2.1 பெருமழைக்காலம்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12h Standard Tamil Lesson 2.1 – பெருமழைக்காலம். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. வெள்ளச் சமவெளிகள் அழியக் காரணம்
- பருவநிலை மாற்றம்
- மணல் அள்ளுதல்
- பாறைகள் இல்லாமை
- நிலத்தடிநீர் உறிஞ்சப்படுதல்
விடை : மணல் அள்ளுதல்
2. உலக நாடுகள் மாற்று ஆற்றலை நோக்கிச் சென்றால் மட்டுமே புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த முடியும் – இத்தொடர் உணர்த்துவது
- கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே தேவையாகிறது
- பசுமைக்குடில் வாயுக்கள் அதிகமாகிறது
- காலநிலை மாறுபடுகிறது
- புவியின் இயக்கம் வேறுபடுகிறது
விடை : கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே தேவையாகிறது
குறு வினா
1. ‘ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்’ என்னும் முழக்கத்தொடர் வாயிலாக எவற்றை வலியுறுத்துவாய்?
‘ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்’ என்னும் முழக்கத்தொடர் வாயிலாக பின்வருவனவற்றை எடுத்துரைப்பேன்
Ø மழைக்கு ஆதாரம் மரம்
Ø உயிர்வளிக்கு உதவுவது மரம்
Ø மண் அரிப்பை தடுக்கும் மரம்
Ø மரம் தரும் நிழல் குளிச்சி என்று கூறுவேன்
2. மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தியதன் விளைவை இன்று சந்தித்துக்கொண்டிருக்கிறான் – இரு தொடர்களாக்குக.
Ø மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தினான்.
Ø மனிதன் இயற்கை வளங்களைச் சேதப்படுத்தியன் விளைவை இன்று சந்தித்து கொண்டிருக்கிறான்.
சிறு வினா
1. மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் குறிப்பிடுக.
- வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ளும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
- நீர்நிலைகளை முறையாகப் பராமரித்தல் வேண்டும்
- இயல்பாகவே பெருமழையைத் தாங்கக்கூடிய குளம், குட்டை, ஏரி, ஆறு, வடிகால் வாய்க்கால்கள், வெள்ளச் சமவெளிகளைச் தூர் வார்தல் வேண்டும்.
- சூறாவளி, புயல், வெள்ளம் குறித்த போதிய விழிப்புணர்வை அனைத்துப் பொதுமக்களும் பெறும் விதத்தில் பேரிடர் மேலாண்மை ஆணையம் முயற்சி மேற்கொள்ளுதல் வேண்டும்.
2. பேரிடர் மேலாண்மை ஆணையம் – விளக்கம் தருக
- நடுவண் அரசு 2005ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.
- புயல், வெள்ளம், நிலநடுக்கம், வறட்சி, சுனாமி, நிலச்சரிவு, தீ விபத்து, சூறாவளி, பனிப்புயல், வேதி விபத்துகள் முதலான பேரிடர்கள் நிகழும்போது பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்துச் செயலாற்ற இந்த ஆணையம் உதவுகிறது. இதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
- இக்குழுக்ககள் மாநிலம், மாநிலம், மாவட்டம், ஊராட்சி ,
சிற்றூராட்சி என அனைத்து நிலைகளிலும் குழுக்கள் அமைத்துப் பேரிடர்க் காலங்களில் செயலாற்ற ஆணையம் வழிவகை செய்துள்ளது.
- அரசு, தீயணைப்புத்துறை, காவல்துறை, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போன்ற பாதுகாப்பு அமைப்புகள் தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.
நெடு வினா
1. ‘நெகிழி தவிர்த்து நிலத்தை நிமிர்த்து’ என்னும் தலைப்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பசுமைதாசனாருடன் நீங்கள் நடத்திய கற்பனைக் கலந்துரையாடல் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
பெருமழைக்காலம்
அயோத்திதாசர் | வணக்கம் ஐயா! நான் உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். |
பசுமைதாசர் | வணக்கம் மிக்க மகிழ்ச்சி. |
அயோத்திதாசர் | நெகிழி என்றால் என்னங்க ஐயா! |
பசுமைதாசர் | நெகிழி என்பது திடப்பொருள். இச்சொல்லை பிளாஸ்டிக் என்றும் அழைப்பர். பிளாஸ்டிக்கோஸ் என்ற கிரேக்க சொல்லில் உருவானது. |
அயோத்திதாசர் | நெகிழி தோன்றியதன் வரலாறு கூறமுடியுமா ஐயா. |
பசுமைதாசர் | நெகிழி செல்லுலோஸ் என்ற பொருளால் ஆனது. இது 1862-ல் இலண்டனைச் சேரந்த அலெக்சாண்டர் பாக்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது. |
அயோத்திதாசர் | நெகிழியின் பயன்பாடுகள் பற்றிசி சில கூறுங்கள் ஐயா |
பசுமைதாசர் | பொதுவாக நெகிழி பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தாலும் தீமைகளே அதிகம்.
இன்றும் நாம் கையாளும் பொருள்கள் அனைத்திலும் நெகிழி உதவி இல்லாமல் இல்லை. காலை கண் விழித்து பல்துலக்கப் பயன்படுத்தும் பொருள் முதல் இரவு படுக்கைக்கு செல்லும்போது படுக்கும் பாய் வரை ஒவ்வொன்றும் நெகிழியால் உருவாக்கப்பட்டது. |
அயோத்திதாசர் | நல்லது ஐயா! அப்ப நெகிழி இல்லாமல் நாம் இல்லை. |
பசுமைதாசர் | அப்படி சொல்லக்கூடாது. நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் நெகிழி இல்லையே! |
அயோத்திதாசர் | சரிங்க ஐயா! நெகிழியால் ஏற்படும் தீமைகள் பற்றி எனக்கு விரிவாக விளக்குங்கள் ஐயா! |
பசுமைதாசர் | நெகிழியைப் பயன்படுத்துவதால் மண்வளம் குன்றி தாவர இனம் அழிகிறது. தாவர இனம் அழிவதால் மழை வளம் குறைகிறது. மழை இல்லை என்றால் மனிதர் இல்லையே. |
அயோத்திதாசர் | மேலும் அறிந்து கொள்ள விழைகிறேன் ஐயா! |
பசுமைதாசர் | உறுதியாகச் சொல்கிறேன்!
நீர் செல்லும் கால்வாய்களில் நெகிழி அடைக்கப்படுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. நெகிழியை எரிப்பதால் டையாசீன் என்ற நச்சு வெளிப்பட்டு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. சூடான பொருள்கள் நெகிழிப்பையில் வாங்கி உண்பதால் புற்றுேநாய் உருவாகிறது. அவற்றை சில விலங்குகள் உண்பதால் அவைகளும் மடிகின்றன. |
அயோத்திதாசர் | நன்றி ஐயா! |
பசுமைதாசர் | “துணிப்பை எளிதானது. தூர எறிந்தால் எருவாகும்…” “நெகிழிப்பை அழகானது. தூர எறிந்தால் விட(ஷ)மாகும்…. ” என்பதற்கு எற்ப நாம் நெகிழியைப் பயன்படுத்துவதைச் சிறிது சிறிதாக குறைப்போம்
மண்வளம் காப்போம்! மழை வளம் பெருக்குவோம்! |
அயோத்திதாசர் |
நன்றி! |
கற்பவை கற்றபின்
1. வெள்ளப் பேரழிவு குறித்த நாளிதழ்ச் செய்திகளைத் தொகுக்க.
