TN 10th Standard Tamil Book Back Answers | Lesson 8.3 – காலக்கணிதம்

8.3 காலக்கணிதம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 10th Standard Tamil Lesson 8.3 – காலக்கணிதம். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

10th Standard Tamil Guide - kalakanitham

10th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • “காலக்கணிதம்” என்னும் இப்பாடப்பகுதி கண்ணதாசன் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
  • “முத்தையா” என்னும் இயற்பெயர் கொண்ட கண்ணதாசன் இன்றைய சிவகங்கை மாவட்டத்தின் சிற்றூரான சிறுகூடல்பட்டியில் பிறந்தவர்.
  • இவரது பெற்றாெர் சாத்தப்பன்– விசாலாட்சி ஆவர்.
  • 1949ஆம் ஆண்டு “கலங்காதிரு மனேம’’ என்ற பாடைல எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார்.
  • திரையுலகிலும் இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் கண்ணதாசன்.
  • சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும் இவர் திகழ்ந்தவர்.
  • தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடைய காெண்டு சேர்த்தவர்.
  • சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
  • இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருந்தார்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்………

  1. இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
  2. என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
  3. இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்
  4. என்மனம் இறந்துவிடாது இகழ

விடை : இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது

குறு வினா

‘கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது

அ) அடி எதுகையை எடுத்தெழுதுக.

கொள்வோர் – உள்வாய்

ஆ) இலக்கணக் குறிப்பு எழுதுக – கொள்க, குரைக்க

கொள்க, குரைக்க – வியங்கோள் வினைமுற்று

நெடு வினா

காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.

கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை; அறிக!

– கண்ணதாசன்

திரண்ட கருத்து:-

கவிஞன் நானே காலத்தை கணிப்பவன். உள்ளத்தில் உதிக்கும் பொருளை வார்த்தை வடிவம் கொடுத்த ஒரு உருவமாய் அவற்றை நான் படைப்பதால் இப்பூமியில் நானும் புகழ்பெற்ற தெய்வம் பொன்னை விட விலையுயர்ந்த செல்வம் என்னுடைய கருத்துகள். சரியானவற்றை எடுத்துச் சொல்வதும், தவறானவற்றை எதிப்பதும் என் பணி. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று பணிகளும் நானும் கடவுளும் அறிந்தவை.

மோனை நயம்:-

காட்டுக்கு யானை, பாட்டுக்கு மோனை

செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும்.

விஞன் – ருப்போடு, வை சரி – வை தவறாயின்

என மோனை நயமும் உள்ளது.

எதுகை நயம்:-

மதுரைக்கு வைகை, செய்யுளுக்கு எதுகை

செய்யுளில் முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும்.

ருப்படு – பொருளை – உருப்பட

என எதுகை நயமும் உள்ளது.

முரண்:-

நாட்டுக்கு அரண், பாட்டுக்கு முரண்

செய்யுளில் அடியிலோ, சீரிலோ எதிரெதிர் பொருள் தரும் வகையில் தொடுக்கப்படுவது முரண் ஆகும்

ஆக்கல் X அழித்தல்

என்று முரண்பட்ட சொற்கள் அமைத்து தொடுந்திருப்பதால் முரண் நயமும் உள்ளது.

இயைபு நயம்:-

அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வரத்தொடுப்பது இயைபு ஆகும்

…. புகழுடைத் தெய்வம் – …. பொருளென் செல்வம் – என இயைபு நயமும் உள்ளது

அணி நயம்:-

கண்ணதாசன் இப்பாடலில், கடவுளுக்கு இணையாக

யானோர் காலக்கணிதம்
நானோர் புகழுடையத் தெய்வம்

என உருவகப்படுத்தி உள்ளதால் இப்பாடலில் உருவக அணி பயின்று வந்துள்ளது.

சந்த நயம்:-

சந்தம் தமிழக்குச் சொந்தம் என்பதற்கு ஏற்ப, இப்பாடலில் எண்சீர் கழிநெடிலடி ஆசரிய விருத்தம் இடம் பெற்றுள்ளது. அகவலோசையுடன் இனிய சந்த நயமும் பெற்றுள்ளது.

