TN 10th Standard Tamil Book Back Answers | Lesson 4.4 – விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 10th Standard Tamil Lesson 4.4 – விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

10th Standard Tamil Guide - Vinnai Thandiya Thannambikkai

10th Std Tamil Text Book – Download

பாடநூல் வினாக்கள்

“அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் “விண்வெளிப் பயணம்” என்னும் தலைப்பில் கற்பனைக் கதை ஒன்று எழுதுக.

குறிப்புச்சட்டம்
 • அறிமுகவுரை
 • பேரண்டம்
 • விண்மீன்கள்
 • கதிர்வீச்சும் துகளும்
 • திரும்புதல்
 • நிறைவுரை

அறிமுகவுரை:-

இலக்கியங்களில் நிலவிய அறிவியல் கோட்டுபாடுகளைும் நம்பிக்கைகளையும் அறியும் பொருட்டு நானும், எம் வகுப்பு மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரோடு ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம் மேற்கொண்டோம்.

பேரண்டம்:-

பேரண்டப் பெருவெடிப்பு, கருந்துளைகள் பற்றியதான ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆராய்ச்சிகள் முக்கியமானவை. இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உண்டானதே என்பதற்கான சான்றுகளைக் கணிதவியல் அடிப்படையில் எங்களுக்கு விளக்கினார். “இப்புவியின் படைப்பில் கடவுள் போன்ற ஒருவர் பின்னணியல் இருந்தார்” என்பதை மறுத்தார். “பிரபஞ்சத்தை இயக்க வைக்கும் ஆற்றலாக கடவுள் என்ற ஒருவரைக் கட்டமைக்க வேண்டியதில்லை” என்றார்.

விண்மீன்கள்:-

விண்வெளியில் பால்வீதியில் எங்கள் விண்வெளி ஓடம் சுற்றிகக் கொண்டிருந்தது. அப்போது ஹாக்கின் “நமது பால்வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் ஒளிருகின்றன. அவற்றுள் ஞாயிறும் ஒன்று. ஒரு விண்மீனின் ஆயுள் கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன் சுருக்கத் தொடங்குகிறது. விண்மீன் சுருங்கச் சுருங்க அதன் ஈர்ப்பாற்றல் உயர்ந்து கொண்டே சென்று அளவற்றதாகிறது என் விளக்கினார்.

கதிர்வீச்சும் துகளும்:-

“சில நேரங்களில் உண்மையானது புனைவை விடவும் வியப்பூட்டுவதாக அமைகிறது. அப்படி ஓர் உண்மைதான் கருந்துளைகள் பற்றியதும் என்பதை அறிந்து கொண்டோம். எபபடியெனில் கருந்துளையினுள் செல்லும் எந்த ஒன்றும் தப்பித்து வெளிவரமுடியாது. கருந்துளையின் ஈர்ப்பு எல்லையிலிருந்து கதிர்வீச்சுகள் வெளிப்பட்டு கொண்டிருந்தன. கருந்துளை உண்மையிலேயே கருப்பாக இல்லை என்பதே நேரில் கண்டோம். அப்போது ஹாக்கிங் கருந்துளையிலிருந்து ஒரு கட்டத்தில் கதிரவீச்சும் அணுத்துகள்களும் கசியத் தொடங்கி இறுதியில் வெடித்து விடும் என்றார்.

முன்னர் அண்டவெளியல் காணப்படும் கருந்துளை அழிவு ஆற்றல் என்று கருப்பட்டது. ஆனால் கருந்துளை என்பது படைப்பின் ஆற்றல் என்று எங்களிடம் ஹாக்கிங் விளக்கினார்.

திரும்புதல்:-

விண்வெளி ஓடம் பூமிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது பல வடிவிலான விண்கற்கள் மற்றும் தொலைவில் தூசுகள் போன்ற பால்வீதிகளையும் கண்டு அதனைப் பற்றிய சில கருத்துகளைப் பேசிக் கொண்டே பூமியை வந்தடைந்தோம். எங்களை வரவேற்க பலரும் கூடி வந்திருந்தனர்.

நிறைவுரை:-

விண்வெளிப் பயணம் மேற்கொண்ட எங்களை வரவேற்றுப் பாராட்டி, வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்நிகழ்வுகள் அனைத்தும் எம் வாழ்வில் மறக்க முடியாதவையாகவே இருக்கின்றன.

கற்பவை கற்றபின்

1. “அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத்திறன். ஏனெனில் அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவற்றோடு முடித்து விடுகிறது. கற்பனைத் திறனோ இந்த ஒட்டுமொத்தப் பேரண்டத்தையும் அளப்பது. இன்று நாம் அறிந்திருப்பதை மட்டுமன்று; இனி நாம் அறிந்து கொள்ளப் போவதையும் உள்ளடக்கியது” – ஐன்ஸ்டைன்

“வாழ்க்கை” எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது. நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன். அதன் மூலம் மனித இனம் தொடர வழி வகுப்பேன்” – ஸ்டீபன் ஹாக்கிங்

இவ்விருவரின் கூற்றுகளைப் பாடப்பகுதி உணர்த்தும் கருத்துகளோடு ஒப்பிட்டு உரையாடுக.

மணி அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன் என அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டைன் கூறியுள்ளாரே. அதைப் பற்றிய காரணம் என்னவாக இருக்கும்?
மாறன் அறிவு என்பது தற்போது அறிந்தும் புரிந்தும் வைப்பதோடு முடிந்து விடுகிறது. கற்பனைத் திறனோ இந்த ஒட்டு மொத்தப் பேரண்டத்தையும் அளந்து விடுகிறது. இன்ற நாம் அறிந்திருப்பதை மட்டுமன்று; இனி நாம் அறிந்து கொள்ளப் போவதையும் உள்ளடக்கியது.
மணி ஐன்ஸ்டைனது E = mc2 கோட்பாட்டை யாரும் ஏற்றுக் கொள்ளாததற்கான காரணம் இருக்குமோ?
மாறன் ஆம்! ஐன்ஸ்டைன் ஈர்ப்பலைகள் குறித்த முடிவுகளை கணிதச் சமன்பாடுகள் மூலம் கோட்பாடுகளாகச் சொன்னார். அவரது கோட்பாடுகளை அறிவுத் திறனுடன் கற்பனையையும் சேர்த்து யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. 100 ஆண்டுகளுக்கு பின் ஈர்ப்பலைகள் இருப்பதை உலகம் கண்டு கொண்டது.
மணி “வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது” என்று ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?
மாறன் ஆம் ஹாக்கிங்கின் கூற்றுக்கு அவரே சிறந்த உதாரணமாக இருக்கிறார்கள்.
மணி எப்படி?
மாறன் 1963-ம் ஆண்டு பக்கவாதம் என்னும் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டபோது அவருக்கு வயது 21. மருத்துவ உலகமே மிரண்டு போகும்படி 53 ஆண்டுகள் இயங்கினார். 1985 மூச்சுக்குழல் தடங்கலால் பேசும் திறனை இழந்தார். எஞ்சியது கன்னத்தின் தசையைசவும் கண் சிமிட்டலும் மட்டுமே.
மணி ஹாக்கிங்கின் உடல்நலக் குறைவிற்கும் தன்னம்பிக்கைக்கும் உள்ள தொடர்பு யாது?
மாறன் ஹாக்கிங் அவருடைய கன்னத்து அசைவுகள் மூலம் தன் கருத்தை தட்டச்சு செய்து வெளிப்படுத்தினார். கருந்துளை பற்றி ஆராய்ச்சி செய்து தன் கோட்பாடுகளை விண்மீன் இயக்கத்தோடு ஒப்பிட்டு உலகம் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கினார். 1988-ம் அண்டு இவர் இயற்றிய “காலத்தின் சுருக்கமான வரலாறு” என்ற நூல் நாற்பது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அந்நூல் ஒரு கோடி படிகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளது.
மணி கருந்துளைப் பெருவெடிப்பு ஆகியன பற்றிய அரிய உண்மைகள் அந்நூலில் உள்ளன. அறிவுத் தேடலில் உடல், உள்ளத் தடைகளைத் தகர்த்த மாமேதை ஸ்டீபன் ஹாக்கிங்.
மாறன் உண்மைதான். அவர் கூறிய தத்துவத்திற்கு அவரே சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்திருக்கிறார். இத்தகைய அறிஞர்களைப் பற்றிய செய்திகளை விளக்கிய தங்களுக்கு மிக்க நன்றி.

2. கருத்துளைச் சார்ந்த செய்தியை அறிவியல் இதழ் ஒன்றிற்குக் குறுங்கட்டுரையாக எழுதுக.

குறிப்புச்சட்டம்
 • முன்னுரை
 • விண்மீன் சுருக்கம்
 • ஜான்வீலர் கருத்து
 • ஹாக்கிங் கதிர்வீச்சு
 • கருத்துளைக் கோட்பாடு
 • முடிவுரை

முன்னுரை

நமது பால்வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் ஒளிர்கின்றன. அவற்றுள் நம் ஞாயிறு ஒன்று விண்மீன்களின் ஆயுள் கால முடிவில் நிகழும் நிகழ்விகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

விண்மீன் சுருக்கம்

ஒரு விண்மீனின் ஆயுள்கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன் சுருங்கத் தொடங்குகிறது. விண்மீன் சுருங்கச் சுருங்க அதன் ஈர்ப்பாற்றல் உயர்ந்து கொண்டே சென்று அளவற்றதாகிறது.

ஜான்வீலர் கருத்து

கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதன் முதலில் வெளியிட்டவர் ஜானவீலர். சுருங்கிய விண்மீனின் ஈர்ப்பெல்லைக்குள் செல்கிற எதுவும் ஏன் ஒளியும் கூட ஈர்க்கப்படும். இவ்வாறு உள் சென்ற எதுவும் வெளிவர முடியாததனால் இதனைக் கருந்துளை என்றார் ஜான்வீலர்.

ஹாக்கிங் கதிர்வீச்சு

சில நேரங்களில் உண்மை பொய்மையையும் மிஞ்சுவதாக அமைகிறது. கருந்துளைப் பற்றிய உண்மைகளும் அப்படியே. ஹாக்கிங் மேற்கொண்ட கருந்துளை ஆராய்ச்சி முடிவு ஹாக்கிங் கதிர்வீச்சு என அழைக்கப்படுகிறது.

கருத்துளைக் கோட்பாடு

கருந்துளையினுள் செல்லும் எந்த ஒன்றும் தப்பித்து வெளியே வரமுடியாது. கருந்துளையின் ஈர்ப்பு எல்லையிலிருந்து கதிர்வீச்சுகள் வெளிப்பட்டுக் கொண்டிக்கின்றன. கருந்துளை உண்மையிலேயே கருப்பாக இருப்பதில்லை. கருந்துளையில் இருந்து ஒரு கட்டத்தில் கதிர் வீச்சும் அணுத்துகள்களம் கசியத் தொடங்கி இறுதியில் கருந்துளை வெடித்த மறைந்து விடும். இக்கோட்பாடுகளை ஹாக்கிங் கோட்டுபாடுகளாக வெளியிடாமல் விண்மீன் இயக்கத்தோடு ஒப்பிட்ட விளக்கியதால் உலகம் கருந்துளைக் கோட்பாட்டை எளிதில் புரிந்து கொண்டது.

முடிவுரை

அண்டவெளியில் காணப்படம் கருந்தளை அழிவு ஆற்றல் என்று கருதப்பட்டது ஆனால் ஹாக்கிங், கருந்துளைப் படைப்பின் ஆற்றல் என்று நிருபித்தார்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் __________-ல் நிறுவப்பட்டது 

 1. 1978
 2. 1988
 3. 1998
 4. 1968

விடை : 1988

2. பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகத்திலுள்ள காட்சிக் கூடங்கள் __________

 1. 7
 2. 8
 3. 9
 4. 10

விடை : 10

3. தற்காலத்தின் ஐன்ஸ்டைன் என்று புகழப்படுபவர் __________

 1. கலிலியோ
 2. ஸ்டீபன் ஹாக்கிங்
 3. நியூட்டன்
 4. எடிசன்

விடை : ஸ்டீபன் ஹாக்கிங்

4. பிரபஞ்சத்தை இயக்க வைக்கும் ஆற்றலாக கடவுள் என்ற ஒருவரைக் கட்டமைக்க வேண்டியதில்லை என்று கூறியவர் __________

 1. வாட்சன்
 2. ஜான் வீலர்
 3. வேர்டுஸ்மித்
 4. ஸ்டீபன் ஹாக்கிங்

விடை : ஸ்டீபன் ஹாக்கிங்

5. __________ என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதலில் பயன்படுத்தியவர் ஸ்டீபன் ஹாக்கிங்

 1. அணுக்கரு
 2. உட்கரு
 3. புரோட்டான்
 4. கருத்துளை

விடை : கருத்துளை

7. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நியூட்டன், ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோர்  வகித்த பதவி ___________ துறையில் லூகாசியன் பேராசிரியர்

 1. வேதியியல்
 2. கணக்கியல்
 3. இயற்பியல்
 4. உயிரியல்

விடை : கணக்கியல்

8. ஈர்ப்பலைகள் குறித்த முடிவுகளைத் கணிதச் சமன்பாடுகள் மூலம் கோட்பாடுகளாகச் சொன்னவர் ___________

 1. சார்லஸ் டார்வின்
 2. ஸ்டீபன் ஹாக்கிங்
 3. ஐன்ஸ்டைன்
 4. ஜான் வீலர்

விடை : ஐன்ஸ்டைன்

9. ஐன்ஸ்டைன் காலத்தில் ___________ என்னும் கோட்பாட்டை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை

 1. E = MC2
 2. E = CM2
 3. F = CM2
 4. F = MC2

விடை : கலித்தொகை

10. ஐன்ஸ்டைன் ஈர்ப்பலைகள் இருப்பதாக கூறியதை உலகம் ___________ ஆண்டுகளுக்குப் பின் கண்டு கொண்டது.

 1. 50
 2. 100
 3. 150
 4. 200

விடை : 100

11. அமெரிக்காவின் உயரிய விருதான அதிபர் விருதினை பெற்றவர் ___________

 1. வாட்சன்
 2. ஜான் வீலர்
 3. வேர்டுஸ்மித்
 4. ஸ்டீபன் ஹாக்கிங்

விடை : ஸ்டீபன் ஹாக்கிங்

12. ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய “காலத்தின் சுருக்கமான வரலாறு” வெளிவந்த ஆண்டு ___________

 1. 1976
 2. 1978
 3. 1986
 4. 1988

விடை : 1988

13. “திரு மாவியல் நகர்க் கருவூர் முன்துறை” என்பதை குறிப்பிடப்படும் மாவட்டம்

 1. திருச்சி
 2. கரூர்
 3. தஞ்சாவூர்
 4. பெரம்பலூர்

விடை : கரூர்

14. அறிவை விட மிகவும் முக்கியமானது கற்பனைத்திறன் என்று கூறியவர் ___________

 1. ஐன்ஸ்டைன்
 2. நியூட்டன்
 3. எடிசன்
 4. ஸ்டீபன் ஹாக்கிங்

விடை : ஐன்ஸ்டைன்

15. அறிவுத் தேடலில் உடல், உள்ளத் தடைகளைத் தகர்த்த மாமேதை ___________

 1. ஐன்ஸ்டைன்
 2. நியூட்டன்
 3. எடிசன்
 4. ஸ்டீபன் ஹாக்கிங்

விடை : ஸ்டீபன் ஹாக்கிங்

16. கலீலியோவின் நினைவு நாளில் பிறந்து ஐன்ஸ்டைனின் பிறந்த நாளில் இறந்தவர் ___________

 1. ஐன்ஸ்டைன்
 2. நியூட்டன்
 3. எடிசன்
 4. ஸ்டீபன் ஹாக்கிங்

விடை : ஸ்டீபன் ஹாக்கிங்

17. ___________இல் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நாயர் என்ற சிறப்பை ஸ்டீபன் ஹாக்கிங் பெற்றார்.

 1. 2007
 2. 2010
 3. 2009
 4. 2012

விடை : 2012

குறு வினா

1. ஸ்டீபன் ஹாக்கிங்கின் முன்னோடிகள் யாவர்?

ஐன்ஸ்டைன், நியூட்டன்

2. ஸ்டீபன் ஹாக்கிங் பெற்ற விருதுகள் யாவை?

 • அமெரிக்காவின் உயரிய விருதான, அதிபர் விருது (Presidential medal of Freedom)
 • ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது
 • உல்ஃப் விருது (Wolf Foundation Prize)
 • காப்ளி பதக்கம் (Copley Medal)
 • அடிப்படை இயற்பியல் பரிசு (Fundamental Physics Prize)

3. ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல்களுள் எந்நூல் நாற்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?

ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல்களுள் “காலத்தின் சுருக்கமான வரலாறு” என்ற நூல் நாற்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

4. கரூர் மாவட்டத்தின் கருவூர் (கரூர்) பற்றிய அகநானூறு வரிகளை கூறுக

“கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை
திரு மா வியல நகரக் கருவூர் முன்துறை”

5. ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய காலத்தின் சுருக்கமான வரலாறு நூல் எதனைப் பற்றியது?

ஸ்டீபன் ஹாக்கிங் எழுதி 1988-ம் ஆண்டு “காலத்தின் சுருக்கமான வரலாறு” பெருவெடிப்பு, கருந்துளை ஆகியவை பற்றிய அரிய உண்மைகளைப் பற்றியது.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment