TN 10th Standard Tamil Book Back Answers | Lesson 8.1 – சங்க இலக்கியத்தில் அறம்

8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 10th Standard Tamil Lesson 8.1 – சங்க இலக்கியத்தில் அறம். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

10th Standard Tamil Guide - Sanga ilakkiyathil aram

10th Std Tamil Text Book – Download

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

1. மேன்மை தரும் அறம் என்பது _________

  1. கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
  2. மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
  3. புகழ் கருதி அறம் செய்வது
  4. பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

விடை : கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

2. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் _________

  1. உதியன்; சேரலாதன்
  2. அதியன்; பெருஞ்சாத்தன்
  3. பேகன்; கிள்ளிவளவன்
  4. நெடுஞ்செழியன்; திருமுடிக்காரி

விடை : அதியன்; பெருஞ்சாத்தன்

குறு வினா

குறிப்பு வரைக : அவையம்

  • அறம் கூறும் மன்றங்கள் அரசனின் ஆட்சிக்கு துணை புரிந்தன.
  • “அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்” என்கிறது புறநானூறு, உறையூலிருந்து அவையம் தனிச்சிறப்புப் பெற்றது.
  • மதுரையிலிருந்த அவையம் பற்றி மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.
  • மதுரை அவையம் துலாக்கோல் போல் நடுநிலைமிக்கது.

சிறு வினா

சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்குமு் தேவையானவையே என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.

சங்க இலக்கியங்ள் காட்டும் அறங்கள், ஒரு மனிதன் தனியாகவும், சமூக உறுப்பினராகவும் இயங்குவதற்கும், அவனது பண்பு நலனை உருவாக்குவதற்கும் உதவுகிறது.

அரசியல் அறம்:-

“அறநெறி முதற்றே அரசின் கொற்றம்”

நீர் நிலையைப் பெருக்கி நிலவளம் கண்டு, உணவுப் பெருக்கம் காண்பதும், அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசினின் அறம். இவ்வறம் இன்றைய சூழலில் காணப்படுகிறது.

வணிகத்தில் அறம்:-

“அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்”

அறம் செய்வதில் வணிகநோக்கம் இருத்தல் கூடாது, நோக்கமின்றி அறம் செய்வதே வணிக அறனின் மேன்மையாகும்.

போர் அறம்:-

தமிழர் போர் செய்வதிலும், அறநெறி உடையவர்களாக இருந்தனர். போர் அறம் என்பது வீரமற்றோர், முதியோர், சிறார் போன்றவரை எதிர்த்து போர் செய்யாமல் இருப்பது.

உதவி செய்வதி அறம்:-

  • பிறருக்கு உதவி செய்வதை அறமாகக் கருதினர். அதாவது தன்னைத் தாண்டி பிறரைப் பற்றி சிந்திக்கும் நிலை.
  • “பிழையா நன்மொழி” என்று நற்றிணையும் கூறுகிறது.
  • நிலம் பெயர்ந்தாலும் பொய் சொல்லக் கூடாது. மெய் பேசும் நாவே மனிதனை உயர்த்தும்.
  • சங்க இலக்கியங்கள் காட்டும் அறம் ஒரு மனிதன் தனியாகவும், சமூக உறுப்பினராகவும் இயங்குதவதற்குப் பண்பு நலனே காரணம் என்று சங்க இலக்கியம் மூலமாக அறிய முடிகிறது.
  • இறுதியாக, சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைய மனிதனுக்கு அடிப்படையாகவும் வழிகாட்டுதலாகவும் உள்ளது.

நெடு வினா

பள்ளித் திடலில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்தையும், அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்கு கடிதம் எழுதுக

உறவினருக்கு மடல்

திருநெல்வேலி
07.07.2021

அன்புள்ள பெரியப்பாவிற்கு லிங்கம் எழுதுவது,

நலம், நலம் அறிய ஆவல்,

நான் இன்று மகிழ்ச்சியாக உள்ளேன். என்னவென்று தெரியுமா? நேற்று வகுப்பு முடித்து வெளியே வந்து கொண்டிருந்தேன். அப்போது பள்ளித்திடலில் ஒரு பணப்பை கிடைத்தது. அதில் அதிகமான பணம் இருந்தது. ஒரு நிமிடம் ஐயோ! இவ்வளவு பணம் இருக்கிறதே என்று பையை எடுத்துக் கொண்டு தலைமை ஆசிரியரிடம் சென்றேன். அவர் அலுவலக ஊழியர் கட்டணம் வசூலித்த பணம் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லும்போது தவற விட்டு விட்டார் என்றார்.

தலைமை ஆசிரியர் மிகவும் மகிழ்ந்தார். என் நேர்மையையும், கண்ணியமான செயலையும் பாராட்டினார்.

பிறர் பொருளுக்கு ஆசைப்படாத உன்னைப் பாராட்டியே தீர வேண்டும் என்று மறுநாள் காலை இறை வணக்கக் கூட்டத்தில் மாணவர்கள் மத்தியில் என் நேர்மையை பாராட்டி, சன்மானத் தொகையை பரிசாகவும் வழங்கினார்.

அது மட்டுமல்லாமல் என்னைப் பள்ளி மாணவர் தலைவராக்கினார். நேர்மைக்கு எப்போதும் உயர்வு உண்டு என்று கூறி, அதற்கு ராமுவே என்று என்னைப் பாராட்டினார்.

இந்நிகழ்வின் மகிழ்ச்சியை உங்களுடன், பெரியம்மா, தங்கையுடன் இக்கடிதம் மூலம் பகிர்ந்து கொள்வதற்கு மகிழ்கிறேன்.

இப்படிக்கு
தங்கள் அன்புள்ள,
ராமு

உறைமேல் முகவரி

பெறுநர்:-

அ. அய்யம்பெருமாள்
5/507, திருவள்ளூவர் நகர்
சென்னை – 600 012.

கற்பவை கற்றபின்

1. பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள அறக்கருத்துகளை வலியுறுத்தும் சங்க இலக்கிய பாடலடிகள் ஐந்தினைத் தொகுத்து அவை கூறும் அறச்செய்திகளை எழுதுக.

சங்க இலக்கியப் பாடலடிகள் கீழ்காணும் அடிப்படையில் அறச் செய்திகளை வலியுறுத்துகிறது.

  • வறுமை
  • நேரிய ஆட்சி
  • நிலையான செல்வம்
  • வாய்மை
  • ஈகை

“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்…” – புறநானூறு

இப்பிறப்பில் அறம் செய்தால், அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்கம் கூடாது. நோக்கம் இன்றி அறம் செய்வதே மேன்மை.

“அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
அறன்நெறி பிழையாத் திறனறி மன்னர்” – புறநானூறு

மன்னருடைய செங்கோலும் வெண் கொற்றக் குடையும் அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்ட்டன. அரசின் செங்கோல் போன்று ஆட்சியை மேற்கொள்ள வேண்டும்.

“செல்வத்துப் பயனே ஈதல் – புறநானூறு

வீீரத்தைப் போலவே ஈகையையும் தமிழ் நூல் போற்றியதும். ஈகையும் ஒர் அறச்செயலே. செல்வத்தின் பயன் கொடுத்து மகிழ்வதே என்று வாழ்ந்தனர்.

“சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே” – நற்றிணை

பிறர் துன்பத்தை தன் துன்பமாக கருதி உதவுதேல பண்பு. பிறர் துன்பம் தீர்ப்பதே உண்மையான செல்வம் ஆகும்.

“பிழையா நன்மொழி” – நற்றிணை

மெய் பேசுவது நன்மொழியாகும். வாய்மை எனப்படுவது தவறியும் பொய் பேசாதிருத்தல். நிலம் பெயர்ந்தாலும் பொய் சொல்லக் கூடாது.

1. கொன்றை வேந்தன் முதலான பிற்கால அறநூல்களின் பெயர்களை அறிந்து, அவற்றுள் ஏதேனும் ஒரு நூலின் அறக்கருத்துகளை எடுத்துக் கொண்டு அவை இன்றும் பொருந்தி நிற்பது குறித்து கலந்துரையாடுக

கலந்துரையாடுபவர் : சோமு, கலா, மாலா

சோமு நானும் நலம்தான் சரி நாம் இன்றைக்கு வகுப்பில் அறக்கருத்துகள் பற்றிப் படித்தோம் அல்லவா, அதைப் போலவே எளிமையான அறக்கருத்துகளை நாம் புரிந்து கொள்ளும் வகையில் சில நூல்கள் கூறுகிறது. அதனைப் பற்றி பேசுவோமா.
கலா எனக்கு கொன்றை வேந்தன் மிகவும் படிக்கும்.
மாலா எனக்கும் தான்…
சோமு அதைப் பற்றிப் பேசுவோம். இந்நூல் அகர நிரல் அமைப்புப்படி 91 ஒற்றை வரிப் பாக்களால் ஆனது
கலா அதை எழுதினது ஒளவைதானே
மாலா சரியாகச் சொல்லி விட்டாயே!
சோமு அந்த நூலில் ஈகை என்னும் அறத்தைப் பற்றி ஒரு வரி உணர்த்துகிறது அது என்ன தெரியுமா?
கலா “ஈயார் தேட்டைத்த தீயார் கொள்வார்”
சோமு சரியாகச் சொன்னாய்
மாலா ஆமாட நாம் ஒருவருக்கும் கொடுக்காமல், யாருக்கும் நன்மை செய்யாமல் சேர்த்து வைத்திருக்கும் செல்வம் யாருக்கும் பயன்படாது. அதன் திருடரோ மற்றவரோ கொள்வார்.
கலா எங்கள் பக்கத்து ஊரில் மிகப் பெருஞ்செல்வந்தர். வேலை பார்ப்பவருக்கு கூட கூலி ஒழுங்காகத் தர மாட்டார். இரும்புப் பெட்டியில் பூட்டி வைத்து விடுவார். ஒருநாள் வந்த திருடன் பெட்டியை உடைத்து அத்தனையும் கொள்ளையடித்து விட்டான்.
சோமு புரிந்து கொண்டீர்களா தோழிகளே! எக்காலத்திலும் அறக்கருத்துகள் எப்போதும், முக்காலத்துக்கும் பொருந்துவனவாகவே உள்ளது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. சங்க காலத்திற்குப் பிந்தைய காலம் _____________

  1. அறநெறிக்காலம்
  2. மன்னர் காலம்
  3. பக்திக் காலம்
  4. சமயக் கலப்பில்லாக் காலம்

விடை : அறநெறிக்காலம்

2. சங்க இலக்கியத்தைப் பற்றி “கவிதை வாழ்க்கையின் திறனாய்வு” என்றவர் _____________

  1. ஜி.யூ.போப்
  2. ஆர்னால்டு
  3. கால்டுவெல்
  4. வீரமாமுனிவர்

விடை : ஆர்னால்டு

3. சங்க பாடலில் அறம் பற்றிய கருத்துக்கள் _____________ முதன்மைபடுத்தியே கூறப்படுகிறது.

  1. வீரர்களை
  2. மக்களை
  3. அரசர்களை
  4. அமைச்சர்களை

விடை : அரசர்களை

4. மதுரையின் அவையம் பற்றிக்குறிப்பிடும் நூல் _____________

  1. மதுரை மும்மணிக்கோவை
  2. பரிபாடல்
  3. சிலப்பதிகாரம்
  4. மதுரைக்காஞ்சி

விடை : மதுரைக்காஞ்சி

5. உதவி செய்தலை _____________ என்ற குறிப்பிட்டவர் ஈழத்துப் பூதன் தேவனார்

  1. உதவியாண்மை
  2. உதவி செய்விப்பது
  3. உதவி செய்யாமை
  4. உதவி புரிதல்

விடை : உதவியாண்மை

6. “இரப்போருக்கு ஈயாது வாழ்வதை விட உயிர் துறப்பது மேலானது”  என்று கூறும் அகநூல் _____________

