விழாக்கள் நிறைந்த ஊர் ‘திருமயிலை’ என்று அழைக்கப்படும்

3. திருஞானசம்பந்தர் எங்கு வீற்றிருக்கும் இறைவனுக்குப் பங்குனி உத்திரவிழா கொண்டாடுகிறார்?

திருமயிலை என்று அழைக்கப்படும் மயிலாப்பூரில் நகரில் வீற்றிருக்கும் இறைவனுக்குப் பங்குனி உத்திரவிழாவினை திருஞானசம்பந்தர் கொண்டாடுகிறார்

4. மயிலாப்பூரின் சிறப்புகள் சிலவற்றைக் குறிப்பிடுக

  • மடலார்ந்த தெங்கின் மயிலை
  • கருங்சோலை சூழ்ந்த கபாலீச்சரம்
  • இருளகற்றும் சோதித் தொன்மயிலை
  • மங்குல் மதிதவழும் மாடவீதி மயிலாப்பூர்
  • கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சரம்
  • ஊர்திரை வேலை உலாவும் உயர்மலை
  • கண்ணார் மயிலைக் கபாலீச்சரம்

5. மயிலைப் பதிகத்தில் கொண்டாடப்படும் விழாக்களை கூறுக

  • ஐப்பசி – ஓண விழா
  • கார்த்திகை – விளக்குத் திருவிழா
  • மார்கழி – திருவாதிரை விழா
  • தை – தைப்பூச விழா
  • மாசி – கடலாட்டு விழா
  • பங்குனி – பங்குனி உத்திர விழா

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment