1.4 தம்பி நெல்லையப்பருக்கு
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12h Standard Tamil Lesson 1.4 – தம்பி நெல்லையப்பருக்கு. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
தெரியுமா?
- பரலி சு. நெல்லையப்பர் விடுதலைப் போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், பதிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர்.
- பாரதியின் கண்ணன் பாட்டு, நாட்டுப்பாட்டு, பாப்பாப்பாட்டு, முரசுப்பாட்டு ஆகியவற்றைப் பதிப்பித்தவர்.
- பாரதி நடத்திய சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் லோகோபகாரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் பிறகு ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
- இவர் நெல்லைத்தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல்களையும் வ.உ. சிதம்பரனாரின் வா ழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.
நூல்வெளி
- மகாகவி பாரதி நெல்லையப்பருக்கு எழுதிய இக்கடிதம் ரா.அ. பத்மநாபன் பதிப்பித்த ‘பாரதி கடிதங்கள்’ என்னும் நூலில் இடம்பெற்றிருக்கிறது.
- பாரதி, பதினைந்து வயதில் கல்வி கற்க உதவி வேண்டி எட்டயபுரம் அரசருக்கு எழுதிய கவிதைக் கடிதம் முதல் அவர்தம் மறைவிற்கு முன்னர் குத்திகேசவருக்கு எழுதிய கடிதம் வரை அனைத்தும் நம்மிடம் பேசுவதுபோல இருப்பதே அவருடைய நடையழகின் சிறப்பு.
- பாரதியாரை விட ஏழாண்டுகள் இளையவரான பரலி சு. நெல்லையப்பரைப் பாரதி தன்னுடைய அருமைத் தம்பியாகவே கருதி அன்புகாட்டி வந்தார்.
- பாரதியின் கடிதங்கள் மேலும் அவரை நன்றாகப் புரிந்துகொள்ளத் துணைபுரிகின
பாடநூல் வினாக்கள்
நெடு வினா
பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்துகொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.
மொழிப்பற்று:-
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதான மொழி எதுவுமில்லை என்று கூறிய பாரதி, சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்திலும் அதனை உறுதிபடுத்துகின்றார். நெல்லையப்பரிடம் அவர் கூறும்போது, “நீ பிற மொழிகளை அறிந்திருந்தாலும், தமிழை வளர்ப்பதை கடமையாகக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார். புதிய, புதிய செய்திகளும் புதிய புதிய உண்மைகளும், புதிய புதிய இன்பமும் தமிழ்மொழியில் ஏற்றம் பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் வீதிகள் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் பெருக வேண்டும். அந்தப் பள்ளிகளில் எல்லாம் புதிய புதிய கலைகள் பயிற்சி பெற்று வளர வேண்டும். தாய்மொழியிலே கற்பதால் புதிய தமிழ் உணர்வு அதிகமாகும். தாய்நாட்டின் மீது பற்று ஏற்படும், வடநாட்டு மொழிகள் எல்லாம் அடைந்துள்ள வளர்ச்சியை பார்த்த பின்பாவது நாம் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் மீது பற்றுக் கொள் முயல வேண்டும். புதிய புதிய சிந்தனைகள் தமிழ்மொழியல் தோன்றல் வேண்டும் என்கிறார்.
சமூகப்பற்று:-
சமூகத்தின் அவலமாக இருக்கின்ற ஆண் பெண் வேறுபாடு முற்றிலுமாக அழிய வேண்டும். ஆண் உயர்ந்தவன் பெண் அடிமை என்ற நிலை சமூக அவலமாகும். அந்நிலை மாறவே ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள்; அவற்றில் ஒன்றிலொன்று தாழ்வில்லை என்கிறார். பெண்ணைத் தாழ்த்தினால் சமூகமே சாபக்கேட்டிற்குள்ளாகும் என்பதை உணர்த்த பெண்தை தாழ்த்தினவன், தன் கண்ணை குத்தியவனுக்கு சமம் என்ற ஆவேசத்துடன் கூறுகின்னாறர். பெண்ணை வீட்டிற்குள் அடைத்தவன் தன் கண்ணை இழந்த குருடன் போலப் பரிதவிப்பான் என்றும் கூறி, ஆணும், பெண்ணும் சமம் என்ற சமூக நீதியை வலியுறுத்துகின்றார்.
சமூகம் வளர்ச்சி அடைய தொழில் பெருக வேண்டும். வியாபாரம் சிறக்க வேண்டும். தொழிற்சாலைகள் வளர வேண்டும் என்கிறார் சமூக மாற்றம் காண சங்கீதம், சிற்பம், இயந்திரம், பூமி, வானம், இயற்கை சார்ந்த நூல்கள் ஆயிரம் ஆயிரமாகத் தாய்மொழியல் உருவாகிட வேண்டும். அதனைக் கற்று நம் தமிழ்ச்சமூகம் மாற்றம் பெற அனைவரும் எண்ணிட வேண்டும். அதற்குரிய சக்தியை அனைவரும் பெற்றிடவும் வேண்டுமென்று பாரதியார் சு. நெல்லையப்பருக்கு கடிதம் மூலம் தன் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துகின்றார்.
2. ‘சொல்லோவியங்கள்’ என்னும் கவிதை நூல் உங்கள் பள்ளி ஆசிரியரால் எழுதப்பட்டு உங்கள் பள்ளியில் வெளியிடப்படுகிறது. அவ்வெளியீட்டு விழாவிற்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்கி, நன்றியுரை எழுதுக.
சொல்லோவியங்கள்கவிதை நூல் வெளியீட்டு விழா
நன்றியுரை “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல என்ற வள்ளுவனின் வாய்மொழிக்கு ஏற்ப எனக்கு வாய்ப்பளித்த நல்ல உள்ளங்களுக்கு மாலை வணக்கம். எப்பொழுதெல்லாம் நம் பேனா தலை குனிகிறதோ அப்பொழுதெல்லாம் நீ வாழ்வில் தலை நிமிர்வாய் என்றபடி தன் பேனாவை தலைகுனிய வைத்து இந்த அவையில் தலை நிமிர்ந்து இருக்கும் தமிழாசியருக்கு நன்றி. இவர் சொல்லாவியங்கள் என்ற கவிதை நூலை அகுபட செதுக்கியுள்ளார். இவர் செலுத்தியதை வர்ணம் தீட்டி குடமுழுக்கு விழா செய்து நம் கைகளில் தவழந்து கொண்டிருக்கும் நூலை வெளியிட்டு வாழ்த்துறை வழங்கிய மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு நன்றி. இவ்வுலகில் பிறந்து இறந்து எவ்வித அறிமுகமும் இல்லாமல் செல்கின்றனர். அதற்கு மாறாக பிறையை தலையிலே சூடிய சிவனைப் போல் இவ்விழாவிற்கு வருகைதந்து நூல் அறிமுகவுரை தந்த ஐயா ஐயாத்துரை அவர்களுக்கு நன்றி. எந்த ஒரு செயலும் இன்றே தொடங்க இறையருள் தேவை அதோடு செல்வமும் தேவை என்பதற்கு ஏற்ப செல்வத்தின் நாயகனாம் தொழிலதிபர் சங்கரலிங்கம் அவர்களின் கரங்களால் முதல் பிரதியை பெற்று துவங்கி வைத்தமைக்கு நன்றி. இவ்விழா நடைபெற முழு காரணமாக விளங்கிய தலைமை ஆசிரியர், ஆசிரிய நண்பர்கள், மாணவர்கள், ஏனைய உறவுகளுக்கு விழாக்குழு மூலம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். |
கற்பவை கற்றபின்
1. பாரதியின் வாழ்வினை காலக்கோடாக உருவாக்குக
2. காலத்தை வென்ற மகாகவியான பாரதிக்குக் கற்பனைக்கடிதம் ஒன்றினை எழுதுக.
