2.2 பிறகொரு நாள் கோடை
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12h Standard Tamil Lesson 2.2 – பிறகொரு நாள் கோடை. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
நூல் வெளி
- “பிறகொரு நாள் கோடை” இக்கவிதை “அய்யப்ப மாதவன் கவிதைகள்” என்னும் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
- சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்தவர் கவிஞர் அய்யப்ப மாதவன்;
- இதழியல் துறை, திரைத்துறை சார்ந்து இயங்கி வருபவர்;
- “இன்று” என்ற கவிதைக் குறும்படத்தையும் மழைக்குப் பிறகும் மழை, நானென்பது வேறொருவன், நீர்வெளி முதலான கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது
- சூரிய ஒளிக்கதிர்
- மழை மேகங்கள்
- மழைத்துளிகள்
- நீர்நிலைகள்
விடை : மழைத்துளிகள்
குறு வினா
‘நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது’ – விளக்கம் தருக.
- மழை மேகத்தால் நகரம் இருள் சூழந்தது. பெய்யென மழை பெய்தது.
- திடீரென சூரியன் தோன்ற மழைமேகத்தால் மறைந்திருந்த நகரம் பிரகாசமாய்க் காட்சியளிக்கிறது.
- சில மழைத்துளிகளின் மீது படுகின்ற சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பால் நகரமே வெள்ளை வைரமாகக் காட்சியளிக்கிறது.
சிறு வினா
“நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து
உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்’ – இக்கவிதையின் அடி,
‘தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே’ என்னும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவதைப் பற்றி எழுதுக.
தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே:-
- ஏற்றம் இறைப்பவர்கள் அலுப்புத் தெரியாமல் இருக்க பாடும் பாடல்களில் இதுவும் ஒன்று.
- விடியும் போது மூங்கில் இலை நுனியில் ஒரு சொட்டு பனிநீர் வைரம் வைத்தது போல் இருக்கும். சூரியனின் ஒளிக்கதிர்கள் அந்த ஒரு துளி நீரையும் விட்டு வைக்காமல் தானே எடுத்துக் கொள்வான்.
- அதிகாலையில் மூங்கில் இலையில் இருக்கும் பனிநீரை மீண்டும் சூரியன் வாங்கிக் கொள்கிறான்
“நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து
உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்’
- நீர் நிலைகளை வந்தடையும் மழை நீரைச் சூரியன் தன் ஒளிக்கதிர் என்ற உதடுகளால் உறிஞ்சுகிறான்.
- வானில் இருந்து விழும் மழை நீரை மீண்டும் வானுக்கே எடுத்துக் கொள்கிறான் சூரியன். இது ஒரு நீர் வட்டம்.
நயம்:-
- நாட்டுப்புறப் பாடலில் ஒரு துளி பனிநீரைக் கூட சூரியன் விடுவதில்லை; தன் ஒளிக்கதிர்களால் எடுத்துக் கொள்கிறான் எனக் குறிப்பிடுகிறது.
- “பிறகொரு நாள் கோடை” கவிதையில் கவிஞர் மழையாக வந்து நீர்நிலைகளை நிரப்பு நீரைத் தன் கதிர்களால் இதழ் குவித்து உறிஞ்சுகிறது சூரியன் என்கிறார்.
- பனித்துளியை வாங்கிக் கொண்டான் கதிரவன் – நாட்டுப்புறப்பாடல்.
- நீர்நிலை மழைத்துளிகளை உறிஞ்சுக் கொண்டான் கதிரவன் – பிறகு ஒரு நாள் கோடை.
கற்பவை கற்றபின்
‘மழை’ தொடர்பான கவிதைகளைத் தொகுத்து இதழ் ஒன்று உருவாக்குக.
ஒரு மழைத்துளி
யாருமில்லா பெருவெளியில்
ஒற்றை மழைத் துளி!
ஒரே ஒரு பூவின்
இதழின் இடைவெளியில்
உட்புகுந்து
வெளியேறம் தருணத்தில்!
எங்கிருந்தோ வந்த
வண்டொன்று
துளியின் மிச்சத்தையும்
துடைத் தெரிந்தது.
மழை
வானம் மனம் குளிர்ந்து
தன் நேசமான உறவான
பூமிக்கு பரிசாக அளிக்கும்
அதிசய விந்தையே
“மழை”
அழகு மழை
மழை அழகு!
மழையில் நனைவது அழகு!
மழையின் ஊடே வெயில் அழகு!
மழையில் குழந்தையின் காகித கப்பல் அழகு!
மழைக்குப் பின் மண் வாசனை அழகு!
மழை இரவின் குளிர் அழகு!
அடுத்த நாள் பெய்யும் மழையும் அழகு!
மழை பெய்கிறது
எல்லோருக்கும்
பொதுவாகத்தான் பெய்கிறது
மழை…
சிலர் நனைகிறார்கள்!
சிலர் குடை பிடிக்கிறார்கள்!
சிலர் ஒளிகிறார்கள்!
ஆனால்….
குழந்தைகள் மட்டுமே
அம்மாவின் பிடியிலிருந்து விலகி
மழையில்
நனைகிறார்கள்.
கூடுதல் வினாக்கள்
இலக்கணக்குறிப்பு
- காய்கிறது, உறிஞ்சுகிறது, உதறுகிறது, தோய்கிறது, விடுபடுகிறது – படக்கை ஒன்றன்பால் வினைமுற்றுகள்
- இசைக்கின்றன – படக்கை பலவின்பால் வினைமுற்று
- இருக்கிறேன், அலைகிறேன் – தன்மை ஒருமை நிகழ்கால வினைமுற்றுகள்
- நனைந்து, குதித்து, அசைந்து, ஏந்தி – வினையெச்சங்கள்
- இருந்த, தீட்டிய, அழிந்த, இறங்கிய, வாங்கிய, போன – பெயரெச்சங்கள்
உறுப்பிலக்கணம்
1. அசைத்து = அசை + த் + த் + உ
- அசை – பகுதி
- த் – சந்தி ;
- த் – இறந்தகால இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி.
2. உதறுகிறது = உதறு + கிறு + அ + து
- உதறு – பகுதி ;
- கிறு – நிகழ்கால இடைநிலை
- அ – சாரியை
- து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி.
3. அலைகிறேன் = அலை + கிறு + ஏன்
- அலை – பகுதி
- கிறு- நிகழ்கால இடைநிலை
- ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.
புணர்ச்சி விதி
1. தலையசைத்து = தலை + அசைத்து
- “இஈஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி “தலை + ய் + அசைத்து” என்றாயிற்று
- “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “தலையசைத்து” என்றாயிற்று
2. வீட்டுச்சுவர் = வீடு + சுவர்
- “நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்கள் டறஒற்று இரட்டும்” என்ற விதிப்படி “வீட்டு + சுவர்” என்றாயிற்று
- “வன்றொடர்க் குற்றிய லுகரத்தின் முன் வலிமிகும்” என்ற விதிப்படி “வீட்டுச்சுவர்” என்றாயிற்று
பலவுள் தெரிக
1. நம் பாடப்பகுதி எடுக்கபட்டுள்ள தொகுப்பு
- அய்யப்ப மாதவன் கவிதைகள்
- மழைக்க்குப் பிறகு மழை
- பிறகொரு நாள் கோடை
- நீர்வெளி
விடை : அய்யப்ப மாதவன் கவிதைகள்
குறு வினா
1. அய்யப்ப மாதவன் வெளியிட்டுள்ள கவிதை நூல்கள் யாவை?
மழைக்குப் பிறகு மழை, நானென்பது வேறொருவன், நீர்வெளி
2. ஒளிக்கதிர் எதனை உறிஞ்சுகிறது?
ஒளிக்கதிர் உதடுகளைக் குவித்து நீர்நிலைகளிலிருந்து மழை பெய்தால், தேங்கிய நீரை உறிஞ்சுகிறது.
3. எதனால் வருத்தம் தோய்கிறது?
பெய்த மழையால் சுவர் எங்கும் இருந்த நீர்ச்சுவடுகள், அழிந்து மாய்ந்ததில் தோய்கிறது.
4. கவிஞர் அய்யப்ப மாதவன் – குறிப்பு வரைக
- சிவகங்கை மாவட்டத்தின் நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்தவர்
- இதழியல் துறை, திரைத்துறை, சார்ந்து இயங்கி வருபவர்
“இன்று” என்ற கவிதைக் குறும்படத்தையும் மழைக்குப் பிறகு மழை, நானென்பது வேறொருவன், நீர்வெளி முதலான கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…