7.4 சிந்தனை பட்டிமன்றம்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 11th Standard Tamil Lesson 7.4 – சிந்தனை பட்டிமன்றம். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
பாடநூல் வினாக்கள்
நெடு வினா
சிந்தனைப் பட்டிமன்றத்தின் நிகழ்வுகளைச் சுவை குன்றாமல் தொகுத்து எழுதுக
சிந்தனைப் பட்டிமன்றத்தின் நிகழ்வுகள்:-
அரசு மேல்நிலைப்பள்ளியில் இளைஞர்களை முதன்மைப்படுத்தி, “இளைஞர்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவுவது வீடா? நாடா? என்னும் தலைப்பின் பட்டிமன்றம் நடைபெற்றது.
மொத்த மக்கள் தொகையில், சரிபாதியாக உள்ள இளைஞர்களின் துணையின்றி நாடு வளர்ச்சி பெற முடியாது என்பதை எடுத்துரைத் நடுவர், “இளைஞர் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவுவது வீடே எனப் பேச எழிலை அழைத்தார்.
இளையோர் முன்னேற்றத்தில் பெரிதும் உதவுவது வீடே:-
இளையோர் முன்னேற்றத்தில் முதல்படி வீடு. பிறக்கும் குழந்தைக்கு உலகை அறிமுகப்படுத்துவது வீடு. அன்பையும், அறிவையும் உணர்த்தி அடித்தளமிட்டு, வெற்றிகளை கட்டி எழுப்ப உதவுவது வீடு.
“எத்தனை உயரம் இமயமலை! அதில் இன்னொரு சிகரம் உனது தலை” என்பதை வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் உணர வைப்பது! வீடே எனவே, இளையோர் முன்னேற்றத்தின் முகமும் அகமுமாக அமைவது வீடே எனத் தீர்ப்பு வழங்குமாறு வேண்டிக் கொண்டு, எழில் தன் உரையை முன் வைத்தாள்.
வீடு அன்று நாடே:-
நடுவர் அழைப்பை ஏற்று, அடுத்ததாகத் தன் கருத்தோட்டத்தைக் கூற வந்த எலிசபெத், தனக்கு வீட்டினுள்ளே உலகை அறிமுகப்படுத்தி பெற்றோரைப் போற்றி உரையைத் தொடங்கினார்.
சிறு கூடு அன்று வீடு! நம் பண்பாட்டையும், மரபையும் காத்து நிற்கும் கருவூலம்! எத்தேடலுக்கும் தலைவாசல்! அறிவின் நாற்றாங்கால்!
வீட்டில் கேட்ட தாலாட்டும், நுங்கு தின்றது, பனையோலைக் காற்றாடி செய்யப் பழகியது எனப் பிள்ளைப் பருவ நிகழ்ச்சிகள், வளமான பல நெறிகளைக் கற்பித்து வீடே என்பதை நினைவில் கொண்டு, தீர்ப்பு வழங்குமாறு எலிசபெத் தன் உரையை முடித்தாள்.
பெண்களுக்கு விடியலைத் தந்தது பள்ளி:-
விடியலுக்கான வெளிச்சமாக உரையாற்ற வருமாறு அமுதாவை நடுவர் அழைத்தார். நாட்டு நலனைப் புதிய தடத்தில் வழி நடத்தக் கற்றுக் கொடுத்த முண்டாசுக் கவிஞனை வணங்கி, அமுதா தன் உரையைத் தொடங்கினாள்
வீடு பெண்களுக்குத் தங்கக் கம்பிகளால் செய்யப்பட்ட் கூடுதான். பள்ளிக்கு வந்தபின் தான் “பெண்மை வெல்க” எனக் கூத்திட முடிந்தது. இன்று விஞ்ஞானிக்களாக, கல்வியாளர்களாக, கவிஞர்களாகப் பெண்கள் கம்பீரமாக நடைபோட நாடே காரணம். நாடே இளையோரை நம்பிக்கையோடு வழி நடத்துகிறது. எதிர்காலம் வளமாகத் துணை புரிகிறது. எனத் தன் வாதங்களை முன் வைத்தாள்.
இரு பக்க வாதங்களையும் சீர்தூக்கி ஆராய்ந்த நடுவர் “ஆண் பெண் சமத்துவச் சிந்தனை, பேதங்களை கடந்த தோழமை, கல்வி சார்ந்த உயர்ந்த காருத்துகள் என எல்லாவற்றையும் வழங்கி முழுமையான முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவது நாடே!” என்று தீர்ப்பு வழங்கினார்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைகளுக்கம் __________ முதல் பாடப்புத்தகம்
- தந்தைமுகம்
- தாய்முகம்
- தமக்கைமுகம்
- தங்கைமுகம்
விடை : தாய்முகம்
2. கற்றல் என்பதை __________ தொடர்கிறார்
- தாய்
- அண்ணன்
- தங்கை
- தந்தை
விடை : தந்தை
3. எட்டயப்புரத்து இளம்புயல் ________
- பாரதியார்
- சுரதா
- கண்ணதாசன்
- கவிஞர் வாலி
விடை : பாரதியார்
சிறு வினா
1. இளமை என்றால் என்ன?
இளமை என்றாலே அறிவு, துணிவு ஆகிய இரண்டின் கலவை எனலாம் அறிவூக்கத்திற்கும் படைப் பூக்கத்திற்கும் அடித்தளமிடப்படும் பருவம் இது.
2. இல்லம் எதற்கெல்லாம் அடித்தளமாக விளங்குகிறது?
இளஞைர்களின் முன்னேற்றப் பாதையில் முதல் படிக்கல்லாகவும் அவர்கள் கொடுமுடியைத் தொடுவதற்கு அடித்தளமாகவும் விளங்குவது இல்லம்தானே.
3. பட்டிமன்றம் எவற்றையெல்லாம் வளர்த்தெடுக்கிறது?
பண்பட்ட முறையில் கருத்துகளை முன் வைத்து பேசுகையில் சிந்தனையாற்றலையும், பேச்சுத்திறனையும், மொழியாளுமையையும் வளர்த்தெடுக்கிறது.
4. “பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்” என்ற தொடர் இடம் பெற்றுள்ள நூல் எது?
மணிமேகலைக் காப்பியம்
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…