கடலூர்
2015-ல் உலகையே உலுக்கிய வெள்ளம் கடலூரில் எங்குப் பார்த்தாலும் ஆடு, மாடுகள் இறந்துக்கிடக்கும் காட்சி கடலூர், தாழங்குடா, திருவந்திபுரம், நத்தம், ஞானமேடு போன்ற பகுதிகளில் குடிசை வீடுகள் தண்ணீரில் தத்தளித்தன. மரங்கள், மின்கம்பங்கள் விழுந்ததால் மின்சாரம் இல்லை. குடிநீர் இல்லை, நீர் தேங்கியதால் தொற்று நோய்கள். சிறுவர் முதியவர் இறப்பு எண்ணற்ற குடும்பங்களின் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
2004-ம் ஆண்டு இதே கடலூர், தேவனாம்பட்டினம், தாழங்குடா ஆகிய பகுதிகளில் சுனாமி ஊருக்குள் புகுந்தது. வீடுகள், மரங்கள், மீன்பிடித்தொழில் செய்வோரின் பொருள்கள், படகுகள் எல்லாம் கடலில் மூழக்கி நிலைகுலைந்தது. சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். தாய் தந்தையைப் பிரிந்த குழந்தை, கணவனை இழந்த மனைவி என்று அரைகுறை வாழ்க்கையை எற்படுத்தியது.
2. ஜூன் 5, உலகச் சுற்றுச்சூழல் நாள். இந்நாளில் பள்ளியின் கூட்டத்தில் ஏற்க வேண்டிய உறுதிமொழியை உருவாக்குக.
- மரம் வளர்ப்போம்!
மழை பெறுவோம்!!
- வாகனப்புகை குறைப்போம்!
வளமான வாழ்வு வாழ்வோம்!!
- மக்கும், மக்காக் குப்பை எனப் பிரிப்போம்!
மானிட சமுதாயம் காப்போம்!!
- நெகிழியைத் தவிர்ப்போம்!
மண் வளம் பாதுகாப்போம்!!
- மழைநிர் தேங்காமல் பாதுகாப்பாகச் சேகரிப்போம்!
கொசுவை ஒழிப்போம்!!
- துணிப்பையைத் தூக்குவோம்!
துக்கமின்றி வாழ்வோம்!!
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. உலகப் புவி நாள்
- ஏப்ரல் 25
- மார்ச் 25
- ஏப்ரல் 22
- மார்ச் 22
விடை : ஏப்ரல் 22
2. நம்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளி்ல் எத்ததனை முறை வறட்சி ஏற்பட்டுள்ளது
- 4
- 5
- 7
- 6
விடை : 5
3. 2005-ஆம் ஆண்டு மும்பையில் ஒரே நாளில் பெய்த மழையளவு
- 994 மி.மீ
- 994 செ.மீ
- 995 மி.மீ
- 995 செ.மீ
விடை : 994 மி.மீ
4. கடந்த 110 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக இந்திய வானிலை ஆய்வுத்துறையினர் அறிவித்த ஆண்டு
- 1972
- 1982
- 1992
- 2002
விடை : 1992
5. உலகில் எத்தனை விழுக்காடு மக்கள் தண்ணீர் பற்றாக்குறையோடு வாழ்ந்து வருகின்றனர்.
- 39.4
- 40
- 40.3
- 41
விடை : 40
6. நடுவண் அரசு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்த ஆண்டு ___________
- 20005 டிசம்பர் 26
- 20005 டிசம்பர் 25
- 20005 டிசம்பர் 24
- 20005 டிசம்பர் 23
விடை : 20005 டிசம்பர் 23
7. கூற்று 1 : வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் அமைப்புகளை அழித்து குடியிருப்புகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்களை மனிதன் அமைத்துள்ளான்
கூற்று 2 : மணல் அள்ளியதன் விளைவாக வெள்ளச் சமவெளி அழிகின்றன.
- கூற்று 1 மட்டும் சரி
- கூற்று 2 மட்டும் சரி
- கூற்று இரண்டும் தவறு
- கூற்று இரண்டும் சரி
விடை : கூற்று இரண்டும் சரி
8. கூற்று 1 : வெள்ளப்பெருக்குக் காலங்களில் மட்டுமே நம் நாட்டில் மாற்று ஏற்பாடுகளைச் செய்கிறோம்.
கூற்று 2 : வெள்ளம் வடிந்த பிறகு வெள்ளப் பெருக்கை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளைத் திட்டமிடவும் தவறுகின்றோம்.
- கூற்று இரண்டும் சரி
- கூற்று 1 மட்டும் சரி
- கூற்று 2 மட்டும் சரி
- கூற்று இரண்டும் தவறு
விடை : கூற்று இரண்டும் சரி
9. உலகச் சுற்றுச்சூழல் நாள் ___________
- மே 4
- ஜீலை 4
- ஜீன் 4
- ஆகஸ்ட் 4
விடை : ஜீன் 4
9. உயிரினங்கள் வாழ்வதற்கு அடிப்படையான மழை __________ இன்றியமையாதது.
- நெசவுக்கும்
- உழவுக்கும்
- கடலுக்கும்
- மலைக்கும்
விடை : உழவுக்கும்
9. உயிரினங்கள் வாழ்வதற்கு அடிப்படையான மழை __________ இன்றியமையாதது.
- நெசவுக்கும்
- உழவுக்கும்
- கடலுக்கும்
- மலைக்கும்
விடை : உழவுக்கும்
10. ஆர்டிக் பகுதி, கடந்த முப்பது ஆண்டுகளில் எத்தனை இலட்சம் சதுர மைல்கள் உருகியுள்ளது?
- 2
- 4
- 6
- 8
விடை : 4
11. பசுமைக்குடில் வாயுக்களில் பொருந்தாததைக் கண்டறிக
- கார்பன் டை ஆக்ஸைடு
- மீத்தேன்
- நைட்ரஸ் ஆக்ஸைடு
- ஹைட்ரஜன்
விடை : ஹைட்ரஜன்
12. வங்கக்கடலிலும், அரபிக்கடலிலும் உருவாகும் புயலுக்குப் பெயர் வைக்கும் எட்டு நாடுகளில் பொருந்தாது
- நேபாளம்
- இலங்கை
- மியான்மர்
- மாலத்தீவு
விடை : ஜீன் 4
13. ஐக்கிய நாடுகள் அவை 1992 ஆம் ஆண்டு காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையை உருவாக்கிய இடம்
- ஹைத்தி
- ரியோடிஜெனிரோ
- ஹாமில்டன்
- நியூயார்க்
விடை : ரியோடிஜெனிரோ
14. நிலத்தடி நீர்மட்டத்தைக் தக்கவைத்துக் கொள்வதில் எதன் பங்கு இன்றியமையாதது
- வண்டல் மண்ணின்
- கரிசல் மண்ணின்
- செம்மண்ணின்
- மணலின்
விடை : மணலின்
குறு வினா
1. உழவுக்கும் இன்றியமையாதது எது?
உயிரினங்கள் வாழ்வதற்கு அடிப்படையான மழை, உழவுக்கும் இன்றியமையாதது.
2. பருவநிலை மாற்றம் என்றால் என்ன?
பருவம் தவறாது பொழிந்த மழை, பருவம் தப்பியும் சில நேரங்களில் பொய்த்தும் போகிறது. இயற்கைச் சமநிலையை நாம் சீர்குலைத்ததன் விளைவே பருவநிலை மாற்றம்.
3. மழைக்காலங்களில் எதனால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது?
சரியான திட்டமிடலின்றி உருவாக்கப்படும் பெருநகர அமைப்பு, நீர் மேலாண்மையில் கவனம் செலுத்தாமை இவற்றால் மழைக்காலங்களில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
4. சார்க் அமைப்பில் இருக்கும் நாடுகள் யாவை?
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், தாய்லாந்து
5. மழையின் சிறப்பினை எடுத்துரைக்கும் இலக்கியத் தொடர்கள் முதுமொழிகள் சிலவற்றை சான்றாகத் தருக?
மாமழை போற்றதும், நீரின்றி அமையாது உலகு, மாரியல்லது காரியமில்லை
6. UNFCCC என்பதன் விரிவாக்கம் என்ன?
UNFCCC – United Nations Framework Convention on Climate Changes)
7. ஆற்றில் மணல் அள்ளுவதால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பேரிடர் யாது?
கடந்த நாற்பது ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட பேரிடர்களில் 85% வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்டவையே ஆகும். இதற்கு முதன்மையாகக் காரணமாக அமைவது ஆற்றில் மணல் அள்ளுவதே ஆகும்.
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…