TN 10th Standard Tamil Book Back Answers | Lesson 8.2 – ஞானம்

8.2 ஞானம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 10th Standard Tamil Lesson 8.2 – ஞானம். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

10th Standard Tamil Guide - Gnanam

10th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • நம்பாடப்பகுதியில் கொடுக்கப்பட்ட கவிதை தி.சு. வேணுகோபாலனின் “கோடை வயல்” என்னம் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
  • தி.சொ.வேணுகோபாலன் திருவையாற்றில் பிறந்தவர்;
  • மணிப்பால் பாெறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்;
  • எழுத்து‘ காலப் புதுக்கவிஞர்களில் ஒருவர்.
  • இவரின் மற்றொரு கவிதைத் தாெகுப்பு மீட்சி விண்ணப்பம்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

 வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல் இவ்வடி குறிப்பிடுவது _________

  1. காலம் மாறுவதை
  2. வீட்டைத் துடைப்பதை
  3. இடையறாது அறப்பணி செய்தலை
  4. வண்ணம் பூசுவத

விடை : இடையறாது அறப்பணி செய்தலை

குறு வினா

காலக் கழுதை சுட்டெறும்பானது கவிஞர் செய்வது யாது?

  • காலக் கழுதை கட்டெறும்பானது என்பது காலம் மாறி வயது முதிர்தலை குறிப்பது ஆகும்.
  • வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும் வலுவிழந்தாலும் அற்பணியைத் தொடர்ந்து செய்கிறார்.
  • வாளித்தண்ணீர், சாயக்குவளை, துணி கந்தையானாலும், சாயம் அடிக்கும் தூரிகை கட்டையானலும் சுத்தம் செய்வது போல, காலக்கழுதை கட்டெறும்பான பின்னும் அறப்பணி ஓயாது தொடர்கிறது.

சிறு வினா

1. ‘சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்’ என்ற தலைப்பில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக.

(குறிப்பு – சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்)

உரைக்குறிப்புகள்:-

  • அறம் என்பதன் விளக்கம் தரல்
  • சுற்றுச்சூழல் என்றால் என்ன?
  • சுற்றுச்சூழலோடு அறத்திற்கு உள்ள தொடர்பை விளக்குதல்.
  • அறம் சார்ந்த வகையில் மாசு அடைவதைத் தவிர்க்க வழி கூறுதல்.
  • சட்டங்கள் வன்மையாக இருந்தாலும், அரசின் வாயிலாக மென்மைப்படுத்தல் வேண்டும்.
  • நெகிழி, ஆலைக்கழிவு, நச்சுக்காற்று வாகனப்புகை இவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதை மக்கள் மனதில் பதிய வைத்தல்.
  • இக்குறிப்புகளை மையமாக வைத்து உரையாற்ற வேண்டும்.

2. வாளித் தண்ணீர், சாயக் குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை – இச்சொற்களைத் தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க.

  • வீட்டின் சுவர், சன்னல் போன்றவற்றில் அழுக்குப் படிந்தும், சன்னல்களில் கரையான் படிவதைத் தடுக்க, வாளித் தண்ணீரைக் கொண்டு சுவரையும் ஜன்னலையும் நன்கு கழுவ வேண்டும்.
  • பிறகு கந்தை துணியால் நன்கு துடைத்து விட வேண்டும்.
  • மூன்றாவதாக சாயக் குவளையில் உள்ள சாயத்தை கட்டைத் தூரிகை கொண்டு சாயம் பூசி புதுபிக்க வேண்டும்.

கற்பவை கற்றபின்

1. “துளிப்பா” ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அதில் வெளிப்படும் கருத்தினை பற்றி வகுப்பறையில் இரண்டு நிமிடம் உரை நிகழ்த்துக

ஆராய்ச்சி மணிஅடித்த மாடுகள்
அரண்மனைத் தட்டில்
பிரியாணி ஆகிவிட்டன

  • நீதி தவறாத செங்கோல் வளையாத மரபாக இருந்தது சோழ மரபு. அச்சோழ மரபிலே வந்தவன் மனநீதிச் சோழன்.
  • அரண்மனை வாயிலின் ஆராய்ச்சி மணியை அடித்த பசுவின் துயரத்தை துடைக்கத்தான் தன் ஒரே மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்று பசுவின் துயரைத் தானும் அனுபவித்து “வாயில்லா ஜீவனுக்கும் அறம்” உணர்த்திய மாண்பு நம் தமிழ் மண்.
  • ஆனால் சீர்கேடு அடைந்து உள்ள இன்றைய சமூகச் சூழலில் நீதி கேட்டுப் பேராடுபவர்களே தண்டிக்கப்படுகிறார்கள்; அழிக்கப்படுகிறார்கள்.
  • இச்சமூக அவலத்தை இக்கவிதை தோலுரித்து காட்டியுள்ளது. அன்ற ஆராய்ச்சி மணி அடித்தபோது பசுவுக்கு நீதி கிடைத்தது. இன்றோ! நீதி கேட்கும் மாடுகள் அழிக்கப்பட்டு விடம் என்பதைக் குறிப்பாக இக்கவிதை உணர்த்துகிறது.

2. திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் தலைப்பினை எழுதி, அகரவரிசைப்படுத்தி அதன் பொருளினை எழுதுக.

அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள் உள்ளன. அவை;

  1. அடக்கமுடமை – அடக்கத்தின் மேன்மை
  2. அருளுடமை – கருணை உடையவராய் இருத்தல் வேண்டும்.
  3. அவாவறுத்தல் – பேராசையை விலக்கு
  4. அழுக்காறமை – பொறாமை நீக்க வேண்டும்
  5. அறன் வலியுறுத்தல் – அறத்தின் சிறப்பை எடுத்துக் கூறுதல்.
  6. அன்புடைமை – அன்பின் மகத்துவம்
  7. இல்வாழ்க்கை – குடும்ப வாழ்வின் சிறப்பு, பெருமை
  8. இன்னாசெய்யாமை – துன்பம் செய்யாதிருத்தல்
  9. இனியவைகூறல் – இனிய சொற்களின் சிறப்பு
  10. ஈகை – கொடுத்து மகிழ்தலின் சிறப்பு
  11. ஊழ் – வீதி வலிமை
  12. ஒப்புரவறிதல் – கொடுத்தல்
  13. ஒழுக்கமுடமை – ஒழுக்கமே உயர் செல்வம்
  14. கடவுள் வாழ்த்து – இறைவனை வாழ்த்துதல்
  15. கள்ளாமை – மது அருந்துதல் கூடாது.
  16. கூடாவொழுக்கம் – பொய் ஒழுக்கம்.
  17. கொல்லாமை – உயிர்க் கொலைக் கூடாது.
  18. செய்நன்றியறிதல் – ஒருவர் செய்த நன்மையை நினைத்தல்
  19. தவம் – துன்பத்தை பொறுத்தல், பிறருக்கு துன்பம் செய்யாமை
  20. தீவினையச்சம் – தீச் செயல் செய்ய அஞ்சுதல்
  21. துறவு – உலகப் பற்றை நீக்குதல்
  22. நடுவு நிலைமை – பாரபட்சம் பாராதிருத்தல்
  23. நிலையாமை – எதுவும் நிலையன்று
  24. நீத்தார் பெருமை – துறவு மேற்கொள்பவர் சிறப்பு
  25. பயனில் சொல்லாமை – பயனற்ற சொற்களை தவிர்த்தல்.
  26. பிறனில் விழையாமை – பிறர் மனைவி, பொருளை விரும்பாமை
  27. புகழ் – சிறப்பு
  28. புலால் மறுத்தல் – ஊன் உண்ணாதிருத்தல்
  29. புறங்கூறாமை – ஒருவர் இலாதிடத்து அவரைப் பற்றி பேசாமை
  30. பொறையுடைமை – பொறுமை
  31. மக்கட்பேறு – பிள்ளைச்செல்வம்
  32. மெய்யுணர்தல் – பொய் மயக்கத்திலிருந்து விடுபடுதல்
  33. வாழ்க்கைத் துணை நலம் – நன்மனையாள் பெருமை
  34. வாய்மை – உண்மையின் மேன்மை
  35. வான்சிறப்பு – மழையின் சிறப்பு
  36. விருந்தோம்பல் – மழையின் சிறப்பு
  37. வெகுளாமை – சினம் கொள்ளாமை
  38. வெஃகாமை – பிறர் பொருளை விரும்பாமை

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு

  • காலக்கழுதை – உருவகம்
  • கந்தைத்துணி – இருபெயரொட்டு பண்புத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

1. துடைத்தேன் =  துடை + த் + த் + ஏன்

  • துடை – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • ஏன் – குறிப்பு வினைமுற்று விகுதி

2. அடித்தேன் =  அடி + த் + த் + ஏன்

  • அடி – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • ஏன் – குறிப்பு வினைமுற்று விகுதி

4. ஓய்ந்த = ஓய் + த்(ந்) + த் + உ

  • ஓய் – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

பலவுள் தெரிக

1. “ஞானம்” கவிதையின் ஆசிரியர் ____________

  1. அப்துல்ரகுமான்
  2. வேணுகோபாலன்
  3. இராஜகோபாலன்
  4. இராமகோபாலன்

விடை : வேணுகோபாலன்

2. உலகிற்கான பணிகள் எதைச் சார்ந்த வளர வேண்டும் ____________

  1. மறம்
  2. ஞானம்
  3. கல்வி
  4. அறம்

விடை : அறம்

3. “ஞானம்” கவிதை இடம் பெற்ற தொகுப்பு ____________

  1. மீட்சி விண்ணப்பம்
  2. கோடை வயல்
  3. கோடை மழை
  4. தீக்குச்சி

விடை : கோடை வயல்

4. தி,சொ.வேணுகோபாலன் பிறந்த ஊர் ____________

  1. திருவாதவூர்
  2. திருவாரூர்
  3. திருவையாறு
  4. தஞ்சாவூர்

விடை : திருவையாறு

5. தி.சொ.வேணுகோபாலன் ____________ காலப் புதுக்கவிஞர்களில் ஒருவர்

  1. மணிக்கொடி
  2. வானம்பாடி
  3. கவிக்குயில்
  4. எழுத்து

விடை : எழுத்து

6. வேணுகோபாலன் பேராசிரியராகப் பணியாற்றியது ____________

  1. கோவை மருத்தவக் கல்லூரியில்
  2. மணிப்பால் பொறியில் கல்லூரியில்
  3. சென்னை கிண்டி கல்லூரியில்
  4. வேளாண்மைக் கல்லூரியல்

விடை : மணிப்பால் பொறியில் கல்லூரியில்

7. “மீட்சி விண்ணப்பம்” கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ____________

  1. வேணுராம்
  2. சி.சு. செல்லப்பா
  3. வேணுகோபாலன்
  4. கபிலர்

விடை : வேணுகோபாலன்

8. “ஞானம்” கவிதை உணர்த்தும் பொருள் ____________

  1. உலகப் பணி
  2. சமூக அறப்பணி
  3. வீட்டைப் புதுப்பித்தல்
  4. இடைவிடாத சமூக அறப்பணியை

விடை : இடைவிடாத சமூக அறப்பணியை

9. ____________ ஓய்ந்தால் உலகம் இல்லை

  1. சமூகப்பணி
  2. அறப்பணி
  3. துறவு
  4. கடல் அலை

விடை : உலகம்

10. “புதுக்கொக்கி பொருந்தினேன்” – இத்தொடர் உணர்த்துவது ____________

  1. சாளரக் கதவை சீர்ப்படுத்துதல்
  2. பொய்களை நீக்குதல்
  3. சமூகத்தை சீர்படுத்துதல்
  4. வீட்டைப் புதுப்பித்தல்

விடை : சமூகத்தை சீர்படுத்துதல்

பொருத்துக

1. கரையான் அ. கட்டெறும்பு
2. காலக்கழுதை ஆ. வந்தாெட்டும்
3. தெருப்புழுதி இ. காற்றடைக்கும்
4. சட்டம் ஈ. மண்வீடு கட்டும்
விடை ; 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இd

பொருத்துக

1. வாளி அ. குவளை
2. சாயம் ஆ. தண்ணீர்
3. கந்தை இ. தூரிகை
4. கட்டை ஈ. துணி
விடை ; 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

குறு வினா

1. வேணுகோபாலனின் கவிதைத் தொகுப்புகள் யாவை?

மீட்சி விண்ணப்பம், கோடைவெயில்

2. “ஞானம்” என்னும் கவிதையில் இடம் பெறும் அஃறிணை உயிர்கள் யாவை?

கரயான், கழுதை, கட்டெறும்பு

3. “காலக்கழுதை
   கட்டெறும்பான
   இன்றும்
   கையிலே” – என இவ்வடிகளக்கு இணையா தமிழ் பழமொழி எழுதுக

கழுதை தேய்ந்து கட்டெறும்பானது

4. தி.சொ.வேணுகோபாலன் குறிப்பு வரைக

  • தி.சொ.வேணுகோபாலன் திருவையாற்றில் பிறந்தவர்;
  • மணிப்பால் பாெறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்;
  • ‘எழுத்து’ காலப் புதுக்கவிஞர்களில் ஒருவர்.
  • இவரின் கவிதைத் தாெகுப்பு மீட்சி விண்ணப்பம், கோடைவெயில்

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment