2.4 முதல்கல்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12h Standard Tamil Lesson 2.4 – முதல்கல். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
நூல் வெளி
- உத்தம சோழன் (செல்வராஜ்) எழுதிய “முதல்கல்“ கதை பாடமாக உள்ளது. தஞ்சைச் சிறுகதைகள் என்னும் தொகுப்பில் இது இடம் பெற்றுள்ளது.
- உத்தம சோழன் திருத்துறைப்பூண்டி அருகே தீவாம்மாள் புரத்தைச் சேர்ந்தவர்.
- மனிதத்தீவுகள், குருவி மறந்த வீடு உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளையும் தொலைதூர வெளிச்சம், கசக்கும் இனிமை, கனல்பூக்கள் உள்ளிட்ட புதினங்களையும் எழுதியுள்ளார்.
- “கிழக்கு வாசல் உதயம்“ என்ற திங்களிதழைக் கடந்த 12 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
பாடநூல் வினாக்கள்
பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்பு நலத்தை விவரிக்க.
முன்னுரை:-
உலக உயிர்களை வாழவைப்பது மழை. அந்த மழையை நாம் முறையாகப் பாதுகாக்காமல் சில உயிர்களையும், பயிர்களையும் நாசமாக்குகிறோம். அதைக் கண்டு மனம் நொந்து தனி மனிதனாக இருந்து தம் ஊரைப் பொறுப்புணர்ச்சியால் மாற்றிய மருதனின் பண்பு நலன்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
மழையின் கோரம்:-
‘வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்கிறது. நாற்றுப் பிடுங்கி, உரம்போட்டு நட்டு ஒரு வாரமே ஆன குழந்தை போல் காட்சியளித்த பயிர்கள் எல்லாம் மழையில் மூழ்கியது. உபரி நீர் வெளியேறவில்லை இப்படியே போனால் அழுகிவிடும் என்ன செய்வது என்று ஏங்கினான் மருதன்.
உபரிநீர் வெளியேற்றம்:-
காற்றையும், மழையையும் பொருட்படுத்தாமல் கரை வழியே வந்தான் . உபரித் தண்ணீர் வடிய வேண்டிய வடிகால் மதகை எட்டிப் பார்த்தான். மதகைச் சுற்றி மட்டுமல்லாமல் ஊரைச் சுற்றி எங்கு பாரத்தாலும் காடாய் மண்டிக் கிடந்த நெய்வேலி காட்டாமணக்குச் செடி தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கும்.
மருதனின் நல்யோசனை:-
மருதன் பயிர்கள் மூழ்காமலும் மொத் கிராமங்களும் தப்பிக்க நல்ல வழியை யோசித்தான். தன் உயிரைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தண்ணீரில் இறங்கி செடியை பிடுங்கி அரித்தான்.
மாரி வருதல்:-
மாரி இந்தச் சனியன் பிடிச்ச செடியாலதான் தண்ணி வடிய மாட்டேங்குது; நீ வாடா கொஞ்ச உதவி செய் என்றான் மருதன். அவன் மறுத்தை எண்ணி மருதன் கோபம் அடைந்தான்
மருதனின் ஆக்கம்:-
இப்படியே போனல் ஊரே நாற்றம் எடுத்துவிடும் என்று ஏக்கத்தோடு செடிகளை பிடிங்கிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த கிழவன் காளிப்பனிடம் கூறினான். அவர் பெரிய நிலக்கிழார் என்பதால் வீட்டு ஒருவர் வந்து செடிகளைப் பிடிங்கி பயிரையும், உயிரையும் காப்பாற்ற முடியும் என்று எண்ணி அவரிடமும் கூறினான், அவரும் பின் வாங்கினார். பிறகு பிரேம்குமாரைச் சந்தித்தான்; அவனும் பல காரணம் கூறிவிட்டு நகர்ந்தான்.
மருதனின் புலம்பல்:-
வீடு திரும்பிய மருதன் ஊருக்கு ஏற்படும் ஆபத்தை யாரிடமும் சொல்லி பலன் இல்லை. மன வலியால் துடித்தான் உண்ணவில்லை, உறங்கவில்லை. கவலை தோய்ந்த முகத்தோடு மீண்டும் இரவோடு இரவாக காட்டாமணக்கு செடி பிடுங்க கிளம்பினான்
அல்லி வருதல்:-
முடியை அள்ளிச் சொருகிக் கொண்டு வாய்க்காலை நோக்கி நடந்தாள் அல்லி தன்னந்தனியே தண்ணீரில் மருதன் படும்பாட்டைக் கண்டு திகைத்தாள். அவளை அறியாமலேயே புடவையை வரிந்துக்கட்டி வாய்க்காலில் இறங்கினாள்.
மாமா நீ சொல்றத நிஜம்தான். ஊரு நல்லா இருந்தாதான் நாம நல்லா இருக்க முடியும். நீயும் நானும் சேர்ந்து செய்வோம் என்று செய்தாள்.
ஊர் மக்கள் வரல்:-
நொடி நேரத்தில் ஊர் மிராசு காளியப்பன் வண்டியிலிருந்து குதித்து வேட்டியைக் கரையில் போட்டுவிட்ட வாய்க்காலிலி இறங்கினார். வண்டிக்காரன் மூலம் செய்தி பரவியது. ஊரே கூடி வாய்க்காலை நோக்கி ஓடியது.
முடிவுரை:-
“அழிவதூஉம் ஆவதூஉம் ஆரி வழிபயக்கம்
ஊதியமும் சூழ்ந்து செயல்”
என்பதற்கு ஏற்ப வாழும் ஊருக்கு எவ்விதத்திலாவது நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணி ஆராயந்து ஊரையே செயல்பட வைத்த மருதனின் பண்பு நலன் பாராட்டத்தக்கது.
2. புயல் தாக்கத்தினால் குடியிருப்புகளுக்கு அருகில் அறுந்துகிடக்கும் மின் இணைப்புகளைச் சரிசெய்யக் கோரி உங்கள் ஊர் மின்வாரியப் பொறியாளர்களுக்குக் கடிதம் எழுதுக.
அனுப்புனர்:-
ஊர்ப் பொது மக்கள்
மானூர்
திருநெல்வேலி மாவட்டம்
பெறுநர்:-
உயர்திரு மின்வாரியப் பொறியாளர்
மின்வாரிய அலுவலகம்
திருநெல்வேலி
ஐயா,
பொருள் : மின் இணைப்புகளைச் சரி செய்ய வேண்டுவது தொடர்பாக
வணக்கம்,
கடந்த மாதம் நான்காம் நாள் ஆலங்குளம் பகுதியில் வீசிய புயலால் மின் கம்பங்கள் முற்றிலும் சாயந்தன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மக்கள் மிகவும் துன்பத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இரவில் வெளியே செல்வதற்கு அச்சமாக இருக்கிறது. ஆதலால் அருள் கூர்ந்து அறுந்து கிடக்கும் மின்கம்பிகளைச் சரி செய்து மின் இணைப்புத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
ஊர் பொதுமக்கள்,
மானூர்
உறைமேல் முகவரி:-
உயர்திரு மின்வாரியப் பொறியாளர்
மின்வாரிய அலுவலகம்
திருநெல்வேலி
கற்பவை கற்றபின்
உங்கள் இல்லத்தில் நடைபெறும் திருமணவிழாவுக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு மரக்கன்று ஒன்று தருவதாக முடிவு செய்துள்ளீர்கள். மரக்கன்று வழங்கும் நோக்கங்களையும் அதனைப் பயிரிடுவதால் ஏற்படும் பொது நன்மைகளையும் கொண்ட இருபக்கச் சிற்றேட்டை உருவாக்குக.
மரக்கன்று வழங்குவதன் நோக்கம்:
- மரங்கள் அழிக்கப்பட்டு வரும் சூழல்களில் மரக்கன்றுகள் நடுவதற்கான எற்ற சூழலை உருவாக்குதல்.
- பழம், பட்சணம், வெற்றிலை போன்றவற்றைப் பையிலே போட்டுக் கொடுப்பதை விட மரக்கன்றகள் கொடுப்பது சாலச் சிறந்தது.
- சுற்றச்சூழலை நல்ல முறையில் அமைக்கவே மரக்கன்றுகள் வழங்குதல்.
பொதுநலன்:
- மரக்கன்றுகள் வளர்ப்பதால் நல்ல தூய காற்று கிடைக்கும்.
- கோடையில் நிழல் உருவாகும்.
- மரங்கள் மாசுக்களை கட்டுப்படுத்தும்.
- மரங்கள் குளிர்ச்சி தரும்.
- குளிர்ச்சியால் மழை உண்டாகும்.
- மழை பொழிந்தால் மண் மகள் சிலிர்ப்பாள்.
- மழையால் பயிர் வளம் பெருகும்.
- பயிர்வளத்தால் விவசாயம் பெருகும்.
- விவசாயம் பெருகினால் வீடுநலம் பெறும்.
- வீடு நலம் பெற்றால் நாடு தானே வளம் பெறும்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. செல்வராஜ் என இயற்பெயர் கொண்டவர்
- அழகிரிசாமி
- உத்தம சோழன்
- சுரதா
- பாரதி
விடை : உத்தம சோழன்
2. “முதல்கல்” சிறுகதையின் ஆசிரியர்
- புதுமைபித்தன்
- சுஜாதா
- ஜானகிராமன்
- உத்தமசோழன்
விடை : உத்தமசோழன்
3. கூற்று 1 : வீட்டுக்கு ஒரு ஆள் அரிவாள், மண்வெட்டியுடன் வடிவாய்க்கால் கரைக்கு வர வேண்டும்
கூற்று 2 : நீ சொல்வதை நிஜம்தான் மாமா. ஊர் நன்றாக இருந்தால்தான் நாமும் நன்றாக இருக்கலாம்.
- கூற்று இரண்டும் சரி
- கூற்று இரண்டும் தவறு
- கூற்று 1 சரி
- கூற்று 2 சரி
விடை : கூற்று இரண்டும் சரி
4. கூற்று 1 : “இவ்வளவு நீீளம் மண்டி கிடக்கும் செடிகளை அரிந்து எறிவது லேசான காரியமா?”
கூற்று 2 : ஊர்காரர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்தால், ஒரே நாளில் வாய்க்காலும் தூய்மையாகிவிடும்.
- கூற்று இரண்டும் தவறு
- கூற்று 1 சரி
- கூற்று 2 சரி
- கூற்று இரண்டும் சரி
விடை : கூற்று இரண்டும் சரி
5. தஞ்சைச் சிறுகதைகள் என்னும் தொகுப்பினுக்கு உரியவர்
- சோலை சுந்தரப் பெருமாள்
- செல்வராஜ்
- மேலாண்மை பொன்னுசாமி
- செல்லத்துரை
விடை : சோலை சுந்தரப் பெருமாள்
6. உத்தம சோழனின் ஊர்
- திருநெல்வேலி அருகே மாறாந்தை
- தென்காசி அருகே குற்றாலம்
- நாகர்கோவிலின் அஞ்சுகிராமம்
- திருத்துறைப்பூண்டி அருகே தீவாம்மாள்புரம்
விடை : திருத்துறைப்பூண்டி அருகே தீவாம்மாள்புரம்
7. மனிதத்தீவுகள், குருவி மறந்த வீடு உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர்
- புதுமைபித்தன்
- சுஜாதா
- ஜானகிராமன்
- உத்தமசோழன்
விடை : உத்தமசோழன்
8. உத்தமசோழன் எழுதாத சிறுகதையைக் கண்டறிக
- தொலைதூர வெளிச்சம்
- கசக்கும் இனிமை
- காவல்கோட்டம்
- கனல்பூக்கள்
விடை : காவல்கோட்டம்
9. முதல்கல் கதையில் பிரேம்குமாருக்கு பெற்றோர் இட்ட பெயர்
- அமாவாசை
- பிச்சைமுத்து
- இருளாண்டி
- நாகூர்பிச்சை
விடை : நாகூர்பிச்சை
10. கிழக்கு வாசல் உதயம் என்ற திங்களிதழை உத்தம சோழன் எத்தனை ஆண்டுகளாக நடத்தி வருகிறார்
- 12 ஆண்டுகள்
- 11 ஆண்டுகள்
- 13 ஆண்டுகள்
- 10 ஆண்டுகள்
விடை : 12 ஆண்டுகள்
சிறு வினா
உத்தசோழன் – சிறுகுறிப்பு வரைக
- உத்தம சோழன் திருத்தறைப்பூண்டி அருகே தீவம்மாள்புரத்தைச் சேர்ந்தவர்.
- மனித்தீவுகள், குருவி மறந்த வீடு உள்ளிட்ட சிறுகதை தொகுப்புகளை எழுதியுள்ளர்.
- தொலைதூர வெளிச்சம், கசக்கும் இனிமை, கனல்பூக்கள் உள்ளிட்ட புதினங்களையும் எழுதியுள்ளார்.
- கடந்த 12 வருடங்களாக “கிழக்கு வாசல் உதயம்” என்ற திங்களிதழை நடத்தி வருகிறார்.
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…