TN 12th Standard Tamil Book Back Answers | Lesson 3.1 – தமிழர் குடும்ப முறை

3.1 தமிழர் குடும்ப முறை

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12h Standard Tamil Lesson 3.1 – தமிழர் குடும்ப முறை. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

12th Standard Tamil Guide - Tamilar Kuduba Murai

12th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • இப்பாடப்பகுதி (தமிழர் குடும்ப முறை), பனுவல் (தொகுதி II, 2010) காலாண்டிதழில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கம்.
  • இதை எழுதியவர் பக்தவத்சலபாரதி.
  • தமிழ்ச்சமூகம்,பண்பாடு சார்ந்த மானிடவியல் ஆய்வுகளை இவர் முன்னெடுத்து வருகிறார்.
  • பழங்குடிகள், நாடோடிகள் உள்ளிட்ட விளிம்புநிலைச் சமூகங்கள் பற்றிய ஆய்வில் இவருடைய பங்களிப்பு முக்கியமானது.
  • இலக்கிய மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், தமிழர் மானிடவியல், தமிழகப் பழங்குடிகள், பாணர் இனவரைவியல், தமிழர் உணவு உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. அவை __________

  1. அறவோர், துறவோர்
  2. திருமணமும் குடும்பமும்
  3. மன்றங்களும் அவைகளும்
  4. நிதியமும் சுங்கமும்

விடை : திருமணமும் குடும்பமும்

2. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.

அ) உரிமைத்தாகம் 1. பாரசீகக் கவிஞர்
ஆ) அஞ்ஞாடி 2. பூமணி
இ) ஜலாலுத்தீன் ரூமி 3. பகதவச்சல பாரதி
 ஈ) தமிழர் குடும்ப முறை 4. சாகித்திய அகாதெமி
  1. 2, 4, 3, 1
  2. 3, 4, 1, 2
  3. 2, 4, 1, 3
  4. 2, 3, 4, 1

விடை : 2, 3, 4, 1

3. “எங்கள் தந்தையர் நாடெ ன்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே” – என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது

  1. தனிக்குடும்ப முறை
  2. விரிந்த குடும்ப முறை
  3. தாய்வழிச் சமூகமுறை
  4. தந்தைவழிச் சமூகமுறை

விடை : தந்தைவழிச் சமூகமுறை

குறுவினா

1. புக்கில், தன்மனை – சிறு குறிப்பு எழுதுக.

புக்கில்

சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடத்தை குறிப்பதாகும்

“துகள் அறுகேள்வி உயர்ந்தோர் புக்கில்” என்ற புறநானூறு (222:6) பாடல் சான்றாகும்

தன்மனை

திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடம் இருந்து பிரிந்து , தனியாக வாழுமிடம ‘தன்மனை’ எனவும் வழங்கப் பெறறுள்ளன.

சிறு வினா

1. பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக்குடும்பம் – விளக்கம் எழுதுக.

  • சங்க காலத்தில் முதல்நிலை உறவை மட்டுமே காண முடிகிறது.
  • நற்றாய் ஒருபுறம் செவிலியும், மகளின் தோழியும் குடும்பத்தில் முதன்மைப் பெற்றனர். இம்முறை பண்டை இனக்குழு மரபின் மாறுட்ட தொடர்ச்சி பண்டைய காலத்தில் காண முடிகிறது.
  • இல்லற வாழ்வின் இறுதிக் காலத்தில் மக்களோடு நிறைந்து, அறம் செய்து, சுற்றத்தாரோடு சேர்ந்து வாழ்தலே தலைவன் தலைவின் இல்லப் பயன் ஆகும்.
  • சங்கச் சமூகம் குடும்பம் என்ற அமைப்பை அடிப்படை அலகாக கொண்டு அதன் தொடர்ச்சியாக இன்றைய சமூகமும் கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம் கொண்டதாக தந்தை வழிக் குடும்ப் அமைப்பைக் கொண்டதாகவும் அமைகிறது.

2. தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்துக்குச் செய்யும் உதவிகள் யாவை?

  • காலையில் 4 மணிக்குப் படிக்க வேண்டிய தேவைகள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டேன்.
  • அவர்களுக்கு நானே தேநீர் தயார் செய்து கொடுப்பேன். தாயுடன் சேர்ந்து உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபடுவேன்.
  • தாய், தந்தை பணிக்கு ஆயத்தம் ஆவதற்குள் மூன்று பேருக்கும் உணவு எடுத்து வைப்பேன்.
  • பள்ளிக்கு என் பெற்றோர் உதவியல்லாம் நானே மிதிவண்டியில் செல்வேன். வீட்டிற்கு திரும்பியவுடன் வீட்டைச் சுத்தம் செய்து, பெற்றோருக்கு தேநீர் தயார் செய்து வைப்பேன்.
  • பெற்றோர் வந்தவுடன் மறுநாளுக்குத் தேவையான பொருள்களை கடைக்குச் சென்று வாங்கி வருவேன்.
  • பிறகு சிறிது நேரம் படித்துவிட்டு இரவு உணவை உண்ட பிறகு 10 மணி வரை படிப்பேன்.

நெடு வினா

1. குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு? விளக்குக

குடும்பம் என்ற அமைப்பு எற்படுவதற்கு அடிப்படை திருமணமே

குடும்ப அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை, திருமணமே. குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன – நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல. இன்று நாம் வழங்கும் ‘திருமணம்’ , ‘குடும்பம்’ ஆகிய இரண்டு சொற்களுமே தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் இடம்பெறவில்லை. குடும்பம் எனும் சொல் முதன்முதலில் திருக்குறளில் தான் (1029) பயின்று வருகிறது.

கட்டமைப்பு

  • ‘குடும்பு’ எனும் சொல் கூடி வாழுதல் என்று பொருள்படுகின்றது. பண்டைத் தமிழர்கள் குடும்பம் எனும் அமைப்புடன் வாழ்ந்த இடங்கள் பற்றிப் பல குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றுள் சில புக்கில், தன்மனை
  • சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடத்தை குறிப்பதாகும். திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து , தனியாக வாழுமிடம் ‘தன்மனை’ எனவும் வழங்கப் பெற்றுள்ளன.
  • மணந்தகம் என்பது மணம் புரிந்த கணவனும் மனைவியும சேர்நது இல்லற வாழ்வில் வாழ தொடங்கியது முதல் குழந்தை பிறககும் வரை உள்ள காலகட்டத்தை குறிப்பதாகும்.
  • சங்க காலத்தில் பெரும்பான்மையான சமூகத்தில் தாேய தலைமை ஏற்றிருப்பாள். பெண் திருமணம் செய்த பின்னும் தன் வீட்டிலே வாழ்க்கை நடத்தும் முறை இருந்தது. பெண் குழந்தைகள் பேறு முதன்மைப்படுத்தப்பட்டது.

தந்தை வழிக் குடும்பம்

  • சங்க காலத்தில் தாய் வழிக் குடும்பம் போலவே தந்தை வழிக் குடும்பமும் வேரூன்றியது.
  • பெண் திருமணம் ஆன பிறகு கணவனின் தந்த வீட்டில் வாழ வேண்டும் என்பதை மனையுறை மகளிர்க்கு ஆடவர் என்கிறது குறுந்தொகை.

தனிக்குடும்பம்

  • தனிக்குடும்ப வகை, சமூகப் படிமலர்ச்சியில் இறுதியாக எற்பட்டது. இது இன்று தொழிற் சங்கத்தில் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது.
  • தனிக்குடும்பம் ஆதிக்குடிகளிடம் இருந்தது என்று இனவரையில் ஆய்வுச் சுட்டுகிறது.

விரிந்த சமூகம்

  • சங்க காலத்தின் தனிக்குடும்ப அமைப்பு விரிவு பெற்று இவர்கேளாடு பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் விரிந்த குடும்பமாகக் காண முடிகிறது.
  • கணவன், மனைவி, குழந்தைகள் சேர்ந்து பெற்றோர்கள் சேர்ந்து வாழும் நேர் வழி விரிந்து குடும்பமுறை காணமுடிகிறது.
  • இன்றைய மனித சமூக கட்டமைப்பில் தாய்வழிக் குடும்பம், தந்தைவழிக்குடும்பம் என்ற நிலையக் கடந்து தனிக்குடும்பம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

சங்கச் சமூகம் குடும்பம் என்ற அமைப்பிலிருந்தே மனித சமூகம் கட்டமைக்கப்படுகிறது. அவற்றின் தொடர்ச்சியாகவே இன்றைய கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம் என்ற அலகைக் கொண்டதாக அமைகிறது. அதுவும் தந்தை வழிக் குடும்ப அமைப்பைக் கொண்டதாக இருக்கிறது. தொன்மைமிக்க இரு குடும்ப அமைப்பு முறை தமிழ்ச்சங்கத்தின் அடையாளமும் பெருமிதமும் ஆகும்.

குடும்பம் சமூகத்தை கட்டமைக்கும் களம்

  • குடும்பம் தனி மனிதருக்காகவும், சமுதாயத்திற்காகவும் பெரும் பங்காற்றுகிறது. மனித சமூகத்தின்  அடிப்படைகளான அன்பு செலுத்துதல், பொருளாதாரப் பகிர்வு, பொழுதுபோக்கு, பாதுகாப்பு, சமயச்செயல்கள், கல்விபெறுதல் ஆகியவை குடும்பத்திலே கற்பிக்கப்படுகின்றன.
  • பண்பாட்டைக் குழந்தைப் பருவத்தில் குடும்பம் கற்றுக் கொடுக்கிறது. சமுதாயத்தின் நெறிமுறைகள் அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய பழக்க வழக்கங்கள் பொருளாதாரச் செயல்களாகச் செய்யும் முறைகள், சமுதாய சமய வாழ்வில் ஆற்ற வேண்டிய கடைகள் போன்ற எண்ணற்ற வகைகளில் குடும்பம் குழந்தைகளுக்குப் பயிற்சியளிப்பதால் மனித சமூகம் சிறப்பாகக் கட்டமைக்கப்படும்.
  • பண்பாட்டு வயமாக்கல் நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் ஒரு மாதிரி குழுவாக செயல்படுகின்றன.
  • குடும்பம் என்பது தனது உறுப்பினர்கள் என்ற நிலையில் குடும்ப உறுப்பினர்கள் பயிற்சிகளை வழங்கி அமைதியும் ஒழுங்கும்  கொண்ட ஒரு சிறந்த சமுதாயம் அமைய அடிப்படையாக விளங்குவதால், குடும்பம் என்னும் சிறிய அமைப்பில் இருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்புக் கட்டமைக்கப்படுகிறது.

கற்பவை கற்றபின்

1. கூட்டுக்குடும்பம் – தனிக்குடும்பம் குறித்த உங்களது கருத்துகளைத் தொகுத்து உரை நிகழ்த்துக.

கூட்டுக்குடும்பம்

  • கூட்டுக்குடும்பத்தில் அன்பும் அரவணைப்பும் நிறைய வாய்ப்புண்டு.
  • ஒருவருக்கொருவர் உடன்பட்டு பேசுதல், ஒரு வேலையில் பலரும் ஈடுபடுதல் மகத்தான வெற்றி தரும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வளரும்
  • தலைமை ஒருவரின் அறிவுரை எல்லாருக்கும் பொருந்துமாறு அமைந்து விருப்பு வெறுப்புகள் களைப்பட வாய்ப்புண்டு. தனிமை நம்மை விட்டு அகலும்.

தனிக்குடும்பம்

  • தனிக்குடும்பத்தில் செலவுகள் குறையும்.
  • மனச்சுமையை இறக்கி வைக்க, தன் கருத்தை வெளியிட நேரம் இருக்காது.
  • பிள்ளைகள் பராமரிப்பிற்கு அதிகக் கவனம் செலுத்த நேரிடும். தனிமை ஏற்பட்டுவிடும்.
  • அவசர நேரங்களில் உதவி செய்ய ஆள் இருக்கமாட்டார்கள்.

எனவே, கூட்டுக் குடும்பம் ஒரு குதூகலம். தனிக்குடும்பம் ஒரு மெளனம். நன்றி! வணக்கம்!

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. தொல்காப்பியம் குறிப்பிடும் வாழிடங்கள்

  1. இல், குரம்பை
  2. இல், வீடு
  3. மனை, குடில்
  4. மனை, குரம்பை

விடை : இல், வீடு

2. “நும்மனை” – என்பது

  1. கணவனின் இல்லம்
  2. மனைவியின் இல்லம்
  3. நற்றாய் இல்லம்
  4. செவிலியின் இல்லம்

விடை : கணவனின் இல்லம்

3. மணமக்களின் வாழ்விடம் என்பது

  1. மனைவியின் அகம்
  2. கணவனின் அகம்
  3. தோழியின் அகம்
  4. செவிலியகம்

விடை : கணவனின் அகம்

4. ஆதிக்குடிமக்களிடம் இருந்த முக்கியமான குடும்ப முறை

  1. விரிந்தவழிக் குடும்ப முறை
  2. பிரிந்தவழிக் குடும்ப முறை
  3. கூட்டுக் குடும்ப முறை
  4. தனிக் குடும்ப முறை

விடை : தனிக் குடும்ப முறை

5. கூற்று 1 – தனியாக வாழுமிடம் ‘தன்மனை’ என்று அழைக்கப்பட்டது.
கூற்று 2 – ‘குடும்பு’ என்னும் சொல் தனியாக வாழ்தல் என்ற பொருளை உணர்த்துகிறது.

  1. கூற்று இரண்டும் தவறு
  2. கூற்று இரண்டும் சரி
  3. கூற்று 1 சரி 2 தவறு
  4. கூற்று 2 சரி 1 தவறு

விடை : கூற்று 1 சரி 2 தவறு

6. எந்தச் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது.

  1. குடும்பம்
  2. கிராமம்
  3. நகரம்
  4. குழு

விடை : குடும்பம்

7. தற்காலிகத் தங்குமிடத்தைப் ‘புக்கில்’ என்று கூறும் நூல்

  1. குறுந்தொகை
  2. அகநானூறு
  3. ஐங்குறுநூறு
  4. கலித்தொகை

விடை : அகநானூறு

8. தன்மனை என்பது

  1. தற்காலிமாகத் தங்குமிடம்
  2. மனைவியின் இல்லம்
  3. திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழுமிடம்
  4. திருமணத்திற்குப் முன்பே கணவனும் மனைவியுமாக வாழுமிடம்

விடை : திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழுமிடம்

9. சங்க காலத்தில் கண சமூகத்துக்குத் தலைமை ஏற்றிருந்தவர்

  1. அரசன்
  2. அரசி
  3. தந்தை
  4. தாய்

விடை : தாய்

10. சேரநாட்டு மருமக்கள் தாய்முறை பற்றிக் கூறும் நூல்

  1. புறநானூறு
  2. பதிற்றுப்பத்து
  3. பரிபாடல்
  4. பட்டினப்பாலை

விடை : பதிற்றுப்பத்து

11. தமிழர் குடும்ப முறை என்னும் கட்டுரையின் ஆசிரியர்

  1. பக்தவச்சல பாரதி
  2. சோமசுந்தர பாரதி
  3. சுப்ரமணிய பாரதி
  4. பழனி பாரதி

விடை : பக்தவச்சல பாரதி

12. சங்ககாலத்தில் ஒவ்வொரு ஆயத்துக்கும் பொறுப்பேற்று இருந்தவன்

  1. நற்றாய்
  2. செவிலித்தாய்
  3. தோழி
  4. தலைவி

விடை : செவிலித்தாய்

13. “மனையுரை மகளிர்க்கு ஆடவரே உயிரே” என்னும் பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்

  1. அகநானூறு
  2. புறநானூறு
  3. குறுந்தொகை
  4. தொல்காப்பியம்

விடை : குறுந்தொகை

14. “சிலம்புகழி நோன்பு” செய்வதற்கு உரியவர்

  1. செவிலித்தாய்
  2. நற்றாய்
  3. தலைவனின் தாய்
  4. தலைவியின் தாய்

விடை : தலைவனின் தாய்

15. “இலக்கிய மானிடவியல்” – இயற்றியவர்

  1. சுப்பிரமணிய பாரதி
  2. சோமசுந்தர பாரதி
  3. பாரதி பாஸ்கர்
  4. பக்தவச்சல பாரதி

விடை : பக்தவச்சல பாரதி

குறு வினா

1. சங்க இலக்கியத்தில் குடும்ப அமைப்புடன் தொடர்புடைய சொற்களாக குறிப்பிடப்படுவன யாவை?

குடம்பை, குடும்பு, கடும்பு

2. தொல்காப்பியம் குறிப்பிடும் வாழிடங்கள் யாவை?

இல், மனை

3. மணந்தகம் என்றால் என்ன?

மணம் புரிந்த கணவனும் மனைவியும சேர்நது இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்க நிலையே “மணந்தகம்” எனப்படும்.

4. சங்க இலக்கியத்தல் கூறப்படும் குடும்ப அமைப்போடு தொடர்புடைய சொற்கள் யாவை?

சங்க இலக்கியத்தில்‘ குடம்பை ’, ‘குடும்பு’, ‘கடும்பு’ ஆகிய சொற்கள் குடும்ப அமைப்போடு தொடர்புடையவை. ‘குடம்பை’ என்ற சொல், இருபது இடங்களில் பயின்று வருகிறது. ‘குடும்பு’ எனும் சொல் கூடி வாழுதல் என்று பொருள்படுகின்றது.

5. பக்தவச்சல பாரதி இயற்றியுள்ள நூல்கள் யாவை?

இலக்கிய மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், தமிழர் மானிடவியல், தமிழகப் பழங்குடிகள், பாணர் இனவரைவியல், தமிழர் உணவு உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment