4.5 இதழாளர் பாரதி
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 11th Standard Tamil Lesson 4.5 – இதழாளர் பாரதி. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
பாடநூல் வினாக்கள்
பாரதியின் இதழாளர் முகம் குறித்து நீங்கள் அறிவன யாவை?
பாரதியின் பன்முகம்
பாரதியார் கவிஞர் மட்டும் அல்லர்! சிறந்த பேச்சாளர்; பாடகர்; கட்டுரையாளர்; கதாசிரியர்; மொழிபெயர்ப்பாளர்; அரசியல் ஞானி; ஆன்மிகவாதி; அனைத்திற்கும் மேலாக சிறந்த இதழாளர்.
இதழாளர் பாரதி
பாரதி, “சுதேசிமித்திரன்” இதழில் உதவி இதழாசிரியராகச் சேர்ந்தார். அதனால் அவரது உலகாளாவிய பார்வை கூர்மைப்பட்டுச் சிறந்த இதழாளரானார். தொடர்ந்து சக்கரவர்த்தினி, இந்தியா, பாலபாரதி, விஜயா, கர்மயோகி எனப் பல இதழ்களில் பணியாற்றித் தம் வாழ்க்கைப் பேராட்டத்திற்கு இடையிலேயும் பாரதி, உலகப் பார்வை கொண்டு செயல்பட்டார்.
படைப்பில் புதுமை
“தான்” என்பதை ஒழித்து, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல், விடுதலை வேட்கையைத் தூண்டப் பல புனைப்பெயர்களில் எழுதினார். தாம் பணியாற்றிய இதழ்களில் கருத்துடன் காட்சியும் இடம்பெற வேண்டும் எனக் கருதிக் கருத்துப் படங்களைக் கேலிச் சித்திரங்களாக வெளியீட்டுத் தமிழ் இதழ்களில் “கார்ட்டூன்” என்பதை அறிமுகப்படுத்தினார்.
வழித்தடம் அமைத்தவர்
இதழியல் துறையில் பலர் பாரதியைப் பின்பற்றிச் செயல்பட்டனர். தமிழ் இதழ்களில் ஆண்டு, திங்கள், நாள் என நல்ல தமிழை முதலில் அறிமுகம் செய்தவர் பாரதியே. அவர் மூச்சும், பேச்சும் இளைஞருக்காகவும், பெண்களுக்காகவும் ஆனவையாக இருந்தன. “சக்ரவர்த்தினி” என்னும் தம் இதழில் குறள் வெண்பாவை எழுதிப் பெண் விடுதலைக்குப் பாடுபட்டார். புரட்சியையும், விடுதலையையும் குறிக்க “இந்தியா” இதழை சிவப்பு வண்ணத்தில் வெளியட்டார்.
புனைப்பெயர் பயன்படுத்தல்
தான் மட்டுமன்றித் தம் நண்பர்களும் ஆங்கிலேயர் கெடுபிடிக்கு ஆளாகக் கூடாதென விரும்பி நண்பர் பெயர்களையும் அவர்கள் கூடிப் பேசும் இடங்களையும் கூடப் புனைபெயர்களிலேயே சுட்டி வந்தார். பாரதியார் பயன்படுத்திய புனைப்பெயர்களில் அவரின் இதழியல் அறத்தைக் காண முடியும்.
புதுமை விரும்பி பாரதி
இதழ்களில் தேதி குறிப்பிடல், கருத்துப்படம் வெளியிடல், “மகுடமிடல்” என்னும் தலைப்பிடல் ஆகியவை நிலைகளில் முன்னோடியாக விளங்கினார். ஆங்கிலேயர் அளித்த பல கெடுபிடிகளுக்கும் நெருக்கடிகளுக்கும் இடையிலும் இதழியல் பணியைக் கைவிடாது செயல்படுத்தினார்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. பாரதியார் ஆசிரியராக பொறுப்பேற்ற பெண்களுக்கான இதழ் _________
- யங் இந்தியா
- சுதேசமித்திரன்
- சக்கரவர்த்தினி
- கர்மயோகி
விடை : சக்கரவர்த்தினி
2. பத்திரிக்கை துறையில் பாரதிக்கு குருவாக திகழ்ந்தவர் _________
- வ. இராமசாமி
- பி.பி. சுப்பையா
- கனக லிங்கம்
- ஜி. சுப்பிரமணியம்
விடை : ஜி. சுப்பிரமணியம்
3. பாரதியார் கேலிச்சித்திரத்தை _________ என்று குறிப்பர்.