தூத்துக்குடி
18 ஜூலை 2019
முறுக்கிய மீசையும் முறைத்த பார்வையும், முண்டாசுக் கட்டுக்கும் சொந்தக்காரனே செந்தமிழின் எழுச்சியே வணக்கம்.
உனது பொன் எழுத்துக்களால் தமிழ் அன்னைக்கு வைரக்கீரிடம் சூட்டி மகிழ்ந்தாய்.
ஆனால் கடைசி வரை சாதாரண தலைப்பாகையினை நீ அணிந்திருந்தாய் என எத்தனைப் பேருக்குத் தெரியும்.
பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பாப்பா. மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என்று பாடினாயே பாரதி. இன்றைய பாலியல் வன்கொடுமையை முன்னரே சாடினாயே பாரதி.
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கைப் பெற்று விட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்று சுதந்திரத்தின் மேன்மையை மக்களின் மனதில் கெடியேற்றி வைத்தவன் நீ.
தமிழில் ஓர் எழுத்துதான் ஆய்த எழுத்த. ஆனால் மற்ற 246 எழுத்துகளையும் ஆயுதமாக்கி வெள்ளையனை விரட்ட விடுதலைக் கவிகளைப் பாடி வேங்கையென விரட்டியவன் நீ.
என் உள்ளமெனும் பெருங்கோவிலில் வீற்றிருக்கிறாய், என்றொரு நாளாவது உன்னோடு ஒரே மேடையில் கவிபாட நான் விரும்புகிறேன்.
நீவிர் சம்மதித்தால் வருகின்ற தமிழ்ப்புத்தாண்டு அன்று நாம் இருவரும் “தமிழே! உனக்குத் தலை வணங்குகிறோம்” என்ற தலைப்பில் ஒரு கவிதையை பெதிகை தொலைகாட்சியல் பாடுவோம். உன் பதிலை உடன் எதிர்பார்க்கும் அன்பு நண்பன்.
இப்படிக்கு
பாரதிநேசன்
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. கருத்து 1 : ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள் என்றார் பாரதி.
கருத்து 2 : பரலி. சு.நெல்லையப்பர் பாரதியின் பாப்பாபாட்டைப் பதித்தவர்.
- இரண்டும் தவறு
- இரண்டும் சரி
- கருத்து 1 சரி
- கருத்து 2 சரி
விடை : இரண்டும் தவறு
2. பாரதியார் நெல்லையப்பருக்கு எழுதிய கடிதங்களைப் பதிப்பித்தவர்
- இளசைமணி
- கி.ராஜநாரயணன்
- ரா.அ.பத்மநாபன்
- கவிகேசரி சாமி தீட்சிதர்
விடை : ரா.அ.பத்மநாபன்
3. பாரதி நெல்லையப்பருக்கு கடிதம் எழுதிய இடம்
- நெல்லை
- கடலூர்
- காரைக்கால்
- புதுச்சேரி
விடை : புதுச்சேரி
4. பாரதி நெல்லையப்பருக்கு கடிதம் எழுதியநாள்
- 14 ஜூலை 1914
- 19 ஜூலை 1915
- 18 ஆகஸ்ட் 1914
- 18 ஆகஸ்ட் 1915
விடை : 19 ஜூலை 1915
5. நெல்லையப்பர் எதனை கடமையாகக் கொள்ள வேண்டும் என்று பாரதி கூறுகிறார்?
- பெற்றோர் காப்பதை
- விடுதலைக்கு போராடுவதை
- தமிழ் வளர்ப்பதை
- சமூக இழிவை களைவதை
விடை : தமிழ் வளர்ப்பதை
6. நெல்லையப்பரை யார் காத்திட வேண்டும் என்கிறார் பாரதியார் ____________
- விநாயகர்
- முருகன்
- ஐயப்பன்
- பராசக்தி
விடை : பராசக்தி
7. “தம்பி-உள்ளமே உலகம்” என்ற யார் யாருக்கு கூறியது?
- பாரதி, நெல்லையப்பருக்கு
- அண்ணா, கலைஞருக்கு
- மு.வ. இளைஞர்களக்கு
- திரு.வி.க. தமிழர்களுக்கு
விடை : பாரதி, நெல்லையப்பருக்கு
8. உனக்குச் சிறகுகள் தோன்றக. பறந்த போ-என்பதில் “உனக்கு” என்பது யாரை எதைக் குறிக்கிறது?
- தமிழை
- குயிலை
- இளைஞர்களை
- நெல்லையப்பரை
விடை : நெல்லையப்பரை
9. நெல்லையப்பரைப் பாரதி _________ என்று கூவு என்கிறார்
- தொழில்கள் தொழில்கள்
- வாழ்க வாழ்க
- மனிதர்கள் மனிதர்கள்
- வெல்க வெல்க
விடை : தொழில்கள் தொழில்கள்
10. நெல்லைத்தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல்களை எழுதியர்
- சீனி.விசுவநாதன்
- நெல்லையப்பர்
- இளசை சுந்தரம்
- இளசை மணி
விடை : நெல்லையப்பர்
11. பாரதியின் பல்வேறு பாட்டுகளைப் பதிப்பித்தவர்
- சீனி.விசுவநாதன்
- இளசை சுந்தரம்
- இளசை மணி
- நெல்லையப்பர்
விடை : நெல்லையப்பர்
12. வம்சமணி தீபிகை என்னும் நூலை எழுதியவர்
- கவிகேசரி சாமி தீட்சிதர்
- முத்து சாமி தீட்சிதர்
- இசைமணி
- சீனி விசுவநாதன்
விடை : கவிகேசரி சாமி தீட்சிதர்
13. “சூரியோதயம், கர்மயோகி” ஆகிய இதழ்களில் துணையாசிரியராக இருந்தவர்
- இளசைமணி
- கி.ராஜநாரயணன்
- ரா.அ.பத்மநாபன்
- நெல்லையப்பர்
விடை : நெல்லையப்பர்
14. பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது – என்று கடிதம் எழுதியவர்
- இளசைமணி
- பாரதியார்
- ரா.அ.பத்மநாபன்
- நெல்லையப்பர்
விடை : பாரதியார்
15. பாரதி நடத்திய இதழ்களில் துணையாசிரியராக இருந்தவர் _________
- கண்ணதாசன்
- பாரதியார்
- ரா.அ.பத்மநாபன்
- நெல்லையப்பர்
விடை : கண்ணதாசன்
16. பாரதி கடைசிக்கடிதம் _________ எழுதப்பட்டது
- எட்டயபுரம் அரசருக்கு
- நெல்லையப்பருக்கு
- குந்திகேசவருக்கு
- சீனி.விஸ்வாநனுக்கு
விடை : கண்ணதாசன்
17. வ.உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் _________
- கண்ணதாசன்
- பாரதிதாசன்
- நெல்லையப்பர்
- சீனி.விசுவநாதன்
விடை : நெல்லையப்பர்
குறு வினா
1. பரலி சு.நெல்லையப்பரின் பன்முகத் தன்மைகள் யாவை?
விடுதலைப் போராட்ட வீரர், கவிஞர், ஏழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், பதிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர்.
2. பரலி சு.நெல்லையப்பர் பதிப்பித்த நூல்கள் யாவை?
பாரதியின் கண்ணன் பாட்டு, நாட்டுப்பாட்டு, பாப்பாபாட்டு, முரசுப்பாட்டு ஆகியவற்றைப் பதிப்பித்தவர்.
3. பரலி சு.நெல்லையப்பர் படைத்த நூல்கள் எவை?
இவர் நெல்லைத்தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல்களையும் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…