TN 10th Standard Tamil Book Back Answers | Lesson 4.2 – பெருமாள் திருமொழி

4.2 பெருமாள் திருமொழி

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 10th Standard Tamil Lesson 4.2 – பெருமாள் திருமொழி. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

10th Standard Tamil Guide - perumal thirumozhi

10th Std Tamil Text Book – Download

சொல்லும் பொருளும்

  • சுடினும் – சுட்டாலும்
  • மாளாத – தீராத
  • மாயம் – விளையாட்டு

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. உனதருளே பார்ப்பன் அடியேனே யாரிடம் யார் கூறியது?

  1. குலசேகராழ்வாரிடம் இறைவன்
  2. இறைவனிடம் குலசேகராழ்வார்
  3. மருத்துவரிடம் நோயாளி
  4. நோயாளியிடம் மருத்துவர்

விடை : இறைவனிடம் குலசேகராழ்வார்

குறு வினா

மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைத் துன்பம் தரும்படி கத்தியால் அறுத்து சுட்டாலும், அத்துன்பம் நமக்கு நன்மையே என்று உணர்ந்து நோயாளி மருத்துவர் மீது அன்ப காட்டுவார்.

சிறு வினா

“மாளாத கால் நோயாளன் போல” என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

உடலில் ஏற்பட்ட புண்:-

மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைத் துன்பம் தரும்படி கத்தியால் அறுத்து சுட்டாலும், அத்துன்பம் நமக்கு நன்மையே என்று உணர்ந்து நோயாளி மருத்துவர் மீது அன்பு காட்டுவார்.

நீங்காத துன்பம்:-

வித்துக் கோட்டில் எழுந்தருளயிருக்கும் அன்னையே! மருத்துவரைப் போன்று நீ எனக்கு துன்பத்தைக் தந்தாலும், உன் அடியவனாகிய நான் (நோயாளியைப் போல) உன் அருளையே எப்போதும் எதிர்பார்த்து வாழ்கிறேன்.

கற்பவை கற்றபின்

1. தமிழர் மருத்துவமுறைக்கும், நவீன மருத்துவமுறைக்கும் உள்ள தொடர்பு குறித்து ஒப்படைவு உருவாக்குக.

தமிழர் மருத்துவம்

  • தமிழர் மருத்துவமுறை என்பது சித்த மருத்துவம் ஆகும்.
  • தாவரம், விலங்கு உலோகம் அதவாது பஞ்சபூதங்கள் எல்லாம் மனித நலனுக்காக பயன்படுவன என்பது சித்த மருத்துவத்தின் கோட்பாடு.
  • தமிழர்கள் நோயைச் சரிபடுத்த இயற்கைதரும் இலை, காய் கனிகளிலிருந்தே மருந்தைக் கண்டனர்.
  • வாதம், பித்தம், சீதம் இவை மூன்றும் சமநிலையில் இருந்தால் நோம் நம்மை நாடாது.
  • தமிழா் மருத்துவமுறையில் பக்க விளைவுகள் ஏதுமில்லை. குணமாவதற்குச் சில நாட்கள் ஆனாலும் மீண்டும் அந்நோய் நம்மைத் தாக்காது.

நவீன மருத்துவம்

  • அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப, மருத்தவத்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது. அறிவியல் முறையில் சுகமளித்தவர்களில் சிறந்தவர் ஹிப்போகிரேடஸ்
  • நவீன மருத்துவ முறையினால் பக்க விளைவுகள் ஏற்படுவதற்குச் சாத்தியக் கூறுகள் உண்டு.
  • நோய்கிருமிகள் உடனடியாக அழிக்கப்படுகின்றன. நோயை குணப்படுத்த முடியாது. ஆனால் இவ்வகை மருத்துவத்துறையில் கவனக்குறைவு ஏற்பட்டால் உயிர் இறுதியாகிவிடும்.
  • உதாரணமாக, குருதி ஏற்றும்போது தொடர்புடையவரின் குருதி ஒரே இனமாக இருக்க வேண்டும். இவையெல்லாம் பரிசோதனை செய்து நோயாளிகளைக் குணப்படுத்த வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக்குறிப்பு

  • மீளாத்துயர் – ஈறு கெட்ட எதிர்மறை பெயரச்சம்
  • அறுத்து – வினையெச்சம்
  • ஆளா உனதருளே – ஈறு கெட்ட எதிர்மறை பெயரச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்

அறுத்து = அறு + த் + த் +உ

  • அறு – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

பலவுள் தெரிக

1. பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ____________

  1. 120
  2. 115
  3. 110
  4. 105

விடை : 105

2. வித்துவக்கோடு என்னும் ஊர் ____________ மாநிலத்தில் ____________ மாவட்டத்தில் உள்ளது

  1. கேரள, பாலக்காடு
  2. கர்நாடக, மாண்டியா
  3. ஆந்திரா, நெல்லூர்
  4. கேரள, திருவனந்தபுரம்

விடை : கேரள, பாலக்காடு

3. குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டில் உள்ள __________ உய்ய வந்த பெருமாளை அன்னையாக உருவகித்துப் பாடுகிறார்.

  1. தந்தையை
  2. தாயை
  3. இறைவனை
  4. தோழனை

விடை : இறைவனை

4. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது __________

  1. தேவாரம்
  2. பெருமாள் திருமொழி.
  3. திருவாசகம்
  4. திருமந்திரம்

விடை : பெருமாள் திருமொழி.

5. பெருமாள் திருமொழியைப் பாடியவர் __________

  1. நம்மாழ்வார்
  2. பெரியாழ்வார்
  3. ஆண்டாள்
  4. குலசேகர ஆழ்வார்

விடை : குலசேகர ஆழ்வார்

6. குலசேகர ஆழ்வாரின் காலம் __________ நூற்றாண்டு

  1. எட்டாம்
  2. ஏழாம்
  3. ஆறாம்
  4. ஐந்தாம்

விடை : எட்டாம்

7 “வாளால் அறுத்து” எனத் தொடங்கும் பெருமாள் திருமொழியின் பாடப்குதியாக உள்ள முதலாயிரத்தின் பாசுரம் __________

  1. 681
  2. 691
  3. 701
  4. 711

விடை : 691

8. விளையாட்டு என்ற பொருள் தரும் சொல்

  1. கல்வி
  2. காலம்
  3. பாடம்
  4. மாயம்

விடை : மாயம்

9. காதல் நோயாளன் போன்றவர் __________

  1. வித்துவக்கோட்டு இறைவன்
  2. குலசேகராழ்வார்
  3. மருத்துவர்
  4. மக்கள்

விடை : குலசேகராழ்வார்

10. மருத்துவன் போன்றவர் __________

  1. குலசேகராழ்வார்
  2. மருத்துவர்
  3. மக்கள்
  4. வித்துவக்கோட்டு இறைவன்

விடை : வித்துவக்கோட்டு இறைவன்

11. பொருத்தமில்லாத ஒன்றினைத் தேர்வு செய்க.

  1. நாலாயிரத்திவ்வியப் பிரந்தம்
  2. ஐந்தாம் திருமொழி
  3. திருப்பாவை
  4. முதலாயிரம்

விடை : திருப்பாவை

12. “நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேன்” என்றவர் __________

  1. மருத்துவர்
  2. மக்கள்
  3. குலசேகராழ்வார்
  4. வித்துவக்கோட்டு இறைவன்

விடை : குலசேகராழ்வார்

13. _________ மீளாத் துயர் தருபவர் வித்துவக்கோட்டு இறைவன்

  1. காயத்தால்
  2. மாயத்தால்
  3. சாபத்தால்
  4. ஊக்கத்தால்

விடை : மாயத்தால்

14. வாளால் அறுத்து சுடுபவர் _________

  1. குலசேகராழ்வார்
  2. வித்துவக்கோட்டு இறைவன்
  3. மருத்துவர்
  4. மக்கள்

விடை : மருத்துவர்

குறு வினா

1. பெருமாள் திருமொழி நூல் குறிப்பு வரைக.

  • நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது பெருமாள் திருமொழி ஆகும்
  • நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் 105 பாடல்கள்.
  • நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினை இயற்றியவர் குலேசகர ஆழ்வார்.

2. குலசேகர ஆழ்வார் சிறு குறிப்பு வரைக

  • குலேசர ஆழ்வார் பிறந்த ஊர் கேரளாவிலுள்ள திருவஞ்சிக்களம் ஆகும்.
  • பெருமாள் திருமொழி, முகுந்தமாலை ஆகியன இவர் இயற்றிய நூல்கள் ஆகும்.
  • வட மொழியிலும், தென் மொழியிலும் புலமை பெற்றவர்.
  • எட்டாம் நூற்றாண்டில் பிறந்தவர் ஆவார்.

3. “நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே” என்று யார் யாரிடம் கூறினார்?

குலசேகர ஆழ்வார் திருவித்துவக் கோட்டம்மாவிடம் கூறினார்.

4. வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் – இவ்வடிகளில் சுட்டப்படும் “மருத்துவன்” மற்றும் “நோயாளன்” போன்றவர் யாவர்?

மருத்துவன் போன்றவர் : திருவித்துவக் கோட்டம்மா

நோயாளன் போன்றவர் : குலசேகர ஆழ்வார்

5. குலசேகர ஆழ்வார் திருவித்துவக் கோட்டம்மா இறைவனிடம் வேண்டுவது யாது?

மருத்துவரை நேசித்தல்:-

மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என உணர்ந்து நோயாளி மருத்துவரை நேசிப்பார்.

இறைவன் அருளை எதிர்பாரத்தல்:-

இறைவா! நீ உன் விளையாட்டால் எனக்கு நீங்காத துன்பத்தைத் நோயாளியைப் போல உன் அருளை எதிர்பார்த்து வாழ்கிறேன்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment