TN 10th Standard Tamil Book Back Answers | Lesson 3.1 – விருந்து போற்றதும்

3.1 விருந்து போற்றதும்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 10th Standard Tamil Lesson 3.1 – விருந்து போற்றதும். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

10th Standard Tamil Guide - virunthu potruthum

10th Std Tamil Text Book – Download

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

1. பின்வருவனவற்றுள் முறையான தொடர்

  1. தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு
  2. தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
  3. தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு
  4. தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

விடை : தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

2. ‘விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை –

  1. நிலத்திற்கேற்ற விருந்து
  2. இன்மையிலும் விருந்து
  3. அல்லிலும் விருந்து
  4. உற்றாரின் விருந்து

விடை : இன்மையிலும் விருந்து

குறு வினா

‘தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி’ என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.

விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றாகக் கருத முடியாது.

ஏனென்றால், இனிய சொற்களும், நல்ல உபசரிப்பும் இல்லாமல் செல்வத்தால் செய்யும் விருந்தோம்பலை ஏற்கமாட்டார்கள். எனேவ, செல்வத்தை விட விருந்தோம்பலுக்கு இனியச் சொற்களும் நல்ல உபசரிப்பும், மனமும் இருந்தால் போதும் என்பது என் கருத்தாகும்.

சிறு வினா

• புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர்.

• திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காணமுடிகிறது.

இப்படியாகக் காலமாற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை எழுதுக.

  • அன்றைய காலத்தில் வழிப்போக்கர்களே விருந்தினராகப் போற்றப்பட்டனர்.
  • காலமாற்றத்தல் நாகரிகம் என்னும் பெயரால், வழிப்போக்கர்களுக்கு விருந்தளிப்பது மறைந்து, நண்பர்களுக்கும், உறவினர்களுக்கு மட்டுமே விருந்தளிக்கும் நிலையைத்தான் இன்று காண முடிகின்றது.
  • வழிப்போக்கர்களுக்கும், ஏழைகளுக்கும் கோவில் மற்றும் அன்னசத்திரங்கள் விருந்திட்டு வருகின்றன.
  • விருந்தினர் என்று சொல்லி கயவர்கள் இன்று மக்களை ஏமாற்றுவதால் புதியவர்களை விருந்தினராகப் போற்ப்படுவது இல்லை.
  • இன்றைய சமுதாயத்தில் தன்னலம் மேலோங்கியதால் விருந்தென்னும் பொதுநலம் குறைந்து வருகின்றது.

IV. நெடு வினா

உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.

குறிப்புச் சட்டம்
  • முன்னுரை
  • இனிது வரவேற்றல்
  • உணவு உபசரிப்பு
  • அன்பு வெளிப்பாடு
  • முடிவுரை

முன்னுரை:-

“செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வாத் தவர்க்கு”

என்ற குறட்பா வந்த விருந்தினரைப் பேணிப் போற்றி இனிவரும் விருந்தினரை எதிர்பார்த்து இருப்பவனை வானவர்கள் போற்றும் சிறப்பு விருந்தினனாவான் என்கின்றது. வந்த விருந்தையும் வரும் விருந்தையும் சிறப்புடன் செய்வது இல்லத்தார் கடமையாகும்.

இனிது வரவேற்றல்:-

வீட்டிற்கு வந்த உறவினர்களிடம் வாருங்கள், அமருங்கள், நலமா? நீர் அருந்துங்கள், குடும்பத்தினர் அனைவரும் நலமா? என சில வார்த்தைகளைக் கூறி முக மலர்ச்சியுடன் விருந்தினரை வரவேற்றேன்.

உணவு உபசரிப்பு:-

  • வீட்டிற்கு வந்த விருந்தினர்களுக்கு அவர்கள் விரும்பும் அறுசுவை உணவைத் தயார் செய்து அவரை உணவு உண்ண வருமாறு இன்முகத்துடன் அழைத்து, அமர வைத்தேன்.
  • தலை வாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது மரபு. ஆகவே தமிழ்ப் பண்பாடு மறையாதிருக்க தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவிட்டேன்.
  • உண்பவரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும், வலப்பக்கம் விரிந்த பகுதியும் வருமாறு வாழையிலையை விரித்தேன்.
  • வாழை இலையின் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகளை வைத்தேன். வாழை இலையின் வலது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவு வகைகளையும் நடுவில் சோறும் வைத்தேன்.
  • உண்பவர் மனமறிந்து அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளை மீண்டும் மீண்டும் பரிவுடன் பரிமாறினேன்.

