4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12th Standard Tamil Lesson 4.5 – பாதுகாப்பாய் ஒரு பயணம் We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
பாடநூல் வினாக்கள்
நெடு வினா
‘சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு’ – இக்கூற்று நனவாக நாம் செய்ய வேண்டியன யாவை?
இந்தியாவிலேயே மிகுந்த சாலை விபத்து நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. எனவே சாலை விபத்தில்லா தமிழ்நாடு உருவாக்க நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இருசக்கர வாகன விபத்தினைத் தவிர்க்க வேண்டும்:-
- 18 வயது நிறைந்தவர்கள் மட்டுமே முறையான பயிற்சி பெற்று, ஓட்டுநர் உரிமம் பெற்று இரு சக்கர ஊர்தியை இயக்க வேண்டும்.
- தலைக்கவசம் அணிந்தே செல்ல வேண்டும்.
- இரண்டு பேருக்கு மேல் இரு சக்கர வாகனத்தில் செல்லக் கூடாது.
- வாகனம் ஓட்டும் போது கைபேசியை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
- சாலையில் ஊர்தியைக் குறுக்கும் நெடுக்குமாக இயக்காமல் இருத்தல் வேண்டும்.
- காதணி கேட்பிகள் பயன்படுத்தி இரண்டுச் சக்கர வாகனங்களை இயக்கக் கூடாது.
வாகன ஓட்டிகளின் அலடசியம்:-
அவசரம் என்று ஆளுகைக்கு உட்பட்ட நாம் விபத்தில்லாத் தமிழ்நாடு உருவாக சில விழிப்புணர்வுகளைக் கட்டாயமாகக் கொடுத்தல் வேண்டும்.
விபத்துகள் மிகுதியாக நடைபெறுவதற்கான காரணங்கள்:-
- வாகன ஓட்டுநர்கள் கவனக்குறைவு.
- பயிற்சி இல்லாமல் வாகனம் ஓட்டுவது தவறு.
- தவறான தட்ப வெப்பநிலையும், தட்ப வெப்நிலைக்கு ஏற்ற வாகனம் ஓட்டும் பயிற்சி பெறுவது.
- இயந்திரக் கோளாறு, மிகுதியான ஆட்களை, சரக்குளை ஏற்றிச் செல்வது.
- தொடர்வண்டி இருப்புப்பாதைகளைக் கவனிக்காமல் கடப்பது.
- மது அருந்திவிட்டு ஊர்தி ஓட்டுவதால் நிறையவே விபத்துகள் நடக்கின்றன.
விபத்துகள் மிகுதியாக நடைபெறுவதற்கான காரணங்கள் அறிநது விபத்துகளைத் தவிர்க்க வேண்டும்.
விபத்துகளைத் தவிர்க்க:-
- பள்ளி மாணவர்களிடம் சாலை விதிகள் மற்றும் விபத்துகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வுகளை கொடுத்தல் வேண்டும்.
- சாலையில் எவ்வாறு செல்ல வேண்டும் என்ற சாலை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி செல்ல வேண்டும்.
- வேகமாகச் செல்லும் வண்யின் பின்புறத்தை பிடித்துக் கொண்டு ஓடுவது, மிதிவண்டியில் ஓடுவது, தவறானது, முற்றிலும் தவிரக்கப்பட வேண்டும்.
- பேருந்தில் பயணம் செய்யும் போது எப்படிப் பயணிப்பது என்பதை அறிந்து அதன்படி நடப்பது.
- பாதுகாப்பாகப் பயணிக்க உதவுகின்ற உத்தரவுக் குறியீடுகள், எச்சரிக்கை குறியீடுகள், தகவல் குறியீடுகள் ஆகியவற்றை அறிநத்து அதனைப் பின்பற்றிப் பயணித்தல் வேண்டும்.
இவ்வாறு வாகனம் ஓட்டும்போது அலட்சியத்தைத் தவிர்த்து விபத்துகள் நடைபெறுவதற்கான காரணங்களை அறிந்து, இருசக்கர வாகனங்களை முறையா உபயோகித்து சாலை விதிகளைப் பின்பற்றி, விபத்துகளைத் தவிர்த்து வந்தோன் என்றால் “சாலை விபத்தில்லா தமிழ்நாடு” உருவாகும்
கற்பவை கற்றபின்
1. சாலைப் பாதுகாப்பினை வலியுறுத்தும் முழக்கத் தொடர்கள் அடங்கிய பதாகைகள் சிலவற்றை உருவாக்கிப் பள்ளியில் காட்சிப்படுத்துக.
2. எதிர்பாராத சூழலில் ஏற்படும் சாலைவிபத்தையும், அவற்றைத் தடுக்கும் முறைகளையும் உள்ளடக்கிய நாடகம் ஒன்றை நடத்திக் காட்டுக.
பங்குபெறுவோர் : ராமு, சோமு, பீமு
ராமு | எங்க அப்பாவிடம் கேட்டுத் தொந்தரவு பண்ணி வாங்கின இரு சக்கர வாகனம் இதுடா! |
சோமு | நல்லா இருக்குடா, பல்சாரா? |
ராமு | பல்சர்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்டா. சரி இன்றைக்கு மகாபலிபுரம் வரைக்கும் வண்டியில போய் வருவோமோ? |
சோமு | நான் தயார். ஆனா பீமு நீ வர்றியா? |
பீமு | நானும் வர்றேன். ஆனால் ஒரு வேண்டுகோள். |
ராமு | என்னன்னு சொல்லு |
பீமு | மூவரும் வண்டியில் போகனும்மா, தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். |
ராமு | மூன்றும் இருக்குடா, போகலமாம் வா. |
(மூவரும் செல்கின்றனர். எதிரே லாரி ஒன்று தடம் மாறி வேகமாக வருகிறது. எவ்வளவோ இருசக்கர வாகனத்தை வளைத்தும் முடியாமல் வண்டி கீழே விழுந்து விட்டது. மூவருக்கும் காயம். மருத்துவமனை சென்று வீடு திரும்புதல்)
பீமு | தலைக்கவசம் அணிய சொன்னேன். அதனால் தான் தலையில் அடி படல |
ராமு | பீமு, நீ நல்லா சொன்னடா, நான் முதல்ல தலைக்கவசம் வேணான்னு நெனச்சேன். மூன்று உயிரையும் நீ காப்பித்திட்ட. |
சோமு | ஆமாண்டா, பீமு நீ வற்புறுத்தலன்னா, தலைக்கவசம் அணிந்திருக்க மாட்டோம். வெறும் தலையோட போயிருப்போம். அதிகமாக அடி பட்டிருக்கம். |
பீமு | நான் காப்பத்தலாடா, தலைக்கவசம் நம்மள காப்பாத்துச்சு |
மூவரும் | தலைக்குக் கவசம்! நம் உயிர் காக்கும் சுவாசம்! |
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக.
1. சராசரியாக நாளொன்றுக்கு எத்தனை விபத்துகள் நடப்பதாகக் குறிப்பிடப்படுகிறது?
- 1317
- 1318
- 1319
- 1320
விடை : 1317
2. சராசரியாக நாளொன்றுக்கு நடக்கும் விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை
- 513
- 713
- 613
- 413
விடை : 413
3. தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துகளில் இருசக்கர ஊர்தியால் ஏற்படும் விபத்தின் விழுக்காடு
- 35
- 37
- 38
- 40
விடை : 35
4. உரிய வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்தியை இயக்கினாலோ வித்தினை ஏற்படுத்தினாலோ அக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கு __________ ஆண்டுகள் சிறை தண்டணை
- 5
- 4
- 3
- 2
விடை : 3
5. கூற்று 1 – சாலை சந்திப்புகளில் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை
கூற்று 2 – இதர சாலைப் பயனாளிகளை நண்பராக எண்ண வேண்டும்.
- கூற்று 1 மட்டும் சரி
- கூற்று இரண்டும் தவறு
- கூற்று இரண்டும் சரி
- கூற்று 2 மட்டும் சரி
விடை : கூற்று இரண்டும் சரி
6. கூற்று 1 – சாலை போக்குவரத்து உதவிக்குத் தொலைபேசி எண் 109-ஐ தொடர்பு கொள்ளலாம்.
கூற்று 2 – எதிரில் வரும், கடந்து செல்ல முற்படும் ஊர்த்திகளுக்கு வழிவிட வேண்டும்.
- கூற்று 1 மட்டும் சரி
- கூற்று இரண்டும் தவறு
- கூற்று இரண்டும் சரி
- கூற்று 2 மட்டும் சரி
விடை : கூற்று 2 மட்டும் சரி
7. சரியானதைத் தேர்க
- சாலையில் உத்தரவு குறியீடுகள் இடம் பெறாது.
- சாலைச் சந்திப்புகளில் பாதுகாப்பற்ற அணுகுமுறை தேவை
- சாலைப்போக்குவரத்து உதவிக்குத் தொலைபேசி எண் 103-ஐ தொடர்பு கொள்ளவும்
- 18 வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்தி இயக்கலாம்.
விடை : சாலைப்போக்குவரத்து உதவிக்குத் தொலைபேசி எண் 103-ஐ தொடர்பு கொள்ளவும்
8. நாளொன்றுக்கு நேரும் விபத்துகளில் உயிரிழப்போர்
- மூன்றில் ஒரு பங்கினர்
- நான்கில் ஒரு பங்கினர்
- ஐந்தில் ஒரு பங்கினர்
- ஆறில் ஒரு பங்கினர்
விடை : மூன்றில் ஒரு பங்கினர்
9. பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனம் ஓட்டுவது
- சட்டப்படி சரியாகும்
- சட்டப்படி குற்றமாகும்
- சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது
- இவற்றில் எதுவுமில்லை
விடை : சட்டப்படி குற்றமாகும்
குறு வினா
1. சாலைப் போக்குவரத்து உதவிக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் யாது?
சாலைப் போக்குவரத்து உதவிக்குத் தொலைபேசி எண் 103ஐ தொடர்பு கொள்ளலாம்.
2. மிகுவேகமாக ஊர்தியை இயக்கினால் கட்ட வேண்டிய தண்டத்தொகை எவ்வளவு?
மிகுவேகமாக ஊர்தியை இயக்கினால் ரூ. 5000 தண்டத்தொகை கட்ட நேரும்.
3. ஊர்திகளுக்குக் காப்பீடு இல்லாமல் இயக்கினால் கட்ட வேண்டிய தண்டத்தொகை எவ்வளவு?
ஊர்திகளுக்குக் காப்பீடு இல்லாமல் இயக்கினால் ரூ. 2000 தண்டத்தொகை கட்ட நேரும்
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…