7.1 காற்றில் கலந்த பேராேசை
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 11th Standard Tamil Lesson 7.1 – காற்றில் கலந்த பேராேசை. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
நூல்வெளி
- ஜீவா என்றழைக்கப்படும் ப.ஜீவானந்தம் தொடக்கத்தில் காந்தியவாதியாகவும் பிறகு சுயமரியாதை இயக்கப் போராளியாகவும் பொதுவுடைம இயக்கத் தலைவராகவும் செயல்பட்டார்.
- சிறந்த தமிழ்ப் பற்றாளர்.
- எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்தவர்.
- எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்த ஜீவா, சிறந்த மேடை பேச்சாளர்
- நாகர்கோவிலைச் சேர்ந்த சுந்தராமசாமி, நவீனத் தமிழ் எழுத்தாளர் ஒருவர்.
- பசுவய்யா என்ற புனைப் பெயரில் கவிதைகள் எழுதியவர்
- ரத்னாபாயின் ஆங்கிலம், காகங்கள் உள்ளிட்ட சிறுகதைகள் எழுதியிருப்பதுடன் ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள். குழந்தைகள் பெண்கள் ஆண்கள் ஆகிய புதினங்களையும் எழுதியுள்ளார்.
- செம்மீன், தோட்டியின் மகள் ஆகிய புதினங்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.
- பாடப்குதியாக உள்ள இக்கட்டுரை 1963-ல் தாமரை இதழின் ஜீவா பற்றிய சிறப்பு மலரில் வெளியானது.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
ஜனப் பிரளயம் என்னும் வட மொழி சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் எது?
- மக்கள் அலை
- உயிர் அலை
- மக்கள் வெள்ளம்
- மக்கள் அவை
விடை : மக்கள் வெள்ளம்
குறு வினா
“நாழிக்குள் திணிக்கும் மருந்துபோல்” என்னும் உவமையை ஜீவானந்ததம் வாழ்வுடன் ஒப்பிடுக
- வாண வேடிக்கைக்காரன் நாழிக்குள் திணிக்கும் மருந்து போல் என்னும் உவமை ஜீவானந்தத்தின் மேடைப் பேச்சின் சிறப்பை விளக்குகிறது. சில கருத்துகளை விரிவாகக் கூறிப் புரிய வைத்தால் போதும் என்பதே அவர் எண்ணம்.
- எனவே, இரண்டு கைப்பிடி விசயத்துடன் மேடை ஏறுவார். வெடிமருந்துக்கு நெருப்பு வைத்ததும், பச்சை, மஞ்சள், சிவப்பு எனக் குடைகுடையாய் உதிர்வது போல, மாலை மாலையாய் இறங்கி வரும் கருத்து வண்ணஜாலம் அறிந்தவர் ஜீவா என்பதைத் தெளிவுப்படுத்த இவ்வுவமை கூறப்பட்பட்டுள்ளது.
சிறு வினா
ஜீவாவின் பேச்சுநடை குறித்துச் சுந்தர ராமசாமி கூறுவன யாவை?
- ஜீவாவின் பாணி, இரவர் பாணியோ, கற்று அறிந்ததோ அன்று! “பேச்சுக்கலை” என்பது ஜீவா பெற்ற வரம்!
- மக்கள் தரத்தை அனுபவ அறிவை, பழக்க வழக்கஞ்களை, நம்பிக்கைகளைத் தெளிவாக அறிந்த ஒருவர் கூறவந்த செய்திகளைக் கலைநோக்கோடு அணுகி, கற்பனை கலந்த காலப்போக்கில் வெற்றிகரமாக அமைத்துக் கொண்ட பேச்சுநடை, ஜீவாவின் பேச்சுநடை!
- உழுது விதைத்தால் நல்ல அறுவடை காண முடியும் என்பதை உணர்ந்தவர் ஜீவா.
நெடு வினா
சுந்தர ராமசாமியின் “காற்றில் கலந்த பேராசை” என்னும் தலைப்பு ஜீவாவின் வாழ்க்கைக்கு எங்கனம் பொருந்தும் என்பதை விளக்குக
மக்கள் நம்பிக்கை
மக்கள் கூட்டத்தின் முன் நின்று அண்டம் முட்ட, நாற்றிசையும் அலை பரவச் சங்கநாமென முழங்கிய ஜீவாவின் மரணம், முத்திரை கொண்டதாகத்தான் இருக்கமென அனைவரும் நம்பினர். மேடையில் வாழ்ந்த மனிதன், வாழ்ந்த இடத்தில் தானே மறைந்திருக்க வேண்டுமென, மக்களின் பேதை மனம் எண்ணுகிறது. ஜீவா என்கிற தொண்டன், இறுதி மூச்சு நிற்பது வரை மேடையில் கர்ஜித்துக் காண்டு இருந்திருப்பான் என்பதில், அனைவருக்கும் அத்தனை நம்பிக்கை
மேடைப்பேச்சில் வண்ணஜாலம்
பேச்சு அவர் பெற்ற வரம். பேச்சுக்கலை குறித்து கூறும் புத்தக விதிகளை மறுத்து, தம் சொந்த பாணியில் கற்றதை வெளிப்படுத்தியவர். மக்களின் தரம், அறிவு பழக்க வழக்கம், நம்பிக்கைகளைப் புரிந்து விஷயத்தோடும், கலைநோக்கோடும் கற்பனை கலந்ததாக அவர் பேச்சுப்பாணி அமைந்தது. உழுது விதைத்து நல்ல அறுவடை காண விரும்பியவர் அவர். எனவே செய்திகளைக் குவியல் குவியலாக் கூறிக் குழப்பாமல், சில கூறிப் புரிய வைத்தவர்.
காற்றில் கலந்த பேரோசை
பேச்சுக்கலை அவர் காலடியில் விழுந்து கிடந்தது. இப்போது மேடையில் ஒரு நாற்காலி காலியாகிவிட்டது. அது இனிக் காலியாகவே கிடக்கும். ஆற்றில் விழுந்த கிளை, எதிர் நீச்சல் போட்டு கடவுளின் முன்னேற்பாடுகளைத் தகர்த்து எறிந்துவிட்டு, மலை உச்சிக்கு சென்று விட்டது. பேரோசை காற்றில் கலந்து விட்டது என்கிறார் சுந்தர ராமசாமி.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. ஜீவாவின் இயற்பெயர் __________
- சுப்புரத்தினம்
- வைத்திலியங்கம்
- சொரிமுத்து
- முத்தமிழன்
விடை : சொரிமுத்து
2. சுந்தர ராமசாமி ஏழுதிய கட்டுரையை __________
- புயலும் மழையும்
- காற்றில் கலந்த பேரோசை
- காற்றின் ஓசை
- எதிர்நீச்சல்
விடை : காற்றில் கலந்த பேரோசை
3. மாணவர்கள் குழுவாகச் சென்று வெள்ளப் பெருக்கிறகாக ஜீவா நிதி திரட்டிய இடம் __________
- நாகூர்
- தோவாளை
- குற்றாலம்
- நாங்குநேரி
விடை : தோவாளைஜீவானந்ததம்
4. “மின்சகத்திக்கு ஒளியுருவம் கொடுத்தவர்” எனச் சுந்தர ராமசாமியால் குறிப்பிடப்பட்டவர் __________
- திரு.வி.கல்யாண சுந்தரனார்
- பாரதிதாசன்
- காந்தியடிகள்
- ஜீவானந்ததம்
விடை : ஜீவானந்ததம்
5. ஜீவா நினைவில் கொண்டிருந்த எளிய உண்மையாகச் சுந்தர ராமசாமி குறிப்பிடுவது __________
- பேச்சு எனக்குக் கைவந்த கலை
- எல்லாம் கரைத்துக் குடித்துவிடவில்லை
- இயற்றைக விதிகளை மறுத்த எதிர்நீச்சல் போட முடியும்
- எனக்குத் தெரியாத விஷயங்கள் பிறருக்குத் தெரிந்திருக்கும்
விடை : எனக்குத் தெரியாத விஷயங்கள் பிறருக்குத் தெரிந்திருக்கும்
6. சரியான விடையைத் தெரிவு செய்க
1. நான் ஒரு பள்ளிமாணவன் என்ற எண்ணம் உடையவர்
2. இயற்கையின் விதிகளை எதிர்த்து எதிர்நீச்சல் போட்டவர்
3. என் வாழ்வு என் கையில் என்று நம்பியர்
4. பொதுவுடைமை இயக்கத் தலைவர்
- திரு.வி.கல்யாண சுந்தரனார்
- ப. ஜீவானந்ததம்
- பாரதிதாசன்
- காந்தியடிகள்
விடை : ப. ஜீவானந்ததம்
7. நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களுள் ஒருவர் __________
- ககழி சிவசங்கரப்பிள்ளை
- ஜீவானந்ததம்
- சுந்தர ராமசாமி
- பசுவய்யா
விடை : சுந்தர ராமசாமி
8. பசுவய்யா என புனைப்பெயர் கொண்டவர் __________
- சுரதா
- வாணிதாசன்
- ஜீவானந்ததம்
- சுந்தர ராமசாமி
விடை : பசுவய்யா
9. “காகங்கள்” என்ற சிறுகதையை இயற்றியவர் __________
- சுரதா
- சுந்தர ராமசாமி
- வாணிதாசன்
- ஜீவானந்ததம்
விடை : சுந்தர ராமசாமி
10. ஜீவானந்தம் பற்றிய கட்டுரை தாமரை இதழில் வெளியான ஆண்டு
- 1963
- 1964
- 1965
- 1966
விடை : 1963
சிறு வினா
1. சுந்தரராமசாமியின் படைப்புகள் யாவை?
சிறுகதைகள் – ரத்னாபாயின் ஆங்கிலம், காகங்கள்
புதினங்கள் – ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
2. சுந்தரராமசாமி மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ள நூல்கள்?
செம்மீன், தோட்டியின் மகள்
3. ஜீவாவின் மனத்தில் பசுமையாக இருந்த எண்ணம் எது?
“நான் ஒரு பள்ளி மாணவர் படித்துகொண்டிருக்கிறேன்; படித்துக் கொண்டே இருப்பேன்” என்பத ஜீவாவின் மனத்தில் பசுமையாக இருந்த எண்ணமாகும்
4. ஜீவாவின் கொள்கையும், நம்பிக்கையும் எதிரிருந்து பிறந்தன?
கற்பனைக்கு எட்டாத பேராற்றலான மனிதச் சிந்நதனையில் சிறந்தவற்றை, எட்டுத் திசைகளிலும் பரப்பி, மனித இனத்தை உயர்த்தத் தம்மால் இன்றதைக் கைமாறு கருதாமல் செய்ய வேண்டும் என்னும் அடிப்படை மனோபாவத்திலிருந்து பிறந்ததே ஜீவாவின் கொள்கையும் நம்பிக்கையுமாகும்.
5.ஜீவாவின் நினைவில் எப்போதும் நிற்கும் எளிய உண்மை யாது?
தமக்கு தெரியாத அரிய செய்திகள் பிறருக்கு தெரிந்திருக்கும் என்னும் எளிய உண்மை ஜீவாவின் நினைவில் எப்போதும் நிலைத்திருக்கும்.
6. ஜீவா குறித்து அறிந்தவற்றை கூறு
- “ஜீவா” என அழைக்கப்படும் “ப. ஜீவானந்தம்” சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.
- தொடக்க காலத்தில் காந்தியவாதியாக திகழ்ந்தவர்.
- பிறகு சுயமரியாதை இயக்க போராளியாகவும், பொதுவுடமை இயக்கத் தலைவராகவும் செயல்பட்டார்
- சிறந்த தமிழ்ப் பற்றாளர். எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்தவர்
7. மருத்துவம் சார்ந்த சில கலைச்சொற்களை கூறுக
- எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்த ஜீவா, சிறந்த மேடை பேச்சாளர்
- ஜீவா தமக்கென ஒரு தத்துவத்தைப் படைத்துக் கொண்டவர் அல்லர்
- தாம் நம்பிய தத்துவத்தை அச்சில் உயிரிழந்து கிடக்கும் சித்தாந்தக் கருத்துக்களைத் தமது அரிய பேச்சாற்றலால், கலைநோக்கால், கற்பனையால் உயிர் பெற்று எழச் செய்தார்.
- தம் மேடைப்பேச்சால் அந்த மின் சக்திக்கு ஒளியுருவம் கொடுத்த்தார் எனலாம்.
- தம் மேடைப்பேச்சால் மனித இனத்தை உயரத்திற்குக் கொண்டு செல்ல முயன்றார்.
- “என் வாழ்க்கை என் கைகளில்” என்னும் நம்பிக்கையோடு மேடையில் வாழ்ந்தார்.
8. சுந்தர ராமசாமி – குறிப்பு வரைக
- நாகர்கோவிலைச் சேர்ந்த சுந்தராமசாமி, நவீனத் தமிழ் எழுத்தாளர் ஒருவர்.
- பசுவய்யா என்ற புனைப் பெயரில் கவிதைகள் எழுதியவர்
- ரத்னாபாயின் ஆங்கிலம், காகங்கள் உள்ளிட்ட சிறுகதைகள் எழுதியிருப்பதுடன் ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள். குழந்தைகள் பெண்கள் ஆண்கள் ஆகிய புதினங்களையும் எழுதியுள்ளார்.
- செம்மீன், தோட்டியின் மகள் ஆகிய புதினங்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…