- விகட சித்திரம்
- புனையா ஓவியம்
- எழுதா ஓவியம்
- விகட ஓவியம்
விடை : விகட சித்திரம்
4. _________ கருத்துப்பபடங்களை வெளியிட்ட இதழ் விஜயா
- பாரதிதாசன்
- பாரதியார்
- சுரதா
- நாமக்கல் வெ. இராமலிங்கனார்
விடை : விஜயா
5. பெண்களுக்காக “குறள் வெண்பா” எழுதி வெளியிட்ட பாரதியின் இதழ் _________
- யங் இந்தியா
- சுதேசமித்திரன்
- சக்கரவர்த்தினி
- கர்மயோகி
விடை : சக்கரவர்த்தினி
6. பாரதி __________ என்ற இதழை சிவப்பு வண்ணத்தாளில் வெளியிட்டார்.
- இந்தியா
- சக்கரவர்த்தினி
- விஜயா
- யங் இந்தியா
விடை : இந்தியா
7. “இந்தியா” இதழின் சிவப்புநிறம் __________ குறிக்கிறது.
- அமைதி
- புரட்சி
- செழுமை
- உயர்வு
விடை : புரட்சி
8. பாரதி தன் மனைவி செல்லம்மாவை __________ புனைப்பெயரில் குறிப்பிட்டிருந்தார்.
- சரஸ்வதி
- செல்லம்மா
- வள்ளி
- பாரதி
விடை : வள்ளி
9. “__________” என்று பாரதி தலைப்பிடலை குறிப்பிட்டார்.
- மகுடமிடல்
- கீரிடமிடல்
- தலைப்பு
- கருத்திடல்
விடை : மகுடமிடல்
10. பாரதி காலக்கட்டத்தில் வாழ்ந்த அமீர் அமானுல்லாகான் __________ நாட்டிற்கு மன்னர் ஆவார்.
- ராஜஸ்தான்
- பாகிஸ்தான்
- நேபாளம்
- ஆப்கானிஸ்தான்
விடை : ஆப்கானிஸ்தான்
11. “உத்தமர் தேசாபிமானி” என்று புனைப் பெயர் சூட்டிக் கொண்டவர் __________
- பாரதிதாசன்
- பாரதி
- வாணிதாசன்
- கண்ணதாசன்
விடை : பாரதி
12. பாரதியார் தமிழாசிரியராகப் பணியாற்றிய சேதுபதி உயர்நிலைப்பள்ளி __________யில் உள்ளது.
- திருநெல்வேலி
- தூத்துக்குடி
- மதுரை
- கன்னியாகுமரி
விடை : மதுரை
13. பாரதியார் உதவி ஆசியராக இருந்த இதழ் __________
- காமன் வில்
- கலைமகள்
- தேசபக்தன்
- விஜயா
விடை : விஜயா
பலவுள் தெரிக
1. பாரதி முதன் முதலாக பணியாற்றி இதழ் எது?
பாரதி முதன் முதலாக பணியாற்றி இதழ் சுதேசமித்திரன் ஆகும்.
2. பாரதியார் ஆசியராகவும் துணையாசிரியராகவும் பணியாற்றி இதழ்கள் எவை?
|
|
3. கேலிச்சித்திரம் என்பதற்கு வழங்கப்படும் வேறுபெயர்கள் யாவை?
|
|
4. மகாகவி பாரதியிடம் துணையாசிரியர்களாகப் பணியாற்றியவர்களைக் கூறுக
|
|
5. எதை பாரதி ஒழித்தார்?
தன் பெயரையும், தன்னையும் முன்னிலைபடுத்திக் கொள்ள விரும்பும் மனிதர்களுக்கு இடையில் “தான்” என்ற ஒன்றை ஒழித்தவர் பாரதி
6. பெண்களுக்காக சக்ரவரத்தினி இதழில் எழுதிய குறள் வெண்பாவினை எழுது
பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான்
ஒண்மை யுறஓங்கும் உலகு
7. பாரதி இந்தியா இதழை ஏன் சிவப்பு வண்ணத்தில் எழுதியிருந்தார்?
சிவப்பு வண்ணமானது புரட்சியையும், விடுதலையும் குறிக்கிறது என்பதால் அடிமைத்தளையில் இருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பாரதி இந்தியா இதழை சிவப்பு வண்ணத்தில் எழுதியிருந்தார்.
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…