TN 10th Standard Tamil Book Back Answers | Lesson 3.6 – திருக்குறள்

3.6 திருக்குறள்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 10th Standard Tamil Lesson 3.6 – திருக்குறள். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

10th Standard Tamil Guide - Thirukural

10th Std Tamil Text Book – Download

கற்பவை கற்றபின்

1. படங்கள் உணர்த்தும் குறளின் கருத்தினை மையமிட்டு வகுப்பில் கலந்துரையாடுக.

10th Standard - Thirukural
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
10th Standard - Thirukural
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல்; கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.

படம் – 1 (அ)

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.

சரண் மேற்கண்ட படத்தை காணும் போது நீ என்ன நினைக்கிறாய்?
கரண் மாட்டு வண்டிக்காரனின் உழைப்பு தெரிகிறது.
சரண் எப்படி
கரண் சொந்த வண்டியோ, வாடகை வண்டியோ தெரியவில்லை எனினும் மூட்டைகளை எற்றுவதற்கும், இறக்குவதற்கும் தன்னுடன் கூலியாட்களை வைக்காமல் தானே அச்செயலை செய்கிறான். மேலும் அவன் வண்டியில் அமர்ந்து செல்லவில்லை. இது அவனிடமுள்ள சோம்பலின்மையை வெளிப்படுத்துகிறது.
சரண் இதன் மூலம் நீ கூறவிருக்கும் கருத்து யாது?
கரண் இப்படிப்பட்ட கடின உழைப்பாளி வாழ்வில் ஒரு நாளும் வறமை நிலையை அடைய மாட்டான். வாழ்வில் உயர்வடைவான்

படம் – 1 (ஆ) (உரையாடல் தொடர்ச்சி)

கரண் இப்படத்தில் குடும்பத்தலைவன் உழைப்பின்றி சோம்பேறியாக இருக்கிறான் எனவே அவன் குடும்பம் வறுமை நிலையில் உள்ளது.

படம் – 2 (அ)

பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல்; கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.

சரண் மேற்கண்ட படத்தை காணும் போது உன் மனதில் தோன்றும் கருத்து யாது?
கரண் ‘தா’ என்று பிறரிடம் யாசித்தல் இழிவான செயலாகும். அப்படி கேட்கும் கேட்ட பொருளை கொடுக்காமல் இருப்பது அதை விட இழிவாகும்.
சரண் இச்செயல் குறித்து நீ என்ன கருதுகிறாய்?
கரண் ஐயன் வள்ளவன் கூறியத போல இரக்கம் இல்லாத கண்களால் பயன் என்ன? என்று கருதுகிறேன்

படம் – 2 (ஆ) (உரையாடல் தொடர்ச்சி)

கரண் இசையோடு பாடல் பொருந்தாததால் மக்கள் அதனை விரும்பாமல் அவ்விடத்தை விட்டு கடந்து செல்கின்றனர். பாடல், இசை இரண்டும் வேறுபட்டால் என்ன பயன். இதைப் போலவே தான் இரக்க குணமில்லாதவனுக்கு கண் இருந்தும் அதனால் பயன் ஒன்றம் இல்லை.

2. கதைக்குப் பொருத்தமான குறளைத் தேர்வு செய்து காரணத்தை எழுதுக.

“சின்னச்சாமி… யாரோ மரத்தோரமா நிற்கிறாங்க…. யாராய் இருக்கும்….” மாட்டு வண்டிய ஓட்டிக்கிட்டே அப்பா கேட்டார்.

“தெரியலப்பா…”

“இறங்கி யாருன்னு பாரு….”

வாட்டசாட்டமாய், கண்ணாடியும் அலைபேசியும் கையுமாய் சாலையோரத்தில் வண்டியுடன் ஒருவர் நின்றிருந்தார். .

“ஐயா..நீங்க…”

“வெளியூருப்பா.. வண்டி நின்னு போச்சு…!”

“அப்படியா… வண்டியத் தூக்கி மாட்டு வண்டியில வச்சுட்டு வாங்க. மழை வர்ற மாதிரியிருக்கு.. ஊரு ரொம்ப தூரம்.. வேற வண்டியும் வராது…”

அவர் உடையையும் உழைத்துக் களைத்த வியர்வை பொங்கிய உடலையும் பார்த்து வரலைன்னுட்டார். மூன்று நான்கு பேர்தான் வண்டியில இருந்தோம்.. சிறிது தூரம் போறதுக்குள்ள மழை கொட்டு கொட்டுன்னு கொட்டிருச்சு… நாங்க வீட்டுக்குப் போயிட்டோம். இரவுல தூங்கப் போறப்ப… அப்பா சொன்னார். தம்பி… அந்த சூட்டுக்காரர் மழை தாங்காம நடந்திருக்காரு. தேங்கா விழுந்து மண்ட உடைஞ்சு… வேற யாரோ தூக்கிட்டு வந்திருக்காங்க. நம்ம ஊரு ஆசுபத்திரியில.. கட்டுப் போட்டுக்கிட்டு இருந்தாங்க… பாவம் படிச்சவரா இருக்காரு சூழ்நிலை புரியாம… வரமாட்டேன்னு சொன்னாரு, இப்ப வேதனைப்பட்டாரே…

அ) உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
கல்லார் அறிவிலா தார்.

ஆ) பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.

இ) ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித்
தாழாது உஞற்று பவர்

விடை

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
கல்லார் அறிவிலா தார்.

காரணம்

வண்டிக்காரன் உடையையும் உழைத்துக களைத்த வியவர்வை பொங்கிய உடலையும் பாரத்த சூட்டக்காரன் தனக்கு உதவ வநத அவனை ஒதுக்கி தள்ளினான். உலகத்தானோடு பொருந்தி வாழும் தன்மையற்றவனா இநருந்ததால் அவன் விருப்பத்திற்குள்ளாக நேர்ந்தது இவன் கற்றிருந்தும் அறிவில்லாதவனே.

பாடநூல் வினாக்கள்

1. ‘நச்சப் படாதவன்’ செல்வம் – இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

நச்சப் படாதவன் – பிறருக்கு உதவி செய்யாதவன்

2. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
கோடிஉண் டாயினும் இல் – இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.

கொடுப்பதூஉம், துய்ப்பதூஉம்  – இன்னிசை அளபெடைகள்

பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.

உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும் அ. ஒழுக்கத்தின் எய்துவர்
ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்றது. ஆ. உயிரினும் ஓம்பப் படும்
ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் இ. நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – அ

4. எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பப்பாடு எது?

  1. கூவிளம் தேமா மலர்
  2. கூவிளம் புளிமா நாள்
  3. தேமா புளிமா காசு
  4. புளிமா தேமா பிறப்பு

விடை : கூவிளம் தேமா மலர்

சிறு வினா

வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலோடு நின்றாள் இரவு – இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

இப்பாடலில் உவமை அணி பயின்று வந்துள்ளது.

அணி இலக்கணம்:-

உவமை ஒரு வாக்கியமாகவும், உவமேயம் ஒரு வாக்கியமாகவும், உவம உருபு வெளிப்படையாக வருவது உவமை அணி ஆகும்.

உவமை:-

வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிபறி செய்தல்

உவமேயம்:-

ஆட்சி அதிகாரத்தை கொண்டு மன்னர் வரி விதித்தல்

உவம உருபு:-

போல (வெளிப்படை)

விளக்கம்:-

ஆட்சியதிகாரத்தை கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தை கொண்டு வரி விதிப்பது, வேல் போன்ற ஆயுதங்களை காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகரானது ஆகும்.

கவியைத் தொடர்க.

10th Standard - Thirukural - Kavithaiyai thodarga

தண்ணீர் நிறைந்த குளம்
தவித்தபடி வெளிநீட்டும் கை
கரையில் கைபேசி படமெடுத்தபடி
பதறுகிறது என் நெஞ்சமடி
வருங்கால சமுதாயம் என்னவாகுமடி
எப்போத தீரும் தன்படம் மோகமடி
மூழ்கியவன் மூச்சு நின்னுப்போச்சு
மனிதநேயம் செத்துப்போச்சு

திருக்குறள் பற்றிய கவிதை:

உரை(றை) ஊற்றி ஊற்றிப்
பார்த்தாலும்
புளிக்காத போல்!
தந்தை தந்த
தாய்ப்பால்
முப்பால்!

– அறிவுமதி

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு

  • எய்துவர், காண்பர் – வினையாலணையும் பெயர்கள்
  • எய்தாப் பழி, தமராக் கொளல், ஏமரா மன்னன் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்
  • புகுத்தி – வினையெச்சம்
  • கொடுப்பதூஉம், தூய்ப்பதூஉம் – இன்னிசையளபெடைகள்

பகுபத உறுப்பிலக்கணம்

1. எய்துவர் – எய்து + வ் + அர்

  • எய்து – பகுதி
  • வ் – எதிர்கால இடைநிலை
  • அர் – குறிப்பு வினைமுற்று விகுதி

2. புகுத்தி = புகுத்து + இ

  • புகுத்து – பகுதி
  • இ – வினையெச்ச விகுதி

பலவுள் தெரிக

1. பொருந்தாத இணையை தேர்க

  1. உயிரினும் மேலானது – ஒழுக்கம்
  2. ஒழுக்கமுடையார் – மேன்மை அடைவர்
  3. உண்மைப் பொருளைக் காண்பது – அறிவு
  4. உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதவர் – அறிவுடையவர்

விடை : உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதவர் – அறிவுடையவர்

2. நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று – இக்குறளில் பயின்று வரும் அணி எது?

  1. உருவக அணி
  2. உவமையணி
  3. ஏகதேச உருவக அணி
  4. எடுத்துக்காட்டு உவமையணி

விடை : உவமையணி

3. _______ மேலானதாகக் கருதிப் பாதுகாக்க வேண்டியது ஒழுக்கம்

  1. கண்ணினும்
  2. மெய்யினும்
  3. உயிரினும்
  4. கடலினும்

விடை : உயிரினும்

4. “தமர்” என்பதன் பொருள் _______ 

  1. நூல்
  2. பேறு
  3. துணை
  4. அரிய

விடை : துணை

5. “இன்மை” என்பதன் பொருள் _______ 

  1. இல்லை
  2. முயற்சி
  3. வறுமை
  4. இல்லை

விடை : வறுமை

பொருத்துக

1. மேன்மை அ. சினம்
2. வெகுளி ஆ. உயர்வு
3. மயக்கம் இ. வறுமை
4. இன்மை ஈ. அறியாமை
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

பொருத்துக

1.ஒழுக்கமுடைமை அ. 36வது அதிகாரம்
2. மெய் உணர்தல் ஆ. 14வது அதிகாரம்
3. பெரியாேரைத் துணைக்கோடல் இ. 56வது அதிகாரம்
4. கொடுங்கோன்மை ஈ. 45வது அதிகாரம்
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

குறு வினா

1. உயிரினும் ஓம்பப்படுவது எது? 

உயிரினும் ஓம்பப்படுவது ஒழுக்கம்

2. ஒழுக்கம், இழுக்கத்தினால் கிடைப்பவை யாவை?

  • ஒழுக்கத்தினால் கிடைப்பது மேன்மை
  • இழுக்கத்தினால் கிடைப்பது அடையக்கூடாது பழிகள்

3. உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதவர் எவ்வாறு கருதப்படுகிறார்?

உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதவர் பல நூல்களை கற்றிருந்தாலும் கல்லாதவராகக் கருதப்படுபவர்.

4. கெடுப்போர் இலானும் கெடுபவர் யார்? ஏன்?

குற்றங்களை கண்டபோது இடித்துத் திருத்தும் பெரியாரின் பாதுகாப்பைத் தேடிக் கொள்ளாத மன்னன் தன்னைக் கெடுக்க பகைவர் இன்றி தானே கெடுவான்.

5. நல்லார் தொடர்பை கைவிடல் எத்தன்மையானது?

தான் ஒருவனாக நின்று பலரோடு பகை மேற்கொள்வதைக் காட்டிலும் பல மடங்கு தீமையைத் தரும். ஆகவே நல்லோர் நட்பைக் கைவிடல் கூடாது.

6. ஆட்சியதிகாரம் கொண்டுள்ள அரசன் குறித்துக் கூறப்பட்டுள்ள செய்தி யாது?

  • ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரி விதிப்பான்.
  • அரசனது இச்செயலானது வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகராகும்.

7. ஆராயாது ஆட்சி செய்யும் மன்னனைக் குறித்து குறள் கூறும் செய்தி யாது?

தன் நாட்டில் நிகழும் நன்மை, தீமைகளை ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து ஆட்சி செய்யாத மன்னன் தன் நாட்டை நாள்தோறும் இழக்க நேரிடும்

8. உலகமே உரிமையுதாகும் எப்போது?

நடுநிலையாகக் கடமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு இவ்வுலகமே உரிமை உடையதாகும்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment