4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12th Standard Tamil Lesson 4.1 – பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
நூல் வெளி
- இப்பாடப்பகுதி உயிர்மீட்சி என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்ட உ.வே.சா.வின் இலக்கியக் கட்டுரைகளிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
- ’தமிழ்த் தாத்தா’ என அழைக்கப்பெற்ற உ.வே.சா. இணையற்ற ஆசிரியர்; புலமைப் பெருங்கடல்; சிறந்த எழுத்தாளர்; பதிப்பாசிரியர்;
- பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடித்தேடி அச்சில் பதிப்பிக்க அரும்பாடுபட்டவர்.
- ‘மகாமகோபாத்தியாய,’ ‘திராவிட வித்தியா பூஷணம்’, ‘தாக்ஷிணாத்திய கலாநிதி’ உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றுள்ளவர்;
- கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
- 1932இல் சென்னைப் பல்கலைக்கழகத்தினால் ‘டாக்டர்’ பட்டம் பெற்ற பெருமைக்குரியவர்.
- அவரது திருவுருவச் சிலை, சென்னை மாநிலக் கல்லூரியில் வங்கக்கடலை நோக்கி நிற்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது.
- சென்னையில் திருவான்மியூரில் இவர் பெயரால் உ. வே. சா. நூலகம் அமைந்துள்ளது.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக.
1. சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
- வசம்பு
- மணத்தக்காளியிலைச் சாறு
- கடுக்காய்
- மாவிலைக்கரி
விடை : கடுக்காய்
2. குழிமாற்று எந்தத் துறையோடு தொடர்புடைய சொல்?
- இலக்கியம்
- கணிதம்
- புவியியல்
- வேளாண்மை
விடை : கணிதம்
குறு வினா
அக்காலத்துக் கல்விமுறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?
- தமிழில் : நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள்
- கணித்தில் : கீழவாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்ப்பாடுகள்
- “தலைகீழ்பாடம்” என்ற முறையும் உண்டு
- ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி போன்ற அகராதி வடிவில் அமைந்த நூல்கள் நினைவாற்றலை வளர்க்க உதவின.
சிறு வினா
1. நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள்?
- மாணாக்கர்களின் அறிவு, திறன்கள், மனப்பாங்கு, செயற்பாடுகள், பண்புகள், பாடரீதியான அடைவுகள் எல்லா மாணவர்களுக்கு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற எனது மனநிலையை மாற்றுவேன்.
- கற்றலில் பின்னடைவு அடைந்திருக்கும் மாணாக்கரை எக்காரணம் கொண்டும் கற்றலில் முழு அடைவு அடையும் மாணாக்கரோடு ஒப்பிட்டுக் கூறமாட்டேன். மாறாக, கற்றலில் அம்மாணவன் பின்னடைவு அடைந்தற்கான காரணத்தைக் கண்ட அவனைத் தேற்றுவேன்.
- கற்றலில் பின்தங்கிய மாணாக்கர் கற்றிலில் இடர்படுவதற்கான காரணத்தை இனங்கண்டு அவன் முழுமையான அடைவு எய்த நல்ல வழிகாட்டியாகச் செயல்படுவேன்.
- எல்லா மாணாக்கரையும் அன்புடன் அணுகும் மனத்தைப் பெறுவேன்.
- தகாத வாரத்த்தைகள், பொருத்தமற்ற வார்த்தைகளை ஒருபோதும் வகுப்பறையில் உச்சரிக்க மாட்டேன்.
- மாணக்கர்களின் குடும்பச்சூழல்களை உணர்ந்து அவர்களுக்கு ஆறுதலான் வார்த்தைகளைக் கூறுவேன்.
- மாணாக்கரோடு முரண்படுதல், எதிர்த்து நின்று செயற்படுதல்; துன்புறுத்தல், மனம் நோக நடத்ல் என்பன போன்ற மன வேதனைப்படுத்தும் செயல்பாடுகளை முற்றிலும் தவிர்ப்பேன்.
- நல்ல ஆசானாய் இருக்கும் என்னாலும் நல்ல அன்பானவாய் இருக்க முடியும் என்பதை நிலைநிறுத்துவேன்.
2. மணலில் எழுதியதுமுதல் தற்காலம்வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க
- முதலில் ஆசிரியர் தரையில் எழுத அதன்மேல் பிள்ளைகள் எழுதினர். மணிலில் எழுதிப் பழகுவர்.
- எழுத்துக்கள் வரிசையாகவும், நன்றாகவும் அமைந்திருந்தன
- பழங்காலத்தில், கல், களிமண்பலகை, உலோகத் தகடு, துணி, இலை, பனை ஓலை, பூர்ஜ மரப்பட்டை, மரப்பலகை, தோல், மூங்கில் பத்தை போன்றவையும் எழுதுபடுபொருட்களாகப் பயன்படுத்தப்பட்டடுள்ளன.
- இலை, மரப்பட்டை, களிமண் பலகை போன்றவை விரைவில் அழியக்கூடியவை.
- மரப்பலகை, மூங்கில் பத்தை இவைகளின் பெரிய நூல்களை எழுதி கையாள்வது கடினமாக இருந்தன. தோல், துணி, உலோகத்தகடு போன்றவை மிகுந்த பொருட் செலவினை உண்டாக்கின.
- கருங்கல்லில் எழுதினால் பிற இடங்களுக்குக் கொண்டு செல்வது கடினமாகும். ஓலைச்சுவடிகளில் எழுத்தாணிகளைக் கொண்டு எழுதினர். கல்வெட்டுகளில் கல்தச்சர்களால் சிற்றுளி கொண்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டன. களிமண பலகைகக் கணிதம் எழுத்தாணி கொண்டே எழுதினார்.
- எழுத்துக்களின் உருவம் பலகாலமாக மாறாமல் இருந்தது. காலம் செல்லச் செல்ல எழுதுகோலைப் பயன்படுத்தி காகிதத்தில் எழுதும் முறையைக் கறு்றுக்கொண்டனர்.
நெடு வினா
பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல் கற்பித்தல் முறைகளைத் தொகுத்தெழுதுக.
முன்னுரை:-
ஓரு நாட்டின் முன்னேற்றம், கல்வி மேம்பாட்டுன் தொடர்புடையது. கல்வியின் நோக்கமும், அமைப்பு முறைகளும் மாற்றமடைந்து வந்துள்ளன. இலக்கிய, இலக்கணங்கள், காலநிலை வளர்ச்சியைக் காட்டுகின்றன.
கற்றலும் கற்பித்தலும்:-
பண்டைக்காலத்தில் கற்பித்தல் என்பது ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும் இடையே நடைபெறும் கருத்துப் பரிமாற்றமாகும். திண்ணைப் பள்ளிக்கூடங்களில், ஆசிரியரே அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக இருப்பார். சரளமாக எழுத, பேசுகின்ற மொழித்திறன் மிக்கவராய் இருப்பார். ஆசிரியரே கற்பித்தல் தன்மையை முடிவு செய்வார்.
முதலில் நெடுங்கணக்கு முறைகளிலே கற்பித்தல் நிகழும். இலக்கியம், இலக்கணம், வாய்பாடு ஆகிய அனைத்தையும் முழுமையாக மனனம் செய்து, தெளிவு பெறச் செய்வார். வினாக்கள் கேட்பதன் வாயிலாக மாணவர்களிடம் மதிப்பீடும் செய்வார். மாணவர்களின் கற்றல் திறனுக்கேற்பப் பாடத் திட்டங்களும் மாற்றம் பெறும். மாணவர்ககளின் ஆரவத்திற்கேற்ப வியாபாரம் பற்றிய செய்திகளும், கணித முறைகளும் கற்பிக்கப்படும்.
கற்றல் செயல்பாடுகள்:-
மாணவரது கற்றல் தன்மைக்கு, முக்கியத்துவம் அளிக்கப்படும். மொழித்திறனும், செயல்திறனும் கண்காணிக்கப்படும். மாணவர்கள் குழுவாசக் சேர்ந்து செயல்பட வாய்ப்புக்கள் அளிக்கப்படும். மாணவர்கள், வினாக்கள் கேட்கும் விடைகள் கூறியும் கற்று வருவார்கள். அடிப்படையான நூல்கள் எல்லாம், மனனமாகவே இருக்கும். நிகண்டு, வாய்ப்பாடுகளை எல்லாம் தலைகீழ்ப் பாடமாக மனனம் செய்வர்.
அகராதி, அந்தாதி, எதுகை, மோனை வகையில் செய்யுட்களை ஞாபகத்தில் கொள்வர். ஞாபசக்தி அதிகரிப்பதற்காகப் பூ, மிருகம், ஊர் போன்ற பெயர்களை மறுநாள் வந்து சொல்லுவர். கற்றல் என்பது பள்ளியில் மட்டுமே எனற்றில்லாமல், வாழ்நாள் முழுவது இருக்கும். “குருவை மிஞ்சிய சீடர்” என்று சொல்லும் வகையில் மாணவர்கள், புதியன படைக்கும் ஆற்றல் பெற்றிருப்பர்.
கற்பவை கற்றபின்
1. பண்டைக்காலப் பள்ளிக்கூடங்களில் பின்பற்றப்பட்ட குறிப்பிடத்தக்க நடைமுறைகளில், தற்காலத்தில் மேற்கொள்ளத்தக்கவை குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.
மாணவன் | வணக்கம் ஐயா! அக்காலத்தில் கையெழுத்து எப்படி இருந்தது ஐயா? |
ஆசிரியர் | வணக்கம், எழுத்துக்கள் ஒன்றோடொன்று வரி கோணல் இல்லாமல் பழைய காலத்தில் எழுதி வந்தார்கள். நாமும் அவ்வாறே எழுத வேண்டும். புள்ளி, கால், கொம்பு முதலிய வரி எழுத்தின் உறுப்புகளை அன்றைய பெரியோர்கள் பழக்கினார்கள். நாம் இன்றைய பெரியோர்களிடமிருந்த அவற்றை பழக்கி கொள்ள வேண்டும். தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை முதலானவற்றை மனனம் செய்தார்கள். கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று, நெல் இலக்கமியம் முதலிய வாய்ப்பாடுகளை கட்டாயம் மனப்பாடம் செய்தார்கள். |
மாணவன் | அப்படியா ஐயா! வேறு ஏதேனும் செய்தார்களா ஐயா? |
ஆசிரியர் | ஆசிரியர் ஒவ்வொரு நாளும் மாணவர்களைத் தான் எழுதி ஏடுகளின் மேலேயே எழுதி வரச் செய்தார்கள். இதுபோன்ற செயல்பாடுகளை நீயும் மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும். |
மாணவன் |
நன்றி ஐயா! உறுதியாகச் செய்கிறேன் ஐயா! |
2. ‘மனனம் செய்தல்’ – இன்றைய கல்விநிலையிலும் குறிப்பிடத்தக்க ஒரு கூறு. இது பற்றிப் பத்துக் கருத்துகளை முன்வைக்க.
- திருக்குறள், சான்றோர் சிந்தனைகள், அறநூல் தொடர்கள் போன்றவற்றை மனனம் செய்தால் தான் அறிவை வெளிக்கொணர முடியும்.
- அன்று கவனச் சிதறல்கள் இல்லை. இன்று கவனச்சிதறல்களின் ஊடேதான் கல்வி. எனவே மனனம் செய்வதே நல்லது.
- நேர்வு நேரங்களில் மனனப் பாடல்கள், சில கொள்கைகள் மனனம் செய்தாலொழிய நினைவுக்கு வராது.
- மனனம் என்பது மனதை ஒருமைப்படுத்தும் ஒரு தியானம். மனம் என்பத நீண்டநாள் மனதில் இருத்தி வைத்துக் கொள்ளம் ஒரு ஞாபக சக்தி. சான்றோர் அறிவுரை, முந்தைய நிகழ்வுகள் எல்லாம் மனனம் என்னும் வகையில் தான் அடங்கும்.
- ஒரு ஆராய்ச்சியின் தொடர்ச்சி என்பது நேற்று என்ன செய்தோம் நாளை என்ன செய்யப் போகிறோம் என்பது மனன சக்தியே.
- புரியாத ஒரு பகுதியை மனனம் செய்தோம் என்றால் விளங்கும்
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக.
1. திண்ணைப் பள்ளிக்கூடங்கள் எந்த நூற்றாண்டில் அதிகம் இருந்தன.
- 20-ம் நூற்றாண்டு
- 19-ம் நூற்றாண்டு
- 18-ம் நூற்றாண்டு
- 17-ம் நூற்றாண்டு
விடை : 19-ம் நூற்றாண்டு
3. மன்றத்திற்கு வழங்கும் பெயர்
- அம்பலம்
- சபை
- சங்கம்
- கோட்டை
விடை : அம்பலம்
4. ஜைன மடங்களுக்கான பெயர்
- அம்பலம்
- மன்றம்
- திண்ணை
- பள்ளி
விடை : பள்ளி
5. செய்யுளை நினைவுபடுத்தும் முறைகள்
- எழுதுதல், படித்தல்
- வாசித்தல், எதுகை மோனை
- எதுகை மோனை, அந்தாதி
- கற்பித்தல், எழுதுதல்
விடை : எதுகை மோனை, அந்தாதி
6. ஓதற்பிரிவுக்கென தொல்காப்பியம் குறிப்பிடும் கால எல்லை
- 3 ஆண்டுகள்
- 4 ஆண்டுகள்
- 2 ஆண்டுகள்
- 7 ஆண்டுகள்
விடை : 3 ஆண்டுகள்
7. பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் என்னும் உ.வே.சாவின் கட்டுரைத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது?
