3.4 புறநானூறு
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 11th Standard Tamil Lesson 3.4 – புறநானூறு. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
நூல்வெளி
- புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
- புறத்திணை சார்ந்த 400 பாடல்களை கொண்டது.
- புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும்.
- அ்கவற்பாக்களால் ஆ்னது.
- புறநானூற்றுப் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழக்கை பற்றியும் எடுத்துரைக்கின்றது.
- இந்நூலின் மூலம் பண்டைத் தமிழகம் பற்றியும், தமிழர் நாகரிகம், பண்பாடு, சமூக வாழ்க்கை குறித்து அறிய முடிகிறது.
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
- பெருவழுதி என்னும் பெயரில் பாண்டிய மன்னர்கள் பலர் இருந்தனர். எனினும் அரிய குணங்கள் பலவற்றையும் இளமை முதலே பெற்றிருந்தமையால், இவரை “இளம்பெருவழுதி” என மக்கள் போற்றினர்
- கடற்பயணம் ஒன்றை மேற்கொண்டபோது இறந்தமையால் “கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி” என அழைக்கப் பெற்றார்.
- இவர் பாடல்கள் பரிபாடலில் ஒன்றும், புறநானூற்றில் ஒன்றும் ஆக, இரு பாடல்கள் காணப்படுகின்றன.
சொல்லும் பொருளும்
- தமியர் – தனித்தவர்
- முனிதல் – வெறுத்தல்
- துஞ்சல் – சோம்பல்
- அயர்வு – சோர்வு
- மாட்சி – பெருமை
- நோன்மை – வலிமை
- தாள் – முயற்சி
இலக்கணக்குறிப்பு
- அம்ம – அசைநிலை
- துஞ்சல் – தொழிற்பெயர்
- முயலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம்
பகுபத உறுப்பிலக்கணம்
1. துஞ்சல் = துஞ்சு + அல்
- துஞ்சு – பகுதி
- அல் – தொழிற்பெயர் விகுதி
2. முனிவிலர் = முனி + வ் + இல் + அர்
- முனி – பகுதி
- வ் – உடம்படுமெய், சந்தி
- இல் – எதிர்மறை இடைநிலை
- அர் – பலர்பால் வினைமுற்று விகுதி
புணர்ச்சி விதிகள்
இயைவதாயினும் = இயைவது + ஆயினும்
- “உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்” என்ற விதிப்படி இயைவத் + ஆயினும் என்றாயிற்று.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி இயைவதாயினும் என்றாயிற்று.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்க
1. வெள்ளிவீதியார் | அ. புறநானூறு |
2. அண்ணாமலையார் | ஆ. வாடிவாசல் |
3. சு.ச. செல்லப்பா | இ. குறுந்தொகை |
4. இளம்பெருவழுதி | ஈ. காவடிச்சிந்து |
- அ, ஆ, இ, ஈ
- ஆ, ஈ, அ, இ
- இ, ஈ, ஆ, அ
- இ, ஈ, அ, ஆ
விடை : இ, ஈ, ஆ, அ
2. இனிதென இச்சொல்லில் அமைந்த புணர்ச்சி விதிகளை வரிசைப்படுத்துக
- உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்; “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
- தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும; உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
- உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
விடை : உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்; “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
குறு வினா
தமிழர்கள் புகழையும் பழியையும் எவ்வாறு ஏற்றதாகப் புறநானூறு கூறுகிறது?
- புகழ் : புகழ் வரும் என்றால், தமிழர்கள் தம் உயிரையும் கொடுப்பர்
- பழி : பழி வரும் என்றால், உலகம் முழுவதும் கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
சிறு வினா
புறநானூற்றுப் பாடலின் கருத்திற்கு இணையான குறட்பாக்களை குறிப்பிடுக
வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழ தவர்
(பழி நீங்கிப் புகழோடு வாழ்பவரே வழ்பவராவார்; புகழன்றிப் பழியோடு வாழ்பவர் வாழதவரே ஆவர்)
அஞ்சுவது அஞ்சாமி பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்
(உலகம் அஞ்சம் செயல்களைச் செய்வது அறியாமை; உலகம் அஞ்சும் செயல்களுக்கு அஞ்சுவது அறிவுடையார் செயல்)
கூடுதல் வினாக்கள்
இலக்கணக்குறிப்பு
- உண்டு, இனிது – குறிப்பு வினைமுற்றுகள்
- ஆல் – தேற்றம்
- உண்டல், அஞ்சல் – தொழிற்பெயர்கள்
- உலகம் – இடவாகு பெயர்
- இந்திரர் அமிழ்தம் (இந்திரர்க்கு உரிய அமிழ்தம்) – நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
- அஞ்சுவது அஞ்சி – வினையாலணையும் பெயர்
- உயிரும் கொடுக்குவர் – உம்மை, இறந்தது தழுவிய எச்சவும்மை
- கொடுக்குவர் – படர்க்கைப் பலர் பால் எதிர்கால வினைமுற்று
- நோன்தாள் – உரிச்சொற்றொடர்
- அனையர் – வினையாலணையும் பெயர்
- அயர்விலர் – எதிர்மறை வினையாலணையும் பெயர்
பகுபத உறுப்பிலக்கணம்
1. கொடுக்குவர் = கொடு + க் + கு + வ் + அர்
- கொடு – பகுதி
- க் – சந்தி
- கு- சாரியை
- வ் – எதிர்கால இடைநிலை
- அர் – பலர்பால் வினைமுற்று விகுதி
2. அஞ்சி = அஞ்சு + இ
- அஞ்சு – பகுதி
- இ – வினையெச்ச விகுதி
புணர்ச்சி விதிகள்
1. முனிவிலர் = முனிவு + இலர்
- “உயிர் வரின்…. முற்றும் அற்று” என்ற விதிப்படி முனிவ் + இலர் என்றாயிற்று.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி முனிவிலர் என்றாயிற்று.
2. அஞ்சுவதஞ்சி = அஞ்சுவது + அஞ்சி
- “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி அஞ்சுவத் + அஞ்சி என்றாயிற்று.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி அஞ்சுவதஞ்சி என்றாயிற்று.
3. பழியெனின் = பழி + எனின்
- “இ ஈ ஐ வழி யவ்வும்” விதிப்படி பழி + ய் + எனின் என்றாயிற்று.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி பழியெனின் என்றாயிற்று.
4. உலகுடன் = உலகு + உடன்
- “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி உலக் + உடன் என்றாயிற்று.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி உலகுடன் என்றாயிற்று.
5. தமெக்கென = தமக்கு + என
- “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி தமக்க் + என என்றாயிற்று.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி தமெக்கென என்றாயிற்று.
6. பிறர்க்கென = பிறர்க்கு + என
- “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி பிறர்க்க் + என என்றாயிற்று.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி பிறர்க்கென என்றாயிற்று.
7. புகழெனின் = புகழ் + எனின்
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி புகழெனின் என்றாயிற்று.
பலவுள் தெரிக
1. புறநானூறு பிரித்தெழுதுக
- புறம் + நான்கு + நூறு
- புறம் + நானூறு
- புற + நானூறு
- புறம் + நாலு + நூறு
விடை : புறம் + நான்கு + நூறு
2. தமிழரின் வாழ்வியல் கருவூலமாகக் கருதப்படுவது ____________
- புறநானூறு
- அகநானூறு
- கலித்தொகை
- பதிற்றுப்பத்து
விடை : புறநானூறு
3. புறம், புறப்பாட்டு என வழங்கப்படும் நூல் ____________
- நற்றிணை
- குறுந்தொகை
- புறநானூறு
- அகநானூறு
விடை : புறநானூறு
4. ____________ பாடல்கள் புறநானூற்றில் ஒன்றும் பரிபாடலில் ஒன்றும் இடம் பெற்றுள்ளன.
- நல்லூந்தனார்
- கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
- நல்லாதானர்
- நக்கீரனார்
விடை : கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
5. புறநானூறு ___________ பாக்களால் ஆனது
- வெண்பாக்களால்
- அகவற்பாக்களால்
- வஞ்சிப்பாக்களால்
- ஆசிரியப்பாக்களால்
விடை : அகவற்பாக்களால்
6. “உண்டாலம்ம இவ்வுலகம்” என்னும் புறப்பாடல் ____________ வகையைச் சார்ந்தது
- நேரிசை ஆசிரியப்பா
- இன்னிசை ஆசிரியப்பா
- நிலைமண்டில ஆசிரியப்பா
- அடிமறி மண்டில ஆசிரியப்பா
விடை : நேரிசை ஆசிரியப்பா
7. “வெறுத்தல்” என்று பொருள் தரும் சொல் ____________
- மகிழ்தல்
- நகைத்தல்
- முனிதல்
- சினத்தல்
விடை : வெறுத்தல்
8. வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படதாத செய்திகளைக கூறுவது ____________
- குறிஞ்சி திணை
- முல்லை திணை
- பெருந்திணை
- பொதுவியல் திணை
விடை : பொதுவியல் திணை
9. 1894 உ.வே.சா ____________ நூலைமுதன் முதலில் பதிப்பித்தார்
- புறநானூறு
- அகநானூறு
- திருக்குறள்
- நற்றிணை
விடை : புறநானூறு
10. பிறர்க்கென வாழ்வது ___________ என்பதாகும்
- முற்பிறவி பாவம்
- தற்கால பாவம்
- முற்பிறவி பயன்
- பிறவிப் பயன்
விடை : பிறர்க்கென
பொருத்துக
1. தமியர் | அ. வெறுத்தல் |
2. முனிதல் | ஆ. தனித்தவர் |
3. துஞ்சல் | இ. சோர்வு |
4. அயர்வு | ஈ. சோம்பல் |
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ |
குறு வினா
1. தமிழர் எதனை உண்ணார், எதற்கு அஞ்சுவர் எனப் புறநானூறு கூறுகிறது?
- இந்திரனுக்குரிய அமிா்தமே கிடைப்பதாயினும், தமிழர் தனித்து உண்ணமாட்டார்.
- பிறர் அஞ்சுவனவற்றுக்குத் தாமும் அஞ்சுவர் எனப் புறநானூறு கூறுகிறது.
2. இளம்பெருவழுதி பாடல் எவ்விழுமியம் பற்றி பேசுகிறது?
புறநானூற்றில் அமைந்த இளம்பெருவழுதி பாடல் வீரத்தையும், ஈரத்தையும் பற்றிப் பேசாமல் வாழ்வின் விழுமியமான, தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்வதே பிறவிப்பயன் என்னும் கருத்தைப் பேசுகிறது.
3. பொதுவியில் திணை என்றால் என்ன?
வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத செய்திகளையும் பிற பொதுவான செய்திகளையும் தொகுத்துக் கூறுவது பொதுவியல் திணையாகும்.
4. பொருண்மொழிக்காஞ்சித் துறை என்றால் என்ன?
மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறுதல் பொருண்மொழிக்காஞ்சித் துறையாகும்.
சிறு வினா
1. புறநானூறு – குறிப்பு வரைக?
- புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
- புறத்திணை சார்ந்த 400 பாடல்களை கொண்டது.
- புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும்.
- அகவற்பாக்களால் ஆனது.
- புறநானூற்றுப் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழக்கை பற்றியும் எடுத்துரைக்கின்றது.
- இந்நூலின் மூலம் பண்டைத் தமிழகம் பற்றியும், தமிழர் நாகரிகம், பண்பாடு, சமூக வாழ்க்கை குறித்து அறிய முடிகிறது.
2. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி – குறிப்பெழுதுக
- பெருவழுதி என்னும் பெயரில் பாண்டிய மன்னர்கள் பலர் இருந்தனர். எனினும் அரிய குணங்கள் பலவற்றையும் இளமை முதலே பெற்றிருந்தமையால், இவரை “இளம்பெருவழுதி” என மக்கள் போற்றினர்
- கடற்பயணம் ஒன்றை மேற்கொண்டபோது இறந்தமையால் “கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி” என அழைக்கப் பெற்றார்.
- இவர் பாடியனவாகப் பரிபாடலில் ஒன்றும், புறநானூற்றில் ஒன்றும் ஆக, இரு பாடல்கள் காணப்படுகின்றன.
- புறநானூற்றுப் பாடலில் வீரத்தைப் பேசாமல், “தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் பிறவிப் பயன்” பற்றிப் பேசுகிறார்.
3. இவ்வுலகமே நிலைத்திருப்பதற்கான காரணங்களாக இளம்பெருவழுதி கூறுவனற்றை எழுதுக
- அமிழ்தமே கிடைத்தாலும், அஃது இனிமையானது என எண்ணித் தனித்து உண்ணாதவர்கள்.
- எவரையும் வெறுக்காதவர்கள்; சோம்பலின்றிச் செயல்படுபவர்கள்.
- பிறர் அஞ்சுவனவற்றிற்குத் தாமும் அஞ்சுபவர்கள்.
- புகழோடு வருவதாயின், உயிரையும் கொடுக்க கூடியவர்கள்.
- பழியுடன் வருவதாயின், உலகமே கிடைத்தாலும் ஏற்க விரும்பாதவர்கள். எதற்கும் மனம் தளராதவர்கள்.
- தமக்கென உழைக்காமல் பிறர்க்காகப் பெருமுயற்சிகளை மேற்கொண்டு உழைப்பவர்கள் எனப பல சிறப்புகளைப் பெற்றோர் இருப்பதனால் தான், இவ்வுலகம் இன்றளவும் நிலைத்து இயங்கிக் கொண்டிருக்கிறது எனக் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி தம் பாடலில் கூறியுள்ளார்.
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…