கற்பவை கற்றபின்

1. கவிதைகளை ஒப்பிட்டுக் கருத்துரைக்க

கவிச்சக்கரவரத்தியும் கவியரசும்
நதியின் பிழையன்று
நறும்புனலின்மை அன்றேபதியின் பிழையன்று
பயந்த நம்மைப் புரந்தான்மதியின் பிழையன்று
மகன் பிழையன்று மைந்தவிதியின் பிழை நீ
இதற்கென்னை வெகுண்டதென்றன்

– கம்பன்

நதிவெள்ளம் காய்ந்த விட்டால்
நதிசெய்த குற்றம் இல்லை
விதிசெய்த குற்றம் இன்றி
வேறு – யாரம்மா

– கண்ணதாசன்

நதியின் பிழையன்று

  • இராமன் கானகம் செல்ல வேண்டும் என்றவுடன் இலக்குவனன் சினம் கொண்டான்.
  • அண்ணனைக் கானகம் போகச் சொல்லிவிட்டார்களே. விதிக்கு விதி காரணம் என் வில்லினால் அனைவரையும் அழிப்பேன் என்று ஆவேசப்பட்ட இலக்குவனைத் தடுத்த நிறுத்தி இராமன் கூறியது இது
  • நதியின் பிழை எதுவும் அல்ல நல்ல தண்ணீர் இல்லாதது.
  • நறும்புனல் இன்மை என்பது, நதியில் நீர் இருக்கிறது. ஆனால் நல்லதாக இல்லை. அதுபோல நான் கானகம் செல்வது தசரதன் பிழையும் அன்று. அன்போடு நம்மை வளர்த்த கைகேயின் மதியின் பிழையும் அன்று.
  • பரதன் பிழையும் இதில் இல்லை. விதியின் பிழை. நீ ஏன் இதற்காகக் கோபப்படுகிறாள். “சினமும வேகமும் தவிர்”
  • இதைப் போலவே கண்ணதாசனின் பாடலான “நதிவெள்ளம் காய்ந்த விட்டால்” பாடல் உணர்த்துவது விதியைத் தான்.
  • தவறு செய்யாத நாயகன் மீது பழி சுமத்தப்படும் சூழலில் நதியின் நீர்மையைப் போல மானுடர் உள்ளங்களில் இருக்கும் நற்பண்புகள், மனசாட்சி உண்மை, பொய் அறிதல் வற்றிவிடுகிறது.
  • நதி வற்றிவிட்டால் அது நதியின் குற்றம் அல்ல. விதியின் குற்றமே.
  • அதைப்போலவே மானுடர் பண்புகள் மாற்றம் பெற்று நாயகன் மீது சுமத்தப்பட்ட பழி பாவங்களும் விதி செய்த பிழையேயன்றி வேறு யாருமி்லை என்பதை கண்ணதாசன் கூறியுள்ளார்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக்குறிப்பு

  • காலக்கணிதம் – உருவகம்
  • ஆக்கல், அளித்தல், அழித்தல் – தொழிற்பெயர்
  • கொள்க, எழுதுக – வியங்கோள் வினைமுற்று
  • கொள்வோர் – வினையாலணையும் பெயர்
  • அறிந்து – வினையெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்

1. அமர்வேன் =  அமர் + வ் + ஏன்

  • அமர் – பகுதி
  • வ் – எதிர்கால இடைநிலை
  • ஏன் – குறிப்பு வினைமுற்று விகுதி

2. அழித்தல் = அழி + த் + த் + அல்

  • அழி – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • அல் – தொழில்பெயர் விகுதி

3. இறந்த = இற + த்(ந்) + த் + அ

  • இற – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – பெயரெச்ச விகுதி

பலவுள் தெரிக

1. கவிஞன் _____________ வெல்கிறான்

  1. மனதினை
  2. மனிதனை
  3. காலத்தைக்
  4. பொறுமையை

விடை : காலத்தைக்

2. முத்தையா என்னும் இயற்பெயர் காெண்டவர் _____________

  1. இரா.பி.சேதுபிள்ளை
  2. கண்ணதாசன்
  3. பாரதியார்
  4. பாரதிதாசன்

விடை : கண்ணதாசன்

3. கண்ணதாசன் பிறந்த மாவட்டம் _____________

  1. சிவகங்கை
  2. நெல்லை
  3. புதுக்கோட்டை
  4. இராமநாதபுரம்

விடை : சிவகங்கை

4. கண்ணதாசன் பிறந்த ஊர் _____________

  1. முக்கூடல்
  2. சிவகங்கை
  3. கூடல் மாநகர்
  4. சிறுகூடல்பட்டி

விடை : சிறுகூடல்பட்டி

5. கண்ணதாசன் முதன் முதலில் திரைப்படத்திற்கு பாடல் எழுதிய ஆண்டு _____________

  1. 1939
  2. 1949
  3. 1959
  4. 1969

விடை : 1949

6. கண்ணதாசன் எழுதிய முதல் திரைப்படப் பாடல் _____________

  1. வாழ நினைத்தால் வாழலாம்
  2. உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
  3. மலர்களைப் போல் தங்கை
  4. கலங்காதிரு மனமே

விடை : கலங்காதிரு மனமே

7. சாகித்திய அகாதெமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல் _____________

  1. மாங்கனி
  2. சேரமான்காதலி
  3. இயேசு காவியம்
  4. சிவகங்கைச் சீமை

விடை : சேரமான்காதலி

8. தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர் _____________

  1. பாரதியார்
  2. வைரமுத்து
  3. கண்ணதாசன்
  4. மேத்தா

விடை : கண்ணதாசன்

9. கண்ணதாசன் அட்சயப்பாத்திரம் என்று _____________க் குறிப்பிடுகிறார்

  1. தத்துவம்
  2. கொள்கை
  3. பண்பாடு
  4. ஞானம்

விடை : தத்துவம்

10. “மாற்றம் எனது மானிடத் தத்துவம்” எனக் கூறியவர் _____________

  1. பாரதியார்
  2. வைரமுத்து
  3. கண்ணதாசன்
  4. மேத்தா

விடை : கண்ணதாசன்

11. “கவிஞன் யானோர் காலக் கணிதம்” என்று கூறியவர் _____________

  1. பாரதியார்
  2. வைரமுத்து
  3. மேத்தா
  4. கண்ணதாசன்

விடை : கண்ணதாசன்

12. “வண்டாய் எழுந்து மலர்களில் அமர்வேன்” எனக் கூறியவர் _____________

  1. கண்ணதாசன்
  2. பாரதியார்
  3. வைரமுத்து
  4. மேத்தா

விடை : கண்ணதாசன்

13. கண்ணதாசன் திரைப்படப் பாடல்கள் வழியாக மக்களுக்கு _____________ உணர்த்தினார்

  1. உலகியலை
  2. மெய்யியலை
  3. ஆன்மீகத்தை
  4. இலக்கணத்தை

விடை : மெய்யியலை

குறு வினா

1. கவிஞன் என்பவன் யார்?

மனம் என்னும் வயலில், சொல்லேர் உழவனாக, சிந்தனை விதையைத் தூவி, மடமைக்களை பறித்து, தத்துவ நீர் பாய்ச்சி, அறம் என்னும் கதிர் அறுப்பவன் கவிஞன்.

2. எவர் கூறாத ஒன்றைத் தான் கூற முனைவதாக கண்ணதாசன் குறிப்பிடுகிறார்?

கம்பன், பாரதியார், பாரதிதாசன் ஆகியோர் சொல்லாத சிலவற்றை சொல்லிட முனைவேன் என்று கண்ணதாசன் குறிப்பிடுகிறார்.

3. எவையெல்லாம் மாறாதவை?

காடு, மேடு, மரம், கல், வனவிலங்குகள்

4. கவிஞன் எதனால் காலத்தை வென்றவனாகிறான்?

கவிஞன் காலத்தைக் கணிப்பதால் காலத்தை வென்றவனாகிறான்.

5. கண்ணதாசன் எதற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.?

கண்ணதாசன் “சேரமான் காதலி” என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.

 

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment