6.7 திருக்குறள்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 10th Standard Tamil Lesson 6.6 – அகப்பொருள் இலக்கணம். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
பாடநூல் வினாக்கள்
குறு வினா
1. கரப்பிடும்பை இல்லார் – இத்தொடரின் பொருள் கூறுக.
தம்மிடமுள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பம் தராத நல்லவர்.
2. தஞ்சம் எளியர் பகைக்கு – இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்பாடுகளையும் எழுதுக.
சீர் | அசை | வாய்ப்பாடு |
தஞ் / சம் | நேர் நேர் | தேமா |
எளி / யர் | நிரை நேர் | புளிமா |
பகைக் / கு | நிரை நேர் (நிரைபு) | பிறப்பு |
3. வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?
இகழ்நது ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால் இரப்பவரின் உள்ளத்தின் உள்ளே மகிழ்ச்சி பொங்கும்.
4. பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக.
பெரிய கத்தி, இரும்பு ஈட்டி, உழைத்ததால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்
- கூரான ஆயுதம் – உழைத்ததால் கிடைத்த ஊதியம்.
- காரணம் – இதுவே அவனுடைய பகைவனை வெலல்லும் கூரான ஆயுதம்.
சிறு வினா
1. வள்ளுவம், சிறந்த அமைச்சருககுக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பாெருந்துவதைக் குறள் வழி விளக்குக.
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு
தொழில் செய்வதற்கு தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து அரிய செயல்களை செய்தல் வேண்டும்.
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சசு
மனவலிலமை, குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல் , நூல்களை கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைய வேண்டும்.
சூழ்ச்சிகள்:-
மதிநுட்பம் நூலோ டுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை
இயற்கையான நுண்ணறிவு, நூலறிவு இவற்றை உடையவர்கள் முன் எந்த சூழ்ச்சியும் நிற்க இயலாது.
நடைமுறைகளை அறிதல்:-
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்
தியற்கை அறிந்து செயல்
ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல்வழியாக அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும்.
2. பலரிடம் உதவி பெற்றுக் கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு உணர்த்தும் நாேக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?
பகைவரின் வலிமை:-
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்புரியும் எதிலான் துப்பு
சுற்றாத்தாரிடம் ஒருவர் அன்பு இல்லாமலும் பொருந்திய துணை இல்லாமலும் இருந்தால் அவரால் பகைவரின் வலிமையை எதிர் கொள்ள முடியாது.
பகைக்கு ஆட்படல்:-
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்கம் எளியன் பகைக்கு
மனத்தில் துணிவு இல்லாதவராய், அறிய வேண்டியவற்றை அறியாதவராய், பாெருந்தும் பண்பு இல்லாதவராய், பிறர்க்குகு காெடுத்து உதவாதவராய் இருந்தால் எளிதில் பகைக்கு ஆட்பட நேரும்.
கற்பவை கற்றபின்
1. புதுக்கவிதையையும் குறளையும் ஒப்பிட்டுப் பேசுக.
புதுக்கவிதை
தக்காளியையும் வெண்டைக்காயையும்
தள்ளுவண்டிக்காரர் தராசில் நிறுக்கையில்,
தள்ளி நிற்கும் பிள்ளை
அவசியமாகக் கேட்கும் ஆயிரம் ரூபாயை
எப்படிக் கொடுக்க என்றே அவர் மனம் யோசிக்கும்….
“அத்தனைக் காய்களையும் விற்றால்தான்
மீதி ஐந்நூறாவது மிஞ்சும்; என்ன செய்ய…”
காய்கறி வாங்கியவர்
கவனக் குறைவாகக் கொடுத்த
இரண்டாயிரம் ரூபாயைக்
கூப்பிட்டுத் தந்துவிட்டுப்
பிள்ளைக்கு உதவ யாரிடம் கேட்கலாம்
என்பதை அடுத்தபடி யோசிக்கும் அவர் மனம்!
குறள்
அருளோடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
விடை
மற்றவர்களிடம் இரக்கமும் அன்பும் இல்லாமல் ஈட்டும் பொருளை ஏற்றுக் கொள்ளாது நீக்கிவிட வேண்டும் என்ற கொள்கையைப் பின்பற்ற தள்ளுவண்டிக்காரர், காய்கறி வாங்கியவர் கவனக் குறைவாகக் கொடுத்த இரண்டாயிரம் ரூபாயைத் தான் வைத்துக் கொள்ளாமல் காய்கறி வாங்கியவரை கூப்பிட்டக் கொடுத்துவிட்டார்.
தனக்கு தேவை மிகுதியாய் இருப்பினும் தள்ளுவண்டிக்காரர் அறவழியல் செல்வம் ஈட்டுவதையே விரும்புகிற ஒரு நல்ல பண்பாளர்.
2. குறிப்புகள் உணர்த்தும் குறளின் கருத்துகள் குறித்துக் கலந்துரையாடுக.
அ) அவருக்கு அறிவும் அதிகம்; படிப்பும் அதிகம். யாராலும் அவருக்கெதிராகச் செயல்பட முடியாது.
பாலா | அவருக்கு அறிவு அதிகம்; படிப்பு அதிகம். யாராலும் அவருக்கெதிராகச் செயல்பட முடியாது. |
மாலா | குடிசெயல் வகை எனும் அதிகாரத்தில் 1022வது குறளில் விடாமுயற்சி, சிறந்த அறிவாற்றல் உடையவனின் குடி உயர்ந்து விளங்கும். |
ஆ) எச்சரிக்கையாக இரு. பழகுபவர்களில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்று கண்டுபிடிப்பது கடினம்.
பாலா | எச்சரிக்கையாக இரு. பழகுபவர்களில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்று கண்டுபிடிப்பது கடினம் |
மாலா | கூடாநட்பு என்னும் அதிகாரத்தில் 828-வது குறளில் பகைவர் நம்மை வணங்கி தொழும்போது கத்தியை மறைத்து வைத்திருப்பார். |
இ) அவர் குடும்பம் முன்னேறியிருப்பதற்குக் காரணம் தொடர்ந்து முயல்வதும் தொழிலில் அவருக்கிருந்த அறிவும்.
பாலா | அவர் குடும்பம் முன்னேறியிருப்பதற்குக் காரணம் தொடர்ந்து முயல்வதும் தொழிலில் அவருக்கிருந்த அறிவும். |
மாலா | ஊக்கமுடைமை எனும் அதிகாரத்தில் 594-வது குறளில் தளராத ஊக்கத்தோடு உழைப்பவனிடம் தொடரந்து செல்வம் சேரும். |
ஈ) வாழ்க்கையில் நன்றாகப் பொருளீட்டு. அதுதான் உன்னைத் தாழ்வாக நினைத்தவர்களின் வாயை அடைக்கும்.
பாலா | வாழ்க்கையில் நன்றாகப் பொருளீட்டு. அதுதான் உன்னைத் தாழ்வாக நினைத்தவர்களின் வாயை அடைக்கும். |
மாலா | பொருள் செயல்வகை எனும் அதிகாரத்தில் 759-வத குறளில் பெருள் இல்லாரை எல்லோரும் இகழ்வர். பொருள் உள்ளவரை போற்றுவர். |
உ) அக்கம்பக்கத்தாரிடம் பழகாமல் ஒதுங்கியே இருந்தார்; துணைக்கும் யாரும் இல்லை. இப்போது உடம்பு சரியில்லாதபோது உதவ யாருமின்றித் திண்டாடுகிறார்.
பாலா | அக்கம்பக்கத்தாரிடம் பழகாமல் ஒதுங்கியே இருந்தார்; துணைக்கும் யாரும் இல்லை. இப்போது உடம்பு சரியில்லாதபோது உதவ யாருமின்றித் திண்டாடுகிறார். |
மாலா | அன்புடைமை எனும் அதிகாரத்தில் 80-வது குறளில் பிறரிடம் அன்போடு வாழ்பவன் உயிருடன் கூடிய உடல். அன்பு இல்லாததால் உயிரற்ற எலும்புக் கூட்டுக்குச் சமம். |
கூடுதல் வினாக்கள்
இலக்கணக் குறிப்பு
- கருவியும் காலமும் – எண்ணும்மை
- அருவினை, வண்கண் – பண்புத்தொகைகள்
- வந்த பொருள் – பெயரெச்சம்
- வராப்பொருளாக்களம் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- செய்க – வியங்கோள் வினைமுற்று
- நீள்வினை – வினைத்தொகை
பகுபத உறுப்பிலக்கணம்
1. அறிந்த = அறி + த்(ந்) +த் + அ
- அறி – பகுதி
- த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- அ – பெயரெச்ச விகுதி
2. அறியான் = அறி + ய் + ஆன்
- அறி – பகுதி
- ய் – உடம்படு மெய்யாகிய சந்தி
- ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி
3. செய்வான் = செய் + வ் + ஆன்
- செய் – பகுதி
- வ் – எதிர்கால இடைநிலை
- ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி
பலவுள் தெரிக
1. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள் – இக்குறளில் பயின்று வரும் அணி
- உவமை அணி
- பொருள் பின்வருநிலையணி
- சொல் பின்வருநிலை அணி
- சொற்பொருள் பின்வருநிலையணி
விடை : சொற்பொருள் பின்வருநிலையணி
2. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை – இக்குறளில் பயின்று வரும் அணி
- உவமையணி
- உருவக அணி
- சொல் பின்வருநிலை அணி
- சொற்பொருள் பின்வருநிலையணி
விடை : உவமையணி
3. இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது – இக்குறளில் பயின்று வரும் அணி
- உவமையணி
- உருவக அணி
- சொல் பின்வருநிலை அணி
- சொற்பொருள் பின்வருநிலையணி
விடை : சொற்பொருள் பின்வருநிலையணி
4. மக்களே போல்வர் கயவர்; அவரன்ன
ஒப்பாரி யாம்கண்ட தில் – இக்குறளில் பயின்று வரும் அணி
- உருவக அணி
- உவமையணி
- சொல் பின்வருநிலை அணி
- சொற்பொருள் பின்வருநிலையணி
விடை : உவமையணி
5. தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழு கலான் – இக்குறளில் பயின்று வரும் அணி
- உருவக அணி
- உவமையணி
- வஞ்சப்புகழ்ச்சி அணி
- சொற்பொருள் பின்வருநிலையணி
விடை : வஞ்சப்புகழ்ச்சி அணி
6. சொல்லப் பயன்படுபவர் சான்றோர்; கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ் – இக்குறளில் பயின்று வரும் அணி
- உருவக அணி
- வஞ்சப்புகழ்ச்சி அணி
- உவமையணி
- சொற்பொருள் பின்வருநிலையணி
விடை : உவமையணி
7. சிறந்த அமைச்சருக்குரிய குண நலன்கள்
- 2
- 3
- 4
- 5
விடை : 5
8. விடாமுயற்சி, சிறந்த அறிவாற்றல் இவ்விரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி _____________
- உயர்ந்து விளங்கும்
- தாழ்ந்து நிற்கும்
- காணாமல் நீங்கும்
- வாடிப் போகும்
விடை : உயர்ந்து விளங்கும்
குறு வினா
1. அமைச்சர் என்பவர் யார்?
தாெழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிநது அரிய செயலைச் செய்பவரை அமைச்சர் ஆவார்.
2. சிறந்த அமைச்சர் யார்?
மன வலிமை, குடிகளைக் காத்தல், விடா முயற்சி, ஆட்சி முறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல் ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே அமைச்சராவர்.
3. உலகில் சிறந்த பொருள் என்பது யாது?
ஒரு பொருளாளக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது செல்வம். அஃது அல்லாமல் உலகின் சிறந்த பொருள் வேறு இல்லை.
4. எந்தப் பொருளை ஏற்றுக்கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும்?
மற்றவர்களிடம் இரக்ககும் அன்பும் இல்லாமல் ஈட்டும் பொருளை ஏற்றுக்கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும்.
5. யாரால் பகைவரின் வலிமையை எதிர்கொள்ள முடியாது?
சுற்றத்தாரிடம் அன்பு இன்மை, பொருந்திய துணை இன்மை, வலிமையின்னை
6. அறத்தையும், இன்பத்தையும் தருவது எது?
முறையறிந்து தீமையற்ற வழியில் சேர்த்த பாெருள் ஒருவருக்கு அறத்தையும் தரும்; இன்பத்தையும் தரும்.
7. யார் முன் எந்த சூழ்ச்சியும் நிற்க இயலாது?
இயற்கையான நுண்ணறிவு, நூலறிவு இவற்றை உடையவர்கள் முன் எந்த சூழ்ச்சியும் நிற்க இயலாது.
8. எவரின் குடி உயர்நது விளங்கும்?
விடா முயற்சி, சிறந்த அறிவாற்றல் இவ்விரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி உயர்நது விளங்கும்.
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…