  1. பரிபாடல்
  2. குறுந்தொகை
  3. கலித்தொகை
  4. ஐங்குறுநூறு

விடை : கலித்தொகை

7. மறுமை நோக்கி கொடுக்காதவர் என்று ___________-ஐ பாராட்டியவர் பரணர்

  1. அதியமான்
  2. நெடுமான்
  3. பாரி
  4. பேகன்

விடை : பேகன்

8. வள்ளலின் பொருள், இரவலின் பொருள் என்று பாராட்டியவர் ___________

  1. கபிலர்
  2. பெரும்பதுமனார்
  3. நல்வேட்டனார்
  4. நக்கீரர்

விடை : பெரும்பதுமனார்

9. “நிறைவடைகிறேன் செல்வன்” என்று கூறும் தத்துவம் ___________

  1. மாவோவியம்
  2. தாவோவியம்
  3. பெளத்தம்
  4. ஜென்தத்துவம்

விடை : தாவோவியம்

10. “பிழையா நன்மொழி” என்று வாய்மையைக் குறிப்பிடும் நூல் ___________

  1. கலித்தொகை
  2. புறநானூறு
  3. நற்றிணை
  4. கொன்றை வேந்தன்

விடை : நற்றிணை

11. நம்மிடமுள்ள அதிசயத் திறவுகோல் ___________

  1. கை
  2. கண்
  3. மூளை
  4. நாக்கு

விடை : நாக்கு

12. ___________ அரசர்களின் கொடைப் பதிவாக திகழும் நூல் பதிற்றுப்பத்து

  1. சேர
  2. சோழ
  3. பல்லவ
  4. பாண்டிய

விடை : சேர

13. தன்னிடமுள்ள எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று திருமுடிக்காரியை பாராட்டியவர் ___________

  1. பெரும்பதுமனார்
  2. கபிலர்
  3. நல்வேட்டனார்
  4. நக்கீரர்

விடை : கபிலர்

13. காஞ்சி மாநகரத்து சிற்றசரே ___________ என்றும் சமயப் பெயர் கண்டார்.

  1. தர்மர்
  2. கன்பூசியஸ்
  3. போதி தர்மர்
  4. புத்தர்

விடை : போதி தர்மர்

14. ஜப்பானியர்கள் யாருக்கு கோயில் கட்டியுள்ளனர்?

  1. கடுவெளி சித்தர்
  2. போதி தர்மர்
  3. மகாவீரர்
  4. புத்தர்

விடை : போதி தர்மர்

15. “செம்மை சான்ற காவிதி மாக்கள்” என்றழைக்கப்பட்டவர் ___________

  1. அமைச்சர்கள்
  2. மன்னர்கள்
  3. புலவர்கள்
  4. சான்றோர்கள்

விடை : அமைச்சர்கள்

15. “செம்மை சான்ற காவிதி மாக்கள்” என்று அமைச்சர்களை குறிப்பிட்ட புலவர் ___________

  1. மாங்குடி மருதனார்
  2. ஆவூர் மூலங்கிழார்
  3. நக்கீரர்
  4. பரணர்

விடை : மாங்குடி மருதனார்

16. “அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்” எனக் குறிப்பிடும் நூல் ___________

  1. பரிபாடல்
  2. குறுந்தொகை
  3. புறநானூறு
  4. ஐங்குறுநூறு

விடை : புறநானூறு

17. தனிச் சிறப்புப் பெற்றிருந்த அற அவையம் அமைந்திருந்த இடம் ___________

  1. உறையூர்
  2. மதுரை
  3. திருநெல்வேலி
  4. மாமல்லபுரம்

விடை : உறையூர்

18. உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் நீக்குவது நான் என்றவர் ___________

  1. கபிலர்
  2. ஒளவையார்
  3. நக்கீரர்
  4. நல்வேட்டனார்

விடை : நல்வேட்டனார்

19. சங்க இலக்கியங்கள் பேசும் சிறந்த அறம் ___________

  1. உதவி
  2. வாய்மை
  3. கொடை
  4. பொருள்

விடை : வாய்மை

20. “செல்வத்துப் பயனே ஈதல்” என்று கூறும் நூல் ___________

  1. பரிபாடல்
  2. குறுந்தொகை
  3. ஐங்குறுநூறு
  4. புறநானூறு

விடை : புறநானூறு

21. ஈதல் பற்றிய செய்திகளைக் கூறும் அக இலக்கியம் ___________

  1. பரிபாடல்
  2. குறுந்தொகை
  3. கலித்தொகை
  4. ஐங்குறுநூறு

விடை : கலித்தொகை

பொருத்துக

1. நக்கீரர் அ. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
2. ஒளவையார் ஆ. பெருஞ்சாத்தான்
3. கபிலர் இ. அதியன்
4. நச்செள்ளையார் ஈ. திருமுடிக்காரி
விடை ; 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – அ

பொருத்துக

1. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அ. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
2.இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி அழைக்கும் இயல்பு ஆ. பேகன்
3. மறுமை நோக்கி கொடுக்காதவன் இ. மலையமான் திரு முடிக்காரி
4. எல்லாவற்றையும் கொடுப்பவன் ஈ. அதியன்
விடை ; 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

பொருத்துக

1. கொடைவள்ளல் எழுவரின் கொடைப் பெருமை அ. ஆற்றுப்படை இலக்கியங்கள்
2. கொடை இலக்கியங்கள் ஆ. சிறுபாணாற்றுப்படை
3. சேர அரசர்கர்களின் கொடைப்பதிவு இ. வள்ளல்கள்
4. இல்லோர் ஒக்கல் தலைவன் ஈ. பதிற்றுப்பத்து
விடை ; 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

குறு வினா

1. அறத்தின் குறியீடாக போற்றப்பட்டவை எவை?

மன்னர்களுடைய செங்கோலும், வெண் கொற்றக் குடையும் அறத்தின் குறியீடுகளாக போற்றப்பட்டன.

2. அமைச்சரின் கடமைகளாகச் சங்க இலக்கியம் யாது கூறுகிறது?

  • அரசன் அறநெறியில் ஆட்சி செய்ய உதவி புரிய வேண்டும்.
  • நன்றும் தீதும் ஆய்தலும், அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது.

3. தனிச்சிறப்புப் பெற்ற அவையம் எவை?

  • உறையூரிலிருந்த அறஅவையம் தனிச்சிறப்புப் பெற்றிருந்தது.
  • மதுரையில் இருந்த அவையமும் பற்றி சிறப்புப் பெற்று இருந்தது.
  • இவ் அவையங்கள் துலாக்கோல் போல நடுநிலைமையுடன் இருந்தன.

4. மகிழ்ச்சி என்பதை விளக்குக

  • ஒரு மனிதன் தன்னுடைய மகிழ்ச்சியை மறந்து மற்றவர் மகிழ்ச்சியை நாடுவதுதான் உண்மையான மகிழ்ச்சி.
  • அதாவது தன் மகிழ்ச்சியை மறப்பதுதான் மகிழ்ச்சி.

5. வாய்மை பற்றி இலக்கியங்கள் குறிப்பிடுவதைக் கூறுக

  • பொய்யாச் செந்தா
  • பொய்படு பறியா வயங்கு செந்தா
  • பிழையா நன்மொழி – நற்றிணை
  • பொய்யாமொழிக் கொடுஞ்சொல்

என்று பொய் கூறக்கூடாது. வாய்மையே கூறவேண்டும் என்பதை இலக்கியங்கள் வலியுறுத்திக கூறுகின்றன.

6. சங்க இலக்கியம் முதல் தரமான அறம் என்பதை விளக்குக

  • இயல்பாக அறியும் முதல் தரமானது.
  • சிந்தித்து அறிந்த கொள்ளும் அறம் இரண்டாம் தரமான அறம்.
  • நாம் சிந்திக்காமல் பிறர் சொல்ல அறியும் அறம் மூன்றாந்தரமான அறம்.

எனவே, சங்க இலக்கிய அறங்கள் இயல்பான முதல் தரமான அறம் என்பது சாலப் பொருந்தும்.

7. கொடையில் சிறந்த மன்னர்கள் நால்வரைக் குறிப்பிடுக.

அதியன், பேகன், ஆடுகோட்பாட்டுச்சேரலாதன், திருமுடிக்காரி

8. அறகூறவையம் இருந்த இடங்கள் யாவை?

  • உறையூர்
  • மதுரை

9. வள்ளல்கள் எவ்வாறெல்லாம் போற்றப்பட்டனர்?

  • இல்லோர் ஒக்கல் தலைவன்
  • பசிப்பிணி மருத்துவன்

10. நாக்கு ஓர் அதிசயத் திறவுகோல் காரணம் கூறுக

  • இன்பத்தின் கதவைத் திறப்பதுவும், துன்பத்தின் கதவைத் திறப்பதுவும் நாக்கு தான்.
  • மெய் பேசும் நா மனிதனை உயர்ததுகிறது
  • பொய் பேசும் நா மனிதனை தாழ்த்துகிறது

எனவே நாக்கு ஓர் அதிசயத் திறவுகோல் எனக் கூறக் காரணம் ஆகும்.

11. சங்க காலத்தில் போர் அறம் பற்றி கூறுக

  • தமிழர், போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர்.
  • போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது.
  • போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போரிடுவதும் போர் அறமாகக் கருதப்பட்டது.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment