TN 10th Standard Tamil Book Back Answers | Lesson 3.3 – மலைபடுகடாம்

3.3 மலைபடுகடாம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 10th Standard Tamil Lesson 3.3 – மலைபடுகடாம். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

10th Standard Tamil Guide - Malaipadukadam

10th Std Tamil Text Book – Download

சொல்லும் பொருளும்

  • அசைஇ – இளைப்பாறி
  • அல்கி – தங்கி
  • கடும்பு – சுற்றம்
  • நரலும் – ஒலிக்கும்
  • ஆரி – அருமை
  • படுகர் – பள்ளம்
  • வயிரியம் – கூத்தர்
  • வேவை – வெந்தது
  • இறடி – திசை
  • பொம்மல் – சோறு

பகுபத உறுப்பிலக்கணம்

1.  மலைந்து = மலை + த் (ந்) + த் + உ

  • மலை – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்த கால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

2. பொழிந்த = பொழி + த் (ந்) + த் + உ

  • பொழி – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்த கால இடைநிலை
  • அ – பெயரச்ச விகுதி

இலக்கணக் குறிப்பு

  • அசைஇ, கெழீஇ – சொல்லிசை அளபெடைகள்
  • பரூஉக், குரூஉக்கண் – செய்யுளிசை அளபெடைகள்

நூல் வெளி

  • பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று “மலைபடுகடாம்”
  • 583 அடிகளை கொண்டது.
  • “”கூத்தராற்றுப்படை” என அழைக்கப்படுகிறது.
  • மலைக்கு யானையை உருவாகமாகக் கூறி, அதன் ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்துள்ளதால் மலைப்படுகடாம் எனப்பெயர் பெற்றது.
  • “நன்னன்” என்ற குறுநில மன்னன் பாட்டுடைத் தலைவன் ஆவான்.
  • மலைபடுகடாம் ஆசிரியர் “இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கெளசினார்”.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி என்னும் அடியில் பாக்கம் என்பது-

  1. புத்தூர்
  2. மூதூர்
  3. பேரூர்
  4. சிற்றூர்

விடை : பேரூர்

குறு வினா

இறடிப் பொம்மல் பெறுகுவிர் தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக

தினைச் சோற்றையும் உணவாகப் பெறவீர்கள்.

சிறு வினா

1. முல்லை நிலத்திலிருந்தும் மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவு வகைகள் யாவை?

திணை கிடைக்கும் உணவுப் பொருட்கள்
முல்லை வரகு, சாமை
மருதம் செந்நெல், வெண்ணெல்

2. கூத்தனைக் கூத்தன் ஆற்றப்படுத்தலைக் கூத்தாராற்றப்படை எவ்வாறு காட்டுகிறது.

வழிகாட்டல்:-

பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள். இரவில் சேர்ந்து தங்குங்கள். எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்து கொள்ளுங்கள். சிவந்த பூக்கள் கொண்ட அசோக மூங்கில்கள் ஓசை எழுப்பும் மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையங்கள்.

நன்னின் கூத்தர்கள்:-

பகைவரே இல்லாமல் ஆட்சி செய்பவன், பகை வந்தாலும் எதிர் கொள்ளும் மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்.

இன் சொற்கள்:-

நீங்கள் உரிமையுடன் உங்கள் வீட்டிற்கு போவது போலவே அவர்களுடைய வீட்டிற்குள் நுழையுங்கள். அவர்களும் உங்களிடம், உறவினர் போலப் பழகி இனிய சொற்களைப் பேசுவார்கள்.

உணவு:-

நெய்யில் வெந்த மாசிசம், தினைச் சோறு ஆகியவற்றை உணவாக அளிப்பர். அவற்றை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

நெடு வினா

ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.

குறிப்புச்சட்டம்
  • முன்னுரை
  • உணவு
  • கல்வி
  • தொழில்
  • நன்னடை
  • முடிவுரை

முன்னுரை:-

அன்றைய நிலையில் பொருளுக்காக ஆற்றப்படுத்துவது நிகழ்ந்தது. ஆனால் இன்று ஆற்றுப்படுத்தல் அதிலிருந்து விலகி வேறுபடுகின்றது.

உணவு:-

அன்றைய பாணர்கள், கூத்தர்கள் மன்னனிடமோ, வள்ளலிடமோ ஆற்றுப்படுத்தினர். ஆனால் இன்று வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உணவு தரும் அன்னச் சத்திரங்கள் பற்றியும், அன்னதானம் நடைபெறும் இடங்களைப் பற்றியும் ஆற்றுப்படுத்துகின்றனர்.

கல்வி:-

கல்வி கற்க முடியாதவர்களுக்கு  கல்வி உதவித் தொகை அளிக்கும் அரசின் திட்டங்கள் பற்றியும், உதவும் தொண்டு நிறுவனங்கள் குறித்தும் இன்று பல் வழிகாட்டல் செய்கின்றனர்.

தொழில்:-

இன்று வேலைவாய்ப்பின்மை பெருகி வருகின்றது. அதனைப் போக்க அரசும் பொதுத்துறை நிறுவனங்களும் தொழிற்பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்தியுள்ளது. வேலையில்லாமல் திண்டாடுவோருக்கு அவை குறித்த வழிகாட்டல்கள் இன்று செய்யப்பட்டு, வேலையில்லா திண்டாட்டம் ஓரவு போக்கப்படுகின்றது.

நன்னடை:-

சமுதாயத்தில் இன்று வன்முறை பெருகியுள்ளது. இதற்குக் காரணம் சினம், பொறாமை, சகிப்புத்தன்மை இல்லாமை ஆகியவையே! அவற்றைக் கட்டுப்படுத்த, அனைவருக்கும் மனதை ஒருநிலைப்படுத்த தியானப் பயிற்சி செய் இன்று வழிகாட்டல்கள் செய்கின்றனர்.

முடிவுரை:-

வழிகாட்டல் என்பது நெறிபிறழும் சமுதாயத்தைக் காக்க உதவும் ஒரு இன்றியமையாத கருவியாகும். வழிகாட்டலுக்கு வித்து ஆற்றப்படுத்தல் இலக்கியங்களே சான்றாகும்.

கற்பவை கற்றபின்

1. உணவு, விருந்து குறித்த பழமொழிகளை திரட்டி அவை சார்ந்த நிகழ்வுகளை எடுத்துரைக

அ) “உப்பிட்டவரை உள்ளளவும் நினை”

கதை – எறும்பும் புறாவும்

குளத்து நீரில் விழுந்து தத்தளித்த எறும்பைத் தக்க சமயத்தில் பறவையானது ஓர் இலையை பறித்து போட்டு எறும்பை அதன்மீது ஏறி கரைக்கு வரச்செய்தது. செய்நன்றி மறவாதா எறும்பானது புறவைக் கொல்ல வந்த வேடனின் காலைக் கடித்ததால் அவன் எய்த அம்பு தவறியது புறா காப்பாற்றப்ட்டது

ஆ) “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு”

கதை

பல நாட்களாக பட்டினியாக கிடந்த எலி ஒன்று தானியங்கள் நிரப்பப்பட்ட ஓர் உயரமான பானையைப் பார்த்தது. உயரத்தில் ஏற முடியாத காரணத்தால் எலியானது பானையின் அடியில் உள்ள ஓட்டையின் வழியே உள்ளே சென்றது. அளவுக்கு அதிகமான தானியங்களை உண்டதால் வயிறு புடைத்தது. ஓட்டையை விட்டு வெளியேற முடியாத எலி மீண்டும் மீண்டும் முயன்ற அதன் வயிற கிழிந்தது. ஓட்டையை விட்டு வெளியேற சில நிமிடங்களிலே வலியால் துடித்தது செத்தது.

2. பத்தியைப் படித்த வார இதழ் ஒன்றிற்கு அனுப்பும் வகையில் சமையல் குறிப்பாக மாற்றுக

கம்மங்கூழ் தயாரித்தல்

பொசுக்குகிறது வெயில், ஒரு துளி மழை பட்டால் வறுத்த உளந்தின் வாசம் பரப்பும் வறண்ட மண், வெடித்த் நிலம் செழித்து விளைகிறது கம்மம் பயிர். உரலில் குத்தி, சுளகில் புடைக்க அதன் உழி நீங்கும். நீர் தெளித்துத் தெளித்து, மீண்டுமு் உரலில் இடிக்க அது ஒன்றுடன் ஒன்று ஒட்டி மாவாகும். உப்புக் கலந்து உலையில் ஏற்றி, கொதிக்கும் நீரில் கரைய விட்டுக் கிண்ட, கட்டியாகி அது சோறாகும். கம்மஞ் சோற்றை உருட்டி வைத்து, பின் மோர் விட்டு கரைத்தால் அது கம்மங்கஞ்சி அல்லது கம்மங்கூழ், மோர் மிளகாய் வற்றல், உப்பில் தாேய்த்த பச்சை மிளகாய் அல்லது சின்ன வெங்காயம் கடித்து கஞ்சியைக் குடித்தால் உச்சி தொட்டு உள்ளங்கால் வரை தேகம குளிர்ந்து போகும். அனல் அடங்கும். உயிர் வரும் கம்பு கறுப்பு நிறக் கரிசல் மண்ணின் இயற்கைத் தங்கம்.

கம்மங்கூழ் (தேவையான பொருட்கள்)

  • கம்மம் பயிர் – 2 கைப்பிடி
  • உப்பு – தேவைக்கேற்ப
  • நீர் – தேவைக்கேற்ப
  • மோர் – அரைலிட்டர்
  • மோர் மிளகாய் வற்றல் – 10 எண்ணம்
  • பச்சை மிளகாய் (அல்லது) சின்ன வெங்காயம் – தேவைக்கேற்ப

செய்முறை

கம்மம் பயிரை நிர் தெளித்து உரலில் இடிக்க அது ஒன்றுடன் ஒன்று ஒட்டி மாவாகும். அதனுள் தேவையான அளவு நீரும் உப்பும் சேரத்து உலையிட்டால் அது இறுகி சோறாகும். அந்தச் சோறுடன் மோர் விட்டு கரைத்தால் கம்மங்கூழ் தயார். மோர் மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் அல்லது சின்ன வெங்காயத்தைக் கடித்துக் கொண்டு இக்கஞ்சியைக் குடிக்கலாம்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு

  • எய்தி, கூறி, புக்கு – வினையெச்சங்கள்
  • பொழிந்த, சேர்ந்த – பெயரெச்சங்கள்

பலவுள் தெரிக

1. பத்துபாட்டு நூல்களுள் ஒன்று __________

  1. நற்றிணை
  2. குறுந்தொகை
  3. மலைபடுகடாம்
  4. புறநானூறு

விடை : மலைபடுகடாம்

2. மலைபடுகடாம் __________  அடிகளை கொண்ட நூல்

  1. 283
  2. 383
  3. 483
  4. 583

விடை : 583

3. கூத்தராற்றுப்படை எனக் கூறப்படும் நூல் _______

  1. மலைபடுகடாம்
  2. பெரும்பாணாற்றுப்படை
  3. சிறுபாணாற்றுப்படை
  4. விறலியாறற்றுப்படை

விடை : மலைபடுகடாம்

4. பொருந்தாத பொருளுக்கான இணை எது?

  1. வேவை – வெந்து
  2. இறடி – தினை
  3. பொம்மல் – சோறு
  4. நரலும் – சுற்றம்

விடை : நரலும் – சுற்றம்

5. மலைபடுகடாம் என்னும் நூலில் மலைக்கு உவமையாக கூறப்படுவது _______

  1. மான்
  2. யானை
  3. மேகம்
  4. வானம்

விடை : யானை

6. இரணிய முட்டத்துப் பெருங்குன்றூரைச் சார்ந்த புலவர் _______

  1. பெருஞ்சித்திரனார்
  2. மருதனார்
  3. பெருங்கெளசிகனார்
  4. நக்கீரர்

விடை : பெருங்கெளசிகனார்

7. பொருந்தாதை கண்டறிக

  1. திருமுருகாற்றுப்படை – நக்கீரர்
  2. சிறுபாணாற்றுப்படை – நல்லூர் நத்தத்தனார்
  3. பொருநாராற்றுப்படை – முடத்தாமக்கண்ணியார்
  4. மலைபடுகடாம் – கடியலூர் உருத்திரங்கண்ணணார்

விடை : மலைபடுகடாம் – கடியலூர் உருத்திரங்கண்ணணார்

8. “அசைஇ” என்பதன் பொருள் _______

  1. அசைவாடிய
  2. இளைப்பாறி
  3. அமைதியாகி
  4. இன்பமாகி

விடை : இளைப்பாறி

9. “கன்று ஏரி” – என்பதில் “ஏரி” எனக் குறிப்பிடப்படுவது _______

  1. நெருப்பு
  2. கொம்பு
  3. வால்
  4. நீர்

விடை : நெருப்பு

10. அசோக மரங்கள் _______ வண்ணப் பூக்களை கொண்டது

  1. கரும்
  2. சிவந்த
  3. நீலநிற
  4. வெண்மையான

விடை : சிவந்த

11. “அல்கி” என்பதன் பொருள் _______

  1. தங்கி
  2. உள்ளே
  3. வெளியே
  4. அழிந்து

விடை : தங்கி

12. “மலைந்து” என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை _________

  1. மலைந்து + உ
  2. மலைந் + த் + உ
  3. மலை + த் (ந்) + த் + உ
  4. மலை + த் + த் + உ

விடை : மலை + த் (ந்) + த் + உ

13. “பொழிந்து” என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை _________

  1. பொழிந்து + உ
  2. பொழிந் + த் + உ
  3. பொழி + த் + த் + உ
  4. பொழி + த் (ந்) + த் + உ

விடை : பொழி + த் (ந்) + த் + உ

14. நன்னன் எந்நில மன்னன்?

  1. பெருநில
  2. சிறுநில
  3. குறுநில
  4. மாநில

விடை : குறுநில

15. மலைபடுகடாமின் (கூத்தாராற்றுப்படை) பாட்டுடைத் தலைவன் …………..

  1. பாரி
  2. கபிலர்
  3. நன்னன்
  4. பெருங்கெளசிகனார்

விடை : நன்னன்

பொருத்துக

1. அசைஇ அ. சுற்றம்
2. அல்கி ஆ. கன்றின் நெருப்பு
3. கன்று ஏரி இ. இளைப்பாறி
4. கடும்பு ஈ. தங்கி
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ

பொருத்துக

1. ஆரி அ. பள்ளம்
2. நரலும் ஆ.கூத்தர்
3. படுகர் இ. அருமை
4. வயிரியம் ஈ. ஒலிக்கும்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ

குறு வினா

1. ஆற்றுப்படை என்றால் என்ன?

  • ஆற்றப்படுத்தும் கூத்தன், வள்ளலை நாடி எதிர்வரும் கூத்தனை அழைத்தல்
  • யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம்,
  • நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை ஆகும்.

2. மலைப்படுகடாம் பெயர்க்காரணம் கூறுக

மலைக்கு யானையை உருவாகமாகக் கூறி, அதன் ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்துள்ளதால் மலைப்படுகடாம் எனப்பெயர் பெற்றது.

3. பண்டையத் தமிழ் கலைஞர்கள் யாவர்?

கூத்தர், பாணர், விறலியர்

4. மலைப்படுகடாமில் ஒளிரும் பூங்கொத்துகளுக்கு கூறப்பட்ட உவமை யாது?

எரியும் நெருப்பு

5. “நோனாச் செருவின் வலம்படு நோன்தான்
மானா விறல்வெள் வயிரியம் எனினே – என்று யார் யாரிடம் கூறினார்?

நன்னனைப் புகழ்ந்து பாடி பரிசில் பெற்ற கூத்தர், பரிசில் பெறப்போகும் கூத்தரிடம் கூறினார்.

6. “நோனாச் செருவின் வலம்படு நோன்தான்
மானா விறல்வெள் வயிரியம் எனினே – தொடர் பொருள் விளக்குக

தொடர் இடம் பெறும் நூல் : மலைபடுகடாம்

தொடர் பொருள் விளக்கம் : பகைவரைப் பெறாமல் பேர் செய்யும் வலிய முயற்சியும் மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்.

7. தினை, சோறு ஆகியவற்றிற்கு மலைபடுகடாம் தரும் சொற்கள் யாவை?

8. பத்துப்பாட்டில் அமைந்த ஆற்றுப்படை நூல்கள் மற்றும் அதன் ஆசிரியர் பெயர்களையும் எழுதுக

  • திருமுருகாற்றுப்படை – நக்கீரர்
  • பெரும்பாணாற்றுப்படை – கடியலூர் உருத்திரங்கண்ணணார்
  • சிறுபாணாற்றுப்படை – நல்லூர் நத்தத்தனார்
  • பொருநாராற்றுப்படை – முடத்தாமக்கண்ணியார்
  • கூத்தராற்றுப்படை – பெருங்கெளசிகனார்

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment