3.4 உரிமைத் தாகம்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12th Standard Tamil Lesson 3.4 – உரிமைத் தாகம். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
நூல் வெளி
- ’உரிமைத்தாகம்’ என்னும் இச்சிறுகதை ‘பூமணி சிறுகதைகள்’ என்னும் தொகுப்பில் உள்ளது.
- பூமணி, கரிசல் எழுத்தாளர்களில் ஒருவர்.
- பூ. மாணிக்கவாசகர் என்ற தனது பெயரைச் சுருக்கிப் பூமணி என்ற பெயரில் எழுதி வருகிறார்.
- தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையில் துணைப் பதிவாளராகப் பணியாற்றியவர்.
- அறுப்பு, வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகியன இவரது சிறுகதைத் தொகுப்புகள்.
- வெக்கை, பிறகு, அஞ்ஞாடி, கொம்மை உள்ளிட்ட புதினங்களை எழுதியுள்ளார்.
- கருவேலம்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- அஞ்ஞாடி என்னும் புதினத்திற்காக 2014இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார்.
பாடநூல் வினாக்கள்
‘உரிமைத்தாகம்’ கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால் கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க.
கதைமாந்தர்கள்
முத்தையா, வெள்ளைச்சாமி, பங்காருசாமி, முத்தையா மனைவி மூக்கம்மாள்
முன்னுரை:-
ஆசிரியர் பூமணி எழுதிய உரிமைத்தாகம் என்னும் சிறுகதையில் மன விரிசலால், தம்பி படும் துன்பத்தை எழுத்தோவியமாக்கித் தந்திருக்கிறார். அன்ணன் முத்தையன், தம்பி வெள்ளைச்சாமி
தம்பி வெள்ளைச்சாமி கடன் வாங்குதல்:-
வெள்ளைச்சாமி தன் திருமணத்திற்கு பிறகு அண்ணனை விட்டுப் பிரிந்து விடுகிறான். இந்நிலையில் ரூ.200 நிலத்தின் மீது பங்காரு சாமியிடம் கடனாக வாங்குகிறான். இது முத்தையனுக்குத் தெரியாது. ஆனால் முத்தையன் மனைவி இதைத் தெரிந்து கொண்டு முத்தையனிடம் கூறுிறாள். வெள்ளைச்சாமியால் கடனை அடைக்க முடியவில்லை. இதற்கிடையே முத்தையன் மனைவி தன் நகைகளை அடகு வைத்து கடனை அடைக்கச் சொல்கிறாள்.
முத்தையன் பங்காரு வீட்ற்கு செல்லுதல்:-
முத்தையன் ரூ.200-யை எடுத்துக் கொண்டு பங்காருசாமி வீட்டுக்குச் செல்கிறான். அண்ணன் தம்பிக்காக வந்திருப்பதை அறிந்த பங்காரு ரூ.400 தந்தால் எழுதிக் கொடுத்தால் பத்திரத்தை தருவதாகக் கூறுகிறார். வீடு திரும்பிய முத்தையன் தம்பியோடு சென்று நிலத்தை உழுகிறன். செயதியறிந்த பங்காரு முத்தையன் வெள்ளைச் சாமியுடன் சண்டை புரிகிறார். கடைசியல் நீதிமன்றத்திற்குப் போவேன் என்று மிரட்டுகிறார் பங்காரு. அதனை ஏற்காத அண்ணன் தம்பிகள் பங்காருவை விரட்டுகிறார்கள். அவரும் பயந்து ஓடிவிடுகிறார். இது கதையின் முடிவு.
அண்ணன் தம்பி இணையாதிருந்தால்:-
பங்காருசாமி நீதிமன்றத்திற்கு சென்றார். வழக்கறிஞர் ஒருவரைப் பார்த்து வெள்ளைச்சாமி மீது வழக்கு கொடுத்த்தார். இந்தச் செய்தியை வெள்ளைச்சாமி யாரிடமும் சொல்லவில்லை. நீதிமன்றத்திற்கு இரண்டுமுறை சென்று வந்தான். ஒரு நாள் பங்காருசாமியைப் பார்த்து என் நிலத்தைத் திருப்பிக் கொடுங்கள். விவசாயம் செய்து கடனை அடைக்கிறேன் என்கிறான். பங்காருசாமி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. மனம் உடைந் வெள்ளைச்சாமி வீட்டின் வாயில் படியிலேயே விஷம் சாப்பிட்டு மயக்க மடைகிறான்.
மருத்துவமனையில் வெள்ளைச்சாமி:-
வெள்ளைச்சாமியை பங்காருசாமியே மருத்துவமனையில் சேர்க்கிறார். சிகிச்சை பெறுகிறான் வெள்ளைச்சாமி, செய்தியறிந்த முத்தையன் மருத்துவமனை சென்று விபரம் அறிகிறான். முத்தையன் தன் தம்பிக்காக பணம் கேட்டு பங்காரு மிரட்டியதால் விஷம் குடித்தான் என்று காவல் துறையில் புகார் கொடுக்கச் சென்றான் பங்காருசாமி முத்தையனை வழிமறித்து அடமான பத்திரத்தை திருப்பி கொடுப்பதாகவும் வாங்கிய 200 ரூபாயைக் கொடுத்தாலே போதும் என்று வேண்டுகிறார். ஒப்புக்கொண்ட முத்தையன் புகார் கொடுப்பதைத் தவிர்த்து தம்பி வெள்ளைச்சாமியோடு வீடு திரும்பினார்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
கற்பவை கற்றபின்
1. ’நமது நிலமே நமது அடையாளம்’ – இக்கூற்றை விவாதிக்க.
நம்மை யார் என்று கேட்பவருக்குப் பெயரைச சொன்னவுடன் உன் ஊர் எது என்று கேட்பார்கள்
காரணம் என்னவென்றால், எந்த ஊர் என்றால் எநதவிதமான (மண்ணில்) நிலத்தில் வாழ்ந்தவன். அவனது பண்புகள் என்னவாக இருக்கும் என்று கூறிவிடலாம். இது அனுபவத்தால் மட்டுமே முடியம்.
ஒவ்வொரு நிலத்தில் வாழும் மண்ணிற்கு தகுந்தாற்போல்தான் வாழ்பவரின் குணம் ஒத்திருக்கும். சங்க காலத்திலேயும் திணைக்குத் தகுந்தாற்போல பண்புகள் பெற்றிருப்பதை அறிய முடிகிறது. மண்ணின் அடிப்படையில்தான் மனங்கள் இருப்பதுண்டு.
நமது நிலமே, நமது அடையாளம் – என்பது நமது பரம்பரையின் அடையாளமாகவே கொள்ளலாம்.
2. வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உறவினர்களின் பங்கு முக்கியமானது என்பதைக் குறித்துப் பேசுக.
அனைவருக்கும் வணக்கம்
உலகில் மக்கள் பெருக்கும் அதிகமாகிவிட்டது. ஆனால், உறவுகள் சுருங்கிவிட்டது. வேலைப் பளுவின் காரணமாக நாள்தோறும் உழைப்பில் மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது. உண்ணும் உணவில் கூட சிரத்தை எடுத்து கொள்வது கிடையாது.
பிள்ளையின் படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்ள நேரமில்லை. உடலைப் பற்றிய சிந்தனை இல்லாமல் இருக்கிறோம். எல்லாம் அவசரக் கோலங்கள், இந்நிலையில் எங்கள் வீட்டில் என் பெண்ணின் காதணி விழா. முதன் முதலில் எங்கள் வீட்டில் ஒரு விழா.
அவ்விழாவிற்கு எனக்கு ஒன்றுவிட்ட மாமா மகள் வந்திருந்தாள். ஏழ்மையான தோற்றம் ஏண்டா வந்தாள் என்று நினைத்தேன். ஆனால் காதணி விழாவின் அடுத்த அடுத்த நிகழ்வுகள், பந்திப் பரிமாறுதல், உறவினர்களை நலம் விசாரித்தல் போன்ற எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்தாள். என் உடன்பிறப்புகள் எல்லாம் வேடிக்கைப் பார்க்க, தனி ஒருவராக என் வீட்டு விழாவை நன்முறையில் நடத்திக் கொடுத்த உறவின் முக்கியத்தை என்றும் மறவேன். உறவுகள் அது நமது சிறகுகள்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. உத்தமசோழன் ___________ புதினத்திற்கா சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
- அஞ்ஞாடி
- விசாரணைக்கமிஷன்
- பிசிராந்தையர்
- சேரமான் காதலி
விடை : அஞ்ஞாடி
2. வரப்புகள், அஞ்ஞாடி முதலிய புதினங்களை எழுதியவர்
- கு.அழகிரிசாமி
- கண்ணதாசன்
- பூமணி
- உத்தமசோழன்
விடை : பூமணி
3. முத்தையனின் மனைவி பெயர்
- அல்லி
- லில்லி
- மூக்கம்மா
- கண்ணம்மா
விடை : மூக்கம்மா
4. உரிமைத்தாகம் என்ற சிறுகதையின் ஆசிரியர்
- கு.அழகிரிசாமி
- கண்ணதாசன்
- உத்தமசோழன்
- பூமணி
விடை : பூமணி
5 பூமணி எப்புதினத்திற்காக 2014-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றார்?
- அஞ்ஞாடி
- கொம்மை
- வெக்கை
- வாய்க்கால்
விடை : அஞ்ஞாடி
6. பூமணி எடுத்துள்ள திரைப்படம்
- கருவேலம்பூக்கள்
- கருத்தம்மா
- தண்ணீர் தண்ணீர்
- பொற்காலம்
விடை : கருவேலம்பூக்கள்
7. பூமணியன் சிறுகதைத் தொகுப்புகளில் பொருந்தாதது?
- சித்தன்போக்கு
- நொறுங்கல்கள்
- வயிறுகள்
- அறுப்பு
விடை : சித்தன்போக்கு
8. வெக்கை, நைவேத்தியம், வரப்புகள், வாய்க்கால், பிறகு, அஞ்ஞாடி, கொம்மை ஆகிய புதினங்களை இயற்றியவர்.
- வேணுகோபாலன்
- ந. பிச்சமூர்த்தி
- அகிலன்
- பூமணி
விடை : பூமணி
9. உரிமைத்தாகம் என்னும் சிறுகதை எடுத்துரைப்பது
- நிலத்துடனான உறவு குடும்ப உறவை வலுப்படுத்துவதை
- வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட இழப்புகள்
- முதலாளித்துவம் தொழிலாளிகளை நசுக்குவதை
- இவற்றில் ஏதுமில்லை
விடை : நிலத்துடனான உறவு குடும்ப உறவை வலுப்படுத்துவதை
சிறு வினா
1. பூமணி எழுதிய சிறுகதை தொகுப்புகள் யாவை?
அறுப்பு, வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகியன பூமணி எழுதிய சிறுகதை தொகுப்புகள் ஆகும்.
2. பூமணி எழுதிய புதினங்களை எழுதுக?
வெக்கை, பிறகு, அஞ்ஞாடி, கொம்மை ஆகியன பூமணி எழுதிய புதினங்கள் ஆகும்.
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…