5.3 அகநானூறு
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 11th Standard Tamil Lesson 5.3 – அகநானூறு. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
நூல்வெளி
- அகநானூறு 145 புலவர்கள் பாடல்களின் தொகுப்பாகும்.
- (அகம் + நான்கு + நூறு = அகநானூறு) அகப்பொருள் குறித்த நானூறு பாக்களை கொண்ட தொகுப்பாகும்.
- களிற்றியானை நிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை என்று மூன்று பிரிவுகளை கொண்டது.
- இதனை அகம், நெடுந்தொகை எனக் கூறுவர்
- நெடுந்தொகை நானூறு என்ற பெயரும் உண்டு.
- இந்நூலின் தொகுப்பு முறையில் ஓர் ஒழுங்கு உண்டு.
- வீரை வெளியன் தித்தனார் பாடிய ஒரேயொரு பாடல் பாடப்பதியாக இடம் பெற்றுள்ளது.
திணை | பாடல் வரிசை | எண்ணிக்கை |
பாலை | 1, 3, 5, 7… | 200 |
குறிஞ்சி | 2, 8, 12, 18… | 80 |
முல்லை | 4, 14, 24, 34… | 40 |
மருதம் | 6, 16, 26, 36… | 40 |
நெய்தல் | 0, 20, 30, 40… | 40 |
சொல்லும் பொருளும்
- கொண்மூ – மேகம்
- சமம் – போர்
- விசும்பு – வானம்
- அரவம் – ஆரவாரம்
- ஆயம் – சுற்றம்
- தழலை, தட்டை – பறவைகள் ஓட்டும் கருவிகள்
இலக்கணக்குறிப்பு
- அருஞ்சருமம் – பண்புத்தொகை
- வளைஇ, அசைஇ – சொல்லிசை அளபெடைகள்
- எறிவாள் – வினைத்தொகை
- அறன் (அறம்), திறன் (திறம்) – ஈற்றுப்போலி
- பிழையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
பாடநூல் வினாக்கள்
குறு வினா
1. நெருங்கின, இரங்கி – உறுப்பிலக்கணம் தருக
நெருங்கின = நெருங்கு + இன் + அ
- நெருங்கு – பகுதி
- இன் – இறந்தகால இடைநிலை
- அ – பெயரெச்ச விகுதி
இரங்கி = இரங்கு + இ
- இரங்கு – பகுதி
- இ – வினையெச்ச விகுதி
சிறு வினா
1. மேகத்திடம் கூறுவது போலத் தோழி தலைவனுக்கு உணர்த்திய இறைச்சி பொருள் யாது
- மேகத்திடம் கூறுவது போலத் தோழி தலைவனுக்குக் குறியிடம் சொல்கிறாள்.
- வேங்கைமலர் அணிந்து தலைவி, தோழியருடன் தழலை, தட்டை என்னும் கருவிகளைக் கொண்டு ஒலியெழுப்பிப் பறவைகளை ஒட்டிக்கொண்டு தினைப்புனம் காக்கின்றாள்.
- அங்கே மழை பொழிவாயக என்று மேகத்திடம் கூறுவதுபோல், தோழி குறிப்பால் உணர்த்துகிறாள்.
- இதில் உணர்த்தப்படும் இறைச்சிப் பொருளாளவது, தலைவி தினப்புனம் காக்கும் இடத்துக்குத் தலைவன் சென்று சந்திக்கலாம் என்பதாகும்.
கூடுதல் வினாக்கள்
இலக்கணக்குறிப்பு
- பெருங்கடல் – பண்புத்தொகை
- முகந்த, எதிர்ந்த, மலர்ந்த, பொலிந்த – பெயரெச்சங்கள்
- அறிமன்னர், உயர்விசும்பு – வினைத்தொகைகள்
- வாழிய – வியங்கேளா வினை முற்று
பகுபத உறுப்பிலக்கணம்
1. இரங்கி = இரங்கு + இ
- இரங்கு – பகுதி
- இ – வினையெச்ச விகுதி
2. மலர்ந்த = மலர் + த்(ந்) + த் + அ
- மலர் – பகுதி
- த் – சந்தி
- ந்- ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- அ – பெயரெச்ச விகுதி
3. பொலிந்த = பொலி + த்(ந்) + த் + அ
- பொலி – பகுதி
- த் – சந்தி
- ந்- ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- அ – பெயரெச்ச விகுதி
4. புரிந்து = புரி + த்(ந்) + த் + உ
- புரி – பகுதி
- த் – சந்தி
- ந்- ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி
5. கழித்து = கழி + த்) + த் + உ
- கழி – பகுதி
- த் – சந்தி
- த் – இறந்தகால இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி
6. வாழிய = வாழ் + இய
- வாழ்- பகுதி
- இய – வியங்கோள் வினைமுற்று விகுதி
புணர்ச்சி விதிகள்
1. ஆயமொடு = ஆயம் + ஒடு
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி ஆயமொடு என்றாயிற்று
2. மின்னுடைக்கருவி = மின்னுடை + கருவி
- “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி மின்னுடைக்கருவி என்றாயிற்று.
3. பெருங்கடல் = பெருமை + கடல்
- “ஈறுபோதல்” என்ற விதிப்படி பெரு + கடல் என்றாயிற்று.
- “இனமிகல்” என்ற விதிப்படி பெருங்கடல் என்றாயிற்று.
பலவுள் தெரிக
1. சொல்லவந்த கருத்தை உள்ளுறை வழியாக உரைப்பது ___________ பாடல்களின் சிற்ப்பு
- அகநானூறு
- புறநானூறு
- நற்றிணை
- குறுந்தொகை
விடை : அகநானூறு
2. அகநானூற்றினை பாடிய புலவர்களின் எண்ணிக்கை ___________
- 125
- 135
- 145
- 155
விடை : 145
3. அகநானூறு ___________ பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- 2
- 3
- 4
- 5
விடை : 3
4. அகநானூற்றின் வேறு பெயர்கள் ___________
- புறநானூறு
- நற்றிணை
- குறுந்தொகை
- நெடுந்தொகை
விடை : நெடுந்தொகை
5. தினைப்புனம் காப்பவள் ___________ எனக் குறிக்கப் பெற்றுள்ளாள்
- குறமகள்
- தலைவி
- தோழி
- செவிலித்தாய்
விடை : குறமகள்
6. சிறைப்புறம் நின்ற தலைவனுக்கு தோழி கூறியதில் ___________ வெளிப்படுகிறது
- உள்ளுறைப் பொருள்
- கருப்பொருள்
- இறைச்சிப்பொருள்
- உரிப்பொருள்
விடை : இறைச்சிப்பொருள்
7. சிறைப்புறம் நின்ற தலைவனுக்கு குறியிடம் (தலைவி உள்ள இடம்) சொன்னது ___________
- தோழி
- நற்றாய்
- செவிலி
- எவரும் இல்லை
விடை : தோழி
8. அகநானூற்றின் அடிவரை ___________
- 3 அடிமுதல் 6 அடிவரை
- 4 அடிமுதல் 8 அடிவரை
- 9 அடிமுதல் 12 அடிவரை
- 13 அடிமுதல் 31 அடிவரை
விடை : 13 அடிமுதல் 31 அடிவரை
9. களிற்றியானை நிரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ___________
- 180
- 120
- 100
- 80
விடை : 120
10. மணிமிடைப்பவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ___________
- 180
- 120
- 100
- 80
விடை : 180
11. நித்திலக் கோவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ___________
- 180
- 120
- 100
- 80
விடை : 100
13. அகநானூற்றைத் தொகுத்தவர் ___________
- பூரிக்கோ
- கூடலூர் கிழார்
- பாண்டியன் உக்கிரப் பெருவதியார்
- மதுரை உப்பூரிக்குடி கிழார் மகனார் உத்திரசன்மர்
விடை : மதுரை உப்பூரிக்குடி கிழார் மகனார் உத்திரசன்மர்
14. அகநானூற்றைத் தொகுப்பித்தவர் ___________
- பூரிக்கோ
- கூடலூர் கிழார்
- பாண்டியன் உக்கிரப் பெருவதி
- மதுரை உப்பூரிக்குடி கிழார் மகனார் உத்திரசன்மர்
விடை : பாண்டியன் உக்கிரப் பெருவதி
15. அகநானூற்றூக் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர் ___________
- பாரதம் பாடிய பெருந்தேவனார்
- கபிலர்
- கும்பர்
- வரந்தருவார்
விடை : பாரதம் பாடிய பெருந்தேவனார்
16. “தினைப்புனம்” என பொருள் தரும் சொல் ___________
- அசோகு
- வானம்
- ஏனல்
- கடல்
விடை : தினைப்புனம்
பொருத்துக
1. குறிஞ்சி | அ. ஊடலும் ஊடல் நிமித்தமும் |
2. மருதம் | ஆ. புணர்தலும் புணர்தல் நிமித்தமும் |
3. நெய்தல் | இ. இருத்தலும் இருத்தல் நிமித்தமும் |
4. முல்லை | ஈ. இரங்கலும் இரங்கல் நிமித்தமும் |
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ |
பொருத்துக
1. பாலை | அ. வைகறை |
2. நெய்தல் | ஆ. மாலை |
3. மருதம் | இ. நண்பகல் |
4. முல்லை | ஈ. ஏற்பாடு |
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ |
குறு வினா
1. அகநானூற்றின் பிரிவுகளை எழுதுக
அகநானூற்றின் பிரிவுகள் மூன்று.
அவை : களிற்றியானை நிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை
2. அகநானூற்றுப் பாடல்களின் சிறப்பினை கூறுக
அகநானூற்றுப் பாடல்களின் சிறப்பு சொல்லவந்த கருத்தை உள்ளுறை வழியாக உரைப்பதாகும்
3. உள்ளுறைக் கவிஞர் எவ்வாறு கூறுவர்?
- உள்ளுறை பொதிந்த பாடலைப் பாடும் கவிஞர் சொல்லின் பயன்பாடு குறையாமல் கூறுவர்.
- அவ்வாறு கூறும்போது மரபின் நாகரிகம் குறைவுபடாது கூறவும் வேண்டும்.
- அன்பை மறைக்கவும் வேண்டும்; பயன்பாடு கருதி வெளிப்படுத்தவும் வேண்டும்.
4. தோழியின் பொறுப்பு யாது?
தலைவியைத் தலைவன் சந்திக்க வேண்டிய குறியிடத்துக் குறிப்பைப் பொதிந்து வெளியிடுவது தோழியின் பொறுப்பாகும்.
5. அகத்திணைகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
அகத்திணைகள் ஐந்து வகைப்படும். அவை
- குறிஞ்சி, முல்லை, மருததம், நெய்தல், பாலை
6. சிறுபொழுதுகள் எத்தனை? அவை யாவை?
சிறுபொழுதுகள் ஆறு. அவை
- காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம், வைகறை
7. பெரும்பொழுதுகள் எத்தனை? அவை யாவை?
பெரும்பொழுதுகள் ஆறு. அவை
- கார், கூதில், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்
8. கரும்பொருள்கள் யாவை?
தெய்வம், மக்கள், பறவை, விலங்கு, ஊர், பூ, மரம், நீர், உணவு, பறை, யாழ், பண், தொழில்
சிறுவினா
1. அகநானூறு சிறுகுறிப்பு வரைக
- (அகம் + நான்கு + நூறு = அகநானூறு) அகப்பொருள் குறித்த நானூறு பாக்களை கொண்ட தொகுப்பாகும்.
- 145 புலவர்கள் அகநானூற்றினை பாடியுள்ளனர்.
- இதனை அகம், நெடுந்தொகை எனக் கூறுவர்.
- களிற்றியானை நிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை என்று மூன்று பிரிவுகளை கொண்டது.
2. குறிஞ்சித்திணை – விளக்குக
- “புணர்தலும் புணர்தல் நிமித்தமும்” என்னும் உரிப்பொருளைக் கொண்ட அகப்பாடல் குறிஞ்சித்திணைக்குரியது.
- சிறுபொழுது – யாமம், பெரும்பொழுதுகள் – குளிர்காலம், முன்பனிக்காலம், தெய்வம், உணவு, ஊர், தொழில் முதலான கருப்பொருளை கொண்டமைவது குறிஞ்சித் திணையாகும்.
3. முல்லை திணைக்குரிய கருப்பொருள் பற்றி கூறுக
தெய்வம் | திருமால் (மாயோன்) |
மக்கள் | குறும்பொறை, நாடான், தோன்றல், மனைவி, கிழத்தி, இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் |
பறவை | காட்டுக்கோழி |
விலங்கு | முயல், மான் |
ஊர் | பாடி |
பூ | முல்லை, பிடவம், தோன்றி |
மரம் | கொன்றை, காயா, குருத்தம் |
நீர் | குறுஞ்சுனை, கானாறு |
உணவு | வரகு, சாமை, முதிரை |
பறை | ஏறுகோட்பறை |
யாழ் | முல்லையாழ் |
பண் | சாதரிப்பண் |
தொழில் | சாமை, வரகு விதைத்தல், களைகட்டல், நெல் அரிதல், ஏறுதழுவுதல், ஆநிரை மேய்த்தல் |
4. மருதம் திணைக்குரிய கருப்பொருள் பற்றி கூறுக
தெய்வம் | வேந்தன் |
மக்கள் | ஊரன், மகிழ்நன், மனைவி, உழவர், உழத்தியர், கடையர், கடைசியர் |
புள் (பறவை) | நாரை,மகன்றில், அன்னம் |
விலங்கு | எருமை, நீர்நாய் |
ஊர் | பேரூர், மூதூர் |
நீர் | ஆற்றுநீர், கிணற்று நீர், குளத்து நீர் |
பூ | குவளை, தாமரை |
மரம் | மருதம், வஞ்சி, காஞ்சி |
உணவு | செந்நெல், வெண்ணெல் |
பறை | மணமுழவு, நெல்லரிகிணை |
யாழ் | மருத யாழ் |
பண் | மருதப்பண் |
தொழில் | நெல்லரிதல், வயலில் களை கட்டல் |
5. நெய்தல் திணைக்குரிய கருப்பொருள் பற்றி கூறுக
தெய்வம் | வருணன் |
மக்கள் | சேர்ப்பன், புலம்பன், நுளையர், நுளைச்சியர், பரதன், பரத்தியர் |
புள் (பறவை) | கடற்காகம் |
விலங்கு | சுறாமீன் |
ஊர் | பாக்கம், பட்டிணம் |
நீர் | சுவர்நீர்க் கேணி, உவர் நீர்க்கேணி |
பூ | நெய்தல், தாழை |
மரம் | புன்னை, ஞாழல் |
உணவு | உப்பும் மீனும் விற்றப் பொருள் |
பறை | மீன்கோட் பறை, நாவாய்ப் பம்பை |
யாழ் | விளரி யாழ் |
பண் | செல்வழிப்பண் |
தொழில் | உப்பு உண்டாக்கல் விற்றல், மீன் பிடித்தல் உணக்கல் |
6. ஐந்திணைகளின் முதற்பொழுதுகளையும், உரிப்பொருள்களையும் கூறுக
குறிஞ்சி
- பெரும்பொழுது – குளிர்காலம், முன்பனிக்காலம்
- சிறுபொழுது – யாமம்
- உரிப்பொருள் – புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
முல்லை
- பெரும்பொழுது – கார்காலம்
- சிறுபொழுது – மாலை
- உரிப்பொருள் – இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
மருதம்
- பெரும்பொழுது – ஆறு பெரும் பொழுதுகள்
- சிறுபொழுது – வைகறை
- உரிப்பொருள் – ஊடலும் ஊடல் நிமித்தமும்
மருதம்
- பெரும்பொழுது – ஆறு பெரும் பொழுதுகள்
- சிறுபொழுது – எற்பாடு
- உரிப்பொருள் – இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
பாலை
- பெரும்பொழுது – இளவேனில், முதுவேனில், பின்பனி
- சிறுபொழுது – நண்பகல்
- உரிப்பொருள் – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…