- உயிர்நீட்சி
- உயர்மீட்சி
- உயிர்காட்சி
- மையாடல்
விடை : உயர்மீட்சி
8. மில்டனின் சுவர்க்க நீக்கத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்
- வெள்ளைக்கால் ப.சுப்பிரமணியனார்
- எட்டையபுரம் சி.சுப்பிரமணிய பாரதி
- சுப்பிரமணிய சிவா
- உ.வே.சாமிநாதர்
விடை : வெள்ளைக்கால் ப.சுப்பிரமணியனார்
9. வெள்ளைக்கால் சுப்பிரமணியனார் என்பார் _________ ஆவார்
- வழக்கறிஞர்
- பொறியாளர்
- உயிரின மருத்துவர்
- நீதியரசர்
விடை : உயிரின மருத்துவர்
10. கணக்காயர் என்பவர் …………..
- உரையாசிரியர்
- நூலாசிரியர்
- உபாத்தியாயர்
- மொழிபெயர்ப்பாளர்
விடை : உபாத்தியாயர்
11. “தமிழ்த்தாத்தா” என அழைக்கப்பட்டவர் ___________
- திரு.வி.க
- மா. பொ. சிவஞானம்
- மறைமலை அடிகளார்
- உ. வே. சாமிநாதர்
விடை : உ. வே. சாமிநாதர்
12. சென்னையில் உ.வே.சா. பெயரில் நூலகம் அமைந்துள்ள இடம் ___________
- திருவான்மியூர்
- அடையாறு
- அண்ணாநகர்
- மயிலாப்பூர்
விடை : திருவான்மியூர்
13. நற்றிணை நூலின் உரையாசிரியர்
- டாக்டர் மா.இராசமாணிக்கனார்
- பின்னத்தூர் நாராயணசாமி
- ப.சுப்பிரமணியனார்
- வ.சுப.மாணிக்கம்
விடை : பின்னத்தூர் நாராயணசாமி
14. உ.வே.சா. சென்னை பல்கலைக்கழத்தில் டாக்டர் பட்டம் பெற்ற ஆண்டு ___________
- 1930
- 1932
- 1934
- 1936
விடை : 1932
பொருத்துக
1. எட்டயபுரம் திண்ணைப்பள்ளி | அ. பின்னத்தூர் நாராயணசாமி |
2. முத்துராம பாரதி திண்ணைப்பள்ளி | ஆ. நாவலர் சோமசுந்தர பாரதியார் |
3. கணபதியார் திண்ணைப் பள்ளி | இ. வெள்ளைக்கால் ப.சுப்பிரமணியார் |
4. மெளனகுரு | ஈ. மாண. இராசமாணிக்கனார் |
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – இ, 4 – ஈ |
குறு வினா
1. நற்றிணை நூலின் உரையாசிரியர் யார்? அவர் எங்கு யாரிடம் திண்ணைக் கல்விக் கற்றார்?
- நற்றிணை நூலின் உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி
- அவர் பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கல்வி கற்றார்.
2. மன்றம் என்பது எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கும்? அதன் வேறு பெயர்கள் என்ன?
- பெரிய மரத்தடியில் மேடையொன்று அமைக்கப்பட்டிருக்கும்.
- “அம்பலம்” என்றும் மன்றம் என்றும் அழைப்பர்.
3. “முறை வைப்பு” என்றால் என்ன?
உபாத்தியாயர் (ஆசிரியர்) ஒன்றைச் சொல்ல அதை மாணாக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்வது “முறை வைப்பது” என்று அழைக்கப்படும்.
4. வரியெழுத்தின் உறுப்புகள் யாவை?
புள்ளி, கால், கொம்பு, விலங்கு முதலியவை வரியெழுத்தின் உறுப்புகள்
5. எழுத்தாணியின் வகைகள் எத்தனை? அவை யாவை?
எழுத்தாணியின் வகைகள் மூன்று
- மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, குண்டெழுத்தாணி
6. “தமிழ்த்தாத்தா” – பெற்ற சிறப்புப் பட்டங்கள் யாவை?
- மகாமகோபாத்தியாய
- திராவிட வித்தியா பூஷணம்
- தாக்ஷிணாத்திய கலாநிதி
- 1932-ல் சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
7. “வித்தியாரம்பம்” என்பது யாது?
முதன் முதலில் ஐந்து வயதில் கல்வி கற்பதற்காகக் குழந்தைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாகக் கொடுப்பதே விதியாரம்பம் என்பர்.
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…