அன்பு வெளிப்பாடு:-

  • ஒரு குவளையில் நீரைக் கொண்டு வந்தேன். அதைக் கொண்ட அவர் அருகில் வைக்கப்பட்ட வெற்றுப்பாத்திரத்தில் அவர் கைகழுவுமாறு நீர் ஊற்றினேன்.
  • பிறகு கைகளைத் துடைப்பதற்குத் துண்டினை அளித்தேன்.
  • உணவு உண்டு எழுந்தவருக்கு ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கும் சுண்ணாம்பு வைத்தேன். அவர் அதை மகிழ்வுடன் உண்டார்.
  • உணவுண்டவரிடம் திருப்தியாக உண்டீர்களா? என விசாரித்து, வீட்டில் உள்ள உணவுப் பொருட்கள் சிலவற்றையும் கொடுத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்குமாறு கூறி, ஏழடி வரை அவருடன் சென்று வழியனுப்பி வைத்தேன்.

முடிவுரை:-

விருந்தினர் பேணுதன் தமிழர் மரபு ஆகும். அதனை அன்போடும், அருளோடும் செய்தல் நனி சிறப்பாகும்.

கற்பவை கற்றபின்

1. வீட்டில் திண்ணை அமைத்த காரணம், விருந்தினர் பேணுதல், தமிழர் பண்பாட்டில் ஈகை, பசித்தவருக்கு உணவிடல் இவை போன்ற செயல்கள் குறித்து உங்கள் வீட்டிலுள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து வந்து கலந்துரையாடல் செய்க

அமுதன் வீட்டில் திண்ணை அமைத்தற்கான காரணம் என்ன என்று கேட்டு வந்தாயா?
மதி கேட்டேன். வழிபோக்கர்கள் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர் என்று அப்பா கூறினார்.
அமுதன் விருந்தினர் பேணல் குறித்து உன் வீட்டார் உனக்கு கூறிய செய்தி யாது?
மதி வணக்கம் கூறி வரவேற்றல், அமர வைத்தல், தண்ணீரு் கொடுத்தல், உணவு உண்ணச் செய்தல், ஆகியவையே விருந்தினர் பேணும் முறையாகும் என்றனர்.
அமுதன் ஈகை என்றால் என்ன என்பது பற்றி கேட்டாயா?
மதி தமிழர் பண்பாட்டில் ஈகை குறித்தும் இலக்கியங்கள் கூறுகின்றன. பாரி என்ற குறுநில மன்னன் முல்லைக்குத் தேர் கொடுத்ததாகவும் பேகன் என்பவன் மயிலுக்குப் போர்வை கொடுத்தான் என்பதையும் நாம் பாடநூலில் படித்திருக்கிறோம் அல்லவா? அதுதான் ஈகை என்றனர்.
அமுதன் “பசித்தவருக்கு உணவிடல்” குறித்து உன் பெற்றோர் கூறிய செய்திகளை எனக்கும் கூறு.
மதி “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்கறித இலக்கியம். பசித்துயரால் வாடுபவருக்கு உணவளிப்பது அவருக்கு புத்துயிர் வந்தது போன்றிருக்கும். என்று அம்மா கூறினார்.

2. “இட்டதோர் தாமரைப்பூ
இதழ்விரித் திருத்தல் போல
வட்டமாய்ப் புறாக்கள் கூடி
இரையுண்ணும்………”       பாரதிதாசன்

இவ்வாறாகக் கவிதைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள பகிர்ந்துண்ணல் குறித்து பேசுக.

வணக்கம்

கிடைத்த இரையைப் பகிர்ந்துண்ணும் பொருட்டு புறாக்கள் வட்டமாய் அவ்விரையைச் சுற்றி கூடி நின்றன. இக்காட்சியானது இதழ் விரித்திரக்கின்ற தாமரை மலரைப் போன்று காட்சியளிப்பதாக கவிஞர் உவமித்துள்ளார்.

மு.வரதாசனார் இயற்றிய ‘குறட்டை ஒலி’ என்ற சிறுகதையில் ஓர் ஏழைத்தாய் தன் குழந்தைக்கு ஊட்ட வேண்டிய பாலால் பட்டினி கிடந்த நாய்க்குட்டிகளுக்கு ஊட்டுகிறாள். ஓர் ஏழைத்தாயின் வறுமையிலும் பகிரந்துண்ணும் தாய்மைப் பண்பு இக்கதையில் புலப்படுத்தப்பட்டுள்ளது.

இக்காலத்தில் பகிர்ந்துண்ணும் வழக்கம் அதிகமாக மனிதர்களிடம் காணப்படுவதில்லை. அன்றாடம் நாம் காணும் ஐந்தறிவு உயிரினமாகிய காக்கை கூட தனக்கு கிடைத்த சிறதளவு இரையையும் தன் இனத்தோடு பகிர்ந்து உண்ணும் பொருட்டு கரைந்து தன் இனத்தை அழைத்து உண்கின்றது. இத்தகைய உயிரினங்களின் செயல்களை கண்டாவது மனிதர்கள் பகிர்ந்து உண்ணும் பழைய பண்பாட்டை நிலை நிறுத்த வேண்டும். அப்போதுதான் பசிப்பிணி நீங்கும் என்று சொல்லி என்னுரையை நிறைவு செய்கின்றேன்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. மினசோட்டோ தமிழ்ச் சங்கம் அமைந்துள்ள இடம் ____________

  1. மொரிசியஸ்
  2. அமெரிக்கா
  3. மலேசியா
  4. இலங்கை

விடை : அமெரிக்கா

2. தொல்காப்பியர் “விருந்து” என்பதை ____________ கூறியுள்ளார்.

  1. தொன்மை
  2. முதுமை
  3. பழமை
  4. இளமை

விடை : பழமை

3. “……….. தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”
– என்று குறிப்பிடும் நூல் எது? இது யாருடைய கூற்றாக அமைகிறது?

  1. சிலப்பதிகாரம், கண்ணகி
  2. கம்பராமாயணம், சீதை
  3. நளவெண்பா, தமயந்தி
  4. சீவகசிந்தாமணி, காந்தருவதத்தை

விடை : சிலப்பதிகாரம், கண்ணகி

4. “பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்திவந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்து அன்றி விளைவான யாவையே” – என்று குறிப்பிடும் நூல்?

  1. சிலப்பதிகாரம்
  2. நளவெண்பா
  3. சீவகசிந்தாமணி
  4. கம்பராமாயணம்

விடை : கம்பராமாயணம்

5. “அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று நள்ளிரவிலும் உணவிடும் குடும்பத் தலைவியின் விருந்தோம்பலைச் சிறப்பித்துக் கூறும் நூல்

  1. குறுந்தொகை
  2. அகநானூறு
  3. புறநானூறு
  4. நற்றிணை

விடை : நற்றிணை

6. “காலன் ஏழடிப் பின் சென்று” என விருந்தினரை வழியனுப்பும் தமிழரின் இயல்பைக் குறிப்பிடும் நூல்

  1. பொருநாராற்றுப்படை
  2. சிறுபாணாற்றுப்படை
  3. பெரும்பாணாற்றுப்படை
  4. கூத்தாராற்றுப்படை

விடை : பொருநாராற்றுப்படை

7. “விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண
மேன்மேலும் முகமலரும் மேலார் போல” – இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்

  1. கலிங்கத்துப்பரணி
  2. கம்பராமாயணம்
  3. முக்கூடற்பள்ளு
  4. பெரியபுராணம்

விடை : கலிங்கத்துப்பரணி

8. தலைவன் விருந்தளிக்க அடகும் பணையமும் வைத்த பொருட்கள் யாவை?

  1. பழையவாள், நெடுங்கோட்டு பெரியாழ்
  2. புதியவாள், நெடுங்கோட்டு பெரியாழ்
  3. பழையவாள், கருங்கோட்டு சீறியாழ்
  4. புதியவாள், கருங்கோட்டு சீறியாழ்

விடை : பழையவாள், கருங்கோட்டு சீறியாழ்

9. அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்துச் சிவனடியாருக்கு விருந்து படைத்தவர் _____________

  1. சாக்கியநாயனார்
  2. இளையான்குடி மாறநாயனார்
  3. காரைக்கால் அம்மையார்
  4. சுந்தரர்

விடை : இளையான்குடி மாறநாயனார்

10. “பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீரோ” – என்று குறிப்பிடும் நூல்

  1. நற்றிணை
  2. குறுந்தொகை
  3. பதிற்றுப்பத்து
  4. பரிபாடல்

விடை : குறுந்தொகை

11. “மருந்தே ஆயினும் விந்தோடு உண்” என்று பாடியவர் யார்? நூல் எது?

  1. ஒளவையார், ஆத்திச்சூடி
  2. குமரகுரபரர், நீதிநெறிவிளக்கம்
  3. வள்ளலால் ஜீவகாருண்ய ஒழுக்கம்
  4. ஒளவையார், கொன்றைவேந்தன்

விடை : பழையவாள், கருங்கோட்டு சீறியாழ்

12. அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச்சங்க ஆண்டுதோறும் கொண்டாடும் விழா

  1. இறைச்சி உணவு விருந்து விழா
  2. வேட்டி சேலை உடுத்தும் விழா
  3. வாழையிலை விருந்து விழா
  4. நவதானிய விழா

விடை : வாழையிலை விருந்து விழா

13. திருக்குறளில் விருந்தோம்பல் அதிகாரம் இடம் பெறும் இயல்

  1. இல்லறவியல்
  2. பாயிரவியல்
  3. அரசியல்
  4. துறவறவியல்

விடை : இல்லறவியல்

14. விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர் மரபு என்பதை உணர்த்தியவர் _________

  1. திருவள்ளுவர்
  2. இளங்கோவடிகள்
  3. தொல்காப்பியர்
  4. கம்பர்

விடை : இளங்கோவடிகள்

15. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளவர் _________

  1. திருவள்ளுவர்
  2. கம்பர்
  3. தொல்காப்பியர்
  4. இளங்கோவடிகள்

விடை : கம்பர்

16. இளையான்குடி மாறநாயனாரின் விருந்தளிக்கும் திறன் பற்றி குறிப்பிடும் நூல் …………….

  1. நற்றிணை
  2. பெரியபுராணம்
  3. பெரும்பாணாற்றுப்படை
  4. கம்பராமாயணம்

விடை : பெரியபுராணம்

பொருத்துக

1. விருந்தே புதுமை அ. திருவள்ளுவர்
2.மோப்பக் குழையும் அனிச்சம் ஆ. தொல்காப்பியர்
3. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் இ. இளங்கோவடிகள்
4. விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை ஈ. ஒளவையார்
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

குறு வினா

1. விருந்தோம்பல் என்றால் என்ன?

தம் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று, உண்ண உணவும் இடமும் கொடுத்தல், அவர்களிடம் அன்பு பாராட்டுதல் இவை விருந்தோம்பல் எனப்படும்.

2. உணவிடும் நல்லியல்பு குடும்ப தலைவிக்கு உண்டு என்பதை குறித்த நற்றிணை குறிப்பிடும் செய்தி யாது?

  • விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளில் ஒன்றாகப் கருதப்படுகிறது.
  • நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்ப தலைவிக்கு உண்டு.

3. இன்மையிலம் விருந்தோம்பல் குறித்து புறநானூறு எவ்வாறு காட்சிப்படுத்தப்படுகிறது?

  • வீட்டிற்கு வந்தவர்க்கு வறிய நிலையிலும் எவ்வழியேனும் முயன்று விருந்தளித்து மகிழ்நதனர் நம் முன்னோர்.
  • தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த திணையை உரலில் இட்டுக் குத்தி எடுத்து விருந்தினருக்கு உணவளித்தாள் தலைவி

4. இளையான்குடி மாறநாயனார் சிவனடியார்க்கு விருந்தளித்த நிகழ்வை எழுதுக

இளையான்குடி மாறநாயனாரின் வீட்டுக்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க அவரிடம் தானியமில்லை; எனவே, அன்று விதைத்து விட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்து விருந்து படைத்தார்.

5. நெய்தல் நிலத்தவர் விருந்தளிப்பு குறித்துச் சிறுபாணாற்றுப்படை வழியே செய்தியைக் கூறு

நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர்

6. இல்ல விழாக்கள் யாவை?

திருமணத்தை உறுதி செய்தல், திருமணம், வளைகாப்பு, பிறந்த நாள், புதுமனை புகுவிழா

7. மினசோட்டா தமிழ்ச் சங்க வாழையிலை விருந்து விழாவில் வைக்கப்படும் உணவுகள் யாவை?

முருங்கைக்காய் சாம்பார், வெண்டக்காய் கூட்டு, மோர்க்குழம்பு, வேப்பம்பூ ரசம், தினைப்பாயாசம், அப்பளம்

8. விருந்து பற்றி எடுத்துரைக்கும் தமிழ் நூல்கள் யாவை?

தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், கலிங்கத்துப்பரணி, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, கொன்றைவேந்தன்

9. யாருடைய ஆட்சி காலத்தில் மிகுதியான சத்திரங்கள் கட்டப்பட்டன?

நாயக்கர், மராட்டியர்

10. விருந்து பற்றி எடுத்துரைக்கும் சங்க இலக்கிய நூல்கள் யாவை?

புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை

11. விருந்து மற்றும் விருந்தோம்பல் பற்றிக் குறிப்பிடும் புலவர்கள் யாவை?

தொல்காப்பியர், கம்பர், திருவள்ளுவர், செயங்கொண்டார், இளங்கோவடிகள், ஒளவையார்

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment